Pages

Search This Blog

Tuesday, April 19, 2011

உலகமொழிகளில்தமிழ் - முனைவர். கு. அரசேந்திரன், சென்னைக் கிறித்தவக் கல்லூரி


உலகமொழிகள்
உலக மொழிகள் சற்றொப்ப 2,796 என்பர் அறிஞர் (1)

இம் மொழிகளை
1. இந்தோ அய்ரோப்பியம் (Indo - European)

2. செமித்திக் _ அமித்திக் (Semito - Hamitic)

3. ஊரால் _ அல்தாய் (Ural - Altaic)

4. சப்பானிய _ கொரியன் (Japanese - Korean)

5. சீனதிபெத்தியம் (Sino - Tibetan)

6. திராவிடம் (Dravidian)

7. மலேய _ பொலினீசியம் (Malayo - Polynesian)

8. ஆப்பிரிக்க நீக்கிரோனியம் (African - Negro)

9. அமெரிக்க இந்தியம் (American Indian) என ஒன்பதாகப் பிரிப்பார் மரியோ பெய் (MarioA.pei)

முதன்மொழி

உலகமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்து பிறந்திருக்கலாம் என்ற கருத்து மொழிநூலறிஞர்களிடம் இருந்து வருகின்றது. விவிலியத் திரு மறையில் ஆதிகாலத்தில் ஒரு மொழியே பேசப்பட்டு வந்ததென்ற செய்தி காணப்படுகின்றது.

எபிரேயமொழியே (Hebrew) உலகில் தோன்றிய முதன்மொழி என்ற கருத்தும் அறிஞரிடை உண்டு. இதனை மொழி நூல் வல்லுநர்கள் அவ்வளவாய் ஏற்ப தில்லை. சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களே எகிப்தில் (Egypt) குடியே றினர் என்ற முடிவும் அறிஞர்களி டையே உண்டு.

இலேநாடு வுல்லி (Leaonard Wooly) என்னும் தொல்பொருளாய்வறிஞர் எகிப்தின் ஊர் நாகரிகம் பற்றி எழுதிய நூலில் சுமேரியர்கள், தங்கள் முன்னோர் நாகரிக முதிர்வுடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்து குடியேறியவர்கள் என்ற கருத்துள்ளதென்று இயம்பியுள் ளார்.

பண்பாட்டின் தொடக்கம் _ தென்னிந்தியா... (Beginning of civilisation in south India - by H.D. Sankalia) என் னும் நூலில் அதன் ஆசிரியர் உலகில் முதன் முதலாக கிடைக்கப்பட்ட எழுத்து, சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரிகத்தினும் தமிழர் நாகரிகம் முந்தியதென்றும் கூறியுள்ளார்.

தெற்கிலிருந்து வடக்கா அல்லது வடக்கிலிருந்து தெற்கா

தமிழர், எகிப்து தேசத்திலிருந்து சிந்துவெளிப் போந்து அதன் பின்னர்த் தெற்கு நோக்கி நகர்ந்த இனத்தவர் என்று அறிஞர் பலராலும் தமிழர் தெற்கேயிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்காகச் சென்று ஏந்தியம் கடந்த நைல் ஆற்றங்கரையில் குடியேறினர் என்று அறிஞர் சிலராலும் இருவகை யிலும் கருத்துகள் சொல்லப்படுவ துண்டு.

உலக மொழிகளில் தமிழ், என்னும் இக்கட்டுரை 1. சுமேரிய மற்றும் இந்தோ அய்ரோப்பிய மொழிகளில், 2. ஆத்தி ரேலியப் பழங்குடிகளின் மொழிகளில். 3. ஆப்பிரிக்க மொழிகளில், 4. சீன மொழியில் தமிழ் என இவைகளில் கலந்து விரவி மூலமாயிருப்பதைச் சான்றுகள் சில கொண்டு விளக்கி அமையவுள்ளது.

1. சுமேரிய மற்றும் இந்தோ அய் ரோப்பிய மொழிகளில் தமிழ்

சுமேரியாவில் அய்பிராத்து (Euphrates) ஆற்றின் தென்மேற்குக் கரையில் விளங்கிய ஆபிரகாமின் தலை நகரம் ஊர் (Ur) என்றே அழைக்கப்பட் டது. இப்பெயர், பல்லாயிரக்கணக்கில் அரியலூர், தஞ்சாவூர், திருநின்றவூர், வடலூர், கடலூர், மணலூர் போன்ற இடங்களில் வழங்கும் தமிழ்ச் சொல் லேயன்றி வேறில்லை.

