Pages

Search This Blog

Sunday, October 24, 2010

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை


பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் (22.10.2010) மாலை மறைவுற்றார். அவருக்கு வயது 75. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பிறந்தவர்.

இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் சட்டம் பயின்று கோவையில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி சாரதாமணி மற்றும் மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோர் உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் வாய்ந்தவர்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் தலைமையகச் செயலாளராகவும் இருந்தார்.
இவர் மொழி உரிமை, வருண சாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், சாகுமகராஜ், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Atheism and Free will, Thiruvalluvar on learning, knowledge and wisdom உள்ளிட்ட எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நூலான ரிச்சர்ட் டாக்கின்சின் ‘‘THE GOD DELUSION’’ நூலை தமிழில், கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர். விடுதலை நாளிதழ், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.
திருச்சியில் இயங்கி வந்த பெரியாரி யல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் திராவிடர் இயக்கம், திராவிடர் வரலாறு ஆகிய பொருள்களில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தியவர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை மய்யத்தின் பாடத் திட்டக் குழுவில் உறுப்பினர். பெரியாரியத்தைப்பற்றிய கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழி வுக்காகப் பெரியார் பேருரையாளர் என்ற விருது பெற்றவர். தமிழ், தமிழர் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்; தடுப்புக் கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு ஆட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவ ராகவும், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் உடல் சென்னை பெரியார் திடலில் தோழர் களின் இறுதி மரியாதைக்காக வைக்கப் பட்டது. பேராசிரியர் ஆசான் மறைவுற் றதை அறிந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், இரவு 9.30 மணிக்கு ஆசான் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடன் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர்கள் சு. அறிவுக்கரசு, கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், அச்சக மேலாளர் க. சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
பேராசிரியர் ஆசான் உடலுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி உ. பலராமன், தொழிற்சங்கத் தலைவர் குசேலர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, தி.மு.க. உமாபதி, பேராசிரியர் அ. இராமசாமி, பேராசிரியர் நாகநாதன், பேராசிரியர் பு. இராசதுரை, டாக்டர் பொற்கோ, கால்நடைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பிரபாகரன், பேராசிரியர் மங்களமுருகேசன், மயிலை நா.கிருஷ் ணன், வீ. குமரேசன், செ.வை.ர. சிகாமணி, புலவர் பா.வீரமணி, வே. ஆனைமுத்து, சத்தியநாராயண சிங், கோ. கருணாநிதி, திராவிடர் கழக மகளிரணி க. பார்வதி, மோகனா வீரமணி, வழக்கறிஞர் அருள்மொழி, க.திருமகள், வழக்கறிஞர் த. வீரசேகரன், வீரமர்த் தினி, டி.கே.நடராஜன், இரா. வில்வ நாதன், கோ. தங்கமணி, சி. செங் குட்டுவன் மற்றும் ஏராளமான திராவிடர் கழக நிருவாகிகள், மகளிரணி பொறுப் பாளர்கள் தோழர்கள், தோழியர்கள், இன உணர்வாளர்கள் பெரியார் திடலில் பெருந்திரளாகக் குழுமி இருந்து மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இரவு 10 மணியளவில், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களது உடல், சென்னை பெரியார் திடலில் இருந்து ஆம்புலன்ஸ்மூலம், தோழர்களுடன் அவரது சொந்த ஊரான கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பெரியார் நெடுஞ்சாலைவரை, கழகத் தலைவருடன் தோழர்கள் அமைதியுடன் நடந்து சென்று ஆம்புலன்ஸ் வாக னத்தை வழியனுப்பி வைத்தனர்.
பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் உடலுக்கு அமெரிக்க சிகாகோவைச் சார்ந்த பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர்கள் டாக்டர் சோம.இளங்கோ வன், டாக்டர் இலக்குவன் தமிழ் ஆகி யோர் சார்பில் கோவையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆசான் உடல் எரியூட்டப்பட்டது
வடகோவை கல்வியகத்தில் - இன்று மதியம் 2 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட் டத்தில் கோவை மாவட்ட அனைத்துக் கட்சி முக்கியப் பிரமுகர்கள், பொது அமைப்பைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர் கள் ஆகியோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர்.
மாலை 4 மணிக்கு கோவை சரவணப் பட்டி மின்மயானத்தில் கு.வெ.கி.ஆசான் அவர்களது உடல் எரியூட்டப்பட்டது.

No comments:


weather counter Site Meter