Pages

Search This Blog

Thursday, September 30, 2010

இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_11.html

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதைக் கோயில்களை அகற்றுக! இல்லையென்றால் சம்மட்டியோடு புறப்பட கழக இளைஞர்கள் தயார்! -கி.வீரமணி போராட்ட அறிவிப்பு

எழுச்சி வரலாறு படைத்த கழக இளைஞரணி கலந்துரையாடல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
இல்லையென்றால் சம்மட்டியோடு புறப்பட கழக இளைஞர்கள் தயார்!
தமிழர் தலைவரின் போராட்ட அறிவிப்பு
தஞ்சாவூர், செப். 30- உச்சநீதிமன்ற ஆணைப்படி நடைபாதைக் கோயில்கள், பொது இடம் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோயில் களை, வழிபாட்டுச் சின்னங்களை அரசு அகற்ற வேண்டும்; இல்லையென்றால், கழக இளைஞரணித் தோழர்கள் சம்மட்டியோடு புறப்படத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழக இளைஞரணி மாநிலம் தழுவிய பொறுப்பாளர்களின் கூட்டம் தஞ்சாவூர் புதுப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தனர். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து தனிப் பேருந்தில் வருகை தந்தனர். அரியலூர், செந்துறைப் பகுதிகளிலிருந்து இரண்டு வேன்களில் வந்திருந்தனர் என்றால், பார்த்துக் கொள்ளலாமே!
ஒரு புதிய உத்வேகத்துடன் இளைஞர்கள் பங்கு கொண்டது பெரும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது. வல்லத்தில் நடை பெறும் குழந்தைகள் பழகு முகாமில் கலந்துகொண்ட போது முதுமை தலை தெறிக்க ஓடியது என்றும், இங்கு இளைஞர் சேனை யின் எழுச்சியைக் காணும் போது இளமை திரும்புகிறது; புது முறுக்கு ஏறுகிறது என்றும் தமிழர் தலைவர் குறிப்பிட்டார் என்றால், கூடியிருந்த கூட்டத்தின் எண்ணிக்கையையும், அது காட்டிய எழுச்சியையும் எளி திற் தெரிந்துகொள்ளலாமே!
இளைஞரணி உறுப்பினர் படிவத்தை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பா. வைரம், செ. தமிழ்சாக்ரடீஸ் ஆகியோர் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணியின் பொறுப்பாளர்கள் கொட்டு முரசாக - கோடையிடியாகக் கொள்கை நாதம் கிளப்பினர். தங்கள் தங்கள் பகுதிகளில் நடைபெற்ற கழக நிகழ்ச்சிகளையும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மாட்சியையும் மிகுந்த உற்சாகத்தோடு தெரிவித்தனர்.
சரியாக மாலை 6 மணிக்குக் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாகப் புதுப் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்குக் கழகத் தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்தார். மாவட்டக் கழகத் தலைவர் - வழக் குரைஞர் அமர்சிங், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் ஆகியோர் கழகத் தலை வருக்குச் சால்வை அணி வித்து வரவேற்றனர்.
வன்னிப்பட்டு தமிழ்ச் செல்வன் கடவுள் மறுப்புக் கூற மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கடந்த காலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் செயல்பாடுகளைத் தெரிவித்து அடுத்த ஓராண்டுக்கான திட்டங்களையும் தெரிவித்தார்.
-----------------------------------------
இளைஞர்களே!
இளைஞர்கள் இயக்கத்துக்கு நிதி சேர்க்கத் தயங்கக்கூடாது - கூச்சப்படக்கூடாது. மக்கள் கொடுக்கத் தயார்! ஆனால், நாம்தான் அவர்களிடம் செல்லத் தயாராக இல்லை!
இன்னொன்று முக்கியமானது; ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போகும்போது தந்தை பெரியார் நூல்களைப் பத்து நிமிடமாவது படித்துவிட்டுத்தான் தூங்கவேண்டும். அப்படிப் படித்தால், நிம்மதியாகத் தூக்கமும் கூட நன்கு வரும்.
தஞ்சை - இளைஞரணி கூட்டத்தில் 
தமிழர் தலைவர், 29.9.2010
-----------------------------------------
தொடர்ந்து பேசிய கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் மாவட்டத்திற்கு ஆயிரம் இளைஞரணி தோழர்களைச் சேர்ப்போம் என்ற உறுதிமொழியினை அளித்தார்.
துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் தம் உரையில், கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்தும் சக்திகளுக்கு உடனுக்கு உடன் பதிலடி கொடுப்போம் என்றார். நான் யாரையும் அடிக்க மாட்டேன்; அதேநேரத்தில் என்னை அடித்தால், கொல்ல நினைத்தால், அவனைக் கொல்லும் வேலையில் நான் சாவேன் என்றாரே தந்தை பெரியார் - அதனையும் நினைவூட்டினார்.
தலைமை நிலைய செயலாளர்
வீ. அன்புராஜ்
திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் தமது சுருக்கமான உரையில் குறிப்பிட்ட தாவது:
பெரியார் சமூகக் காப்பு அணி புதுப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்டத்துக்கு 5 தோழர்களைத் தேர்வு செய்து வரும் டிசம்பர் மூன்றுமுதல் ஜனவரி 3 வரை இந்தப் பயிற்சி நடைபெறும். அவர்களுக்குப் பத்து நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்றுநர்களுக்கு 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
மாவட்டம்தோறும் இளைஞரணி தோழர்கள் திரட்டப்பட்டு அடுத்த மாநாட்டில் ஒரு லட்சம் பேரைக் காட்டவேண்டும் என்று கூறினார்.
பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழகத்தின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை வேறு எந்தக் கட்சியிடத்தும் கிடையாது. இந்தப் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைதான் தன்னை நாத்திகனாக ஆக்கியதாக தந்தை பெரியார் கூறுகிறார்.
இந்தப் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைதான் தமிழர்களுக்குக் கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் கொண்டு வந்து கொடுத்தது. இந்தக் கொள்கையை கையில் எடுத்துக் கொள்ளாத எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற முடியாது.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையும் சரி, மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரமும் சரி, அவற்றை திராவிடர் கழகம் செய்யும்போதுதான் மக்கள் மத்தியில் எடுபட முடியும்.
திராவிடர் கழகம் - அதன் தலைமை, விடுதலை இவற்றின்மூலம்தான் இக்கொள்கைகளைச் சாதித்து வெற்றியாக்கிக் காட்ட முடியும் என்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் எடுத்து விளக்கினார். திராவிடர் கழக மாநில இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் 50 நிமிடங்கள் உரையாற்றினார்.
இளைஞர்களுக்குக் கொள்கை உணர்வு ஊட்டக் கூடியதாகவும், கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கம் இவற்றைப் போற்றக் கூடியதாகவும், போராட்ட அறிவிப்பாகவும் அந்த உரை அமைந்திருந்தது.
1931 இல் சென்னிமலையில் தந்தை பெரியார் ஆற்றிய அருமையான உரையை எடுத்த எடுப்பிலேயே எடுத்துக்காட்டி உரையைத் தொடங்கினார்.
நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெறவேண்டுமானாலும், அவை வாலிபர்களாலேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை.
ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். இளங்கன்று பயமறியாதென்ற பழமொழிக்கொப்ப அவர்களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.
எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுய நலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டியதவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலக வாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்களிடத்தில் காணமுடியாது.
