Pages

Search This Blog

Tuesday, April 19, 2011

ஆனந்த விகடனின் சண்டப் பிரசண்டம்

2010 இல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் என்ற தலைப்பிலும் 2010 டாப் 25 பரபரா என்ற தலைப்பிலும் 2011 ஜனவரி 3 நாளிட்ட ஆனந்தவிகடன் இதழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவங்களை விகடன் டீம் தொகுத்து, எழுதி, தயாரித்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் இதைத்தான் எழுதவேண்டும் என்று சொல்லவோ, இதனை எழுதக்கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை. குறைந்த அளவு விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு எழுத வேண்டும் என்று சொல்லக் கூட யாருக்கும் உரிமை இல்லை.

ஏன் என்றால் மனிதன் என்று இருந்தால் அவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. முற்றிலும் துறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சங்கராச்சாரியார் களுக்கும், நித்யானந்தாக்களுக்கும் கூட விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒரு பத்திரிகை தன் சொந்த, தனது சொந்த இனத்தின் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படை யில் எழுதுகிறது என்று சுட்டிக் காட் டும் உரிமை எவருக்கும் உண்டு என் பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் எனது மனக் குமுறலாக இதனை எழுத நேர்ந்தது.

விஷயத்துக்கு வருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 25 பரபரா கட்டுரையில், சங்கி-மங்கி என்ற உப தலைப்பில் கலைஞர் பாராட்டு விழாக்களில் ரஜினி - கமல்தான் பஃபூன்கள் ஜெகத்ரட்சன், இராம நாராயணன், போன்ற நிலைய வித் வான்களையே பீட் செய்ததில் ரஜினி,-கமல் இருவரும் பாராட்டு விழா சங்கி-மங்கி 2010 என்று எழுதியுள்ளது.

திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு திரைப்படத்துறையினர் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தினர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படுவது விகடனுக்கு தமாஷாக உள்ளது. ஏனென்றால் அவர் விகடனாயிற்றே.

பத்துகோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தலாம். உலக நாயகனுக்குப் பாராட்டு விழா நடத்தலாம். இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோருக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தலாம். ஆனால் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினால் மட்டும் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது? எங்கு வலிக்கிறது?

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மய்யக் கருத்துப் பாடல் பற்றி எள்ளி நகையாடப்படுகிறது. மு.க. அழகிரி கிண்டல் செய்யப்படுகிறார்.

தஞ்சைப் பெரிய கோயில் விழாவில் கொல்லைப்புற வழியாகப் போன பகுத்தறிவுக் காமெடி, உமாசங்கர் பிரச்சினை, தமிழ் வழக்காடு மொழி விவகாரம், பார்வதி அம்மாள் சிசிக்சை என்று எவ்வளவு அடித்தாலும் கலைஞர் தாங்கினாராம். ஸ்பெக்ட்ரம் மில் கிறுகிறுத்துப் போனாராம். ஏதோ எல்லாப் பிரச்சினைகளுக்கும் கலைஞர்தான் காரணம் போலவும், ஆ.இராசாவினால் அவரது அரசியல் வாழ்வே ஆட்டம் கண்டுவிட்டது போலவும் புலம்பும் விகடன், கலைஞர் தனது வீட்டை மருத்துவமனைக்கு கொடையாகக் கொடுத்ததையும் கொச்சைப்படுத்தி நகையாடுகிறது.

கலையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் அஜீத் பேசியது, ரஜினி கைதட்டியது, ஜாகுவார் தங்கத்தின் பல்டி என்று இந்த நிகழ்ச்சியை ஏதோ உலகமகா முக்கியத்துவம் வாய்ந்தது போலக் கதைத்துள்ளது விகடன்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவன நிலங் களைப் பயன்படுத்தப் பார்த்த ஜெய லலிதா முயன்று கைவிட்டது பற்றி குறிப்பிடாமல், அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட மாளிகை பற்றி நக்கல் அடிக் கிறது. கட்டிய வீட்டிற்கு நொட் டாரம் சொல்வது என்பது இதுதானோ?

