Pages

Search This Blog

Monday, October 25, 2010

மனிதகுலமே முடிந்துவிடும் அணு ஆயுதப் போர் குறித்து காஸ்ட்ரோ எச்சரிக்கை


உலகம் முழுவதும் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அணுஆயுதப் போர் ஏற்பட்டால் அது மனிதகுலத்திற்கே முடிவு கட்டிவிடும் என்று பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம் வருமாறு :
அடுத்து ஒரு புதிய போர் நடந்து அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மனித குலத்தின் முடிவாக அது அமையும். அணுஆயுதங்களின் திறன் குறித்து அளவீடு செய்யும் திறன் கொண்ட ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்தான் இதைக் கணித்திருந்தார்.

இந்த ஆயுதம் உருவாக்குவதற்கான உந்துசக்தியாக அவர் இருந்தார். இனப்படுகொலை செய்த நாஜிகளின் கைகளில் இருந்த அழிவாயுதங்களை விட கொடிய ஆயுதமாக இது இருந்தது. ஒவ்வொரு நாட்டின் மற்றும் இந்த பூமிப்பந்தில் உள்ள அனைத்து மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு உலகில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் உண்டு. இன்றைய தினம், அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தும் அபாயம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஈரான், இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தினால், அது உலக அளவிலான அணுஆயுதப் போரை உருவாக்கும் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை.

உயிர் வாழ்வதற்கான உரிமையை அரசியல் தலைவர்களிடம் கோரும் உரிமையும், கடமையும் மக்களுக்கு உள்ளது. தங்கள் உயிர்கள், தங்கள் மக்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் அத்தகைய ஆபத்தில் சிக்கியுள்ள போது பாராமுகத்து டனோ அல்லது வாழும் உரிமைக்கு மரியாதை தர வேண்டும் என்று கோராமல் நேரத்தை வீணாக்கும் வகையிலே யாராலும் இருக்க முடி யாது.

நாளை என்பது மிகவும் தாமதமாகிவிடும். ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் இவ்வாறு சொன்ன தாகக் கூறப்படுகிறது : மூன்றாம் உலகப் போரில் எத்த கைய ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரில் குச்சிகளையும், கற்களையும் கொண்டு தான் மோதிக் கொள்வார்கள்.அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது நமக்குத் தெரியும். அவர் மிகச்சரியாகவே சொல்கி றார்.

ஆனால் குச்சிகளையும், கற்களையும் காட்டி மிரட்டுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். போரின்போது அதிகப்படியான சேதம் இருக்கும். இதைச் சொல்லியே அப்பாவி மக்களின் உயிரிழப்பை அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத்தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நியாயப் படுத்தி விடுவார்கள். ஆனால், அணுஆயுதப்போரினால் ஏற்படும் பாதிப்பு என்னவென்றால் மனித குலமே சேதமாகிவிடும் என்பதுதான்.

அனைத்து அணு மற்றும் அழிவு ஆயுதங்களை, போருக்குப் பயன்படுத்தப்படும் அனைத் தையும், விட்டொழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கும் தைரியம் நமக்கு வர வேண்டும். இவ்வாறு காஸ்ட்ரோ தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101025/news16.html

No comments:


weather counter Site Meter