Pages

Search This Blog

Monday, September 20, 2010

நெற்றியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகள் - நடுவில் இருக்கும் சிவப்புக் கோடு மகாவிஷ்ணுவின் ஆண் குறி. இதற்கு விளக்க உலக்கை என்ன தெரியுமா? இதுதான் சிருஷ்டியின் தத்துவ மாம்!

நாமம்!
திருநீறு, சந்தனம், லிங்கக் கட்டி - இவை எல்லாமுமே ஆபாசம், அருவருப்பு, அநாகரி கம், ஒழுக்கக் குறைவு முத லியவற்றின் கூட்டுப் புழுதான். படிக்கவும், காதால் கேட்கவும் கூச்சப்படக் கூடிய நிலைதான்.
ஆனால், இவைதான் இந்து மதத்தின் உச்சக்கட்ட மான சமாச்சாரங்களாகப் போற்றப்படுவதும், புராண, இதிகாசங்களில் ஏற்றப்படுவதும், உபந்நியாசிகள் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வது மான சமாச்சாரங்கள்.
வைணவர்கள் என்பவர் களில் இரு பிரிவினர் உண்டு; ஒருவர் வடகலைப் பிரிவினர்; இன்னொருவர் தென்கலைப் பிரிவினர்.
வடகலைப் பிரிவினர் இரண்டு வெள்ளைக் கோடு களையும் இணைக்கப் பர வளைவு (ஞயசயடிடய) ஒன்றினை நெற்றியில் தீட்டிக் கொள்வார்கள். தென்கலையினரோ இரண்டு வெள்ளைக் கோடுகளுக்கும் அடியில் தாங்குகாலை வரைந்து கொள்வார்கள். இன்னும் புரியும் படியாகச் சொல்லவேண்டுமா னால், பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு வெள்ளைக் கோடு களுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடும் தீட்டப்படும்.
இதற்கான வியாக்கியா னங்கள் என்ன தெரியுமா? திருநீற்றையும், சந்தனப் பொட்டையும் தவிடுப் பொடி யாக்கும் ஆபாசக் கிடங்கு.
இந்த இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் கலகம் விளைவித்துக் கொள்ளக்கூடிய வர்கள். வடகலைக்காரர்கள், தென்கலைக்காரர்களை நேரில் கண்டு விட்டாலோ, உடனே சுவரில் போய் முட்டிக் கொள் வார்கள். அதற்குப் பெயர் கண்டுமுட்டு என்பதாகும். ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். இதற்குப் பெயர் கேட்டு முட்டு! என்ப தாகும்.
அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவ்வளவுப் பெரிய ஒற்றுமைக் கோட்பாடு.
காஞ்சீபுரத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன்.
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் வடகலை நாமம், இன்னொரு வாரம் தென்கலை நாமம் போடுமாறு தீர்ப்புக் கூறியதுண்டு. இதுதான் இந்து மதம் - இந்து மதத்துக்குள் ளேயே வளர்க்கும் ஒற்றுமை! இந்த லட்சணத்தில் தான் இந்துக்களே ஒன்று சேர்வீர்! என்று இந்து முன்னணிகள் அறைகூவல் விடுக்கின்றன.
சரி, நாமத்தின் இந்த இரு வெள்ளைக்கோடுகளுக்கும் நடுவில் உள்ள சிவப்புக் கோடுக் கும் கூறப்படும் தத்துவம்(?) தான் என்ன?
நெற்றியில் செங்குத்தாக இருக்கும் இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகள் - நடுவில் இருக்கும் சிவப்புக் கோடு மகாவிஷ்ணுவின் ஆண் குறி. இதற்கு விளக்க உலக்கை என்ன தெரியுமா? இதுதான் சிருஷ்டியின் தத்துவ மாம்!
சுற்றிச் சுற்றி எங்கு வந் தாலும் அர்த்தமுள்ள இந்து மதம் இந்தச் சமாச்சாரத்தில் தான் முடிகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.
கேவலமாகப் பேசாதீர்கள் - நாங்கள் நெற்றியில் தீட்டியி ருப்பது சாதாரணமானதல்ல - ராமர் பாதம் என்பார்கள் பக்தர்கள் - அப்படியானால் ராமர் நெற்றியில் போட்டிருக்கும் நாமம் யார் பாதம்? என்று கேட்டார் பெரியார் - இதுவரை பதில் இல்லையே!
ஒன்றை ஒன்று மட்டும் எப்படியோ சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட சிருஷ்டித் தத்துவத்தை மறைத்து ஆடை உடுத்துவது ஆண்டவன் சிருஷ்டிக்கு விரோ தம். எனவே, அனைவரும் சிருஷ்டித் தத்துவத்தை மதிக்கும் வகையில் அம்மணமாக நட மாடவேண்டும் என்று சொல்லா மல், எழுதாமல் விட்டுவிட்டார் களே, அதுவரை க்ஷேமம்தான்!
- மயிலாடன்
 http://www.viduthalai.periyar.org.in/20100920/news06.html

No comments:


weather counter Site Meter