ஒன்பது நாள்கள் நடைபெறும் நவராத்திரிப் பண்டிகை -மகாராஷ்டிரத்தில் குறிப்பாக மும்பையில் எந்தத் தரத்தில் நடைபோடுகிறது? அந்த ஒன்பது நாள்கள் இரவிலும் நடைபெறும் ஒழுக்கக்கேடுகள் பற்றி தகவல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாண்டு மட்டுமல்ல; கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாகவே ஆபாசமான, அபாயமான செய்திகள் புள்ளி விவரங்களுடன் வெளிவந்தும், அதனைத் தடுத்து நிறுத்த பெற்றோர்களும், பக்த சிரோன்மணிகளும் முன்வரவில்லை என்பது வெட்கக் கேடாகும்.
இரவு நள்ளிரவு வரை இந்த விழா கொண் டாடப்படுவதால் வாலிப வயதுள்ள ஆண்களும், பெண்களும் இஷ்டத்திற்குக் கேளிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் தங்கள் வீட்டுப் பெண்கள் அந்திப் பொழுதுக்குள் வீட்டுக்கு வர வேண்டும் என்று வாசலில் காத்துக் கிடக்கும் பெற்றோர்கள்கூட, நவராத்திரி பண்டிகை நடக்கும் அந்த ஒன்பது நாள்களில் தங்கள் பெண்களை நடுநிசி வரை அனுமதித்து விடுகின்றனராம்.
கடந்த 2009ஆம் ஆண்டில் இந்த நவராத்திரி யின் போது ஆண்களும், பெண்களும் வெகு நெருக்கமாகப் பழகிக் கொள்ள அனுமதிக்கப் படுவதால், வாய்ப்பு அளிக்கப்படுவதால் ஏற்பட்ட பின் விளைவுகள் என்ன?
இந்த ஒன்பது நாள்களில் கர்ப்பம் அடைந்த பெண்களின் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவித்தனர். தசராவுக்கு (நவராத்திரிக்கு)ப் பிறகு மூன்று மாத காலகட்டத்தில் மருத்துவமனைகளில் கிளீனிக்கு களில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.
இந்த ஆண்டு (2009) தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (ஊடினேடிஅள) வாங்குகிறார்கள்; இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்குப் பெண்களுக்குக் கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகம்
இவ்வளவுத் தகவல்களையும் தெரிவித்தது விடுதலை ஏடு அல்ல. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (25.11.2009) என்ற நாளேடாகும்.
இவ்வாண்டும் (2010) அதே நிலை மும்பையில் நவராத்திரியின் போது நடைபெற்ற அவலங்கள் வெளிவந்துள்ளன.
காதலர் தினம் கொண்டாடப்படக் கூடாது! அது கலாச்சாரச் சீரழிவு என்று சிலிர்த்துக் கொண்டு எழும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், இந்து முன்னணிக் காரர்கள் இந்த இந்துமதப் பண்டிகையான நவராத்திரியின் பெயரால் இவ்வளவுக் கேவலமான, சீரழிவான, ஆபாசமான சமாச்சாரங்கள் அரங்கேறு கின்றனவே, இதற்கு என்ன பதில்?
கலாச்சாரக் காவலர்கள் என்ற பட்டியலில் சிவசேனா தான் முந்திரிக் கொட்டைபோல முந்திக் கொண்டு தலையை நீட்டி வருவது வாடிக் கையாகும்.
அந்தச் சிவசேனாவின் தலைநகரான மும்பை யில் தான் - நவராத்திரி என்ற பெயரில் இந்தியா விலேயே மிகப் பெரிய அளவுக்கு ஆபாசங்கள் நிர்வாணக் கூத்தாடுகின்றன.
இதுபற்றி பால் தாக்ரே வாய் திறக்காதது ஏன்? சங்பரிவார்க் கும்பல் பிரச்சினையைக் கிளப்பாதது ஏன்?
நவராத்திரியைத் தடை செய் என்று சொல்லு வதற்குப் பகுத்தறிவும், பக்குவமும் தேவை. அந்த அளவுக்கு முடியவில்லை என்றாலும் நவராத்திரியை ஒட்டி நடக்கும் இந்த அலங்கோலங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாமே - விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாமே!
ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்ய ஆரம்பித்தால் நவராத்திரி புஸ்வாணம் ஆகி விடும். அதற்குள்ள ஈர்ப்பும், கவர்ச்சியும் கரைந்தோடிப் போய்விடும்; களை இழந்த நிலை ஏற்பட்டுவிடும் அவரவர்களும் தனிமையில் அமர்ந்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படும் என்பதால் இதில் தலையிடத் தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னொன்று - இந்து மதக் கடவுள்கள் என்றாலே விபச்சாரம் செய்யாத கடவுளே கிடையாதே - அப்படி இருக்கும்போது, இதில் எப்படி தலையிடுவது என்கிற மன ஒதுக்கீடும் இருக்கும் அல்லவா?
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment