திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்த ராக பார்ப்பனப் பெண் மீனா பெறுப்பேற்ற காலம் முதல் தொடர்ந்து அப்பல் கலைக்கழகக் கட்டுப் பாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலும், தனது ஆதிக்க வேலையை தொடங்கி உள்ளார். அவர் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே அப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த பெரியார் உயராய்வு மய்யத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டு, அதில் மூத்த,அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களாக அறிஞர் களாக பணியாற்றியவர் களின் வயது வரம்பைக் காரணம் காட்டி அவர் களை வீட்டுக்கு அனுப்பி னார். இதனால் பெரியார் உயராய்வு மய்யத்தில் இயங்கி வந்த பெரியாரியல் பட்டய வகுப்பு மாணவர் களின் நிலை கேள்விக் குறியாகிப் போனது.
மேலும் உறுப்புக் கல்லூரிகளுக்கு அண் மையில் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது. அந்த நியமனத்தில் எந்த விதி முறைகளையும் பின் பற்றாமல், அனைத்து முறைகேடான காரியங் களையே செய்தார். தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற முறைகேடான காரியங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது அனைத்துத் துறை களுக்கும் துணை வேந்தர் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் பல்கலைக் கழகத் துறைத் தலைவர்கள் யாரும் எந்த பத்திரிகைகளுக்கும் நேரி டையாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்கக் கூடாது. துறை சார்ந்த செய்திகள் வெளியிட வேண்டுமென்றால், துணைவேந்தரின் ஒப்புதல் பெற்று, துணை வேந்தரின் பெயரில்தான் அந்த அறிக்கைகள் வெளி யிட வேண்டுமென்று கட்டாயமாக அறிவு றுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக நிரு வாகம் என்பது தன்னிச் சையான அமைப்பு. இந்த பல்கலைக் கழகத் தில் பெரியார் உயராய்வு மய்யம் (முடக்கப்பட் டுள்ளது), தொலை உணர்வு மய்யம், அண்ணா இருக்கை, பாரதிதாசன் உயராய்வு மய்யம், பல்கலைக் கழக தகவலியல் மய்யம், நேரு ஆய்வு மய்யம், மாற்றுத் திறனாளிகள் வளமய் யம், தொலைநிலைக் கல்வி மய்யம் என பல் வேறு மய்யங்கள் இப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகின்றன. மேலும் உறுப்பு கல்லூரி களும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையி லும், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த துறைகளில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்புகள், பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் குறித்து, அந் தந்த துறைத் தலைவர் களே அது தொடர்பான செய்தி, அறிக்கை வெளி யிட்டு வந்தனர்.
மேலும் மூத்த அறிஞர்கள் நிறைந்த இந்த பல்கலைக் கழகத்தில், தங்களது கண்டுபிடிப் புகள், ஆய்வறிக்கைகள் வெளியிடுவது வழக்க மாக இருந்து வந்தது. இந்நிலையில் பார்ப் பன துணைவேந்தர் மீனா ஒரு சர்வதிகாரப் போக்கினைத் திடீரென கடைப்பிடித்துக் கொண்டு, மூத்த பேரா சிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு வாய்ப் பூட்டு போட்டிருப்பது என்ன நியாயம்? துணை வேந்தரான தனக்கே எல்லா புகழும், பெயரும் கிடைக்க வேண்டு மென் பதற்காக பல அறிஞர் களுடைய திறமைகளை முடக்கி போடுவதோடு மட்டுமல்லாமல், மேலும் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் முறை கேடுகளை தெரிவித்த தாலும் இதுபோன்ற நடவடிக்கையில் துணை வேந்தர் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது.
இதனால் பேராசிரி யர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு அளவில் சிறந்து விளங்கி வந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் தற்போது மோச மான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் பாரதிதாசன் பல்கலைக் கழக நிரு வாகம் ஒட்டுமொத்த மாக பார்ப்பன துணை வேந்தரின் ஆதிக்கத்தின் உச்சத்திற்கே சென்று விடும் பேராபத்து உரு வாகியுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101022/news25.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள் சரிவர இயங்காமல், சுகாதாரமற்ற நிலை பரவியுள்ளது. போதுமான அளவு கழிவறைகள் இல்லை இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லை .எப்பொழுதும் மாணவியர் விடுதியில் நாய் தொல்லை நிலவுவதால் மாணவியர் சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளும் நிலை இன்றய நிலை கல்வி நிறுவனங்களில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர இயங்க மறுப்பதால் இது தொடர்பாக மாணவிகள் நிர்வாகதிடம் புகார் செய்ய அஞ்சுகிறார்கள். இது தொடர்பாக எவராவது கருத்து தெரிவிக்க முன்வந்தால் அவர்கள் படிப்பில் கை வைத்து விடுவார்களொ என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்ப்பட்டு உடல் நலக்கேடு ஏற்ப்பட்டும் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள் இதுசம்பந்தமாக பல்கலைகழக நிர்வாகம் மாணவ மாணவியர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மிக விரைவில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இது சரிவராத நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு, இப்போக்கில்லிருந்து மீட்சிபெற அரசு இதன் பின்னனியில் என்ன நடக்கிறது என்பதை நேரில் சென்று ஆராய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
Post a Comment