Pages

Search This Blog

Thursday, September 16, 2010

தந்தை பெரியார் பிறந்த நாள் - தமிழினத்தின் தேசியத் திருநாள். அந்நாளில் நம் வீட்டுக் குழந்தை களை உற்சாகப்படுத்தும் வகையில் குடும்பத் தலைவர்கள் பல முயற்சிகளை செய்வது நல்லது.

இரு நூல்கள்

தந்தை பெரியார் பிறந்த நாள் - தமிழினத்தின் தேசியத் திருநாள். அந்நாளில் நம் வீட்டுக் குழந்தை களை உற்சாகப்படுத்தும் வகையில் குடும்பத் தலைவர்கள் பல முயற்சிகளை செய்வது நல்லது.

மூடப் பண்டிகைகள் பலவகைகள் - மக்கள் மத்தியில், குழந்தைகள் மத்தியில் வேரூன்றச் செய் வதற்கு ஈர்ப்புத் தரும் சில வேலைகளைச் செய் கின்றனர்.

எடுத்துக்காட்டாக தீபாவளி என்றால் புத்தாடை, தின்பண்டங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குழந்தைகளிடம் உள்ளது.

இந்த மூடத்தனத்தை முறியடிக்க தமிழர் பண்பாட்டு விழாவாம் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பான தை முதல்நாளை பொங்கல் திருநாளாக - உழைப்பவர் உரிமை நாளாகக் கொண்டாடக் கூடிய சிந்தனையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் மக்கள் மத்தியில் விதைத்து வந்துள்ளது.

கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தைமுதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, பண்பாட்டுத் துறையில் புதிய மறுமலர்ச்சி அத்தியாயத்தை ஏற்படுத்திவிட்டது. ஊர்தோறும் பொதுமையாக பொங்கலிட்டு மக்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

இந்த உணர்வுக்கெல்லாம் ஆணிவேராக இருக்கக்கூடிய அறிவுலக ஆசான் அய்யாவின் பிறந்த நாளை ஒவ்வொரு தமிழர் குடும்பமும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டியது அடிப்படைக் கடமையோடு, நன்றி உணர்ச்சியைப் புலப்படுத்துவதுமாகும்.

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 1962 ஆம் ஆண்டுமுதல் விடுதலை சிறப்புமலரை வெளியிட்டு வருகிறது. நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஆண்டுமுதல் தொடர்ந்து புத்தம்புது மலராக - கருத்தோட்டம் செறிந்ததாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

உயர் எண்ணங்கள் என்ற அய்யாவின் கருத்து மணம் மிகுந்த சிறு நூல்கள் வெளியிட்டதுண்டு. தந்தை பெரியாரின் அறிவுரை - கையடக்க நூலும் வெளியிடப் பட்டது.

இவ்வாண்டில் இரு அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. பெரியாரைப்பற்றி பெரியார் என்னும் நூல் ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது; நாகம்மாள் மறைவு; ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ.ரா. தாயம்மாள் முடிவு ஆகிய முத்து முத்தான -தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகள் - தன்னைப்பற்றி பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியாரால் சொல்லப்பட்டவைகளின் ஒரு தொகுப்பு இந்நூலில் அடங்கியுள்ளன.

தந்தை பெரியாரே தன்னைப்பற்றிச் சொல்வது என்பது சுவையானது - சிறப்பானது - இதுவரை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத பல தகவல்கள் அடங்கியது.

48 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் நன்கொடை ரூ.15 மட்டும்தான்.

2. அதேபோல, தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான இனமானப் பேராசிரியர் அவர்களின் இவர்தாம் பெரியார் என்ற நூல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் (31.3.2010) ஆற்றிய உரையும், தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் எழுதப்பட்ட கட்டு ரையும் இடம்பெற்ற நூலாகும் இது. 36 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் நன்கொடை ரூ.10 மட்டுமே.

நான் திராவிடன் என்று சொல்கிறபொழுது நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு. திராவிடன் என்று சொல்கிறபொழுது நம்முடைய தகுதி உயர்கிறது. நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன. அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் திராவிடன் என்று சொல்வதற்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தினார் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் இனமானப் பேராசிரியர் மானமிகு, மாண்புமிகு க.அன்பழகன் அவர்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாளில் இத்தகு அறிவார்ந்த கருவூலங்களை நண்பர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு அன்புப் பரிசாக அளிக்கலாமே!

நாம் ஒரு மதவாதியாக இருந்தால் ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவு செய்திருப்போம். அதை மனதிற்கொண்டு 25 ரூபாய் செலவு செய்து இந்த இரு நூல்களையும் மற்றவர்களுக்கு அளிக்கும் அறிவுத் தொண்டை செய்யலாமே! எதைச் செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கவேண்டும் என்று எண்ணு கிறவர்கள்தான் பகுத்தறிவுவாதிகள் - கருஞ்சட்டைத் தோழர்கள்.

மதவாதிகள் மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பல்வேறு வகைகளிலும் திணித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அறிவியல் கொடுத்த ஊடகங்கள் அறியாமையைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் பகுத்தறிவுவாதிகள் அறிவுப்பணியைச் செய்யவேண் டாமா?

தந்தை பெரியார் பிறந்த நாளை இதற்கான வாய்ப்பாகக் கொள்வோமாக! இத்தகு நூல்கள் பரவினால்தான்- பூநூல்களின் ஆதிக்கமும் அறுபடும் - செயல்படுவீர்!

No comments:


weather counter Site Meter