Pages

Search This Blog

Thursday, September 23, 2010

குற்றமும் செய்துவிட்டு, மறியலும் செய்கிறார் கள் என்றால், எவ்வளவுத் திமிர் இருக்க வேண்டும்?

திண்டுக்கல்லில் என்ன நடக்கிறது?
திண்டுக்கல் நகரின் மய்யப் பகுதியில் மலைக் கோட்டை இருக்கிறது. மத்திய தொல்லியல் துறை யின் அதிகாரத்துக்குட்பட்டது. கோட்டையில் நுழைவதாக இருந்தாலும் ரூபாய் 5 நுழைவுச் சீட்டுப் பெற்றாகவேண்டும். கோட்டையைச் சுற்றி மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோட்டையின் உச்சியில் உள்ள ஒரு கோயிலுக்குள் அம்மன் சிலையைக் கொண்டு போய் வைத்துள்ளது சமூக விரோத இந்துத்துவா கும்பல் ஒன்று.
ஒரு காலத்தில் அந்த மலைக்கோட்டைக் கோயிலில் அபிராமி அம்மன் சிலை இருந்ததுண்டு. பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும், மலைமீது ஏறிச் செல்லுவது சிரமமான ஒன்று என்ற அடிப்படை யிலும், கோட்டையில் இருந்த சாமி சிலைகள் கீழே கொண்டு வந்து புதிய கோயிலும் எழுப்பப்பட்டு விட்டது. இது நடந்தது திப்பு சுல்தான் காலத்தில்.
இந்த நிலையில், விநாயக சதுர்த்தி என்ற பெயரில் ஊருக்கு ஊர் ஊர்வலம் நடத்தி, கலவரத் திற்குக் கத்தித் தீட்டும் ஒரு கும்பல் இரவோடு இரவாக நூறு கிலோ எடையுள்ள புதிய அம்மன் சிலையை டோலி கட்டித் தூக்கிச் சென்று, கோட்டை யில் உள்ள கோயிலுக்குக் கொண்டு சென்றுள்ள னர். புதிதாகப் பீடம் அமைத்து அதன்மேல் கல்லா லான ஒரு அம்மன் சிலையை வைத்துள்ளனர்.
பாதுகாப்பு உள்ள ஒரு கோட்டைக்குள், மதில் சுவர்களையும் தாண்டி, எப்படி இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய முடிந்தது?
இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபா லன் அதற்கு முதல் நாள் திண்டுக்கல்லில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருக் கிறார். திட்டமிட்ட வகையில் சட்ட விரோதமான ஒரு காரியத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. காவல் துறை, உளவுத் துறை எப்படி இதில் ஏமாறியது?
தொல்லியல் துறை, கோட்டையிலிருந்து அந்த அம்மன் சிலையை அகற்றி, தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளது; இப்பொழுது மதுரை அருங் காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி என்று சொல்லக்கூடிய ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய ஆசாமிகள், அகற்றப்பட்ட அம்மன் சிலையை மீண்டும் கோட்டைக்குள் வைக்கவேண்டும் என்று கூறி, சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் செய் துள்ளனர். இதன்மூலம் கோட்டைக்குள் திருட்டுத் தனமாக அம்மன் சிலையை வைத்தவர்கள் யார் என்பது எளிதாகக் காவல் துறையினரால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
விசாரணைக்காக அழைத்து மாலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறை விடுவித்தது.
விநாயகன்பற்றி புராணங்களில் உள்ளவற்றை ஆதாரங்கள் காட்டி, திராவிடர் கழகத் தோழர்கள் துண்டு அறிக்கைகளை வெளியிட்டால், அவசர அவசரமாகக் கழகத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை, திருட்டுத்தனமாக, சட்ட விரோதமாக ஒரு சிலை யைப் பாதுகாப்பு நிறைந்த கோட்டைக்குள் கொண்டு வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? குற்ற வாளிகள்மீது மலர்ச்செண்டால் வருடுவது ஏன்? முதல் நாள் ராமகோபாலன் திண்டுக்கல்லில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில் கலந்துகொண்ட நிலையில், திருட்டுத்தனமாகக் கோட்டைக்குள் சாமி சிலையைக் கொண்டு வைத்ததில் அவருக் குள்ள தொடர்பு என்ன என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு இருக்கவேண்டாமா?
நடந்திருக்கிற குற்றம் சாதாரணமானதல்ல - பல பிரிவுகளின்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிணையில் வர முடியாத வகையில் காவல்துறை செயல்பட்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளி - திராவிடர் கழகத் தோழர் மானமிகு இராசேந்திரனை வெட்டிய வழக்கில் மூன்று ஆண்டு தண்டனை விதிக்கப் பட்டவர் என்று தெரிகிறது.
அத்தகைய பேர்வழிகள் மீண்டும் இத்தகைய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது, எவ் வளவுக் கடுமையாகக் காவல்துறை நடந்துகொண் டிருக்க வேண்டும்?
குற்றமும் செய்துவிட்டு, மறியலும் செய்கிறார் கள் என்றால், எவ்வளவுத் திமிர் இருக்க வேண்டும்?
தென்மாநிலக் காவல்துறைத் தலைவர் (அய்.ஜி.) இதில் தலையிட்டு உண்மையான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற சமூக விரோதிகள் அடுத்தகட்ட குற்றங்களில் ஈடுபடுவ தற்கு வசதி செய்து கொடுத்ததாகவே ஆகிவிடும் - எச்சரிக்கை!

No comments:


weather counter Site Meter