Pages

Search This Blog

Tuesday, February 1, 2011

சபரிமலை மகரஜோதி மர்மம்! (2)

முந்தைய பதிவு சபரிமலை மகரஜோதி மர்மம்! (1) படிக்க
http://naathigam.blogspot.com/2011/01/blog-post_9657.html

(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது)

அங்கே கண்காணிப்புக் கோபுரம் ஒன்று இருந்ததுதான் நம் பதுங்கலுக்குக் காரணம். சிறிது நேரம் நோட்டம் விட்ட நாம் கண் காணிப்புக் கோபுரத்தில் யாரும் இல்லாததை உறுதிபடுத்திய பின்பே பாம்பின் தலையைப் பார்க்க மேற் கொண்டு மிக மிக நெட்டுக்குத் தலாய் இருக்கும் மலையில் ஏறினோம். அங்கி ருந்துதான் எங்களுக்குள் பேச்சுக் கிளம்பியது.

நம்மிடையே பேசத் தொடங்கிய சுகுமாரன், பொன்னம்பலமேடு மனுஷங்க யாரும் போக முடியாத மலை. அங்கே அய்யப்பனின் வாகனமான புலிகள் நிறைய இருக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருக்கற வங்க எதுக்கு இந்தப் மலை பகுதியில் கண் காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க. இங்க நான் வர்றது அஞ்சாவது தடவ என அதிர்ச்சி கொடுக்கிறவர்.. இதோ.. இதோ.. இதுதான் பொன்னம்பல மேடு உச்சி என்றபோது நடந்து வந்த கால் வலியெல் லாம், பயமெல்லாம் காணாமல் போக.. பாம் பின் தலையைப் பார்த்தோம். சபரிமலையி லிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்த வர்களே இருக்கிற நிலையில் நாம் மட்டும் தான் பொன்னம்பல மேட்டிலிருந்து 2000 அடிக்கு கீழ் ஒரு வெளிச்சப் புள்ளியாய் தெரிகிற சபரி மலையைப் பார்த்தோம்.

பொன்னம்பல மலையின் நுனிப்பகுதி யில் ஒரு சின்ன திட்டு கட்டப்பட்டிருந்தது. அந்தத் திட்டை கை நீட்டிக் காட்டும் சுகுமாரன், இந்தத் திட்டுதான் சபரிமலை தேவசம் போர்டுக்கும் கேரள அரசுக்கும் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துக் கொண் டிருக்கிறது என்றவரிடம்.. முதலில் மகர ஜோதி என்பது என்ன? மகர விளக்கு என்பது என்ன? அதைச் சொல்லுங்கள் என்றபோது...

ஆதி காலத்திலிருந்தே மகர மாசம் பிறக்கும் ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம் பலமேட்டில் ஒரு நட்சத்திரம் தோன்றும். அந்த நட்சத்திரம் வருவதற்கு முன்னால் கிருஷ்ண பருந்து வட்டமிடும்.. பின்வரும் அந்த நட்சத்திரமே மகர விளக்கு. அதான் அய்யப்பன்னு சொல்லப்பட்டது. பின்னா ளில் பொன்னம்பல மேட்டில் ஆதிவாசிகள் இருந்தபோது அவர்கள் ஏதொவொரு நிகழ் வுக்காக அங்கே மலையுச்சியில் குறிப்பிட்ட அந்த நாளில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.

இதை சபரிமலையில் நட்சத்திரத்தைப் பார்க்க வந்திருந்தவர்கள் அய்யப்பன் ஒளியா காட்சி தர்றாரு. இது மகர ஜோதின்னு கன்னத்துல போட்டுக் கிட்ட தேவசம் போர்டு பார்த்தாங்க. அதையே மகர ஜோதியாவே வச்சுக்கிட்டவங்க முதல்ல செய்த காரியம், பொன்னம்பல மேட்டிலிருந்த ஆதிவாசி களை விரட்டினாங்க. 2000 அடிக்கும் மேலாக இருக் கும் சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தால் வானத்தை முட்டுவதுபோல இருக்கும். அதனால் ஜோதி ஏற்றும்போது அது வானத்தி லிருந்து வருவதாகவே பக்தர்கள் நம்பு வார்கள் என தேவசம் போர்டு பிளான் செய்தது. அதன் பின்னரே அந்த மலை யாரும் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டு தேவசம் போர்டோட பண மலையாகிப் போனது.

