
இந்நிலையில் 19 ஆம் தேதி மாலை பம்பையில் செயல்படும் திருவி தாங்கூர் தேவஸ்வம் போர்டின் பொதுப் பணித்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விஜி லென்ஸ் பிரிவு அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது பம்பை அஞ்சல் நிலை யத்தில் இரு டின்களில் அடைத்து வைக்கப்பட்ட 94 கிலோ நெய் சிக்கியது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசார ணை யில், திருவனந்த புரத்தில் இருந்து சபரிமலைக்கு அப்பம் தயாரிக்க தொழி லாளி களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர் சுதன் என்பவர் சிக்கி னார். அவரிடம் நடத் திய விசாரணையில், நெய்யை சபரிமலையில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளிகள் மூலம் பம்பைக்கு கடத்தியது தெரிய வந்தது.
சபரிமலையில் ஒரு தடவை அப்பம் தயா ரித்த பின், வாணலியில் இருக்கும் நெய்யை கடத் தியது தெரிந்தது. இந்த நெய்யை மீண்டும் பயன் படுத்த முடியும் என்ப தால், இதுபோன்ற செயல் கள் அடிக்கடி நடப்ப தாகவும் தொழிலாளிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் பயன் படுத்தப்பட்ட நெய்யை கடைசியில், கழிவாகக் கொட்டி விடுகின்றனர். இச்சம்பவத்தில் சம்பந் தப்பட்ட கிருஷ்ணன் குட்டி மற்றும் ரமேசன் ஆகியோர் தலைமறை வாகி விட்டனர். அவர் களைப் பிடித்து விசாரிக்க அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment