இந்து தீவிரவாதம் என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு-களில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19, 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்-டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடு-கிறோம்.
2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்-தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதி-களின் செயல் என்று வழக்கை விசா-ரித்துவந்த காவல்துறையும், ஊடகங்-களும் பிரச்சாரம் செய்துவந்தன. முஸ்லிம்களின் புனிதத்தலமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்க-ளுக்கு எழலாம். ஆனால், இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைது-செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைகாட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளா-னார்கள். ஆனால் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.
2007ஆம் ஆண்டு மே மாதம் அய்த ராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி- இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJi) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று அய்தராபாத் காவல்துறை அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டா-யப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள-வைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்-படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஅய் கைது செய்தது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்-படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்-போனும் சிம் கார்டும் கொண்டு இயக்-கப்பட்ட அதேவகையான வெடிகுண்டு-தான் அய்தராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்-பட்டிருப்பதை சி.பி.அய் கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்பு-முனை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்-பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.அய் இயக்குநர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்ப-தாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.அய். கண்டுபிடிக்-கும்வரை அய்தராபாத் காவல் துறையின்கட்டுக்கதையே தொடர்ந்தது.
அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்-செய்-துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே, ஜெர்மன் பேக்கரி குண்டு-வெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள்மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்பு-களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்-பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்-பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்புப் படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால், அப்துல் சமது மீது இந்த குண்டு-வெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்-சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஷ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மாலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது; கை-காட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைத்-தான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும். அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002 _-03வாக்கில் போபால் இரயில் நிலையத்-தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடி-குண்டுகள் தொடர்பாக இராம்நாராயண் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள்மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து-விட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்-டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதை-வைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடி-குண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டி-னார்.
2006ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடி-விபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஷ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டு-வெடிப்புகள் நடந்துள்ளன. நண்-டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்-காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-- _ ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்த-போது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்க-லாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.
மெக்கா மசூதி, மாலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசார-ணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.அய் இப்போதுதான் ஆலோசித்து வருகிறது .
2008 செப்டம்பர் 29இல் மாலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்-பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்-தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்க-வைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்-டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் சிறீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உள்பட 13 பேர் கைது-செய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்த-போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்-கும் ஆர்.டி.-எக்ஸ் வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்-ளான். அய்தராபாத் காவல்துறை ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-- இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்ட-தனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும், மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும். 4,528 பக்கங்களை கொண்ட மாலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகை-யில் அபிநவ் பாரத் அமைப்பின் பிர-மாண்டமான முழுவடிவமும் அத-னோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்து புனிதத்-தலங்களில் நடந்த குண்டுவெடிப்பு-களுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றும் தனி இந்து தேசத்தை உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும், மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005--_06 ஆண்டு வாக்கில் புனேவில் தற்-போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, தனி இந்து தேசம் அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினை-வாக மாலேகானில் ஒரு இடத்திற்கு கர்கரே சந்திப்பு என்று பெயரிட்டுள்-ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலே-கானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்-பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மாலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்-திருக்கவில்லை. ஆனால் காவல் துறை யால் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்-டி-ருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப் பதற்கு ஒரு மாதம் முன்புவரை காவல் துறை காவலில்-தான் இருந்துள்ளார்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்-தான் தீவிரவாத ஒழிப்புப் படை நம்பு-கிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்-படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மாலேகான் குண்டுவெடிப்பை நடத்திய-தாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS 68 பாகிஸ்தானியர்கள் கொலை-செய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியி-டப்படாத சாட்சி ஒருவர் புரோகித்-துடன் நடத்திய தொலைபேசி உரை-யாடலை ஆதாரமாகக் காட்டுகிறது .
இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயண் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உள்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சி-கரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஷ்ட்ரா, இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைது-செய்யப் பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் _ கல்சங்கரா என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மாலேகான், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் மற்றும் பல குண்டுவெடிப்பு-களும் ஒரு பெரிய சதித் திட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்தச் சம்பவங்களை-யெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஅய் வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.
(Source: Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, Published in ‘The Outlook’, a weekly news magazine, dated july 19,2010).2007ஆம் ஆண்டு மே மாதம் அய்த ராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி- இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJi) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று அய்தராபாத் காவல்துறை அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டா-யப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள-வைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்-படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஅய் கைது செய்தது.

http://www.outlookindia.com/ariticle.aspx?266145
http://www.viduthalai.periyar.org.in/20101009/snews03.html
8 comments:
வன்முறை, ஒரு குறிப்பிட்ட பிரிவனருக்கே சொந்தமா, என்ன?
வன்முறையில் ஈடுபட பெரும்பான்மை என்ன, சிறிபான்மை என்ன, முன்/பின் போக்குகள் என்ன,இடது/வலது என்ன?
மூளைச்சலவையால் வரும் கொள்கைத் தீவிரவாதம்,முட்டாள் தனத்தினால் வரும் வெறி, சகிபில்லாமை- இவையே வன்முறைகளின் காரணிகள்! இதற்கு யாரும், விதி விலக்கல்ல!
ஏன் பகுத்தறிவு என்ற பெயரில் , இந்துக்களை தீவிரவாதியாக்கியும்(சதவீதத்தில் குறைந்த ) , நிஜ தீவிரவாதிகள் முஸ்லிம்களை நல்லவர்களாகவும் ஆக்குகிறீர்கள்
sudarshan:
இந்த கட்டுரை வெளியிட்டது http://www.outlookindia.com/ariticle.aspx?266145
என்கிற இந்தியாவின் தேசிய இதழ் .அதை மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட்டுள்ளோம் .இந்த கட்டுரையை எழுதியவர்க்கும் பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு.அதை மொழிபெயர்த்து போட்டு இருக்கிறோம் இங்கே.தீவிர வாதிகள் என்றால் முசிலிம்கள் மட்டுமே என்பதை தான் இன்றைய ஊடகங்கள் காண்பிக்கின்றன.தவிர வாதத்தில் குறைந்த சதவீதம் என்ன ,பெரும்பான்மை என்ன எல்லாம் ஒன்றே.கற்பழிப்பில் ஒரு பெண்ணை கற்பழித்தவன் ,100 கற்பழித்தவன் இதில் யார் யோக்கியன் என்று கூற முடியுமா?
தோழர்களே இந்து தீவிரவாதம் குறித்து ,மும்பை தீவிர வாத எதிர்ப்பு பிரிவு தலைவராக இருந்த கர்கரே கொல்லப்பட்டார் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் .ஆனால் அவர் கொல்லப்பட்டது தீவிர வாதிகள் தாக்குதலால் அல்ல .இந்து மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் சுட்டு கொல்லபட்டுள்ளார் என்று மும்பையில் காவல்துறை தலைவர்காக இருந்த அதிகாரியே தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.அந்த கருத்தானது "கர்கரேயை கொன்றது யார் " என்கிற நூலாக வெளி வந்துள்ளது.
http://satyamargam.com/1410
பொறுமை இருந்தால் மேற்கண்ட தொடர்பில் படியுங்கள்.உண்மைகள் புரியும்.
நீங்கள் எல்லாம் யோக்கியர்கள், உத்தமர்கள், சத்புதிரர்கள் என்றால் பயங்கர வாதத்தையும், தீவிர வாதத்தையும் ஆரம்பித்துவைத்து செயல்படுதிக்காட்டிய சிறுபான்மை வாதிகளின் யோகிதயையும் சொல்லியிருக்கவேண்டும்.
எறியும் கொலையில் எந்த கொல்லி நல்ல கொல்லி?
ஒரு சாரார் பற்றி இப்படி மூச்சு கட்டிக்கொண்டு பேசி. எழுதி "சீர்திருத்தும் " நீங்கள் மறு சாரார் செயல்கள் பற்றியும் எழுதினால் உண்மையில் உத்தமர்கள். கேவலம் கறி பிருயாணி ஆசை யார விட்டது? போங்கள். போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
@கக்கு:
நீங்கள் சொல்லும் மறு சாரர் தீவிர வாதம் சரி என்று நான் இங்கே சொல்லவில்லை.நீங்கள் சொல்லும் ஒரு சாராரிலும் தீவிரவாதம் இருக்கிறது.இதை எந்த ஊடகங்கள் வெளி இட்டுள்ளன.அதை நான் இங்கே சொல்கிறேன்.அவ்வாறு சொல்வது உங்களுக்கு ஒரு சாராருக்கு அதாரவாக தோன்றினால் அது உங்களின் மடமையே.உள்துறை அமைச்சர் கூட காவி தீவிர வாதம் என்றாரே.காரணம் இல்லாமல் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அவ்வாறு கருத்து சொல்ல இயலுமா? சற்று யோசியுங்கள்.நான் மேலே உள்ள பின்னோட்டத்தில் கொடுத்துள்ள லிங்க் ஐ படியுங்கள்.
பிரியாணி பொட்டலம் கிடைக்காது சரக்கு பாரு.நீங்க இன்னும் அந்த காலத்துலயே இருக்கீங்க.
எனக்கு பொழுது போகாமல் இங்கே நான் இடுகைகள் போட வரவில்லை.இதனால் எனக்கு வேலை பளுவும்,என்னுடைய வேலைக்கு இடைஞ்சலுமே தவிர ஒரு சல்லி பைசா கூட லாபம் இல்லை.
Blogger ரம்மி said...//வன்முறை, ஒரு குறிப்பிட்ட பிரிவனருக்கே சொந்தமா, என்ன?
வன்முறையில் ஈடுபட பெரும்பான்மை என்ன, சிறிபான்மை என்ன, முன்/பின் போக்குகள் என்ன,இடது/வலது என்ன?
மூளைச்சலவையால் வரும் கொள்கைத் தீவிரவாதம்,முட்டாள் தனத்தினால் வரும் வெறி, சகிபில்லாமை- இவையே வன்முறைகளின் காரணிகள்! இதற்கு யாரும், விதி விலக்கல்ல!//
நிச்சயம் இல்லை எல்லோருக்கும் வரும்....உங்களுக்கே கூட வரும்...என்ன சும்மா போகும் உங்களை நறுகென்று தலையில் கொட்டினால்...என்ன இன்னொரு தடவை கொட்டு என்று தலையைத் தாழ்த்தி காட்டுவீர்களா..? சகிப்புத்தன்மையுடன்...நீங்கள் காட்டினால் இன்னொரு கொட்டு நங்கென்று கொட்டப்போகிறான்...அப்ப என்ன செய்வீர்கள்.?..பதிலுக்கு திருப்பி கொட்ட மாட்டீர்கள் அது தான் வன்முறை...
நீங்க போனதடவை குண்டு வைச்சா நாங்க இந்த தடவை குண்டு வைப்போம் இதுதானே நடக்குது.
மாலேகான் இந்துத்துவா பெண்சாமியார் குண்டு வைப்பு...தாஜ்...இப்படி மாற்றி மாற்றிப் போய்கிட்டேயிருக்கும்.
சும்மா இருக்கறவ தலையில இழிவை சுமத்திக்கொண்டே போனா என்ன பண்ணுவான்...ஒரு நாள் தீவிரவாதியாத்தான் மாறுவான். அவனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்தால் என்ன பண்ணுவான்...இப்படித்தான் ஆவான்...அவனை சாதியை காட்டி ஒதுக்கிவைத்தால் என்ன செய்வான்...இப்படித்தான் ஆவான். எப்படி தீவிரவாதம் வளருகிறது எனபதற்கு உதாரணம். இதையெல்லாம் ஊடகங்கள் தெரிவித்து கொண்டுதான் வருகின்றன.
என்ன நேதாஜி சுபாஷ் சந்திரபோசை மறந்து போச்சா..அவரு என்ன? காந்தி வழி காங்கிரசில் இருந்து தானே தீவிரவாதியா ஆனாரு.அவரை யாரு? மூளைச்சலவை செய்தது.
அடுத்து என்ன? ஆஷ் துரையை சுட்டு கொன்ற பார்ப்பன வாஞ்சி நாதன் யார் தீவிரவாதி தானே...? ஆங்கிலேயர் காலத்தில்...அப்ப அவரு யார்? தீவிரவாதி தான். இப்படித்தான் தீவிரவாதம் வளருகிறது. இதை யாரும் கண்டிக்கவில்லையே.... இப்போது...அவர்கள் எல்லாம் தியாகிகள் என்று தானே பட்டமளிக்கப்பட்டது. ஆதிக்க சக்திகளிடமிருந்து தாய் நாட்டை மீட்டெடுக்க துப்பாக்கி தூக்கினால் தவறில்லை...என்று தானே முதலில் உரமேற்றப்படுகிறது..இதை நாமும் கற்று கொடுத்தோமே...என்ன இதுக்கெல்லாம் காந்தி ஆதரவு அளித்தாரா? இல்லையே...
இப்படித்தான் தீவிரவாதம் உருவாகிறது. ஒவ்வொரு தீவிரவாதத்திற்குப் பின்னாடியும் ஒரு ஆதிக்க வெறி இருக்கும், மதவெறி இருக்கும்,ஜாதி வெறி இருக்கும்.
Blogger S.Sudharshan said...//ஏன் பகுத்தறிவு என்ற பெயரில் , இந்துக்களை தீவிரவாதியாக்கியும்(சதவீதத்தில் குறைந்த ) , நிஜ தீவிரவாதிகள் முஸ்லிம்களை நல்லவர்களாகவும் ஆக்குகிறீர்கள்//
சிறுபான்மையினரை சொல்லவில்லையே...? என்று குறைபட்டு கொண்டிருக்கும் வேலையில் இது மகா தவறு என்று பதிவிட்டுவிட்டு அதற்கப்புறம் இதையும் சுட்டிக்காட்டியிருந்தால் நியாயவாதி...
எல்லா மத தீவிரவாதத்தையும் பகுத்தறிவுவாதிகள் எதிர்க்கிறார்கள்.
இங்குள்ள ஆரிய இந்து மதத்தில் தான் தீண்டாமை எனும் மிகக் கொடுமையான தீவிரவாதம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு...பலி கொடுப்பதற்காக பார்ப்பனர்கள் அனைவரையும் திராவிடர்களையும் சேர்த்து இந்துக்கள் என்று வன்முறைக்கு ஆள் சேர்க்கின்றனர். நீங்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை குத்தகை எடுத்து கொள்ளுங்கள் அது வேண்டாம்...இழிவை ஏற்படுத்த, பலியை ஏற்படுத்த திராவிட மக்களை கூட்டு சேர்க்கவேண்டாம். அதற்கு பார்ப்பனர் மட்டுமே போதும். இந்து மதத்தை நீங்களே பட்டா போட்டுக்கொள்ளுங்கள்...தனி ஆரியதேசம் என்றுகூட வாங்கி கொண்டு வாழுங்கள். எங்கள் திராவிட மக்களை கூட்டு சேர்க்கவேண்டாம்.
//Blogger கக்கு - மாணிக்கம் said...
நீங்கள் எல்லாம் யோக்கியர்கள், உத்தமர்கள், சத்புதிரர்கள் என்றால் பயங்கர வாதத்தையும், தீவிர வாதத்தையும் ஆரம்பித்துவைத்து செயல்படுதிக்காட்டிய சிறுபான்மை வாதிகளின் யோகிதயையும் சொல்லியிருக்கவேண்டும்.
எறியும் கொலையில் எந்த கொல்லி நல்ல கொல்லி?
ஒரு சாரார் பற்றி இப்படி மூச்சு கட்டிக்கொண்டு பேசி. எழுதி "சீர்திருத்தும் " நீங்கள் மறு சாரார் செயல்கள் பற்றியும் எழுதினால் உண்மையில் உத்தமர்கள். கேவலம் கறி பிருயாணி ஆசை யார விட்டது? போங்கள். போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள்.//
மதவெறியர்கள் யாரும் யோக்கியர்கள் இல்லை...அது எந்த மதவெறியர்களானாலும் சரி.
ஆனால் இங்கு நடக்கும் இந்த மத தீவிரவாதத்திற்கு மூலக்கராணம் பார்ப்பன இந்து மதவெறியாளர்கள் தான். காந்தியை என்ன சிறுபான்மையின மதத்தினரா சுட்டு கொன்றார்கள்.
காந்தியை சுட்டு கொன்ற பார்ப்பன கோட்சே என்ன? ரொம்ப யோக்கியவானா...? ஆர்.எஸ்.எஸ் தியாகி...இந்து மதக்காவலன். அப்படித்தான் போற்றப்பட்டான்..அதை தண்டனை பெற்று வந்தும் காந்தியை சுட்டு கொன்றது சரிதான் என்று ஊடகத்துக்கு 1997 ஆம் ஆண்டு பேட்டியளித்தானே அவன் தம்பி கோபால் கோட்சே.... அது யோக்கியமான செயலா....?
அந்த வூடு கொளுத்தி வேலையை ஏன் தொடர்ந்து செய்யறீங்க...இதில மாட்டிகிட்டு முழிக்கிறது யார்?..சாதியே வேணா மதமே வேணாங்கற அப்பாவி திராவிட பகுத்தறிவுவாதிகள், ஏதுமறியா அப்பாவி பொதுமக்கள்...
ஒரு பத்திரிகை ரிப்பொர்ட்...மும்பை தாஜ் ஒட்டல் தாக்குதலில்...தீவிரவாதிகள் பார்ப்பனர்களை தேடி பார்த்து பார்த்து தான் சுட்டனர்களாம். பூணூல் போட்டு இருக்கிறீயா...பூணூல போட்டு இருக்கிறீயா காட்டு என்று...போட்டு இருந்தால் டப் டுப்...நெற்றியிலே விபூதி இருந்தா டப் டூப்..
என்னமோ தீவிரவாதத்தை எதிர்ப்பது மாதிரி பாவலா காட்டிக்கொண்டு இன்னும் தீவிரவாதத்தை உருவாக்கும் செயல்களை பார்ப்பனர்களும், ஆதிக்க வெறி கொண்டவர்களும் இணையத்திலேயே செய்து கொண்டிருந்தால் தீவிரவாதம் உருவாகத்தான் செய்யும். ஒவ்வொரு தீவிரவாதத்திற்கு பின்னாடியும் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் ஆதரவு தருகிறது....இதுதான் உண்மை. இது பற்றி ஊடகத்திலும் தெரிவிக்கப்பட்டது.
சில தீவிரவாதத்தில் மதவாதம் இருக்கிறது.சில தீவிரவாதத்தில் ஆதிக்க சக்திகளின் கொட்டத்திற்கு எதிரான செயலாக நடைபெறுகிறது. சில தீவிரவாதத்தில் சாதியக் கொடுமைகள் இருக்கிறது...தீண்டாமை இருக்கிறது.
நீங்க என்ன சொல்றீங்க? இந்து தீவிரவாதம் பண்ணா மட்டும் குத்தம் சொல்றீங்க! என்று முறையற்ற வகையில் குறைபட்டு கொண்டால் எப்படி?...இந்து என்பது ஆரியம் வகுத்த மதம் அதற்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம்....காஞ்சி மடாலயத்தில் என்ன தலித் மக்களா இடம் பெற்றிருக்கின்றனர். சாதி பேதமற்ற மடம் என்றா கூறப்படுகிறது...அங்கு எந்த தலித்தும் மடாதிபதியாக வரமுடியாது...தலித் யாரும் பணிபுரிவதும் கிடையாது. பார்ப்பனர் தானே அங்கு எல்லாம்...நீங்களே சண்டை போட்டு கொள்ளுங்கள். எங்களுக்கு உங்கள் மதம் வேண்டாம்.
வெட்டிகிட்டு சாகிற நாய்ங்க மலைநாடு பக்கம் போகவேண்டியது தானே என்று சாமி படத்தில வர்ற வசனம் மாதிரி தான் சொல்லத்தோணுது.
வர்ணாசிரமம் என்ற தீவரவாத்தையும், பார்ப்பன ஜாதி வெறி என்ற தீவிரவாதத்தையும் கையில் வைத்திருக்கிறீர்களே! அதை எப்படி? எப்போது கைவிடப்போகிறீர்கள். தீவிரவாத்தை எதிர்க்கும் யோக்கியவான்களே...சொல்லுங்கள்.
தீவிரவாதம் என்பது தீவிரக்கொள்கை என்பது பொருள். அந்த கொள்கையை வலியுறுத்த கூடவே ஆயதமும் சேர்ந்து விடுகிறது...முதலிலேயே அல்ல கடைசியில்....கடைசி வரை இழுப்பது யார்?
Post a Comment