Pages

Search This Blog

Thursday, February 3, 2011

அண்ணா

ஒவ்வொரு பிப்ரவரி 3 ஆம் நாளும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்தான். இந்நாளில் தான் இரு பெரும் பகுத்தறிவாளர்கள் மறைந் தனர். அறிஞர் அண்ணாவும் (1969) நாத்திக அறிஞரான பெர்ட்ரண்டு ரசலும் (1970) மறைந்த நாள் இந்நாளாகும்.

அண்ணா அவர்கள் நினைவு நாளை தமிழக உரிமைக் காப்பு நாளாகத் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கிறது.

அந்த வகையில் இந் நாளில் அறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனையைச் சீராட்டக் கடமைப்பட்டுள் ளோம். 30.12.1968இல் நீதிக் கட்சி பொன் விழா மலர் (தோழர் பரமசிவம் அவர் களின் ஏற்பாடு) வெளியீட்டு விழாவில் முதல் அமைச்சர் என்ற நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற அந்த நாள் களில் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை செயலில் இருந் ததாக முத்தையா செட்டியார் இங்கு குறிப்பிட் டார். இப்பொழுதும் இரட்டை ஆட்சிதான் நடக்கிறது.

முக்கியமான அதிகாரங் களையெல்லாம் ஆங்கி லேயர்கள் தங்கள் கையில் வைத்துக் கொண்டு, சில் லறை அதிகாரங்களை மட்டும் மாநில ஆட்சியாளர் களிடம் தந்தனர். அந்தச் சில்லறை அதிகாரங்களை வைத்துக் கொண்டுதான் சிறந்த முறையில் ஆட்சிப் பொறுப்பை ஜஸ்டிஸ் கட்சியினர் நடத் தினர்.

அந்த இரட்டை ஆட்சி முறை, ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்துடன் முடிந்து விடவில்லை. இன்றும் அதே நிலைதான் இருந்து வரு கிறது.

அரசியல் சட்டம் திருத் தப்பட்டு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண் டும் என்பதை திராவிட முன்னேற் றக் கழகம் மட்டும் கூற வில்லை.

மத்திய அரசிலே எதற்கு ஒரு சுகாதார இலாகா? எதற்கு ஒரு சுகாதார அமைச் சர் என்றும், டெல்லியிலே எதற்கு ஒரு கல்வி இலாகா - அங்கே எதற்கு ஒரு கல்வி அமைச்சர் என்றும் ஆந் திர முதலமைச்சர் வெளிப் படையாகவே கேட்டிருக் கிறார்.

டெல்லி அரசினர், தாங் கள் கண்காணிக்க பள்ளி களே இல்லை என்பதால் தான் மத்தியப் பள்ளிகள் என்று ஆங்காங்கே திறக் கிறார்கள் போலிருக்கிறது.

இவை தேவைதானா என்றும் ஆந்திர முதல் அமைச் சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கின்றார்.

இப்போதைய பத்தாண்டு காலத்தில் மிக முக்கியப் பணி ஒன்று உண்டென்றால், அது மத்திய - மாநில அரசுகளுக் கிடையே உள்ள அதிகாரங் களை சம அளவில் உள்ள வைகளாக உருவாக்குவதே யாகும். அதற்கேற்ப அதிகா ரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசிய மாகும் என்று முதல் அமைச்சர் அண்ணா சொன்னதை அவர்களின் நினைவு நாளான இன்று மீண்டும் உரக்கச் சிந்திப் போமாக! அசைப் போடு வோமாக!

இப்படி மத்தியிலும் மருத் துவ இலாகாவும், கல்வித் துறையும் இருப்பதால்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை மாநிலங்கள்மீது திணிக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் அண்ணா 1968இல் சொன்னது எவ் வளவுப் பொருத்தமானது தொலை நோக்கானது என் பதைத் தெளிவாக உணர லாமே!

- மயிலாடன்

No comments:


weather counter Site Meter