Pages

Search This Blog

Tuesday, September 21, 2010

அமெரிக்காவின் தலை நகரமான வாசிங்டனில் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

அமெரிக்காவின் தலை நகரமான வாசிங்டனில் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப் புடன் நடைபெற்றது. நியூயார்க் பேராசிரியர் முனைவர் பால்கர்ட்சு பங்கேற்று ஒழுக்கத்துடன் வாழ மதம் தேவை யில்லை என்று கூறினார்.
பல மாநிலங்களிலி ருந்தும் அறிஞர் பெரு மக்கள் பெரியார் விழா வில் பங்கேற்று மகிழ்ந் தனர்.
சிறப்பு விருந்தினருக்கு சிறப்பு செய்யப்படுகிறது.
அமெரிக்கத் தலைநகரம் வாசிங்டனில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர் (18.9.2010)
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா வருடா வருடம் பெரியார் பன் னாட்டு மய்யம் சார்பில் அமெரிக்கா தலைநக ராம் வாசிங்டனில் நடத் துவது வழக்கம். அதைப் போலவே இந்த ஆண் டும் மேரிலாந்தில் உள்ள எலிகாட் நகரத்தில் உள்ள ஒரு சமூகக் கூடத் தில் நடைபெற்றது.
செப்டம்பர் 18, சனி மாலை 6 மணிக்கு வெர் ஜினியா, மேரிலாந்து, பென்சில்வேனியா, மாநில வாழ் தமிழர்கள் கலந்து கொள்ள, குழந்தைவேல் இராமசாமி தமிழ் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது.
விழாவை உலகத் தமிழ் அமைப்பின் தலை வர் நாஞ்சில் பீட்டரின் மகள் தீபா கிளாரா தொகுத்து வழங்கினார். வாசிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்கத் தலைவர் மயிலாடுதுறை சிவா அனைவரையும் வரவேற்று பேசினார்.
பேராசிரியர் பால்கர்ட்சு பங்கேற்பு
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நியூயார்க் பல்கலைக் கழக முதுபெரும் பேரா சிரியர் தத்துவ அறிஞர் முனைவர் பால்கர்ட்சு கலந்துகொண்டு சிறப் புரை ஆற்றினார். இந்த சிறப்புப் பேச்சாளரை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங் கோவன் அறிமுகப்படுத் தினார்.
முனைவர் பால் கர்ட்சு, புதிய மனித நேயப்பண்பாட்டுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்றும், மனித குலத்தின் மிகச் சிறந்த தத்துவம் என்னென்ன என்று எளிமையாக விளக் கினார். இவரைச் சமய சார்பற்ற மனிதநேய தந்தை என்று அழைப் பதுண்டு.
தமிழ்நாட்டில் உள்ள பெரியார் திடலுக்கும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், திருச்சி பெரியார் வளா கம் இவற்றிற்கெல்லாம் சென்று வந்ததை மகிழ் வுடன் நினைவு கூர்ந்தார்.
50-க்கும் மேலான புத் தகங்களை எழுதியவர். 1000-த்துக்கு மேலான கட்டுரைகளை எழுதிய வர். ஒழுக்கத்துடன் வாழ மதம் தேவையில்லை. மதத்தினால்தான் மக்கள் ஒழுக்கம் பெறுகிறார் கள் என்பது மடமை. அறிவுலகம் வளர்ந்து வந்துள்ள இந்நாள்களில் மதத்தின் மனித நேயம் இல்லாத தன்மை வெளி யாகிவிட்டது; அறிவுபூர் வச் சிந்தனையால்தான் மக்கள் மனித நேயத்து டன், அன்புடன், அறிவு டன் வாழலாம் என்ப தைப் பரப்புவோம் என் றார். இவரும் ஒரு கட வுள் மறுப்பாளர் மற் றும் தத்துவ அறிஞர்.
கீதையின் உண்மை என்ன?
மருத்துவர் சித்தானந் தன், கீதையின் உண்மை என்ற தலைப்பில் என்.ஆர். நர்லா எழுதிய புத்தகத் தில் இருந்து சில விளக் கத்தை பார்வையாளர் களோடு பகிர்ந்து கொண் டார்.
இந்தியாவில் பகவத் கீதை என்ற புத்தகம் பெரும் பங்கு வகித்தா லும், அதன் சாரம் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும்படி இல்லை எனவும், பகவத்கீதை போரை மய்யப்படுத்தி எழுதப்பட்டது என்றும் அந்தப் புத்தகத்தில் உள் ளதை விளக்கிச் சொன் னார்.
இந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் தமிழ்ச் சங்கப் பேரவைத் துணைத் தலைவர் முனை வர் பிரபாகரன் மிக எளி மையாக எல்லோருக்கும் மனதில் பதியும்வண் ணம், சமய சார்பற்ற மனிதநேயமும் அந்தக் காலத் தமிழ்ச் சமூகமும் என்ற தலைப்பில் பேசி னார். தமிழ் சமுதாயத் தில் திருவள்ளுவர் மதச் சார்பற்ற மனிதநேயப் பண்பாளர், பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்பதை சொன்னவர். தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்தை பெரியார் ஆற்றி யுள்ள பணியினால்தான் நாமெல்லாம் இங்கேயி ருக்கின்றோம் என்று வெகுவாகப் பாராட்டி னார்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்பற்றி...
விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சி, தந்தை பெரியார் பெண் முன் னேற்றத்திற்கு பெரும் பாடுபட்டதை நினைவு கூரும் வகையில், முனைவர் மீனாட்சி செல்லையா பெரியார் புரா, பெரியார் பெண்கள் முனைப்புத் திட்டங்கள் பற்றியும்,
மருத்துவர் சரோஜா இளங்கோவன் ஜாதி மறுப்பு, சுயமரியாதை, விதவைத் திருமணங்கள் பற்றியும்,
தஞ்சை பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம்பற்றி மருத்துவர் சங்கரி சிவசைலமும், பெண் கல்வி பற்றி தீபா கிளாராவும் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியை முனைவர் ஜெயந்தி சங்கர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பென்சில்வேனியா மாநிலத்தில் இருந்து வடநாட்டு இந்தியர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித் தார்கள். தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டு பெரியார் ஆற்றிய பணிகளை விழா சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
மொத்தத்தில் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை நடத்த வெகுவாக முயற்சி செய்த முன்னாள் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் முனைவர் அரசு செல்லையாவைப் பாராட்டி விழாவில் நன்றி கூறினார் வாசிங்டன் தமிழ்ச் சங்க செயலாளர் கல்பனா மெய்யப்பன்.
வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எழுதிய, அவர் களைப் பற்றிய நூல்கள் முழுதும் விற்கப்பட்டு விட்டன.
இப்படிப்பட்ட விழாவை அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அரங்கில் நடத்த வேண்டும் எனவும், இன்ன மும் பல மாநிலத்தில் இருந்து பல தமிழ் அன்பர்களை வரவழைக்க வேண்டும் என்றும் சிலர் வேண்டு கோள் விடுத்தார்கள்.
தன்னலம் பாராமல் 95 ஆண்டு கள் தமிழினம் முன்னேற அயராது பாடுபட்ட ஓர் உன்னதத் தலைவர் தந்தை பெரியாருக்கு இப்படி எத் தனை விழாக்கள் எடுத்தாலும் தகும்!
வாழ்க பெரியார்! வளர்க அவர் புகழ்!!!
விழா ஏற்பாட்டினை முனைவர் அரசு செல்லையா செய்திருந்தார்.
தொகுப்பு: மயிலாடுதுறை சிவா

No comments:


weather counter Site Meter