தந்தை பெரியார் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறிய இந்தப் பகுதி அழுத்தமானதும், இலட்சிய நோக்கு மிகுந்ததாகவும், மிகவும் தேவையானதுமாகும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை. குறிப்பாக இளைஞர்களின் மனப்போக்கு எத்தன்மையில் இருக்கும் என்று அய்யா அவர்கள் கணித்ததை, எடை போட்டுள்ளதை எண்ணிப் பார்த்தால் மலைக்க வேண்டியதாக உள்ளது. இந்தப் பத்தியத்துடன் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் அப்பழுக்கற்ற நடைபோடவேண்டிய திராவிடர் கழக இளைஞர்களுக்கு தமிழர் தலைவரின் இந்த எடுத்துக்காட்டு மேலும் இலட்சிய உறுதியையும், செயல்பாட்டுத் தளத்தில் உறுதியான காலூன்றுதலையும் கொடுக்கும் என்பதில் அய்யமே கிடையாது.
தனி மனித ஒழுக்கத்தின் சின்னங்களாக நமது தோழர்கள் திகழவேண்டும். கட்டுப்பாடு என்றால் திராவிடர் கழகத் தோழர்களைப் பாருங்கள் என்று மற்றவர்கள் கூறும் வண்ணம் நம் நடத்தை நன்னடத்தையாகத் திகழவேண்டும் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், பெரியார் சமூகக் காப்பு அணியை இந்த அடித்தளத்தில் உருவாக்கவேண்டும்; மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைய தினம் கிரிக்கெட் மைதானத்தில் பித்துப் பிடித்துக் கிடக்கிறார்கள்.
கிரிக்கெட் என்றால் அது மிகப்பெரிய அளவு சூதாட்டத்தின் - சுரண்டலின் ஊற்றாகவே ஆகிவிட்டது. இந்தப் பைத்தியத்திலிருந்து நமது தமிழின இளைஞர்களை மீட்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் அதற்காகத்தான் தொடங்கப்பட்டது. சென்னை, தஞ்சை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாகவும் நடத்தப்பட்டது.
சிலம்பம், சடுகுடு என்ற தமிழர்களுக்கே உள்ள விளையாட்டுகளுக்கும், பயிற்சிக்கும் ஊக்கம் தரப்படவேண்டும். உடல் வலிமை பெற்றால் மனமும் வலிமை பெறும். உடல் பலமும், உள்ள வளமும் மனிதனுக்குத் தேவையாகும்.
----------------------------------------------------
பாராட்டும் - சிறப்பும்!
கோவை வட்டாரத்திலிருந்து தனிப் பேருந்துமூலம் இளைஞர்களைத் திரட்டி வந்த கோவை மண்டல திரா விடர் கழகத் தலைவர் ம. சந்திரசேக ரன் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.
செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு அவர்களுக்கு திரா விடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ் (சென்னை) சால்வை அணிவித்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன் அவர்களுக்கு இளைஞரணி துணைச் செயலாளர் சேலம் பா. வைரம் சால்வை அணிவித்தார். தலைமை நிலைய செயலாளர் வீ. அன்பு ராஜ் அவர்களுக்குச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு அவர்கள் சால்வை அணிவித்தார்.
பட்டுக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக பொறுப்பாளரான வ. மணி (வயது 82) அவர்களுக்குக் கழகத் தலைவர் கி. வீரமணி சால்வை அணி வித்துச் சிறப்பு செய்தார்.
கோவையிலிருந்து இளைஞர் களைத் திரட்டிவர கிரியா ஊக்கியாக இருந்த செந்தில் அவர்களுக்கு (பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் மகன்) தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்ட தோழர்களுக்குத் தமது சொந்த பொறுப்பில் இரவு உணவு அளித்து உவந்த சுருதி சர்க்கரை நோய் சிகிச்சை மய்ய இயக்குநர் குடந்தை டாக்டர் சித்தார்த்தன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணி வித்துப் பாராட்டினார்.
கழகத் தலைவருக்கும், உடன் வந்தோருக்கும் பவர் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்த் - தமது இல்லத்தில் இரவு சிற்றுண்டி அளித்து உபசரித்தார்.
----------------------------------------------------
நமது இளைஞர்கள் வாரத்துக்கு ஒரு நாள் இயக்கப் பணிக்காக ஒதுக்கிடவேண்டும். திருமணங்களை அய்ந்து ஆண்டுகளுக்கு ஒத்திப்போட வேண்டும்.
நம் தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா வகையிலும் பக்குவப்படுத்தி சரியான திசையில் அவர்களைப் பயணிக்க வைக்கும் பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது - கழக இளைஞரணியினருக்கு இருக்கிறது.
மிகுந்த உற்சாகத்தோடு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள்; நீங்கள் காட்டும் உற்சாகம் எங்களை உற்சாகப்படுத்துகிறது.
ஆட்சியில் வரலாம்; போகலாம்; ஆனால், மீட்சி என்பது கருஞ்சட்டைப் பட்டாளத்தின்மூலம்தான் முடியும்.
உத்வேகத்துடன் கூடியுள்ள நீங்கள் உற்சாகத்துடன் திரும்பவேண்டாமா? கழகம் என்றால் பிரச்சாரம்! கிளர்ச்சி!! பிரச்சாரம் நல்ல வகையில் பட்டிதொட்டியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களைப் போராட்ட உணர்வுடன் அனுப்பி வைக்க விரும்புகிறேன்.
நடைபாதைகளில், பொது இடங்களில், அரசுக்குச் சொந்தமான இடங்களில், அரசு வளாகங்களில், அலுவலகங்களில் கோயில்கள், கடவுள் சிலைகள், வழிபாட்டுச் சின்னங்கள், படங்கள் ஆகியவை சட்ட விரோதமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாக வைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது; தீர்ப்பும் வழங்கிவிட்டது. இத்தகு கோயில்களை, வழிபாட்டுச் சின்னங்களை அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஒருமனதாகத் தீர்ப்புக் கூறிவிட்ட பிறகு, இன்னும் நடைபாதைக் கோயில்களை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இவற்றை அரசு உடனடியாக அகற்றிடவேண்டும். இதுகுறித்துத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
அவ்வாறு செய்வதில் அரசுக்குத் தயக்கம் இருக்குமேயானால், அவற்றை அகற்ற சம்மட்டியுடன் புறப்பட நாங்கள் தயார்! தயார்!! (பலத்த கைதட்டல்).
இது ஒன்றும் சட்ட விரோத செயல் அல்ல; இன்னும் சொல்லப் போனால், சட்டத்தைக் காப்பாற்றும் செயலாகும்.
அரசுக்குத் தொந்தரவு கொடுக்க அல்ல; அரசின் செயலுக்குத் துணையாக இருக்கவே இந்தப் போராட்டம்.
வரும்போது இருந்த உற்சாகத்தைவிட, போகும்போது பல மடங்கு உற்சாகத்துடன் புறப்படவேண்டும் அல்லவா - இந்தப் போராட்ட அறிவிப்பு இதற்குப் பயன்படும் என்று குறிப்பிட்டார்.
--------------------------------------------------
ஈரோடு வழிகாட்டுகிறது!
தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஈரோடு நகரத்தில் தோழர்கள் மேற்கொண்ட முயற்சி மற்ற வர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது.
திராவிடர் கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் தோழர் பா.வைரம் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்துத் தெரிவித்ததாவது:
உள்ளூர்த் தொலைக்காட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி களை ஒளிபரப்பிடச் செய்த ஏற்பாடுதான் அது. அரை மணிநேரம் கேட்கப்பட்டது. பெரியார் விழா நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது பெரியார்பற்றி பலரிடம் பேட்டி கண்டு வெளியிட்டனர். தந்தை பெரியார் பொன்மொழிகளை ஒளிபரப்பி னர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது. அடுத்த ஆண்டு முழு நாளை பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்று உள்ளூர்த் தொலைக் காட்சி உரிமையாளர்கள் கூறினார்கள் என்ற தகவலை தோழர் பா. வைரம் எடுத்துக் கூறினார். கழகத் தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈரோடு திருநாவுக்கரசு அவர்களின் முயற்சிதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் வைரம் குறிப்பிட்டார்.
இதைப்பற்றிப் பாராட்டிய தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ், ஒவ்வொரு ஊரிலும் இதே போன்ற முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார். முயற்சி உடையோர் இகழ்ச்சியடையார் அல்லவா!
--------------------------------------------------