தமிழ்நாட்டில் தான் (ஊர்) வழக்குகள் மிகுதி. தமிழர் வடக்கே வடமேற்கே பரவினர் என்பதற்கு இவ் வழக்குகள் செல்லச் செல்ல அருகி இருப்பதே காரணம். ஆபிரகாமின் காலம் கி.மு. 20 ஆம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எபிரேய மொழியிலும் அதனோடு உறவுடைய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்துள்ளன. சான்றுகள் சில வருமாறு:

கானானிய   மொழி எபிரேய     மொழி பொருள்

    EI                           EI                              கடவுள்
Bal, Baal                   Bal, Baal                       ஆண்டவன்
ab                              ab                                அப்பன்
am, em                       am,em                          அம்மா
beth                            beth                              வீடு

மேலான எல், பால் அப்பா, அம்மா, வீடு ஆகிய தமிழ்ச் சொற்களேயாகும்.

கதிரவக்கல் வழிபாடு, மற்றும் புதியகற்காலங்களில் மாந்த இனப் பரவல்

குமரிக்கண்டத்தில் அய்ம்பதனாயிரம் ஆண்டின் முன் தமிழ் தோன்றியது. மாந்தன் பேசத் தொடங்கிய காலமும் இதுவே என்பர் மாந்த நூலார். தமிழ், கிழக்கே ஆத்திரேலிய கண்டத்திலும் மேற்கே ஆப்பிரிக்கக் கண்டத்திலும் 20000_30000 ஆண்டுகள் அளவிலேயே பரவிவிட்டது.

ஆத்திரேலியப் பழங்குடிமக்கள் பேசிவரும் மொழி. தமிழோடு உறவுடையதென ஆர்.எம்.டபிள்யூ திக்சன் கூறியுள்ளார்.

இப்பழங்குடிகள், உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்புகொள்ளாமல் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருக்கின்றனர். என்று தாமசு. ஆர். திராட்மன் கூறியுள்ளார். தமிழர் வடக்கேயிருந்து தெற்கே நகர்ந்து கி.மு. 2000 அளவில் தமிழகத்தில் குடிபுகுந்தவராய் இருந் திருப்பின் பத்தாயிரம் ஆண்டு உறவற்று வாழ்ந்த இப்பழங்குடிமக்கள் மொழியில் தமிழ் எவ்வாறு கலந்திருக்க முடியும். தமிழர்கள் பழுப்புநிற மேனியர். மாநிறம். மாமைநிறம் என இதனைக் கூறலாம்.

யாயா கியளே மாயோள் (குறுந் 9.1) என்பது குறுந்தொகை தமிழ்ப் பெண் பழுப்பு நிறத்தவள் என்பதற்கு இது சான்று.

உலக வரலாற்றுப் பேராசிரியர் எச்.சி.வெல்சு (H.G.Wells) கி.மு. 15000-_1000 ஆண்டுக் காலமாகிய கதிரவக்கல் வழிபாடு (heliolithic) மற்றும் புதிய கற்காலங்களில் (Neolithic) பழுப்பு நிற மக்கள் (brownish) வெப்பநாட்டி லிருந்து உலகெங்கும் பரவினர் என்று தெளிவுபடக் கூறியுள்ளார். இதிலிருந்து தமிழரே உலகெங்கும் பரவினர் என்பதைக் குறிப்பால் அறியலாம்.

இந்தோ அய்ரோப்பிய மொழிகள் எகிப்திய சுமேரிய மொழிகளின் செமித்திக்_அமித்திக் (Semito-Hamitic) குடும்பத்தினின்று வேறெனச் சொல்லப் படும். என்றாலும் முந்தைய சுமேரிய மொழிகளின் தாக்கம் இந்தோ அய்ரோப்பிய மொழிகளில் அதிகம். சுருக்கம் கருதி இரண்டு சொற்களுக்கு மட்டும் உறவு காட்டுவோம். எல். என்னும் சொல், தமிழில் கதிரவனைக் குறிக்கும். இதே சொல் அசிரியர்கள், சீரியர்கள் ((Assyrian, Syrian) வரலாற்றில் கதிரவக் கடவுளைக் குறிக்கும். இவ். எல். சொல் பிமீறீவீஷீ, பிமீறீவீ என்ற வடிவில் எகிப்தியர்களின் கதிரவக் கடவுளைக் குறிக்கும். கிரேக்கர்களைக் குறிக்கும் Elenies, Helinies என்ற சொற்கள் கிரேக்கர்களின் ஓர் பழங்குடியினரான தெசலியன் (Thessalian)என்பார் கதிரவனை வழிபட்டதனால் உருவான வையாகும்.

