Pages

Search This Blog

Friday, February 11, 2011

ஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண்டு

கிறித்துவத்தைப் பரப்புவ தற்காகப் பல மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டு. கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் கிறித்துவம். நாட்டுக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்க வையே. அதிலும் சிறப்பாக தமிழ்த் தொண்டு ஆற்றிய பெரு மக்கள் தமிழர் வரலாற்றில் கம்பீரமாக நிற்கக் கூடியவர்கள் ஆவார்கள்.

ஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண்டு சாதாரணமானதல்ல. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந் தவர் இவர். ஜான்போப், கேதரைன் உக்லோ ஆகிய இணையர்க்கு மகனாய் பிறந் தவர் - இவரையும் சேர்த்து ஒன்பது மக்கள் அவர்களுக்கு.

1839 இல் சமயப்பணி ஆற்றிட கப்பல் மூலம் தென் னிந்தியாவுக்குப் பயணமானார்.

கப்பலில் பயணித்த எட்டே மாதங்களில் தன்னுடன் பயணம் செய்த வில்லியம் ஆர்தர் மற்றும் ஜோன்ஸ் கேரட் ஆகியோர் மூலம் தமிழை நன்கு கற்றவர். மொழி, வரலாறு, சமயம், மூன் றிலும் புலமை பெற்ற போப் ஜெர்மன், மலையாளம், கன்ன டம், தெலுங்கு ஆகிய மொழி களையும் கற்றார். தஞ்சாவூர், உதக மண்டலம், பெங்களூர் முதலிய இடங்களில் கல்விப் பணி, சமயப் பணிகளை ஆற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 1886இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவ்வாண்டில் தான் தம் வாழ் நாளில் அரிய பணியாக திருக்குறளைத் ஆங் கிலத்தில், மொழிபெயர்த்தார்.

இந்த அரிய பணி உலகச் சிம்மாசனத்தில் தமிழின் கரு வூலத்தை ஒளியிடச் செய்தது. நாலடியார் (1893) திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவர் தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் அன்றியும் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் பெயருடன் வெளியிட்டார்.

இவர்தம் அரிய பணிக்காக ராயல் ஏஷியாடிக் சொசைட்டி எனும் அமைப்பு தங்கப் பதக்கம் அளித்து கவுரவித்தது.

இவரைப்பற்றி சில வரலாற்றுத் துணுக்கு மணிகள் முக்கியமானவை. இங்கிலாந் தின் அரசி எலிசபெத் சென்னை வந்தபோது (20.2.1861) சிறப் பாகத் தயாரிக்கப்பட்ட வெல் வெட் பெட்டகத்தில் ஜி.யு. போப்பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றபோது போப், திருக் குறளை 50 பிரதிகள் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள நூலகங்களுக்கும், பேராசிரியர் களுக்கும், பிரமுகர்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்.

1904 (சனவரி 1) புத்தாண்டு வாரத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட லையும், மதுரை இளம் பெரு வழுதி எழுதிய உண்டாலமே இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சைவ சித்தாந்தம் ஆரியக் கலப்பற்ற பண்டைத்தமிழரின் சமய நெறி என்ற வரும் இவரே! ஆரிய இனம் இங்கு ஊடுருவு வதற்கு முன்னதாகவே தமிழ் நாகரிகம் தனி வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தது என்பதையும் நிலை நாட்டினார்.

தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக் கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் இந்நாளில் தான் (1908) தம் 88ஆம் வயதில் தம் கண்அசைவுகளை நிறுத் தினார்.

- மயிலாடன்
http://viduthalai.in/new/page1/3211.html

No comments:


weather counter Site Meter