சிங்க இளைஞனே, சிலிர்த்தெழு!-திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற (29.9.2010) திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல், கலந்துகொண்ட இளைஞரணியினருக்கு மட்டு மல்ல, கழகத் தலைவர் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், நன்னம்பிக்கையினையும் ஏற்படுத்திவிட்டது.
ஓர் இயக்கத்தின் - ஓர் அமைப்பின் எதிர்காலம் என்பது அந்த இயக்கத்தின், அந்த அமைப்பின் இளைஞர்கள் தம் பலத்தைப் பொறுத்ததே!
அதுவும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம்பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் இளைஞர்களை நேசிக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியது இந்த அர்த்தத்தில்தான்.
இன்றைய சமூக அமைப்பில் அரசியல் என்பது பளபளப்பானது - கலைத்துறை - சினிமாத் துறை என்பது கவர்ச்சிக்குரியது. இந்த இரண்டையும் தாண்டி கொள்கை, கோட்பாடு, இலட்சியம் கண் ணோட்டத்தோடு திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரணமானதல்ல.
இம்மாதம் சீர்காழியில் நடந்த மண்டல மாநாட்டில்கூட பொறுக்குமணி போன்ற இளைஞர் கள் கழகத்திற்கு வந்து சேர்ந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் கிடைத்துள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துகிறது.
இளைஞர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல் என்று தமிழர் தலைவர் கூட்டத்தில் தெரி வித்தது - கவனிக்கத்தக்கது - கருத்தூன்றிச் சிந்திக்கத் தகுந்ததாகும்.
மதப் போர்வையில் நாட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், கலவரங்கள் (உலகம் எங்கும் கூட) ஜாதிப் பிரச்சினைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஊடகங்களின் போக்குகள், கலைத் துறைகளின் காமக் களியாட்டங்கள், சமூகநீதிக் களத்தில் மத்திய தேர்வாணைக் குழுவின் தில்லுமுல்லுகள், இது தொடர்பாக நீதிமன்றத்தின் போக்குகள், மதவெறியைக் கிளப்பிவிட விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நடத்தும் விஷம வேலைகள் - இவற்றை எல்லாம் எதார்த்தமாகக் காணும் இளை ஞர்கள் மத்தியில் புதிய சிந்தனை மின்னல் சிறகடிக் கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், சமூகநீதித் தத்துவங்களும், கலாச்சாரக் கண் ணோட்டமும், மனிதநேயக் கண்ணோட்டமும், ஜாதி ஒழிப்புப் பார்வையும்தான் - இன்றைய சிக்கல் களுக்குச் சரியான தீர்வுகளாக இருக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை இளைஞர்களை இயக்கத்தின் பக்கம் இழுத்து வருகிறது என்றே கருதவேண்டும்.
மற்ற மற்ற மாநிலங்களில் மதவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் நாளும் நடத்தி வரும் வன்முறைகள், அமைதியைக் குலைக்கும் முயற்சிகளைத் தெரிந்துகொண்டுள்ள இளைஞர் கள், தமிழ்நாடு இந்தத் தன்மையிலிருந்து விலகி அமைதிப் பூங்காவாக மணம் வீசிக் கொண்டிருப்ப தற்குக் காரணம் - தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், சிந்தனைகள் இங்குப் பலமாக வேர்ப் பிடித்திருப்பதுதான் என்ற முடிவுக்கு வந் துள்ளனர். மக்கள் மத்தியில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் பூக்கப் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பது திராவிடர் கழகமே என்று தெரிந்துகொண்ட நிலையில், இந்த இயக்கம்தான் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதை உள்வாங் கிக் கொண்டு, கழகத்தை நோக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களை நாம் இலக்காகக் கொண்டு உரிய பிரச்சார யுக்திகளை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
மாணவர் கழகத் தோழர்களே, இளைஞரணி வீரர்களே! உங்கள் கவனம் தமிழின இளைஞர் களின் மூளையின்மீதே இருக்கட்டும்! அதன்மீது பூட்டப்பட்ட மூட விலங்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதில் சதாகவனம் செலுத்துங்கள்.
ஏடுகளைக் கொண்டுபோய் போடுங்கள்; நூல்களைக் கொடுத்து உதவுங்கள்; கொள்கைப் பிரச்சார இடத்திற்கு அழைத்து வாருங்கள்; இவற்றை முறையாகச் செய்துவிட்டால், அந்த மாணவர்கள், இளைஞர்கள் பெரியார் திடலின் முகவரி தேடிப் பறந்து வருவார்கள் - இதில் அய்யத்திற்கே இடமில்லை.
சிங்க இளைஞனே சிலிர்த்தெழு! தன்மானச் சிங்கமாம் நம் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுங்கள்! செயல்படுங்கள்!! வெற்றி நமதே!!!
http://www.viduthalai.periyar.org.in/20100930/news04.html

Wednesday, September 29, 2010

கோயிலில் கொலைகள்-சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள் தரப்பை ஹைவோல்ட் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராசர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து எஃப்.அய்.ஆர். பதிவு செய்து.... அதன் நகலை அனுப்பவேண்டும் என ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து... தீட்சிதர்கள் தரப்பை ஹைவோல்ட் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற விவகாரத்தைப் பார்க்கும் முன்... சிதம்பரம் கோயிலில் நடந்ததாகச் சொல்லப்படும் மூன்று கொலை விவகாரங்களைப் பார்க்கலாம்.
கொலை 1:
ஆமூர் செல்வராஜ் என்பவரின் மனைவி ராஜகுமாரி அடிக்கடி நடராஜர் கோயிலுக்குப் போய் வந்தார். இந்த நிலையில், சில தீட்சிதர்கள்... அவரை தங்கள் மன்மதப் பிடியில் மடக்கினர். இந்தத் தகவல் கணவர் செல்வராஜிக்கு தெரியவர... கொதித்துப் போனார். பிறகு?
இதுகுறித்து தன் மனைவியிடம் செல்வராஜ் கேட்க... ராஜகுமாரியோ... அந்தத் தீட்சிதர்கள் மிரட்டி மிரட்டி... இப்படி பணியவச்சிட்டாங்க என கதறியழுதிருக்கிறார். உடனே... அந்தத் தீட்சிதர்களின் பெயர்களைத் தெரிஞ்சிக்கிட்டு.... அவங்களைத் தட்டிக் கேட்க... 2.7.1999 இல் கோபமா கோயிலுக்குப் போயிருக்கார். போனவரை அந்தத் தீட்சிதர்கள் அடிச்சி நொறுக்கிட்டாங்க. அப்புறம் மாரியப்பன் என்பவர்மூலம் அவரை ஆட்டோவில் ஏத்தி... செல்வராஜை அவர் வீட்டில் இறக்கிப் போட்டிருக்காங்க. அப்பவே செல்வராஜிக்கு உயிர் இல்லை. கொலை பத்தி அப்பவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தும்... அடப்போங்கய்யா. கோயிலுக்குள்ள போயெல்லாம் விசாரிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இது என்னங்க நியாயம்? என்கிறார்கள் ஆமூர்க்காரர்கள் ஆவேசமாக.
கொலை 2:
காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு உடல்நிலை மோசமான நேரம். காங்கிரஸ் நகர சேர்மனாக இருந்த சந்திரபாண்டியன் தரப்புக் கதர்ச்சட்டைகள்... சித்திரகுப்தனுக்கு சிறப்பு பூஜைகளை செய்துகொண்டிருந்தனர். அந்தப் பூஜையில் பங்குகொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த மூர்த்தி தீட்சிதர்... அடுத்த கொஞ்சநேரத்தில்... உள் பிரகாரத்தில் ரத்தக் காயங்களோடு பிணமாகக் கிடந்தார்.
தீட்சிதர்களுக்குள் தட்சணைப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் மூர்த்தி தீட்சிதர் கொல்லப்பட்டிருக்கார். கோயிலுக்குப் போன மாஜி கவுன்சிலர் ராஜ்குமார்... இதுபற்றி புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் ஏரியாவாசிகள்.
கொலை 3:
அதே 2001 இல் ராமர் என்பவர் கோயில் குளத்தில் பிணமாக மிதந்தார். இந்த ராமர், தீட்சிதர்களுடன் எப்போதும் இருப்பவர். அவர்களுக்கு சகலத்தையும் சப்ளை பண்ணி வந்தவர். இதுதவிர தீட்சிதர்களின் அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் திடீர்னு பிணமா மிதந்தது எப்படி? இத்தனைக்கும் இவருக்கு நீச்சல் தெரியும். அதனால்தான் ராமரை யாரே கொலை பண்ணி குளத்தில் போட்டிருக்காங்கன்னு சந்தேகப்பட்டோம். இதுகுறித்து நாங்க போலீஸ்ல தெரிவிச்சும்... அவங்க அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை என்கிறார்கள் கோயில் அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.
இப்படி நடந்த மூன்று கொலைகளையும் சிதம்பரம் காக்கிகள் அலட்சியப்படுத்த... முதலில் கொல்லப்பட்ட ஆமூர் செல்வராஜின் உறவினரான ஆமூர் இளங்கோவன் என்பவர்... கொலை விவகாரங்களைக் கிண்டிக் கிளறத் தொடங்கினார். பிறகு?
தனது முயற்சிகள் குறித்து ஆமூர் இளங்கோவனே விவரிக்கிறார்... சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் குறிப்பாக... பலராலும் சந்தேகிக்கப்படுகிற தீட்சிதர்களான தில்லை, பட்டு, ராஜா, கனகு, குப்புசாமி, முருகு, அமர்நாத் போன்றோரைத் தீவிரமாக விசாரிக்கணும்னு அரசுக்கும், காவல்துறைக்கும் ஏகப்பட்ட புகார்களை அனுப்பினேன். இதுக்கு எந்தப் பலனும் இல்லை. அதனால் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜுவிடம் பிரச்சினையைக் கொண்டு போனேன். இவர்... தீட்சிதர்கள் தடை போட்ட தேவாரத் தமிழை... சிவநெறியாளர் ஆறுமுகசாமிமூலம் கோயிலுக்குள் பாட ஏகப்பட்ட முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். அவரின் முயற்சிக்குப் பிறகுதான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது என்று சிலாகித்தார்.
நாம் அந்த வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜுவையும் சந்தித்தோம். உற்சாகமாக நம்மிடம் பேச ஆரம்பித்த ராஜு, தீட்சிதர்களின் அட்டூழியங்கள் குறித்து... ஏற்கெனவே நீங்க எழுதிய கட்டுரைகளைப் படிச்சிருக்கேன். எதற்கும் அஞ்சாதவர்களான தீட்சிதர்கள்... கொலைகளையும் செய்திருப்பார்களா என... ஒரு குழுவாக விசாரணையில் இறங்கினோம். அவர்களின் குற்றங்கள் உறுதியானது. இந்தக் கொலைகளுக்கான முதல்கட்ட ஆதாரங்களைத் திரட்டினோம். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு... இதை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான ரத்தினம், சத்தியசந்திரன் ஆகியோர்மூலம் எடுத்துச் சென்று... கொலைகளைக் கண்டுகொள்ளாத இந்த போலீஸ்மீது நம்பிக்கை இல்லை. எனவே, சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
நீதிமன்றம் இதுகுறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்க... தற்போதைய கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனும், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கமும்... இந்த சம்பவங்கள் குறித்து யாரும் புகார் தரவில்லை என்று மழுப்பல் பதிலை அபடவிட்டாகத் தாக்கல் செய்தார்கள். நீதியரசர் கே.என். பாஷா... முதலில் இந்த மூன்று கொலை வழக்கின் பேரிலும் எஃப்.அய்.ஆரை பதிவு செய்து... அதை நீதிமன்றத்திற்கு அனுப்பும்படி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான முதல் கட்ட வெற்றி. இந்த கொலை வழக்குகள் விசாரணைக்கு வரும்போதும்.... தீட்சிதர்களின் கொலை குற்றங்களை கோர்ட்டில் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்போம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கித் தராமல் ஓயமாட்டோம் என்கிறார் பூரிப்பாக.
உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால்... ரொம்பவே வயிறு கலங்கிப் போயிருக்கிறது தீட்சிதர்கள் தரப்பு.
நன்றி: நக்கீரன்,
2010, செப்டம்பர், 25-28
source:http://www.viduthalai.periyar.org.in/20100929/news05.html