திருத்தந்தை ஈராசு (Rev.H.Heras) சிந்துவெளித் தமிழர் கடவுளை இறுவன். என அழைத்ததாகச் சொல்லு வார். இலத்தீனில் Ira, era என்ற சொற்கள் கடவுளைக் குறித்துப் பின் அவையே Hera என மாறி Hero, hercules என்ற சொற்களுக்கு வழி திறந்துள்ளது.

ஆத்திரேலியப் பழங்குடிகள் மொழிகளில் தமிழ்

சேம்சுகுக்கு (James Cook) என்னும் ஆங்கிலக் கப்பல் படைத்தளபதியால் 1770 இல் காணப்பெற்று 1788 இல் ஆங்கிலேயரால் கைப்பாற்றப்பட்ட நாடே இன்றைய ஆத்திரேலியாவாகும். இந்நாடு ஆங்கிலேயர் வருமுன் அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கே முழுச்சொந்தமாகும்.

இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள் 250 வகையான மொழிகளைப் பேசுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவை 26 குடும்பங்களாக மொழியறி ஞர்களால் பிரிக்கப்பட்டுள்ளன.

நிக்கு தீபெர்கர் (Nick Thiebeger) வில்லியம் மாக்ரிகோர் (William Mc Greagor) ஆகியோர் பதிப்பித்த (1994) ஆத்தி ரேலியப் பழங்குடிகளின் மொழிபற்றிய அகராதிவழி தமிழுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவிற்குச் சில சான்றுகள் காண்போம்.

தமிழ்நாட்டுத்தமிழ் ஆத்திரேலியத் தமிழ்

அப்பா-_ தந்தை _ Pappa-Father

அரத்தம்-_ குருதி_ arkuga-blood

உகிர்-_ கைகால் நகம்_ Yulu-Nail of finger

எல்_ சூரியன்_ Walu-Time, day, sun

கட்டை-_ மரக்கட்டை_ Katta-heay stick to fight
whith-club

கலம்-_ சிறு படகு_ galwaya-canoe

கருப்பு-_ கரிய நிறம்_ Kob-blacp

கணை-_ கூரிய ஆயுதம்_ ganay-digging stick

காற்று-_ காற்று_ Yartu-Wind/ gale

காளான்-_ காளான்_ ngalangala-mushroom

குருதி-_ அரத்தம் _ Kurrk-Red (Literally having the colour of Blood)

ஞாயிறு-_ ஞாயிறு_ nyaui-sun

தொடை-_ கால் உறுப்பின் மேற்பகுதி_ tharra, tyat-thigh

பந்தல்-_ கட்டப்பட்டது_ Pantail-to tie

படகு-_ நீரில் செல்லும் கலம்_ bagul-canoe

பிறை-_ இளநிலா_ Pira-moon

புகை-_ புகை_ buyu, buya, buyi, buwi-smoke buku-rangu-dark

மலை-_ மலை_ mulha-hill, ridge

மாமன்-_ மாமன்_ Mahman-Father, uncle

முகம்-_ முகம்_ mulha-face, nose

முணிதல்-_ முடைதல்_ muni-to tie, muni- police man (literally to tie up)

மூக்கு-_ மூக்கு_ muruh, muru-nose

மெழுகு-_ தேனடை_ muyi-bees wax

மையல்-_ மயக்கம், அறியாமை_ mayaal-incompetent, ignorant

வாரணம்_ கடல்_ wadam-sea

விழி-_ கண் (முழி, முயி_உலகு வழக்கு)_ mai, mil, milki, miyi-eye

விரல்-_ கை உறுப்பு_ mara-hand, finger, five

நன்றி: Tamil Internet 2002, California, USA


நன்றி: ஊற்று - 2011 - மார்ச்
விடுதலை-ஞாயிறு மலர்-பக்கம்  7 - 02-04-2011

No comments:


weather counter Site Meter