தலைமைச் செயலகம் கட்டிய தொழிலாளிகளுக்கு விருந்து அளித்தது இவர்களுக்கு கேலிக்குரிய விஷயம். சங்கமம் விழா, கோவை செம்மொழி மாநாடு, இவையெல்லாம் இவர்களுக்கு நகைப்புக்குரிய விஷயங்களாம்.

பேச்சு மொழி அல்லாத, இலக்கியத் துறையினர், மத நம்பிக்கையாளர்கள் தவிர மற்றவர்களால் படிக்கவோ எழுதவோ முடியாத சமஸ்கிருதம் செம்மொழியாம். மூன்று சங்கங்கள் அமைத்து, மூவாயிரம் இலக்கியங்கள் படைத்த தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று போராடிப் பெற்றதைக் கொண்டாடிய செம்மொழி மாநாடு இவர்களுக்கு வேடிக்கை, விளையாட்டு.

பா.ம.க. தலைவர் ராமதாசு, அன்புமணி பற்றிய கிண்டல். குஷ்புவின் அரசியல் பிரவேசம் பற்றிய கமெண்ட். டி.ராஜேந்திரனின் தொலைக் காட்சி நிகழ்ச்சி பற்றிய கிண்டல். இவ்வளவை யும் சொல்லத் தெரிந்த விகடனுக்கு, ஜெயலலிதா, விஜயகாந்தின் கோமாளித் தனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை போலும்.

ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பது விகடனுக்குத் தெரியாதா? விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சபாநாயகர் வழங்கிய சிறைத் தண்டனை, இந்து நாளிதழ் செய்தியாளரை பெங்களூர் வரை துரத்திச் சென்று கைது செய்ய முயன்றது, தேர்தல் ஆணையர் சேஷன் தங்க இருந்த தாஜ் ஓட்டலைத் தாக்கி சேதப்படுத்திய அரசால் ஏவப்பட்ட ரவுடித்தனம் இவைகள் எல்லாம் மறந்து போய் விட்டன போலும்.

சுப்பிரமணிய சாமிக்குத் தான் எப்படிப்பட்ட வர வேற்பு! இப்போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் அவர்களுக்கு நல்ல பிள்ளைகளாகத் தெரிகிறார்கள் போலும். அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று விஜய காந்த் கூறுகிறார். அதிமுக வெற்றி பெறப்போவதில்லை.

அப்படியே தவறி வெற்றி பெற்றாலும் அது என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிக் கூற விஜயகாந்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தனது வேட்பாளரின் பெயரையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல், அதனை நினைவுபடுத்திய வேட் பாளரை பொது மக்கள் முன்னிலை யில் அவமானப்படுத்தி அறைந்த விஜயகாந்த் வந்துதான் நாட்டு மக்களை உய்விக்கப் போகிறாரா?

என்ன செய்வது, எழுதுகிறவர் களுக்கும் வெட்கமில்லை, பேசுகிறவர் களுக்கும் வெட்கமில்லை, கேட்கிற வர்களுக்கும் வெட்கமில்லை.

நல்லது கெட்டது என்பதில் படித் தவர்கள்தான் அதிகமாகக் குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் பாமர பொது மக்கள் பேரறிவுடன் அமைதியாக இருக்கிறார்கள். நாட்டுக்கும், மக்களுக் கும் நன்மை செய்தவர்கள், செய்கிற வர்கள், செய்யப் போகிறவர்கள் யார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்தத் தேர் தலில் அதிமுக கூட்டணி டெபாசிட் வாங்கினால் பெரிய விஷயம். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ஜெயலலிதா பட்டிமன்றம் நடத் துவது பரிதாபத்துக்குரியது.

மே 13 அன்று வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியல் வாதிகளுக்கும், காங் கிரஸ்காரர்களுக்கும் தமிழ் நாட்டின் தனித்தன்மையை எடுத்துக் கூறும்.

த.க. பாலகிருட்டிணன்

விடுதலை-ஞாயிறு மலர்-- 02-04-2011

2 comments:

pallavan said...

i don't buy Vikadan books at all.who could prove that J is a brahmin? these idiots conferred that ''HONOUR '' TO HER, JUST BECAUSE THEY NEEDED SOME SCAPECOAT,to oppose Karunanithi.can write volumes about these ogres.
pallavan

pallavan said...

hats off.


weather counter Site Meter