Pages

Search This Blog

Thursday, September 23, 2010

இந்து மதத்தின் சமாச் சாரங்கள் அத்தனையும் ஆபாசத்தின் ஊற்றும், பிறப்புமாகும். ஓம் என்பதும் அந்த அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும்.

இந்து மதத்தின் சமாச் சாரங்கள் அத்தனையும் ஆபாசத்தின் ஊற்றும், பிறப்புமாகும். ஓம் என்பதும் அந்த அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும்.
மறைமலை அடிகளார் எழுதிய சைவ சித்தாந்த ஞானபோதகத்தில் சைவ சித்தாந்த நூலாகிய சிவஞான சித்தியாரின் பாட்டை எடுத்துக் காட்டிக் கூறியுள்ளார்.
ஆண் - பெண் குறி சேர்க் கையினாலேயே இன்பமும், உயிர்களின் தோற்றமும் நிகழ்வதால் ஆண் - பெண் குறி சேர்க்கையே தொன்று தொட்டு சிவலிங்க வடிவாக வணங்கப் பெறலாயிற்று; நீண்டு குவிந்த கல் வடிவு ஆண் குறியின் அடையாள மாகவும், அக்கல்லைச் சூழ்ந்த வட்டகல் வடிவு பெண் குறியின் அடையாளமாகவும் காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்து சமயத்தின் ஒரு கிளையாகிய தாந்ராவின்படி ஓம் என்ற பொருளின் பதத்திற்கு விளக்கமும், ஆண் - பெண் குறியின் சேர்க் கையே என்பதாக ஒப்பிடப் பட்டுள்ளது.
நீதிமன்றத்திலேயே இந்த உண்மைகள் ஒப்புக்கொள் ளப்பட்டன என்றால், சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் சுப்பிரமணியம் ஓம் என்பது குறித்து தட்டியில் எழுதி, பொதுமக்களின் பார்வைக் கும், சிந்தனைக்குமாக வைத்திருந்தார். (5.6.1990). ஆபாசமானது என்றும், மத நம்பிக்கையாளரின் மனதைப் புண்படுத்துகிறது என்றும் கூறி அவ்வூர் காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது (இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 298).
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலை வரும், சீரிய பகுத்தறிவாளரு மான பிரபல வழக்கறிஞர் மானமிகு வை. பாண்டி வளவன் அவர்கள், கழகத் தோழர் சுப்பிரமணியம் அவர்களுக்காக வாதாடினார்.
அம்பாசமுத்திரம் நீதித் துறை நடுவர் அ. தேவசகாயம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதியரசர் வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் எதைப் பேசினாலும் அல்லது எழுதி னாலும் ஆதாரத்தின் வலு மிக அதிகமாகவேயிருக்கும். இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசும்போது கூட, பார்ப்பன ஆசிரியர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூல் களை மேசையில் அடுக்கி வைத்தே - அதிலிருந்து பக்கம் உள்பட எடுத்துக் கூறிப் படித்துக் காட்டுவார்.
அடுத்தடுத்த பதிப்புகளில் தந்தை பெரியார் எடுத்துக் காட்டிய பகுதிகளை சாமர்த் தியமாக நீக்கிவிட்டு வெளி யிட்டதும்கூட உண்டு. அப்படி நீக்கப்பட்ட பகுதிகளையும், பழைய பதிப்பிலிருந்து ஒப் பிட்டு எடுத்துக்காட்டி, எதிரி களின் அறிவு நாணயக் கேட்டை அம்பலப்படுத்துவார் பெரியார்.
அருவருப்பு, ஆபாசம் இவை இரண்டுமே இந்து மதத்தின் இரு விழிகள் - இரு கரங்கள் என்பதைப் பக்தர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்க.
ஓம் என்ற இந்த ஆபாச வார்த்தை பொறித்த சங்கிலி யைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதும், கோவில் களில் ஓம் என்பதை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய் வதும் என்னே மானக்கேடு!
- மயிலாடன்

No comments:


weather counter Site Meter