இந்த நாட்டை மதவெறிக் காடாக மாற்றி பார்ப் பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான முயற்சி யில் இறங்கியுள்ள ஆர். எஸ்.எஸ். கும்பல் பல் வேறு பித்தலாட்டங் களைச் செய்து வரு கிறது. குழந்தைகள் தினம் என்பது நேரு பிறந்த நாள் அல்ல, கோகு லாஷ்டமிதான் அது என் றும், ஆசிரியர் நாள் செப்டம்பர் 5இல் அல்ல, அது துரோணாச்சாரி யார் பிறந்தநாள்தான் என்றும் மதரீதியாக எல்லாவற்றையும் மாற்றி வருகிறது.
அதுபோல மே 1 என்பது தொழிலா ளர் நாள் அல்ல விஸ் வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்றும், அது தந்தை பெரியார் பிறந்தநா ளான செப்டம்பர் 17தான் என்றும் கடந்த சில ஆண்டுகளாக ஆர்எஸ் எஸின் தொழிற்சங்க மான பாரதீய மஸ்தூர் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திருச்சி பெல்லில் செப்.17அன்று விஸ்வ கர்ம ஜெயந்தி கொண் டாடப்படும் என்று அறிவிப்பு வந்தவுடன் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அறிவுப்பூர் மான சில கேள்விகளைக் கேட்டு துண்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்து மதத்தில் எந்த ஒரு பண்டிகையும் குறிப் பிட்ட தேதியில் வராத போது விஸ்வகர்மா ஜெயந்தி மட்டும் செப்.17 அன்று வருவதாகக் கூறு வது பித்தலாட்டம் என் றும் தந்தை பெரியார் பிறந்த நாளுக்குரிய சிறப் பைக் குறைக்க ஆர். எஸ்.எஸ். செய்து வரும் சதியே இது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தி.தொ.க சார்பாக வெளியிடப் பட்ட துண்டறிக்கையில் விஸ்வகர்மாவுடைய அப்பா, அம்மா யார்? அவர் எப்பொழுது பிறந் தார்? எப்படிப் பிறந்தார்? என்றும், தொழிலாளர் தினமாக விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடி னால் அப்புறம் ஆயுத பூஜை எதற்காக என்றும் இன்னும் பல வினாக் களையும் எழுப்பியிருந் தோம்.
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் வாயிற்கூட் டத்தில் பேசிய அதன் பேச்சாளர் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் விஸ்வகர்மா செப்.17இல் தான் பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை என் றும் அவர் பிறந்ததற்கு பிறப்புச் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை என்றும், வெள்ளைக் காரன் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன்பு இந்த நாட்டில் 80 சதவிகிதம் பேர் படித்திருந்தார்கள் என்றும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிகள் இருந்ததாகவும் வெள் ளைக்காரன் வந்த பிறகு தான் இந்த நாட்டில் கல்வி வந்தது என்று கூறுவது பொய் என்றும் இன்னும் பல பொய் களையும் அவிழ்த்து விட்டார்.
உடனடியாக 18.9.2010 அன்று காலையிலேயே பிஎம்எஸ் வாயிற்கூட் டம் போட்ட அதே இடத்திலேயே பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக பதிலடியாக வாயிற் கூட்டம் போடப் பட்டது. பெல் திதொக தலைவர் க.வெ.சுப்பிர மணியன் தலைமை தாங்க திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
விஸ்வகர்மா பிறந்த தற்கு ஆதாரம் இருந் தால்தானே ஆதாரம் காட்டுவதற்கு? எல்லாம் பித்தலாட்டம் என்கிற போது பிஎம்எஸ் பதில ளிக்க முடியுமா? என்று வினா எழுப்பினார். சூத் திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே என்ற மனுதர்மம் கோலோச்சிய நாட்டில் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். காதில் கேட் டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் சட்டம் இருந்த நாட்டில் 80 சதவிகிதம் பேர் படித்திருந்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய்ப்பிரச்சாரம் என் றும் திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் இருந்த சமஸ்கிருதப் பல் கலைக் கழகத்தில் பத் தாயிரம் பேர் பார்ப் பனர் மட்டுமே படித்து வந்ததையும் பார்ப்பனர் களுக்கு மட்டுமே கல்வி இருந்தது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார்.
வெள்ளைக்காரன் வந்தபிறகுகூட பார்ப் பனரல்லாதாருக்கு கல்வி கிடைக்க விடாமல் செய்த பார்ப்பன சூழ்ச் சியையும் எண்ணெய்க் கடைக்காரனும் வெற் றிலை பாக்குக் கடைக் காரனும் சட்டமன்றத் துக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுவது எதற்கு? என்று பேசிய திலகர் பற்றியும் மருத் துவம் படித்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னம் பிள்ளையைக் கொடுத்து நாடார் ஜாதியைச் சேர்ந்தவன் கள் இறக் கித்தான்பிழைக்க வேண் டுமே தவிர மருத்துவம் படித்தது தவறு என்று திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சிபி. இராம சாமி அய்யர் சொன்ன தையும், வெள்ளைக் காரன் சென்ற பிறகுகூட ஆறாயிரம் பள்ளிகளை இழுத்துமூடி குலக் கல்வித்திட்டத்தை இராஜாஜி கொண்டு வந்த வரலாற்றையும் எடுத்துச் சொல்லி பார்ப் பனரல்லாதார் படிப் புக்கு எதிராக பார்ப்ப னர்கள் செய்து வந்த சதியையும் எடுத்துக்கூறி வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பே 80 சத விகிதம்பேர் படித்திருந்தார்கள் என்று கூறும் பிம்எம்எஸின் பித்த லாட்டத்தை எடுத்துக் கூறினார்.
தந்தை பெரியார் மாத்திரம் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்துப் போராட வில்லையென்றால் தமிழர்கள் படித்தி ருக்க முடியாது. பட் டம், பதவி பெற்றிருக்க முடியாது சமூக ரீதி யாகவும், கல்வி ரீதி யாகவும் முன்னேறி இருக்க முடியாது என் பதையும் தந்தை பெரி யார் இல்லையென் றால் தமிழன் முன் னேறியிருக்க மாட் டான் என்று நன்றியு டன் தமிழர்களால் பேசப்படுவதைக் கண்டு பொறுக்க முடி யாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் அவருடைய சிறப்பைக் குலைக்கவே செப்.17 அன்றுதான் விஸ்வகர்மா பிறந்தார் என்று கூறும் ஆர்.எஸ். எஸின் பித்தலாட்டங் களையும் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் ஏராள மான தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்எஸ் எஸுக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர் கள் என்று பாராட்டி னார்கள்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment