Pages

Search This Blog

Tuesday, February 8, 2011

திருப்பதியும் விபசாரமும்

திருப்பதி ஏழுமலையான் கோயில் விடுதிகளில் தங்குவோர் இனி அடையாள அட்டை காட்ட வேண்டுமாம்.

குடும்ப ரேஷன் அட்டை, நிழற்படம் உள்ள அடையாள அட்டைகளைக் காட்டினால் தான் தங்கும் விடுதிகளில் அனுமதிக்கப்படுவார்களாம் (ஆதாரம்: தினமலர் 6.2.2011)
ஏன் இந்தத் திடீர் ஏற்பாடாம்?

தங்கும் விடுதிகளில் கொலை, விபச்சாரம், சட்ட விரோதமான காரியங்கள் தடபுடலாகதங்குத் தடை யின்றி நடக்கின்றனவாம். அதற்காகத்தான் இந்தக் கட்டுப்பாடாம்.

கோயில்களை விபச்சார விடுதிகள் என்றார் காந்தி யார், கள்ளர் குகையென்றார் கவுதம புத்தர்.

அவர்கள் வாய்களில் சர்க் கரையைத்தான் அள்ளிப் போட வேண்டும்.

தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது அவரிடம் கேள்வி ஒன்று மெயில் ஏட்டின் சார்பில் கேட்கப் பட்டது.

தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக் கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களில் இருக் கிறார் என்று நீங்கள் சொல் வதைப்பற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு, காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக்கூட நான் விரும்பவில்லை. ஒரு வகை யில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான். கடவுள் எங்கும் இருக்கிறார்.

திருடர் கள் வாழும் குகைகளில்கூட இருக்கிறார். ஆனால் அதற் காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவ தில்லையே! அதற்குப் பதிலாக ஆலயங்களுக்குத்தானே செல்கிறோம்?

ஆலயங்களில் தூய்மையான சூழ்நிலை நிலவும் என்பதற்காகத்தானே செல்கிறோம்?

அந்தப் பொருளில்தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அதனால்தான் அந்த ஆல யங்களில் ஆண்டவன் இருந் தாலும் ஒரு தாசியின் இல்லத் தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ, அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன்.

இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண் படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்து சமயத்தின் நலனுக் காக வாகிலும், என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடி யாது (தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586-587).

காந்தியாரின் இந்த வார்த்தைகளின் அழுத் தத்தைப் பார்க்கும் பொழுது அவர் பார்த்த அந்தச் சில கோயில்களில் திருப்பதி முக்கியமானதாகவே இருந்திருக்க வேண்டும்.

திருப்பதி விடுதிகளில் கொலை, கொள்ளை, விபச் சாரம் நடக்கிறது என்பதால் தான், தங்குவோர்க்கு நிபந் தனைகளை வைத்திருக் கிறார்கள் - காந்தியார் விபச்சார விடுதி என்று கோயில்களைச் சொன்னதற் கான காரணம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் பொருந்தி விட்டதே!

வேறு சாட்சியம் வேண் டாம், ஆனந்தவிகடனே சொன்னபிறகு வேறு மேல் முறையீடு எதற்கு?

திருப்பதிக்கு சாமி கும்பிட வர்ற காதல் ஜோடி களை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சி புரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னா பின் னாப்படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்.

(ஆனந்தவிகடன் 25.2.2007)

காந்தியார் சொன்னது சரியாகப் போய்விட்டதா -இல்லையா?

- மயிலாடன்
http://viduthalai.in/new/home/archive/2929.html 

1 comment:

Unknown said...

கல் என்றால் கல்! அது நாய்களுக்கு! கல் என்றால் கடவுள்!அது ஆத்திகர்களுக்கு! விபச்சாரம் செய்பவர்கள், கள்ளகாதல் ஜோடிகள், அரசியல்வியாதிகள்! இவர்களுக்கு கல்லுதான் எல்லாமே! நாய்களைப் போல,விவஸ்தை அற்றவர்கள்!தங்கள் மகிழ்ச்சிக்காக, எதனையும் மீறுவார்கள்! விபச்சாரம் செய்ய அவர்களுக்கு, காவிரி படுகையும், திருப்பதி விடுதியும் ஒன்றுதான்!


weather counter Site Meter