இப்போ இந்தப் புல்மேட்டுல 104 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகே தங்கள் கற்பூர ஜோதி குட்டு வெளியாகற தனாலேயே தங்கள் மலை வருமானத் தைத் தக்க வைத்துக் கொள்ள.. புதிதாய் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மகர ஜோதி என்பது நட்சத்திரம்; மகர விளக்குங் குறதுதான் பொன்னபல மேட்டில் ஏற்றப் படுவதுன்னு.. என சிரிக்கிறவர் இதிலும் ஒரு பொய் என்னன்னா.. ஆதிவாசிகள் தான் மகர விளக்கு ஏத்தறாங்கன்னு.. ஆனா யார், ஏத்தாறங்கன்னு நான் சொல்றேன்.

1980-இல் மகரஜோதி பொய்னு சொல்லி நானும், என் ஃப்ரெண்ட் பாபுவும் இந்த பொன்னம்பல மேட்டுக்கு ரகசிய மாய் வந்தபோது.. நாங்கள் நினைத்தது போலவே இங்கே ஆதிவாசிகள் வசிக்கவில்லை. இங்கே வந்த ஜீப்புகளில் ஒரு ஜீப்பில் சபரிமலை தேவம்போர்டு என்று எழுதப்பட் டிருந்தது. அந்த வண்டி எண்கூட கே.ஆர்.பி. 2951, இன்னொரு ஜீப்பில் போலீஸ் எஸ்கார்ட்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த வண்டி எண் கே.சி.எஃப்.2672. கூடவே வனத்துறை வண்டி, எலக்ட்ரிசிட்டி போர்டு வண்டி என்று இன்னும் சில ஜீப்புகளில் பெயர் இருந்தது. அவர்கள் எல்லோரும் இணைந்து பெரிய பெரிய அலுமினிய பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு மேலே நடந்தார்கள். அவர்கள் பின்னா லேயே நடந்த நாங்கள் இந்த உச்சிக்கு அவர்கள் வந்த பின் அவர்களின் செயல் களைப் பார்த்து அதிர்ச்சியாகி விட் டோம். மது பாட்டில்களை எடுத்து அருந்தத் தொடங்கியவர்கள் இங்கேயே படுத்துக் கொண்டார்கள். நாங்கள் வெகு நேரம் காத்திருந்தோம்.

மாலை 5 மணிக்கெல்லாம் எழுந்த வர்கள் அந்த அலுமினியப் பாத்திரங் களில் கற்பூரக் கட்டிகளைக் கொட்டி கற்பூர மலையை அந்த அலுமினியப் பாத்திரத்திற் குள் உருவாக்கினார்கள்.

சரியாய் 6.40 மணிக்கு மலையின் நுனியில் நின்று (இதோ நான் செய்வது போல...) தீபத்தை உயர்த்திப் பிடித் தார்கள். பின்பு இன்னொரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து எரியும் தீபத்தின்மீது கவிழ்த்தார்கள். பின்பு சில நொடிகள் கழித்து கவிழ்த்த அலுமினியப் பாத்திரத்தை எடுத்தார்கள். இதேபோல இன்னும் இரண்டு முறை செய்தார்கள். அவ்வளவுதான்... ஆகப் பெரும் வேலை யொன்றை முடித்த நிம்மதியோடு மலையை விட்டு இறங்கத் தொடங்கி னார்கள்.

அப்போது இந்தத் திட்டு கட்டப் படவில்லை. சபரிமலையில் அய்யப் பனுக்கு தீபாராதனை காட்டும் போது... பொன் னம்பல மேட்டுமலையில் ஓடும் ஆற்றில் குளித்து எழுந்து அய்யப்பன் ஒளியாய் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்ற புராணக் கதையை நம்பி பல மூலைகளிலிருந்தும் சபரிமலைக்கு ஜோதி பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்களிட மிருந்து வசூல் செய்வதற்காகவே இந்த பொன்னம்பல மலையை கேரள அரசு பயன்படுத்துவதைப் பார்த்து மனம் நொந்து போனோம்.

அதுவும் எப்படி... மகர ஜோதி யினுடைய ஒளி புனிதம் என்று சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்க.. இவர்களோ கிண்ணத்தில் மது ஊற்றி குடித்துக் கொண்டாடி கற்பூரக் கட்டிகளைப் போட்டு தானாய் வரும் ஜோதி என பக்தர்களை ஏமாற்றுகிறார்களே என வருந்தினோம். அதற்கடுத்த வருடம் 25 பேராய் வந்தபோது.... பொன்னம்பல மலையுச்சியில் துப்பாக்கி முனையில் போலீஸ்காரர்கள் எங்களைப் பிடித் தார்கள். அடித்துத் துவைத்தார்கள். மிகக் கொடூரமாய் துன்புறுத்தினார்கள்.

என்னை அடிக்கும்போது அவர்கள் சொன்னார்கள். மலையாளத்துக் காரனான நீங்க ஒரு பைசாகூட உண்டி யல்ல போட மாட்டீங்க. ஆனா தமிழுக்காரனுகளும், தெலுங்குக்காரனுகளும், கன்னடக் காரனுகளும் கொண்டு வந்து காசு கொட்றத நீங்க எதுக்குடா தடுக்கிறங்கன்னு சொல் லியே அடிச்சாங்க.

அடிச்சுக் கொண்டு வந்து மலைக்கு வெளியே தூக்கி வீசிட்டுப் போனாங்க. 3 மாசம் ஆஸ்பத்திரியில் கிடந்த நான் திரும்பவும் மகரஜோதின்னு கற்பூர தீபத்தை காட்றத படம் எடுக்கணும்னு வெறியோட போய் படம் புடுச்சு லோக்கல் பத்திரிகைகளிடம் கொடுத்தபோது யாரும் பிரசுரிக்கலை. மக்களோட நம்பிக்கைய முதலீடா வச்சு கோடிகள்ல கொழிக்கிற கேரளா அரசையும், தேவசம் போர்டோட முகத்திரையையும் எப்படியா வது கிழிக் கணும்னு போராடிக்கிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள 1999-ல 54 பக்தர்கள் பலியான சம்பவம் அறிந்து ஸ்பாட்டுக்கு ஓடினேன். நிஜமாய் நான் அழுது விட்டேன். தான் மட்டுமல்லாமல் தன்னு டைய 4 வயது சிறுவனை கூட்டிக் கொண்டு பொய்யான இந்த ஜோதியை உண்மை என நம்பி வந்த ஒரு அப்பா வையும், அந்த 4 வயது சிறுவனையும் ஓலைப்பாயில் சடலமாய் சுற்றி அனுப்பி னோம். இதற்குக் காரணம் மகர ஜோதி தான். அப்போதைய சம்பவத்தைப் போலவே தான் இப்போது புல்மேட்டில் 104 பேர் பலியானதுக்கு காரணமும் இந்தப் பொய்யான மகர ஜோதிதான். உங்க ளுக்கு ஒண்ணு தெரியுமா?

இது உங்க ளுக்கு ரகசியம். எங்களுக்கு இல்லை. இந்த மகரஜோதி தானா வர்றதில்லை. ஏற்றப்படுதுன்னு எங்க மலையாளிக எல்லாத்துக்கும் தெரியும். அதனாலதான் சபரிமலையில் இதுவரைக்கும் இறந்தவங் கள்ல மலை யாளிக ரெண்டோ, மூணோ தான். அதுகூட அவங்க பக்தருக இல்லை. உங்களுக்கு வழிகாட்டி சம்பாதிக்கிற கைடுக பணத்த வந்து எங்க மாநிலத் துல கொட்ற உங்ககிட்ட எதுக்கு மகர ஜோதி உண்மைய சொல்லுணும்னுதான் மலையாளிக பலரும் நெனைக்கிறாங்க என்று கொந்தளிக்கிறவர்... கேரள அரசும், தேவசம் போர்டும் இனியும் பொன்னம்பல மலையை வைத்துக் கொண்டு பிசினஸ் பண்ண முடியாது.

பணத்திற்காக உயிரை மதிக்காத இவர்கள் மீது எங்கள் அமைப்பு அய்கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தண் டனை வாங்கித் தரும்வரை ஓயமாட் டோம் என அந்தப் பொன்னம்பல மேட் டிலேயே நம்மிடம் சத்தியம் செய்தார் சுகுமாரன்.

நாங்க மலையாளப் பத்திரிகை களை நம்பறது இல்லை. நீங்க தமிழ் பத்திரிகை. அதுவும் நக்கீரன்ங்கிற தாலதான் உங்ககூட வந்தோம். நாங்க கைகூப்பி, கேட்டுக்கறது என்னன்னா.. தயவு செய்து இனியும் உங்க தமிழ் மக்களும், ஆந்திர மக்களும், கன்னட மக்களும் மகரஜோதி உண்மைன்னு நம்பி இங்க வரவேணாம். வந்து மரிக்க வேணாம். உங்க மாநிலத் துலயே ஒரு அய்யப்பன் கோயில் கட்டி கும்பிடுங்க. அதையேதான் நாங்க கேட் டுக்கிறோம் என்கிறார்கள் குருவிலா னும், புருஷோத்தமனும்.