பிரச்சார உரிமை

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கீழ்க்கண்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சி களுக்கு இடையூறு செய்து வருவதும் சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம் மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. இத்தீர்மானத்தின் அவசியத்தை அதிகம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் காலைமுதல் இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் மூட நஞ்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே பழக்கவழக்கம் என்ற பெயரால் மூட நம்பிக்கை என்னும் பொல்லாத நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அறிவின்மீது பலம் கொண்டு சம்மட்டி அடிகொடுப்பது போல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்து வருகின்றன.
விஞ்ஞானம் தந்த கருவிகளைப் பயன்படுத்தி, அஞ்ஞானக் கருத்துகளை மக்கள் மூளையின் மீது திணித்து வருகின்றனர். தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ளபடி மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை - சீர்திருத்த உணர்வைப் பரப்புவது இந்த ஊடகங்களின் அவசியமான கடமையாகும். அப்படிச் செயல்படாத இந்த ஊடகங்கள் கண்டிப்பாக அறிவியல் மனப்பான்மையை, வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டிய கடமை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
இந்த அடிப்படைக் கடமையினைச் செய்யத் தவறிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், கடமை உணர்வோடு சீர்திருத்தப் பிரச்சாரத்தைச் செய்துவரும் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு வருவது வெட்கக்கேடான தாகும். தங்களால் அந்தக் கடமையினைச் செய்யத் தவறும் பட்சத்தில் சீர்திருத்தக் கடமையினைச் செய்துவரும் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் எதிராகச் செயல்படாமல் இருக்கவேண்டாமா?
மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வுகளை ஏற்படுத்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமே அந்தக் கடமையை அடிப்படையானதாக இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசிற்கு இதில் கூடுதல் கடமை உணர்வு இருக்கவில்லையா?
சீர்திருத்தப் பணிகளை அடிப்படைக் கடமையாகச் செய்துவரும் அமைப்புகளுக்கு ஊக்கம் தரவேண்டியதும், பாதுகாப்பு கொடுக்கவேண்டியதும் அரசுகளின் கடமை யாகும்.
மூட நம்பிக்கைகளுள் மிகவும் மோசமான மூத்த - முடைநாற்றமடிக்கும் மூட நம்பிக்கை கடவுள் நம்பிக்கையே!
அதிலும் இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்கள் ஆபாசமும், அருவருப்பும் நிறைந்தவை. அழுக்கில் பிறந்த கடவுள், குதிரைக்குப் பிறந்த கடவுள் அவதாரம், விபச்சாரம் செய்யும் கடவுள், கொலை செய்யும் கடவுள், சண்டை போடும் கடவுள், மகளையே மனைவியாகக் கொண்ட கடவுள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
இந்த ஆபாச, அறிவுக்குப் பொருத்தமற்ற கடவுளை நம்பி அறிவையும், தன்னம்பிக்கையையும், பொருளையும், பொழுதையும் பலி கொடுக்கும் மக்களைத் திருத்தும் பணியிலே திராவிடர் கழகம் ஈடுபடும்பொழுது, ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தக் கடவுள்களின் தன்மை கள்பற்றி அச்சிட்டுக் கொடுக்கும்பொழுது, மூட மக்களின் மனது புண்படுகிறது என்று கூறி, காவல்துறையினர் கழகப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிப்பது உகந்தது அல்ல.
அதுவும் மதவெறியைத் தூண்டும் இந்துத்துவா அமைப்புகளின் குரலுக்குச் செவிமடுத்து, துண்டு அறிக்கைகளை வழங்கக் கூடாது என்று தடுக்க முயற்சிப்பது சட்ட விரோதமும், கருத்துரிமையைத் தடுக்கும் தவறான அணுகுமுறையுமாகும்.
இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக சில ஊர்களில் திராவிடர் கழகத்தினர்மீது வழக்குகளைப் பதிவு செய்தும் உள்ளனர்.
இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் பகிரங்கமாகக் கொளுத்தி இராவண லீலாவை நடத்தி தமிழின மக்களின் தன்மான உணர்வை அன்னை மணி யம்மையார் கம்பீரமாக வெளிப்படுத்திக் காட்டினார்களே, தமிழர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களே, அந்த நிகழ்ச்சிகூட இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அரசு தொடர்ந்த வழக்கில் கழகம் வெற்றி பெற்றதே - வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதே - இந்த உண்மைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிந்து வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்வார்களா?
இந்துக்களைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்தின்மீதுகூட வழக்குப் பதிவு செய்யப் பட்டதுண்டு - பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

Tuesday, September 28, 2010

பிள்ளையாரின் பிறப்பும் ஆபாசமும் குறித்து திராவிடர் கழகம் வழங்கிய துண்டறிக்கை.தரவிறக்கம்(Download) செய்து கொள்ளலாம்



இந்து மத பார்பன ,ஆர்.எஸ்.எஸ் போன்ற மத விரோத சக்திகளும் ,மார்வாடி கும்பல்கள் இன்றைக்கு பிள்ளையாரை வைத்து தங்களுக்கு தொழில் போட்டியாக உள்ள முஸ்லிம்களை  எதிர்பதற்கு ஒரு கருவியாகவும் பயன் படுத்துகின்றனர்.இத்தகைய பிள்ளையாரின் பிறப்பை ஆபாசத்தை தோலுரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன .இதனால் திண்டுக்கல்,சென்னைக்கு அருகே பம்மல் போன்ற பகுதிகளில் திராவிடர் கழகத்தின் மீதும் அதன் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் செய்துள்ளனர் .தலைவர் வீரமணி அவர்களும் அந்த நடவடிக்கை எப்போது என்று ஆவலாக உள்ளார்.ஏன் என்றால் வீதி மன்றத்தில் விமர்சனம் செய்யும் பிள்ளையாரை நீதி மன்றத்திலும் சென்று பிள்ளையாரின் பிறப்பை ஆபாசத்தை பதிவு செய்து விடலாம் என்கிற ஒரு ஆர்வத்தில் இருக்கிறார்.

இதோ அந்த துண்டறிக்கை 

சீர்காழி கூறும் சிந்திக்கத்தக்க தீர்மானம்

1992 ஆம் ஆண்டு முதல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சினை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ராமஜென்மபூமி என்ற பெயராலே இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்த பிரச்சினையாகும்.
சீர்காழியில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமன் ஜென்ம பூமி என்று சொல்லி ஏற்கெனவேயிருந்த 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு 18 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பதும், குற்றவாளிகள் பெரிய பதவிகளில் அலங்கரிப்பதும் நாட்டின் ஒட்டுமொத்தமான நிருவாகம், நீதி, மதச் சார்பின்மை இவற்றின் மீதான நம்பிக்கையை வெகு மக்கள் இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து, உண்மையான குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிக்க முடியாத அளவுக்கு வழக்கினை செறிவாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறிக்கொண்டு மத அமைப்புகள் உரிமை கோரி போராடுவதும், வழக்குத் தொடுப்பதும் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது என்பதையும், அதன்படி பார்த்தால், பெரும்பாலான இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் புத்தர் விகார்களாக இருந்து, பிற்காலத்தில் வன்முறை யாலும், மன்னர்களின் அதிகாரத்தாலும் இந்துக் கோயில்களாக திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத அனேக ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இம்மாநாடு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சுட்டிக் காட்டுகிறது. 1947 ஆகஸ்ட் 15 நாளை மய்யப் புள்ளியாக வைத்து, அதற்குமுன் இருந்த நிலை தொடரப்படவேண்டும் என்று அரசு ஏற்கெனவே முடிவு செய்த கருத்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் பிரச்சினைகள் ஏராளம் உள்ள 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில், மதப் பிரச்சினைகள், கோயில் பிரச்சினைகளை முன்னிறுத்தி, மக்களின் கவனத்தை ஒரு பக்கம் திருப்புவது, அரசின் கவனத்தை இன்னொரு பக்கம் திருப்புவது, அரசுக்குச் செலவினங்களை ஏற்படுத்துவது, சட்ட ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்புவது என்பதெல்லாம் தேவையானவை தானா?
கடவுள், மதம் என்பவை எல்லாம் தனிப்பட்ட மனிதனின் பிரச்சினையாகக் கருதி வீட்டுச் சுவருக்குள் வைத்துக் கொள்ளாமல் வீதிக்குக் கொண்டுவரும்போதுதான் தேவையில்லாத சிக்கல்களும், பிரச்சினைகளும் வெடித்துக் கிளம்புகின்றன.
பாபர் மசூதியை இடிப்பதற்குமுன், எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் சோமநாதபுரத்தில் உள்ள சோமநாதர் கோயிலிலிருந்து ரத யாத்திரை ஒன்றை நடத்தினார்; அது ரத்த யாத்திரையாக உருவெடுத்து நாடெங்கும் கலவரத் தீயை ஏற்படுத்தி, ஏராளமான மக்களின் உயிர் பலியானது.
ஒரு செம்பு நிறைய ரத்தத்தைச் சேகரித்து, அத் வானிக்குத் திலகமிட்ட பாசிச நிகழ்வுகளும் நடை பெற்றதுண்டு.
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான் அதன் அடிச்சுவடு தெரியாமல் அமைதித் தென்றல் வீசியது.
வட மாநிலங்களில் அமளிதுமளி ஏற்பட்டது. பிகாரில் ரத யாத்திரை தடை செய்யப்பட்டது.
மத்தியில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. (மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்களை வி.பி. சிங் அரசு அளித்ததுதான் உண்மையான காரணமாகும்).
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சோமநாதபுரத்தில் அத்வானி ரத யாத்திரை தொடங்கிய அந்த செப்டம்பர் 25 ஆம் தேதியன்று, அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு செய்வது வழக்கமாகும்.
இவ்வாண்டும் அவ்வாறே சென்றுள்ளார். பா.ஜ.க.வி லிருந்து விலகியவரும் - பாபர் மசூதி இடிப்புக் குற்றப் பத்திரிகையில் உள்ளவருமான செல்வி உமாபாரதியும் அவருடன் சோமநாதபுரம் சென்றுள்ளார். இது கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. பல்வேறு விமர் சனங்களும் எழுந்துள்ளன.
பழைய புண்ணைக் கிளற வேண்டாம் என்று காவல் துறையினரை பத்திரிகைத் தொடர்பாளர் மணீஷ்திவாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு காலகட்டத்தில், அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்றுள்ளது - சங் பரிவார்க் கூட்டத்தின் மனோபாவத் தினை வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்தத் தீர்ப்பு எப்படியிருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மக்கள் பிரச்சினையைவிட கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வுக்கும், அதன் பரிவாரங்களுக்கும் முக்கியமானதாக உள்ளது.
இந்த அமைப்புகளால் மக்கள் நலனுக்குத் தேவையான உகந்த எந்த நன்மைகள்பற்றியும் எண்ணிப்பார்க்கப்படவும் முடியாது - அந்த வகையில் செயல்படவும் முடியாது என்பதை வெகுமக்கள் உணர்வார்களாக!

மாணவிகளை மிரட்டி உறவுகொண்ட காமக்கொடூரன் பாதிரியார்

சாத்தான் குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளை மிரட்டி பாலியல் உறவு கொண்டோம் என்று, புகாரில் சிக்கிய போதகர் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் மற்றும் ஆதரவற்றோர் விடுதி உள்ளது. இதை அன்புநகரை சேர்ந்த போதகர் சவுந்தரராஜன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தருமபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 சிறுவர்களும் 12 சிறுமிகளும் தங்கி இருந்து அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படு கிறது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஸ்டான்லி மற்றும் காவல்துறையினர் அந்த விடு திக்கு சென்று விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. திருச்செந்தூர் ஆர்டிஓ பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் வட்டாட் சியர் ஹாரீஸ், வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள் விடுதியை ஆய்வு செய்து அங்கிருந்த 12 மாணவிகள், 22 மாணவர்களை சிறீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு மாற்றினர். இதுதொடர்பாக விடுதி காப்பா ளரும் போதகருமான சவுந்தரராஜன், அவரது மகன் ஜெபஸ்டின் கிறிஸ் டோபர் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர். காவல்துறை யிடம் சவுந்தரராஜன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணிநகரில் ஜெபக்கூடம் தொடங்கினோம். கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய பகுதிகளில் இருந்து இலவசமாக படிக்க வைப்பதாக கூறி மாணவ, மாணவிகளை அழைத்து வந்தோம். பின்னர் அவர்களை இங்கு தங்க வைத்து அன்பு நகரில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தோம். தினமும் வாகனம் மூலம் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து மாலையில் அதே வாகனத் தில் அழைத்து வருவோம். எனக்கு உறுதுதுணையாக மகன்கள் ஜெபஸ் டின் கிறிஸ்டோபர், உதய பாலஜெப சீலன் ஆகியோர் இருந்தனர். நாளடைவில் மாணவிகள் மீது எங்களுக்கு மோகம் ஏற்பட்டது. முதலில் அவர்களை தொடுவதற்கு பயமாக இருந்தது. அதன்பிறகு மிரட்டி பணிய வைத்தோம். இதனை மாணவிகள் யாரும் வெளி யில் சொல்லவில்லை. அதன்பிறகு நாள்தோறும் அவர்களிடம் செக்சில் ஈடுபட்டு வந்தோம். இதில் ஒரு மாணவி பாதிக்கப்பட்டார். இந்த விவரம் அவரது பெற்றோ ருக்கு தெரிய வந்ததால் காவல்துறை யில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்திய தில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளார். காவல்துறையினர் தேடுவதையறிந்த சவுந்தரராஜனின் மற்றொரு மகன் உதய பாலஜெப சீலன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர். தட்டார்மடம் காவல் நிலையத்தில் நடந்த வழக்கு தற்போது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற் றப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

சீர்காழியைக் குலுக்கிய சேனை!-திராவிடர் கழக மண்டல மாநாடு

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம்
சீர்காழியில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. உடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சீர்காழி, 27.9.2010).
சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. தராசில் தமிழர் தலைவர் அமர்வதற்குமுன் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், பல்துறையைச் சேர்ந்த பொதுமக்களும் சால்வை போர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். தராசின் ஒரு தட்டில் தமிழர் தலைவர் அமர, மறுதட்டில் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. சம அளவு வந்தபோது, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர். அதன் தொகை ரூபாய் 15 ஆயிரம் ஆகும். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு இத்தொகை அளிக்கப்படும் என்று, மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தார்.

திருஞானசம்பந்தன் ஞானப்பால் குடித்தான் என்ற மூட நம்பிக்கை கொழுத்த சீர்காழியில் திராவிடர் கழகத்தின் கருஞ் சட்டைச் சேனை - பேரணியாய் அலையடித்து பகுத்தறிவுப் பேரணியாய்ப் பிரவாகித்தது.
மாலை 5 மணிக்கு சீர்காழி தென்பாதியி லிருந்து மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் மு. நடராசன் தலைமை யிலும், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வீ. மோகன் ஆகியோர் முன்னிலையிலும் புறப்பட்டது.
புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை சாலை, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மாநாடு நடை பெற்ற பழைய பேருந்து நிலையத்தை வந் தடைந்தது. பேரணி தொடங்கப்பட்ட இடத் திலும், பேரணி அணிவகுத்து வந்த பாதை களின் இருபுறத்திலும் ஏராளமான பொது மக்கள் கூடிநின்று, பேரணியில் இடம்பெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மூட நம்பிக்கைகளைச் சுட்டு எரிக்கும் முழக்கங்களைக் கழகத் தோழர்கள் வழி நெடுக ஒலித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
சாமி சக்தியால்தான் முதுகில் அலகு குத்தி கார் இழுக்க முடியும் என்ற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் கழகத் தோழர்கள் திருக்குவளை கவியரசன் (திருவாரூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர்), தஞ்சைத் தோழர்கள் தேவா, ராஜா ஆகியோர் முதுகில் அலகு குத்தி கடவுள் மறுப்பு வாசகங்களை முழங்கிய வண்ணம் அம்பாசிடர் காரை இழுத்து வந்த காட்சியைக் கண்டு பொது மக்கள் அதிசயப்பட்டனர்.
அலகுக்காவடி
ஜெயங்கொண்டம் பெரியார் பெருந் தொண்டர் கே.பி. கலியமூர்த்தி, உரத்தநாடு வினோத், கண்கொடுத்தவனிதம் செந்தில் குமார், தஞ்சை ராஜேஷ் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து, மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்துகளை முழங்கி வந்தனர்.
அரிவாள்மீது ஏறி நின்று அசத்தல்!
கரம்பக்குடி தோழர் முத்து சில்லத்தூர் சிற்றரசு குழுவினர், பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஓங்கி ஒலித்தனர்.
திருவாரூர் மாவட்ட கழக மகளிர் பாசறை அமைப்பாளர் சி. செந்தமிழ்ச்செல்வி தலைமை யில் மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே என்று அவர்கள் முழக்கமிட்டு வந்த காட்சியை பெண்கள் பார்த்து வியந்தனர். தோழியர்கள் சரசுவதி, சைனம்பூ, சூரனூர் அஞ்சம்மாள், சூரனூர் இராசாங்கம் ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தோழர்கள் திராவிட எழில், சாமி. அரசிளங்கோ, பர்தீன், ராஜேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்தனர்.
கட்டுக்கோப்போடு போக்குவரத்திற்கு இடையூறின்றி இருவர் இருவராக அணி வகுத்து தலைமைக் கழகம் அளித்த கொள்கை முழக்கங்களை பூமியதிர முழங்கி வந்த நேர்த்தியைக் கண்டு பொதுமக்கள் பாராட் டினர்; இளைஞர்கள் எழுச்சி பெற்றனர்.
சீர்காழியில் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நடைபெற்ற மாபெரும்
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (27.9.2010)

