Pages

Search This Blog

Monday, February 14, 2011

மோடி மற்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

தவறு செய்தார்கள் என்பது உறுதி ஆனால் நடவடிக்கைகள் மட்டும் கிடையாது
தெகல்கா வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

 
மோடி மற்றும் அவரது அரசு மீது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு,  நோக்கத்திலும் - அதிகாரத்திலும் ஒரு வரையறைக்குள் செயல்பட வேண் டிய கட்டாயத்தில் இருந்தது என்பதைக் கவனிப்பது முக்கியமானது. இந்த அறிக்கை வெறும் தொடக்க நிலை விசா ரணையைப் பற்றியதே.  சோதனை செய் யவோ, அதிரடி சோதனை நடத் தவோ, குற்றம் சாற்றப் பெற்றவர்களைக் காவல் துறை பாதுகாப்பில் எடுத்து விசாரிக் கவோ, அரசிடமிருந்து அல்லது தனிப் பட்டவர்களிடமிருந்து முக்கிய மான ஆவணங்களைக் கோரிப் பெறவோ இக்குழுவின் விசாரணை அலுவல ருக்கு அதிகாரம் இருக்க வில்லை. அவ ருக்கு இருந்த ஒரே வழி, வாக்குமூலங் களைப் பதிவு செய்வது மட்டும்தான். இந்த விசாரணை நடந்து கொண்டி ருக்கும்போதே, விசாரணைக் குழு தனது நோக்கத்தில் சமரசம் செய்து கொண்டது என்று பல மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாற்றின.  இந்த அச்சங்கள் மற்றும் விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ள அவர் களுக்கிருந்த வரையறைகள் ஆகியவற் றுக்குப் பின்னும், மோடியின் மீதான பல கடுமையான குற்றச்சாற்றுகள் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. இப்போது நம் முன் உள்ள கேள்வி என்னவென்றால், அதிகாரம் மிகுந்த, தொடர்ச்சியான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டால் இன்னும் என்னென்ன வெளிவரும் என்பதுதான்.
இந்தியாவில் செல்வாக்கும், அதி காரமும் கொண்டவர்களை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. திடுக்கிடச் செய்யும் கண்டுபிடிப்புகளுக்குப் பின் னும், டாண்டன், கோண்டியா போன்ற காவல்துறை அதிகாரிகளையும், ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்தவராக இருந்த பா.ஜ.க. அரசியல்வாதி ஜடா பியா ஆகியோரிடம் கூர்மையாக விசாரணை செய்த இந்த சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு மிகவும் தயங்குகிறது.
தனது முடிவான அறிக்கையில், இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ராகவன் கூறுகிறார்:  இந்தத் தொடக்க நிலை விசாரணையில் 32 குற்றச்சாற் றுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப் பட்டது. முதல் அமைச்சர் உள்ளிட்ட மாநில அரசு மற்றும் அதன் அமைப்புகள் செய்த தவறுகள், செய்யாமல் விட்ட கடமைகள் தொடர்பானவை இவை. இவற்றில் ஒரு சில மட்டுமே உறுதிப்படுத் தப்பட்டுள்ளன. மேலும் அவர் தொடர்ந்து கூறுகிறார்: உறுதிப்படுத்தப் பட்ட குற்றச்சாற்றுகளிலும், சட்டப்படி யான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான ஆதா ரங்கள் கிடைக்கவில்லை.
அரசின் ஆதரவு
இது மாபெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு முடிவுரையாகும்.  மேற் கொண்டு விசாரணை நடத்தவோ, அல்லது தண்டனை அளிக்கும் நட வடிக்கை மேற்கொள்ளவோ இந்தியாவில் இதற்கு மேல் எந்த அளவுக்குக் கடமை தவறினால், அது நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவையாக அமையும்? பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள், மனித உரிமைக் குழுக்கள், சுதந்திரமான ஊடக அறிக்கைகள், அனைத்துக்கும் பிறகு இப்போது சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றி லிருந்து, பல கலவரப் படுகொலை வழக்கு களில் கலவரங்கள் நிகழ அனுமதிக்கப் பட்டிருக்கிறது அல்லது நேரடியாக ஆதரவு அளிக்கப் பட்டிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், காவல் துறையும், நீதிமன்றங்களும் உண்மை களை மிகவும் தந்திரமாகத் திரித்துக் கூறி, நீதியைக் குழி தோண்டிப் புதைத் துள்ளன என்பதும், குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கு பரிசுகள் அளிக்கப் பட்டும், நேர்மையாக இருந்த அதிகாரி கள் தண்டிக்கப்பட்டும் இருந்தனர் என்பதும், அலுவலக ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதும்  தெளி வாகவே தெரிகிறது.  நியாயமான, அமைதி நிறைந்த ஒரு சமூகம் உள்ளுக் குள்ளேயே உடைந்து நொறுங்கிப் போகச் செய்த  பயங்கரமான செயல் களுக்கு நரேந்திர மோடி முதல் அமைச்சராகத் தலைமை தாங்கியுள் ளார். உள்துறை அமைச்சர் என்ற முறையில், ஒட்டு மொத்த சட்டம் ஒழுங்கு நிருவாக இயந்திரமும் - காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறை - அவரது நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்துள் ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி யில் அமர்த்தப்பட்ட மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர் மீது மேலும் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் இன்னும் எந்த அளவுக்கு அவர் குற்றங்களில் ஈடுபடவேண்டும்? முதல் அமைச்சராக தெருவில் திரியும் கலவரக் கும்பல்களுடன் அவர் செல்ல வேண்டிய அவசியமில்லை. பெரும் கலவரம் நிகழ்த்தப்பட அவர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலே போதுமானது; அல்லது அதை அனு மதித்து ஒரு சிறு சமிக்ஞை காட்டினால் போதும். அதுவே அவர் குற்றம் செய்ததாக ஆகும். சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளில் மோடி இதற்கும் மேற்பட்ட குற்றங்களைப் புரிந்துள்ளார்.
இவற்றுக்குப் பிறகும், சட்டத்தின் கீழ் மோடியின் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப் பரிந்துரைப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் கூறுகிறார். இப்போது நம் முன் உள்ள கேள்வி என்னவென்றால், அப்படியா னால் நமது சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா? அல்லது ஆளுக்குத் தகுந்தாற்போல் சட்டங்களைப் பயன் படுத்தும் பழக்கத்தை மாற்ற வேண்டுமா? பின் எப்படி, புகழ் பெற்ற மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினா யக் சென், ஒரு சாதாரண சாட்சி யத்தின் அடிப்படையில், இதை விடக் கடுமைக் குறைவான குற்றச்சாற்றின் பேரில் ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டார்?
குஜராத் கலவரங்கள் பற்றி மேலும் ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்வது என்பது பற்றிய முடிவு தற்போது உச்சநீதிமன்றத்தின் கைகளில் உள்ளது. உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான ராஜு ராமச்சந்திரன் இந்த வழக்கிற்குப் பொறுப்பான வழக்கறிஞர் என்ற முறையில் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை மீதான தனது கருத்து களையும், பரிந்துரைகளையும் கடந்த ஜனவரி 20 ஆம் தேதியன்று அளித் துள்ளார். நீதிமன்றம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு ஆகியவற்றைத் தவிர வேறு எவரும் ராமச்சந்திரன் என்ன ஆலோசனை தெரிவித்துள்ளார் என்பதை அறிந்திருக்கவில்லை.
எனவே,  மார்ச் 3 ஆம் தேதியன்று விசாரணை நடத்த உள்ள நீதியரசர்கள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம் மற்றும் அஃப்டாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு  இப்பிரச்சினை மீது எதிர்காலத்தில் என்ன விதமான நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிய முடிவை அறிவிக்கும் என்று ஆவலாக அனைவரது கவனமும், பார் வையும் எதிர்பார்த்துக் காத்திருக் கின்றன.
163 பேர்களிடம் விசாரணை
மாநில அரசால் நடத்தப்பட்ட படுகொலையில் பங்குகொண்டதாகக் குற்றம் சாற்றப்பெற்ற மோடி உள்ளிட்ட பா.ஜ.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடமிருந்தும் இந்த விசாரணை அலுவலர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சில தனிப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. மொத்தத்தில் 163 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எந்த அரசு அதிகாரியாவது அல்லது காவல் துறை அதிகாரியாவது உண்மையைக் கூறும் ஆவல் கொண்டவர்களாக இல்லை என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் விசாரணை அலுவலர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணம் இத்தகைய அதிகாரிகள் அனைவருக்கும் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் செல்வாக்கும், அதிகாரமும் மிக்க அரசு நியமனங்கள் கிடைத்துள்ளன. மேலும் சிலர் சக்தி வாய்ந்த முதல் அமைச்சரை விரோதித்துக் கொள்ள விரும்பாதவர்களாக இருந்தனர்.

No comments:


weather counter Site Meter