மலையைவிட்டு இறங்கத் தொடங் கியிருந்தபோது.. இருள் பிடித்துக் கொண்டிருந்தது எங்களை. மலை விட்டு கீழிறங்கி அந்த மலையைத் திரும்பிப் பார்த்தோம். கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்கிற அய்யப்ப பக்தர்களின் சரணத்தில் நமக்கு ஒரு கேள்வி எழும் பியது. கல்லும் முள்ளும் யார் காலுக்கு மெத்தை என்பதுதான் அது? அதற் கான பதில் கேரள அரசிடமும் சபரி மலை தேவசம்போர்டிடமும் மட்டுமே இருக்கிறது.

பக்தியில் திளைக்கும் மக்களை பணம் காய்க்கும் மரமாக நினைப்பதைத் தடுத்து உண்மையை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் பயணத்தைச் செய்தது நக்கீரன். கேரள அரசு வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பகுதி என்று பொன்னம்பல மேடுவை பொன் மேடு தயாரிக்கப் பயன்படும் மெத்தையாக்கிக் கொள்ளலாம். ஆனால் உண்மைகளுக்காக எங்கேயும் நடக்கும் நக்கீரனின் கால்களுக்கு அந்தப் பொன் னம்பல மேடு வெறும் சொத்தைதான்.

- அருள்குமார்
நன்றி: நக்கீரன் ஜன26-28 2011


நட்சத்திரம்... பருந்து ரகசியங்கள்!

104 பேர் இறந்து போன புல்மேடு விபத்து எப்படி நடந்தது என்று விளக்கப்பட வேண்டுமானால் நாங்கள் தருகிறோம் என இஸ்ரோ தலைவர் அறிவித்தார். அதையொட்டி கேள்வி எழுப்புவோர், அப்படி யானால் பொன்னம்பல மேட்டில் தீபம் யார் ஏற்றுகிறார்கள் என்பதையும் இஸ்ரோ கண்டுபிடித்து தரலாமே என்கிறார்கள்.

மகரஜோதி என்பது நட்சத்திரம் என்று புதிதாய் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.. மகரஜோதி என்பது நட்சத்திரம் என்றால் புல்மேட்டு பகுதியிலிருந்து பார்த்தால் மட்டும் தெரியக் கூடாது. உலகின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தெரிய வேண்டும் என்கிறவர்கள்.. நட்சத் திரம் தோன்றும் போது கிருஷ்ண பருந்து வேறு வட்டமிடுமாம்.

பருந்து வில் சற்று பருந்து, வாலன் பருந்து, கருடன் பருந்து என பல வகைகள் இருக்கின்றன. மனிதர்கள் அதிகம் கூடும் பகுதியில் பருந்துகள் பறப்ப தென்பது இயற்கையான ஒன்று. அவ்வளவு உயரத்தில் பறக்கக் கூடிய பருந்து கிருஷ்ண பருந்து என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார் களோ...? ஒரு வேளை, அது அவர் களே வளர்க்கும் பருந்தாக இருக்க லாம். இங்கே பல பருந்துகள் வளர்க் கப்படுகின்றன என்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால்....!

1986-இல் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் மகரஜோதி பொய்யானது என்று வெளியானது. அப்போது தூர்தர்ஷனும், ஆகாச வாணியும்.. கள்ளம் பறைஞ்சு ஜனங்ககிட்ட களியாக்கனுண்டு. அக்கள்ளமார் பறையறது யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவனந்தபுரத்தில் உள்ள தூர்தர்ஷன் முன்பும், ஆகாசவாணி நிலையம் முன்பும் அப்போதே தர்ணா நடத்தப்பட்டது.

அதை நினைவுகூரும் போராட்டவாசிகள், நாங்க சொன்னத அன்னைக்கு மக்கள் நம்பியிருந்தா மகர ஜோதி அன்னைக்கே மரிச்சுப் போயிருக்கும்.

இப்போ இந்தளவுக்கு மனித உயிர்களின் மரணங்களும் நிகழ்ந்திருக்காது. சபரிமலையின் இந்த சீன் வருமானம் மட்டுமே 130 கோடி ரூபாய் என உயரவே உயர்ந்திருக்காது என்கிறார்கள்.
http://viduthalai.in/new/page-2/2527.html

No comments:


weather counter Site Meter