விடுதலை :28/09/2010
http://www.viduthalai.periyar.org.in/20100928/news26.html

Monday, September 27, 2010

தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி?

தினமணியும், தின மலரும் கலைஞர் அரசை எதிர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரி கிறது. துக்ளக் சோவின் பாணி பார்ப்பனக் கிண்டல் கள் இந்தக் கின்னரர்களின் எழுதுகோல் முனைகளில் தெறிக்கின்றன.
வாரத்துக்கு 5 நாள் கோழி முட்டை சத்துணவு மய்யத்தில் நமது குழந்தை களுக்கு அளிக்கப்படுகின் றன. தினமலர் எழுதுகிறது; சனிக்கிழமை அரை நாள் பள்ளி உள்ளதே அப் பொழுது அரை முட்டை போடப்படுமா? என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறது.
தினமணியின் மதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
சத்துணவில் வாரத் துக்கு 5 நாள் முட்டையாம்! நல்லது, அதையே கலக்கி, ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப் பாயில், ஃபுல்பாயில்னு நாளுக்கு ஒரு அயிட்டமா கொடுத்தால் பசங்களும் சலிப்பு தட்டாமல் சாப்பிடு வாங்களே..!
தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி? ஒருக் கால் எந்தப் பாப்பாரக் குஞ் சுக்கும் இந்த முட்டை அளிப் பால் பயனில்லை என்ற நினைப்பு இருக்குமோ!
இந்த ஒரு பிரச்சினை மட்டுமல்ல; தமிழ் செம் மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று கிண் டலடிக்கிறது.
சத்துணவு அளிப்பதும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை கொடுப்பதும் சாதாரண மான ஒன்றல்ல - தொலை நோக்கோடு பார்க்கும் பொழுதுதான் இதில் உள்ள அருமையும், விளைவும் புரியும்.
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின் றனர். ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் பாதிக்குமேல் மரணம் அடைவது இந்த ஊட்டச் சத்துக் குறைவால் தான்!
இந்தச் செய்தியையும் ஒரு பக்கத்தில் தினமலர் (4.5.2006) தான் வெளி யிடுகிறது.
47 விழுக்காடு குழந் தைகளுக்கு நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லை என் கிற தகவலை வெளியிட்டது தினமணிதான் (5.5.2004).
இப்படி ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தின் அவசி யத்தை வெளியிடும் தின மணியும், தினமலரும் ஊட்டச்சத்தினை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அளிக்கும்போது, இந்த ஏடுகள் நல்ல புத்தியோடு பாராட்ட மனம் இல்லா விட்டாலும் கேலியும், கிண் டலும் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா!
வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை அளித்தால், பார்ப்ப னர் அல்லாத குழந்தைகள் ஊட்டச் சத்து பெற்று, உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச் சியும் பெற்று, தேர்வுகளில் இதுவரை முட்டை மார்க்கு வாங்கியவர்கள் இனி அக் மார்க் முத்திரை பொறிப் பார்களோ என்கிற அழுக் குப் புத்திதான் இந்தப் பார்ப்பனர்களுக்கு.
அழுக்கு என்றால் அசிங்கம் மட்டுமல்ல - பொறாமையும்தான்!
- மயிலாடன்

நாயினும் கேடா தாழ்த்தப்பட்டோர்?

மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்றுள்ள சம்பவம், இந்தியாவில் இந்து சமூக அமைப்பில் இந்த 2010 ஆம் ஆண்டிலும்கூட நாடு எந்த அளவிற்குக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே!
ராம்பால்சிங் என்ற ராஜபுத்திர ஜாதியைச் சேர்ந்தவர் ஷெரு என்ற கலப்பு இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார்.
சுனிதா ஜாடவ் என்ற தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட அந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போட்ட ரொட்டித் துண்டை தனது வளர்ப்பு நாய் சாப்பிட்டதைப் பார்த்துவிட்ட அந்த உயர்ஜாதிக்காரர் ஆத்திரப்பட்டார், வாய்க்கு வந்தவாறு அந்தத் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் திட்டித் தீர்த்துள்ளார். செருப்புத் தைக்கிற பெண்ணே, நீ எப்படி என் நாய்க்கு உங்க வீட்டு ரொட்டியைப் போடலாம்? என்று திட்டியுள்ளார்.
அதோடவாவது அவர் சீற்றம் தணிந்து போய்விட வில்லை! ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நாய் ஜாதி விலக்குச் செய்யப்பட்டது. இனி அந்த நாய் உயர்ந்த ஜாதிக்காரரான அந்த ராஜபுத்திரர் (ராஜ்புட்) வீட்டில் இருக்கக் கூடாது; தாழ்த்தப்பட்டவர் வீட்டில்தான் - சேரியில்தான் இருக்கவேண்டும். அதோடு மட்டுமல்ல; அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று ஊர்ப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினார். (இதுதான் ஊர்ப் பஞ்சாயத்தின் நிலைமை!).
அர்த்தமுள்ள இந்து மதம் குறித்து வாய் கிழியப் பேசுவோர் இந்தக் கேவலமான செயல்பாட்டுக்கு என்ன வெங்காய விளக்கம் - விளக்கெண்ணெய் சப்பைக்கட்டு சொல்லப் போகிறார்கள்?
இவ்வளவுக்கும் அந்த நாய்க்கூட கலப்பின வகையைச் சார்ந்ததுதான். நாய் கலப்பு ஜாதியைச் சார்ந்தது என்றால், அங்கு ஜாதி பார்க்கப்படுவதில்லை. ஆனால், அந்த ஜாதி மறுப்பு நாய்க்கு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டைப் போட்டால் அங்கு மட்டும் ஜாதி பார்க்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?
தன்னை வளர்க்கும் எஜமான் என்ன ஜாதி? தனக்கு ரொட்டித் துண்டைப் போட்ட அந்தப் பெண் என்ன ஜாதி என்று அந்த நாய் பொருட்படுத்தவில்லை.
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் - செல்வந்தன் மட்டும் ஜாதி பார்க்கிறானே! ரொட்டித் துண்டில்கூட ராஜபுத்திர ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பிரிவு இருக்கிறதோ!
வட மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மிக வெளிப்படையாக நடந்து வருகின்றன. மதவாத சக்திகள் அங்கு காலூன்றி நிற்கின்றன! செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்த அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சங் பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்படவில்லையா?
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவிருந்த பாபுஜெகஜீவன்ராம், வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணா னந்து சிலையைத் திறந்தார் என்பதற்காக - காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயர்ஜாதி ஆணவம் பிடித்த மாணவர்கள், அந்தச் சிலையை கங்கைத் தண்ணீரை ஊற்றிக் கழுவவில்லையா? காரணம் பாபுஜெகஜீவன்ராம் செருப்புத் தைக்கும் ஜாதியைச் சேர்ந்தவராம்!
பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் இந்த இந்து சமூக அமைப்பின் வருணக் கொடுமை அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றனர் இந்த நாட்டில் உள்ள படித்த மேதாவிகள்? எழுத்தாளர்களான அறிவு ஜீவிகள்? இவர்களில் பெரும்பாலோர் மேல்ஜாதி ஆணவக்காரர்கள் என்பதுதானே இதற்குக் காரணம்? ஊடகங்கள் எல்லாம் உயர்ஜாதிக்காரர்களின் உடைமையாக இருப்பது இன்னொரு முக்கியக் காரணம் இல்லையா?
சரி, அவர்கள்தான் இதற்காகக் குரல் கொடுக்க வில்லை; குரல் கொடுக்கக் கூடிய - போராடக் கூடிய அமைப்புகளுக்காவது ஆதரவுக் கரம் நீட்டுவதுண்டா? ஆதரவு தெரிவிக்காததோடு மட்டுமல்ல; குறுக்குச்சால் ஓட்டி குற்றப் பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்களா?
இந்தியா வளர்கிறது - ஒளிர்கிறது என்பதன் இலட்சணம் இதுதானா? இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு - இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் கொடுத்தால் அதனை உடனடியாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கூட காவல்துறை தயாராக இல்லை!
இதுதான் இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பின் யோக்கியதை - நிருவாக இயந்திரத்தின் அடிநாதம்!
தந்தை பெரியார்தம் கருத்துகளும், அண்ணல் அம்பேத்கர்தம் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் பரவினாலொழிய - வேர்பிடித்தாலொழிய - இதற்குப் பரிகாரம் காண முடியாது.
வெறும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஏட்டுச் சுரைக்காய் சட்டத்தை வைத்துக்கொண்டு இருக்கும்வரை இதற்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட முடியவே முடியாது.
தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில், ஜாதி ஒழிப்பு என்று திருத்தி, அதனைச் செயல்படுத்திட கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படாதவரை, பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும், உயர்ஜாதியினரும் இங்கே துள்ளித் திரியத்தான் செய்வார்கள். மற்றவர்கள் நாயினும் கேடாக மதிக்கப்படும் அவலம்தான் தொடரும் - எச்சரிக்கை!

Sunday, September 26, 2010

பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டதா?-கவிஞர் கலி பூங்குன்றன்


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?
பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி 19.9.2010 பக்கம் 30)
_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:
Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.
மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?
தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.


2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?


பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?


மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.


அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!
தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.
அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.
ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)
பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.


பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)
அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?
2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?
தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?
பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?
பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).
அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.


இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது -_ வேகவே வேகாது!

இந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா?


மதுரைப் பதிப்பு மாலை முரசு ஏட்டில் (21.9.2010) கீழ்க்கண்ட சேதி இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண்டைக் காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த சமஸ்கிருத மொழி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. இருப்பினும் செம்மொழி என்ற தகுதியுடைய சமஸ்கிருத மொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வதால், சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, முதலாவதாக மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் சமஸ்கிருதப் பள்ளி தொடங்கப்படுகிறது.
இதில் 55 சதவிகித இடங்கள் அகில இந்திய பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. 15 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றன. பொதுவாக 25 சதவிகித இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்குவது வழக்கம்.
ஆனால், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களில் 15 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதால், இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெறலாம். அதன் வாயிலாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது பட்டியலில் இந்தியாவில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், இம்மொழி செத்த மொழியாகக் கருதப்படும் (Dead Language) நிலையில் உள்ளது.
இந்தியா (1999) பப்ளிக்கேஷன் டிவிஷன் (Ministry of Information and Broadcasting, Govt of India) இந்தியாவில் 18 மொழிகள் பேசும் மக்களின் புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. 1971 இல் 2212 பேர், 1981 இல் 6106 பேர், 1991 இல் 49,736 பேர், 1971 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் சூநபடபைடெந என்றும் 1991 இல் வெறும் 0.01 சதவிகிதம் என்றும் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் தகவலாக வெளியிடப் பட்டுள்ளது. 1971 மற்றும் 1981 இல் புறக்கணிக்கத்தக்க (Negligible) என்ற சொல்லையே இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்ப்பனர்கள் உள்பட நாட்டு மக்களால் புறக்கணிக்கப் பட்ட செத்த மொழிக்கு உயிரூட்டும் வேலையில் மத்திய அரசு ஏன் இறங்கியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.
பெரும்பான்மை மக்களின் பணம் சிறுபான்மைப் பார்ப் பனர்களின் தாய்மொழி என்கிற காரணத்தாலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அச்சமூகத்தவர் என்பதாலும்தானே இந்த விரயம்?
குடிஅரசான பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பின் 45 ஆம் பிரிவு அறுதியிட்டுக் கூறியிருந்தும், பல பத்தாண்டுகள் பறந்தோடியும் அந்த நிலை எட்டப்படவில்லை.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மறுபடியும் 86 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இன்றைய நிலையில்கூட, இந்தியாவில் எழுத்தறிவு என்பது 64.84 சதவிகிதம்தான்; இதில் பெண்கள் 54.16 சத விகிதம்தான்.
கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுபவர்களில் பழங்குடியினர் 87.7 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட வர்கள் 86.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோர் 75.1 விழுக்காடு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (செப்டம்பர் 8, 2006, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி).
இந்த வெட்கம் கெட்ட நிலையில், கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கேற்ப, செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியைக் கற்பிக்க இந்தியா முழுமையும் கல்விக் கூடங்கள் திறக்கப்படுகின்றன என்றால், இதன் பொருள் என்ன?
1925 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னாரே - வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந் தியாவில் டெமாக்கிரஸி இருக்காது; மாறாக பிராமினோ கிரஸிதான் இருக்கும் என்றாரே - அதுதானே இதன் பொருள்?
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுதார்கள். திராவிடர் கழகம்தான் அப்பொழுதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. தமிழையும் அவ்வாறு அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார். முதலமைச்சர் கலைஞர் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார். கடைசிவரை அந்தப் பார்ப்பன நந்தி அசைந்து கொடுக்கவில்லையே.
இப்பொழுது மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காங்கிரஸ் தலைமையில், மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. ஆட்சி மாறினாலும், அடிப்படையில் பார்ப்பனத் தன்மை என்கிற நங்கூரம் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு அடை யாளமாக இதனைக் கருதவேண்டியுள்ளது.
55 சதவிகித இடங்கள் அகில இந்தியப் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக இத் தகைய சமஸ்கிருதப் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்படுமாம்.
ஈரோட்டு நுண்ணாடியைக் கொண்டு பார்த்தால், இதில் நெளியும் கிருமிகள் யாவை என்பது எளிதில் விளங்கிவிடுமே.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இடம்பெற்றிருக்கும் வேலை வாய்ப்பு 12 சத விகிதத்தைத் தாண்டாத நிலையில், மீதி உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர் களுக்குத்தான் இந்த 55 விழுக்காடு இடங்கள். பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு 55 விழுக்காடு என்று நேரடியாகச் சொல்லாமல் - கொஞ்சம் சுற்றி வளைத்து மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள இதர கட்சிகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்குமாக! தடுத்து நிறுத்துமாக!

weather counter Site Meter