கரும்பலகை
இதோ ஒரு தகவல்: தஞ்சாவூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி தலைவர் தோழர் க. சிவக்குமார் மேற்கொண்ட இந்த முயற்சி குறித்து கொரநாட்டுக் கருப்பூர் தோழர் க. இராமநாதன் அஞ்சலட்டை மூலம் தெரி வித்துள்ளார்.
குடந்தை மேலக் காவேரி பேருந்து நிறுத்தம் அருகில் பகுத்தறிவுத் தகவல் பலகை ஒன்றினை தோழர் சிவகுமார் நிறுவி, நாள்தோறும் சிந்தனை களைத் தூண்டும் கருத்து களை எழுதி வருகிறார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதைப் படிக்கும் மாணவர்களில் பத்து பேர் தொடர்பு கொண்டு கழகத்தில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல பெரியார் பெருந்தொண்டர் குடந்தை அன்பாளன் அவர்கள் நீண்ட காலமாகவே இதனை ஓர் இயக்கத் தொண்டாகக் கருதி ஆற்றி வருகிறார்.
திண்டுக்கல்லில் நமது தோழர் பழ. இராசேந்திரன் நாள்தோறும் எழுதி வந்த கருத்துகளை சீரணிக்க முடியாத கா(லி)விக் கூட்டம், அவர் உயிருக்குக் குறி வைத்ததுண்டு. ஆனாலும், அவர் தப்பித்தார் - குற்ற வாளிகள் தண்டனை பெற்றனர்.
சுவர் எழுத்து, தெரு முனைக் கூட்டம் என்ற யுக்திகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திராவிடர் கழகத்திற்கே உண்டு; இதனை இன்றைய தினம் பல அரசியல் கட்சிகள் பின்பற்றி வருகின்றன.
சுவர் எழுத்தாளர் மாயவரம் சுப்பையா என்ற கருஞ்சட்டைத் தொண்டர் தான் சுவர் எழுத்து என்னும் கலையின் கர்த்தா ஆவார். அவர் சுவரில் எழுதி வந்த தந்தை பெரியாரின் கருத்துகளைப் படித்தோர் அதிலிருந்து தப்பிவிட முடி யாது. இழுக்கும் -ஈர்க்கும் - சிந்தனை நரம்புகளைத் தட்டி எழுப்பும்.
அன்பே உருவான வன் ஆண்டவன் என்றால் அவன் கையிலே சூலாயுதம் எதற்கு? வேர்க்கடலையைத் தோண்டவா?
சக்தியுள்ள சாமிக்குப் பூட்டும் சாவியும், ஏன்?
பாசறைகள் உலவிய வீதியிலே பஜனை மடங் களா? என்பன போன் றவை எண்ணற்றவை.
கழகத் தோழர்களே! சிறிய முயற்சியில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தக் கடமையை ஏன் நீங்கள் மேற்கொள்ளக் கூடாது?
முயற்சி திருவினை ஆக்குமே!
சினிமா, கிரிக்கெட் சிந் தனையில் சிக்கித் தவிக்கும் நம்மின இளைஞர்களை, மாணவர் களை மீட்டெடுக்க உங்கள் க(ரு)ரத்தின் வலி மையை கரும் பலகையில் காட்டுங் களேன்.
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101003/news04.html
http://www.viduthalai.periyar.org.in/20101003/news04.html
No comments:
Post a Comment