தினமணி (17.2.2011) நடுப்பக்கத்தில் பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும் (http://www.dinamani.com/edition/Story.aspx?artid=377577)எனும் ஒரு கட்டுரையைத் தகுதி உடைய ஒருவரால் எழுதப்பட்டு வெளியாகி இருக்கிறது.
சில நாள் களுக்கு முன்பு ஜீவாவின் பெயர்த்தியின் திருமணத்தைப் பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது அவர் ஜீவாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தோழமையை விவரித்துப் பேசி அது ஏடுகளில் எல்லாம் வெளியாகி இருக்கிறது.
ஜீவாவுக்கும் கலைஞருக்கும் 18 ஆண்டுகள் வித்தி யாசம் இருந்தால் என்ன? அவரைச் சந்திக்கிற வாய்ப்பு, உரையாடுகிற வாய்ப்பு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தத் தோழமையைத் தான் கலைஞர் அந்தத் திருமண விழாவில் எடுத் துரைத்தார்.
அதை மறுத்து ஒரு கட்டுரை ஒருவர் எழுத, அதை தினமணி வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறது.கட்டுரையாளர் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறார்.
அதற்குரிய புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 1957 தேர்தல் தொடர்பாக தினமணி கட்டுரையாளர் எழுதியுள்ள இமாலயப் பொய்யை எப்படிப் பொறுத்துக் கொள்ளுவது?
அவர் எழுதுகிறார்:
சில நாள் களுக்கு முன்பு ஜீவாவின் பெயர்த்தியின் திருமணத்தைப் பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது அவர் ஜீவாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தோழமையை விவரித்துப் பேசி அது ஏடுகளில் எல்லாம் வெளியாகி இருக்கிறது.
ஜீவாவுக்கும் கலைஞருக்கும் 18 ஆண்டுகள் வித்தி யாசம் இருந்தால் என்ன? அவரைச் சந்திக்கிற வாய்ப்பு, உரையாடுகிற வாய்ப்பு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தத் தோழமையைத் தான் கலைஞர் அந்தத் திருமண விழாவில் எடுத் துரைத்தார்.
அதை மறுத்து ஒரு கட்டுரை ஒருவர் எழுத, அதை தினமணி வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறது.கட்டுரையாளர் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறார்.
அதற்குரிய புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 1957 தேர்தல் தொடர்பாக தினமணி கட்டுரையாளர் எழுதியுள்ள இமாலயப் பொய்யை எப்படிப் பொறுத்துக் கொள்ளுவது?
அவர் எழுதுகிறார்:
1957 இல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.கவுக்கு உண்டு, தி.மு.க, முதன் முதலில் பங்கேற்ற தேர்தல் அது.
அப்போதெல்லாம் 234 தொகுதிகளி லும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும். தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கி ரஸுக்கு எதிரான சுயேச்சைகளை ஆத ரிக்கும்.
அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்தவேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருட்படுத் தாமல், ஜீவரத் தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார் பேட்டை தொகுதியில் நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக் கும் பங்கு உண்டு. இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும், கருணாநிதிக் கும் என்ன தகுதி இருக்கிறது?
மேலே உள்ள கட்டுரையாளரின் கூற்றைப் பார்த்தால் அவர் எவ்வளவு கற்றுக்குட்டித்தனமாக, எழுதுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1957 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. நிற்க வேண்டும் என 1956 இல் முடிவு எடுத்துவிட்டது. அதன்படி தி.மு.க. 124 இடங்களில் தமிழகச் சட்டமன்றத் திற்குப் போட்டியிட்டது. போட்டி யிட்டதோடு நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களில் 1 ஆதரவு வேட்பாளர் 5 பேருக்காகப் பிரச்சாரம் செய்தது.
இது எப்படி வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டியிடுவது என்று ஆகும்? இப்படி வேட்பாளர்களை நிறுத்தியதிலிருந்துதான் 15 பேர் சட்ட மன்றத்திற்கும் இருவர் நாடாளுமன்றத் திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு.
1957 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீவா வண்ணாரப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கவில்லை. அவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை.
திரா விட நாட்டுக் கொள்கையை ஆதரித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வேட்பாளர்களையே தி.மு.க. ஆதரித்தது. அதன்படி ஆல்பர்ட் ஜேசுதாசனை தி.மு.க ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது. 1952 இல் ஜீவாதான் வெற்றி பெற்றார்.
1957 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம் என்ன? ஜீவா வண்ணாரப்பேட்டையில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வில்லை, அவர் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட் டியிட்டார். அங்கே அப்போது தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் கி. மனோகரன்.
ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர். சம்பந்தம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார். 1957 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்ட கம்யூ னிஸ்ட் வேட்பாளர் ஏ.எஸ்.கே. அய்யங் கார். தி.மு.க. வேட்பாளர் எஸ். ஜீவரத் தினம். காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி நாடார் வெற்றி பெற்றார்.
போட்டியிடாத ஜீவாவை யார் தோற்கடித்தது? 1962 ஆம் ஆண்டு தான் ஜீவா மீண்டும் வண்ணாரப் பேட்டை தொகுதியில் போட்டியிடு கிறார்.
மீண்டும் காங்கிரஸ் வேட் பாளர் மாயாண்டி நாடார்தான் வெற்றி பெறுகிறார்.
தி.மு.க. வேட்பாளர் மு. வேதாசலம் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.
இதுதான் 1952, 1957, 1962 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் விவரங்கள் சுருக்கமான நிலவரங்கள்.
அப்போது பெற்ற வாக்கு விவரங்கள் வருமாறு: 1957 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியின் வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்
1. எம். மாயாண்டி நாடார் 11,770 - 29.49% (காங்)
2. என் ஜீவரத்தினம் (தி.மு.க. ஆதரவு) (சுயே) 11,279 - 28.26%
3. பி.எம். லிங்கேசன் 9,152 - 22.93% (சுயே)
4. ஏ.எஸ்.கே. அய்யங்கார் 7,005 - 17.56% (கம்யூ)
5. எஸ். தெய்வசிகாமணி 707 - 1.76% (சுயே)
1962 ஆம் ஆண்டுவண்ணாரப் பேட்டை தொகுதியில்
வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்
1. எம். மாயாண்டி நாடார் 25,732- 37.8% (காங்)
2. எம். வேதாசலம் 24,095 - 35.4% (தி.மு.க)
3. பி.ஜீவானந்தம் 10,040 - 14.7% (கம்யூ)
4. பி.எம். லிங்கேசன் 2,190 - - (சுயே)
நிலைமை இப்படி இருக்கிறபோது, தினமணி கட்டுரையாளர் அவராகவே சில கதைகளை யெல்லாம் விடுகிறார். இடதுசாரிகளை எதிர்த்து வேட் பாளர்களைப் போடவேண்டாம் என்று யார் யாரிடம் கேட்டுக் கொண்டார் கள்?
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது!
ஒவ்வொரு கட்சியும் கொள்கை முழக்கம் முழங்கிய நாள்கள் அவை. கூட்டணி என்று இல்லாமல் தனியாக மக்களை சந்தித்த மகத்தான நாள்கள் அவை!
கட்டுரையாளர் சொல்லுவது போல எவரும் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை, இதற்கும் கலைஞரை அக்காலகட்டத்தில் சம்பந்தப்படுத்து வது பொருத்தமில்லாதது ஆகும். கட்டுரையாளரின் தெளிவின்மையையும் அறிவீனத்தையும் இது காட்டுகிறது.
தி.மு.க.வின் முதல் மாநில மாநாட் டின் மேடையில் அமர்ந்து இருந்தவர் ஜீவா! திராவிட இயக்கத் தலைவர் களிடையே தோழமை பேணியவர் ஜீவா!
சுயமரியாதை இயக்கத்தில் உழைத்தவர் ஜீவா! முற்போக்கு எண் ணம் கொண்டவர்களை மதிப்பவர் ஜீவா. அந்த வகையில் கலைஞர், ஜீவா வுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை தோழமை பொங்க ஜீவாவின் பெயர்த்தி திருமணவிழாவில் எடுத் துரைத்திருப்பது தவறா? அதற்கு வயதை ஒப்பிட்டுக் காட்டுவது எப்படிச் சரி?
1963 ஆம் ஆண்டு ஜீவா இயற்கை எய்தினார். தமிழ்நாட்டு அர சியலில் கலைஞர் அதற்குள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார். ஜீவாவின் மரணத்தின் போது கலைஞர் தி.மு.க.வின் பொருளா ளர்; நாடறிந்த தலைவர்.
ஜீவாவைச் சந்தித்துப் பேசுகிற அறிமுகமும், வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்து இருக்கின்றன. இதில் 18 வயது ஜீவா மூத்தவர் என்கிற காரணம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்?
அவர் மூத்தவர்தான். அதனால் இளையவர் தோழமை மேலிட முடியாதா, ஜீவா காந்தியைச் சந்தித்தது போல! தோழமை பொங்க அவரோடு பழகியதை கலைஞர் நினைவு கூர்ந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வே! இது தவறாகுமா?
க. திருநாவுக்கரசு
No comments:
Post a Comment