Pages

Search This Blog

Saturday, October 9, 2010

ஆசிரியர் விடையளிக்கிறார்-கேள்வி பதில்கள் - கி.வீரமணி

கேள்வி: பிகார் சட்டப் பேரவையில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் பல கட்சி களின் சார்பில் போட்டியிடுகின்றனரே?
- மு. அலாவுதீன், சென்னை - 6
பதில்: வடநாட்டில் உள்ள மாநிலங்களில் இது மிகவும் சர்வ சாதாரணம்; அனைத்துக் கட்சிகளுமே இப்படி உள்ளன. சீர்திருந்த கடுமையான விதி முறைகளைக் கடைப் பிடித்தால் மாறுதல் வரக்கூடும்.

கேள்வி : அயோத்தித் தீர்ப்புக்கு காஷ்மீர் சட்ட மன்றம் வரவேற்றுத் தீர்மானம் செய்ய வேண் டும் என்று பா.ஜ.க. கூறுவதன் நோக்கம் யாது?
- வே. சுகுமாரன், கோவில்பத்து
பதில்: இல்லாத ஊருக்கு போகாத பாதையை அமைக்கக் கூறும் இது _ ஏற்கெனவே எரியும் தீயை அணைக்காமல் எண்ணெய் ஊற்றிட உத வும் அல்லவா -_ அதை விரும்புகிறது போலும் பி.ஜே.பி.!

கேள்வி : கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சியில் பல குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதுபற்றி....
- வ. மலர்முகில், பெங்களூரு-1
பதில்: ஆனால், இவ்வளவு கூத்துக்கும், கேவல அரசி யலுக்கும் மூல காரணம் காங்கிரஸ் கட்சியின் பலவீனமும், உட்கட்சிப் பூசலும்தான்.

கேள்வி: குன்னூரில் தி.மு.க பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தி யுள்ளது -_ தமிழ்நாடு தழுவிய அளவில் அது நடத்தப்படுமா? நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம்.
- மு. சந்தானம், மதுரை-2
பதில்: தி.மு.க. தலைமையும், பொருளாளருமான மானமிகு மு.க. ஸ்டாலினும், கொள்கை பரப்புச் செயலாளர் மானமிகு ஆ. இராசாவும் இதில் மிக்க ஆர்வமும், தெளிவும் உள்ளவர்கள் ஆயிற்றே! ஆகவே, தொடரக் கூடும்!

கேள்வி: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களுடன் திரிணா மூல் காங்கிரஸ் கூட்டு; அவர் மத்திய அமைச் சரவையில் இருக்கிறார் -_ மாவோயிஸ்ட்களை வேட்டை யாடுகிறது மத்திய அரசு -_ ஒரே குழப்பமாக இருக்கிறதே?
- சுதா. மல்லிகா, சென்னை - 15
பதில்: அரசியலில் இதெல்லாம் அசாதாரணம் மட்டுமல்ல; சகஜமும்கூட!

கேள்வி: செட்டி நாட்டு மக்களில், அண்ணாமலை செட்டியார் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு என்ன?
- இராம. சுகவனம், காரைக்குடி-1
பதில்: கோயில் திருப்பணிகளில் மட்டுமே ஈடுபட்டு தாங்கள் சம்பாதித்த பொருள்களை வாரி இறைத்த, நாட்டுக்கோட்டை செட்டிமார்களில் அண்ணா மலை அரசர், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரி - _ அண்ணா-மலைப் பல்கலைக் கழகம் துவக்கி ஓர் அமைதி-யான கல்விப் புரட்சிக்கு வழிகாட்டி, திருப்பம் ஏற்படுத்தினார்!

கேள்வி: மத்திய அரசு ஜாதிவாரி கணக் கெடுப்பை மேற்கொள்வதாக உறுதி அளித் துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனியாக எடுக்க வேண்டும் என்று மருத்துவர் இராமதாசு போராட்டம் நடத்துகிறாரே?
- கு. வனராணி, சென்னை - 10
பதில்: அரசியல் போராட்டத்திற்கு ஏதாவது ஓர் ஆயுதம் வேண்டாமா? அதற்குத்தான்! ஏற்கெனவே நாம் எடுத்த முயற்சி காரணமாக ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசே தொடங்கிட விருக்கிறதே!

கேள்வி : நம் நாட்டில் திருமணங்களுக்கு ஆயிரக்கணக் கில் கூடுவதுபோல, வெளி நாடுகளில் கூடுவது உண்டா?
- மா. குழலி, வாலாஜா
பதில்: முதலில் நம் ஊர் திருமணங்களில் கூடும் கூட்டத்தின் அளவு, அவ்வூர் (மேலைநாடுகளில்) ஜனத்தொகையே கிடையாதே!

கேள்வி : விடுதலைப்புலிகள் இயக்கத்தை இன்னும் தடை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?
- மு. செங்குட்டுவன், கோவை-4
பதில்: இல்லை என்று கூறிவிட்டு இப்படி ஓர் அச்சம் ஏனோ! முரண்பாடு.

கேள்வி : பழைய வழக்கங்கள், ஆகம விதிகள் என்றைக்கும் செல்லும் என்பது எப்படி நியாயம்?
- அருள். மலர்க்கொடி, தில்லையாடி
பதில்: திருப்பதி கோயிலில் ஏர்கண்டிஷனில் கடவுள் கருவறை; உள்ளே மின் விளக்குகள்_ இவை எல்லாம் ஆகம விதிப்படி தானா?பார்ப்பனர்கள் பிழைக்க ஆகம விதிகள் என்ற போர்வை; அவ்வளவுதான்! கேரளாவில் இல்லாத _ செல்லாத _ ஆகமவிதி அர்ச்சகர் பிரச்சினையில் இங்கே மட்டும் ஏது?காஞ்சி தேவநாதன் அர்ச்சகன் செய்த திருப்பணிகள் ஆகம விதிப்படிதானோ!
http://www.viduthalai.periyar.org.in/20101009/snews10.html

No comments:


weather counter Site Meter