Pages

Search This Blog

Monday, May 2, 2011

அடையாறு சிறீசங்கரா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்தராமன் என்னும் பார்ப்பன அம்மையார் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் பள்ளியில் ஏழை மாணவர்களைச் சேர்த்தால் பள்ளியின் கல்வித் தரமும் ஒழுக்கமும் கெட்டுப் போய்விடும் என்று சென்னை அடையாறு சிறீசங்கரா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்தராமன் என்னும் பார்ப்பன அம்மையார் தனது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

பள்ளியின் தரமும், ஒழுக்கமும் கெட்டுப் போவதுடன், ஆசிரியர்களும் ஆர்வம் இழந்து விடுவார்கள் என்று அவர் அதில் கூறியுள்ளார். மாணவரின் செயல்பாட்டை அவரது பொருளாதார நிலையுடன் தொடர்புபடுத்திக் காணும் இந்த அம்மையார் இந்தக் கல்வி பெறும் உரிமை சட்டத்தை எதிர்க்கும்படி மாணவர்களின் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால், இந்த விதிகள் ஒட்டு மொத்தப் பள்ளியையும் சீரழித்துவிடும் என்றும், அதன் மூலம் மாணவர்களின் கல்வியும் சீரழிந்துபோகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவையெல்லாம் அனைத்துப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகள் போல தரத்திலும், ஒழுக்கத்திலும் தாழ்த்திவிடும் . இதற்காகவா நம் குழந்தைகளை இது போன்ற நல்ல பள்ளிகளில் நாம் சேர்த்தோம்? என்று அந்த சுற்றறிக்கை கேட்கிறது.

இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, அனைத்துத் தனியார் பள்ளிகளும் ஏதோ தங்கள் பள்ளி மட்டும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிட்டது போலவும், அங்கு அளிக்கப்படும் கல்வியைப் போல் வேறு எந்தப் பள்ளியுமே அளிக்காது என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக் கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் நமது பெற் றோர்களும் அத்தகைய பள்ளிகளிலேயே தங்களின் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்ற விருப்பத் தால், அவர்கள் எவ்வளவு நன்கொடை கேட்டாலும் கொடுத்துச் சேர்த்துவிடுவதால், இந்தப் பள்ளி களின் அட்டகாசம் அதிகரித்துப் போயுள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இத்தகைய வெறுப்பினை ஒரு பள்ளியின் முதல்வர் காட்டினால், அப்பள்ளியில் சேரும் ஏழை மாணவர்களின் கதி என்ன என்பதை எண்ணிப் பார்த்தால் அச்சமாகவே உள்ளது. இதைவிட அந்த ஏழை மாணவர்கள் அரசு அல்லது நகராட்சிப் பள்ளிகளிலேயே படித்தாலும் தன்னம்பிக்கையுடன், சுயமரியாதையுடன் நன்றாகப் படித்து முன்னேறு வார்கள் என்பது உறுதி. சமச்சீர்கல்வி என்ற முறை ஓரளவு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கலாம் என்றாலும், கிராமப் பள்ளிகள் முதல் பெருநகரப் பள்ளிகள் வரை எல்லா வசதிகளும் பெற்றவைகளாகத் திகழ வேண்டும்.

இன்றைக்கு அந்த நிலை இல்லை என்பது வெளிப்படை

வாய்ப்பு கொடுத்தால், வசதிகளை செய்து கொடுத்தால், கிராமப் பள்ளிகளில் பயிலும் இருபால் மாணவர்களும் பெருநகர மாணவர்களைத் தூக்கி அடிப்பார்கள்.

சில தனியார் கல்வி நிறுவனங்கள் உயர்ஜாதி மனப்பான்மையுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு மேற்கண்ட பார்ப்பன அம்மையாரே எடுத்துக்காட்டாகும்.

அரசு அறிவிக்கும் சட்டத்தைச் செயல்படுத் துவதுதான் இவர்கள் வேலையே தவிர, அதனை வேறு வகையில் தோல்வி அடையச் செய்வது - எதிராக அறிக்கை விடுவது என்பதெல்லாம் அனுமதிக்கப்படக்கூடாது. கல்வித் துறை இத்தகை யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? எங்கே பார்ப்போம்.

2 comments:

yasir said...

முதலில் நஞ்சை கக்கும் இப்படிப்பட்ட ஆசிரியர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும். இது போன்றவர்களால் போதிக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் பழிவாங்கப்பட வாய்ப்பிருக்கிறது,எனவே அரசு எச்சரிக்கையுடன் கண்கானிக்க வேண்டும்.

நம்பி said...

அந்த சட்டம் வந்து கொண்டிருக்கிறது."பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி அமைப்புகளில் நியாயமற்ற நடவடிக்கைகள் தடை மசோதா 2011' வருகின்ற கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மாநில அரசுகளில் ஏற்கனவே ஜனவரி மாதம், 2011 இல் கலைஞர் அரசால் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வழியாக வழிகாட்டுதல், பள்ளிகள் பின்பற்றவேண்டிய நடைமுறை என்ற அளவில் மக்கள் முன்பு வரைவு நகல் வைக்கப்பட்டு, அனைவரின் ஒப்புதலும் பெற்று சுற்றறிக்கைகள் மூலம் அனைத்து பள்ளிக்களுக்கும் அனுப்ப்ப்ட்டுள்ளது.

அதன் விதிகள் பிடிஎப் பார்மட்டில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவைகளில் சில"" எந்த பள்ளியும் இது மாதிரி நடவடிக்கைகளில் இறங்க கூடாது. மாற்றுச் சான்றிதழ் இல்லையென்றாலும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். எவருக்கும் கல்வியை மறுக்கக்கூடாது. எந்த ஓரு பிரிவினரையும், பொருளாதாரப் பின்னணி, ஜாதி, சமயம் என்ற காரணத்தை காட்டி கல்வி மறுக்கப்படவேக்கூடாது"" என்ற விதிகள் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த பார்ப்பன சார்பு அரசு (அப்படிப்பட்ட நினைப்பு....பார்ப்பனர்களுக்கு ஒடிக்கொண்டிருக்கிறது...ஒடட்டும்...பார்க்கலாம் ) அதை பின்பற்றுமா? என்பது சந்தேகமே!

ஆகையால் தான் இந்தப்பள்ளிகள் (பார்ப்பன நிர்வாக்ப்பள்ளிகள்) துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டன.

ஆகையால் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிற தடைச்சட்டத்தில் கிரிமினல் வழக்கு போடமுடியும், அங்கிகாரம் ரத்து செய்யமுடியும், எந்த ஒரு கட்டணத்திற்கும் ரசீது கட்டாயம் வழங்கவேண்டும், ஆசிரியருக்கு சரியான ஊதியம் வழங்கவேண்டும், கட்டண விதிகளுக்கு முரணானாக நடந்தால் கிரிமினல் குற்றம் என்ற அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு தண்டனை வழங்கப்படும். ஆகவே இந்த சட்டத்தை விரைவில் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த அரசு ஆவண செய்யவேண்டும். அதே போன்று இதற்கு மக்களின் ஆதரவு பெரிதும் உண்டு என்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்துள்ளது. விரைவில் வந்துவிடும் என நம்புவோம், அதற்காக நாமும் ஒத்துழைப்போம். எதிர்கால சந்ததியினரையும், பெற்றோரையும் காப்போம்.

"மக்களாட்சியில் மக்களே எஜமனர்கள்"


weather counter Site Meter