முதல்வர் கருணாநிதியை இப்போது தொடர்பு கொண்டாலும் பேசி விட முடியும், பார்த்து விட முடியும். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்க்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
எந்தக் கூட்டணிக்கு போவது என்று தெரியாமல், யாரிடமிருந்தும் அழைப்பும் வராமல், இலவு காத்த கிளியாக காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டி:
கேள்வி: உங்கள் மகனுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து மேல்- சபை எம்.பி. சீட் தருவதாக கூறியதால் தான் நீங்கள் தமிழ்நாட்டில் மேல்- சபை கொண்டு வருவதற்கு ஆதரவாக ஓட்டு போட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: மேல்- சபை மீண்டும் அமைவதற்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி தேவை என்பதால் எங்கள் 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கேட்டார்கள். அதுவும் ஓட்டெடுப்பு நடப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் கேட்கப்பட்டது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்புமணியிடம் பேசி ஆதரவை கேட்டார். எனவே ஆதரவாக ஓட்டு போட்டோம்.
ஆனால் இதன் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு எங்கள் தலைவர்கள் கருணாநிதியிடமும், ஸ்டாலினிடமும் மேல்- சபை எம்.பி. சீட்டு பற்றி பேசினார்கள். அப்போது அவர்கள் சீட்டு இல்லை என்று சொல்லவில்லை.
ஜி.கே.மணி ஒரு தடவை இதுபற்றி கருணாநிதியிடம் கேட்டார். அதற்கு பதில் சொன்ன கருணாநிதி, நீங்கள் இது சம்பந்தமாக கவலைப்படுவதை நிறுத்துங்கள். நான் சொன்னபடி மேல்- சபை சீட்டு தரப்படும் என்றார். இதையடுத்து நான் உடனடியாக கருணாநிதியிடம் தொடர்பு கொண்டு நன்றி கூறினேன். ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை.
கேள்வி: ஆனால் நீங்கள் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டீர்களே?
பதில்: நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம். இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு 96 இடங்கள் கிடைத்ததற்கு நாங்களே காரணம். ஒரு வியாபாரம் என்றால் லாபம், நஷ்டத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசியலும் வியாபாரம்தான்.
நாங்கள் கூட்டணியில் குறைந்தபட்ச கொள்கை திட்டங்களை மீறியது இல்லை. சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு மேல்- சபை எம்.பி. சீட்டு கொடுத்தனர்.
2006 சட்டசபை தேர்தல் முடிந்ததும் நாங்கள் முதல் ஆளாக தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளித்து கவர்னரிடம் கடிதம் கொடுத்தோம். அப்போது காங்கிரஸ் [^] தலைவர்கள் கூட கூட்டணி ஆட்சி வரவிடாமல் செய்து விட்டதாக கருதி எங்களிடம் வருத்தப்பட்டார்கள்.
கேள்வி: இப்போது நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவீர்களா?
பதில்: அதை இப்போது சொல்ல முடியாது. ஜனவரி மாதத்துக்கு பிறகுதான் சொல்ல முடியும். தற்போது நாங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறோம். தனித்து நின்றாலும் எங்களால் 40 இடங்களில் வெல்ல முடியும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு வேறுகாரணம் இருக்கிறது.
என் மீது, என் மகன், பேரன் மற்றும் சிலர் மீது போட்ட வழக்கை அ.தி.மு.க.வினர் வாபஸ் பெற மறுத்தார்கள். எனவே இந்த விஷயத்தை ஜெயலலிதாவிடம் கொண்டு சென்றோம். ஆனால் உரிய நடவடிக்கை இல்லாததால் வெளியேறினோம்.
பென்னாகரம் இடைத்தேர்தலும் இதற்கு ஒருகாரணம். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எங்கள் ஆதரவை கேட்டார்கள். எங்களுக்கு மேல்- சபை சீட்டுக்கு உதவுவதாக தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அவர்களை நம்பவில்லை.
கேள்வி: அப்படியானால் தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாமா?
பதில்: வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்ல முடியாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க.- அ.தி.மு.க. யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி ஏற்படலாம்.
கேள்வி: தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன? அரசுக்கு எதிரான அலை ஏதும் உள்ளதா?
பதில்: முன்பு தி.மு.க. அரசுக்கு நான் பெயில் மார்க் கொடுத்து இருந்தேன். ஆனால் இப்போது அரசு பாசா? பெயிலா? என்பதை நான் சொல்ல விரும்ப வில்லை. அரசுக்கு எதிரான அலை உள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதுவரை என்னால் மக்கள் மனதை அறிய முடியவில்லை.
கேள்வி: கருணாநிதி, ஜெயலலிதா இருவரில் யார் உங்களுக்கு அதிக மரியாதை தருகிறார்கள்?
பதில்: கருணாநிதியை எளிதாக அணுக முடியும். அவருடன் கசப்புணர்வு ஏற்பட்ட போதும் கூட அவரிடம் உடனே போனில் பேச முடிகிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஜெயலலிதாவுடன் பேச முடிந்தது இல்லை. வார கணக்கில் முயற்சி எடுத்தாலும் பேச முடியவில்லை. அப்பாயின்ட்மென்ட் வாங்கிய பிறகே அவரை சந்திக்க முடியும் என்றார் ராமதாஸ்.
http://thatstamil.oneindia.in/news/2010/10/10/tamilnadu-politics-dmk-admk-pmk-ramadoss.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment