சென்னை, அக். 4- திரா விட இனத்தைப் புறந் தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக் கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல் பட்டிருக்கிறது என்று முரசொலியில் (4.10.2010) கலைஞர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் வருமாறு:
ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப் படுகிறது. கிருதயுகம் என் பது 17 லட்சத்து 28 ஆயி ரம் ஆண்டுகள் கொண் டதாகும். இப்படி கற் பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்க்கும்போது; சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த - தென்ன கத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத் தையோ, அவன் கல்ல றையையோ, அவனுக் கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந் தத்தானே வேண்டியுள்ளது.
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்பட வில்லை என்றாலும்கூட, லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூல மாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறி ஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவா யிரம் ஆண்டுகளுக்கு முந் தையது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
- இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் கடி தத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101004/news05.html
கடிதம் வருமாறு:
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்பட வில்லை என்றாலும்கூட, லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூல மாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறி ஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவா யிரம் ஆண்டுகளுக்கு முந் தையது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆரிய நாகரிகமும் - மூட நம்பிக்கையும்
இந்த அடிப்படை யில் - நம்முடைய திரா விட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப் பிட்டு நோக்கும்பொழுது, திராவிட இனம் அறிவி யல் ரீதியாக வாழ்ந் துள்ள உண்மை வரலாற் றினைத் தெளிவாக உல கம் அறிந்துகொள்ள முடி யும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரி கம் அடிப்படை ஆதா ரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக் கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல் பட்டிருக்கிறது என் பதை நீ அறிந்துகொண் டால் போதும்!- இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் கடி தத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101004/news05.html
No comments:
Post a Comment