Pages

Search This Blog

Thursday, February 3, 2011

ஈஸ்வரன் பெயரால் ஈஸ்வரன்கள்

கடவுள், மதம் வகையறாக்களின் பெயரால் நாட்டில் நடக்கும் மோசடிகள் கொஞ்சம் நஞ்சமா? மக்களிடம் இருக்கும் அறியாமையையும், பேராசை யையும், பயத்தையும் பயன்படுத்தி புரோக்கர்கள் சாமியார் என்ற பெயரில் சுரண்டல் சாம்ராஜ்ஜி யத்தை ஜோராக நடத்திக்கொண்டு இருக் கிறார்கள்.

இருப்பதிலேயே பெரிய சாமியார்தான் ஜெகத்குரு சாமியார் சங்கராச்சாரியார்.இவருடைய யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்குக் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஒருவர் போதும். கொலைக் குற்றம்வரை இவர்மீது வழக்கு; பெண்கள் விடயத்தில் அப்பப்பா - இந்தக் காலியின் காமவெறி வார்த்தைக் கட்டுக்குள் அடங்கக் கூடியதல்ல.

அண்மையில் இறந்துபோன அக்கிரகாரத்து எழுத்தாளர் அணுராதா ரமணன் என்ற அம்மை யாரே கண்ணீரும் கம்பலையுமாகத் தொலைக் காட்சிகளில் எடுத்துரைத்தார்.

தன் எதிரேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திர சரஸ்வதி என்று சொன்னதைவிட வேறு வெட்கக் கேடு என்ன?

பிரேமானந்தா என்னும் சாமியார் இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்குள் கிடக்கிறார். உடம்பில் இல்லாத வியாதியில்லை என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்.
குடியிருந்த வீட்டுக்கே கொள்ளி வைத்தது என்று சொல்லுவார்கள்; சதுர்வேதி என்ற பார்ப்பன சாமியார், தான் குடியிருந்த வீட்டின் தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் கடத்திச் சென்று 50 லட்ச ரூபாய் பணம் கேட்டான் என்ற சேதி கூவத்தைவிட நாறிப் போய் விடவில்லையா?

பீர் சாமியார், பீடி சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார், சுருட்டு சாமியார் என்று இத்தியாதி இத்தியாதி நீண்ட பட்டியலே உண்டு. இவர்களில் பெரும்பாலும் பெண்களை மயக்கித் தம் வசப்படுத்தி உடலுறவு கொள்வது தான் இவர்களின் முக்கிய திருப்பணி.

வீட்டில் பல பிரச்சினைகள், பெண்களுக்கு வெளியில் சொல்ல முடியாத மன நிலை, குழந்தைப் பேறு இல்லை என்ற குறைபாடு, கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிலையில் தனது ஆற்றாமை - இவைகளுக் கெல்லாம் வடிகாலாகக் காவி வேட்டி சாமியார் களைத் தேடிச் செல்லும் பரிதாப நிலை நம் நாட்டுப் பெண்களிடம் அதிகம். இதனை மிக இலாவகமாகப் பயன்படுத்தி பெண்களை நாசப்படுத்துகிறார்கள்; பெண்களுக்கோ வெளியில் சொல்ல முடியாத அச்சம்!

இவ்வளவுக்கும் மீறி தகவல்கள் வெளியில் வந்த நிலையில்தான் இந்தக் கபட சாமியார்கள் சிக்கு கிறார்கள்; பிறகு கம்பிகளை எண்ணுகிறார்கள்.

கோவையில் ஈஸ்வரன் என்ற சாமியார் அண்மைக்கால வெளியீடு; வழக்கமாக சாமியார் செய்யும் வேலையைத்தான் இவனும் செய் திருக்கிறான். 5000 பேர்களுக்கு மேல் இந்தத் தடியனுக்கு வாடிக்கைக்காரர்களாம். பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, காமலீலைகளில் ஈடுபடுவானாம். இப்படி வாக்குமூலமே காவல்துறையிடம் கொடுத்திருக்கிறான்.

சோதிடம், மாந்திரீகம் என்ற பெயரிலும் சாதாரண கற்களைக் கொடுத்து, அதற்கு மாந்திரீக சக்தி என்று பொய் கூறி, ஆயிரக்கணக்கில் பணம் பறித்து இருக்கிறான். பெண்கள் கண்களுக்குப் போடுகிற மையைக் கடைகளில் வாங்கி, இது வசியப்படுத்தும் மை என்று கூறிப் பணத்தைப் பறித்து இருக்கிறான்.

இதுபோன்று சாமியார் மோசடி அம்பலத்துக்கு வந்த பிறகும்கூட, மறுபடியும், மறுபடியும் இதுபோன்ற சாமியார்களிடம் மக்கள் ஏமாறுகிறார்களே என்று நினைக்கும்பொழுதுதான் வேதனையாக இருக் கிறது.

இதுபோன்ற காவி வேட்டித் தடியர்களை விலங்கு போட்டு வீதிகளில் இழுத்துச் செல்ல வேண்டும். பொது இடத்தில் விசாரித்து, மக்கள் கேவலமாக நினைக்கும் வகையில் செய்தால்தான் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும்; சாமியார் ஆகிக் குறுக்கு வழியிலே சம்பாதிக்கலாம் என்று நினைப்பவன்களுக்கும் அச்சம் ஏற்படும்.

இந்தச் சாமியார்களைக் கண்காணிப்பதற் கென்றே காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். பக்தி அறிவையும், ஒழுக்கத்தையும் கெடுக்கிறது என்பதை இப்பொழுதுதாவது மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!
http://viduthalai.in/new/page-2/2665.html

No comments:


weather counter Site Meter