தங்களுடைய பதிலை அளிப்பதற்கு உச்சநீதி மன்ற அமர்வு (பெஞ்ச்), இரண்டு வார கால அவ காசம் அளித்துள்ளது. பலமுறை இதைப்பற்றிய விசாரிப்பு நடந்தும், பல மாநிலங்கள், இதைப் பற்றிய பிரமாணப் பத் திரமோ, நடவடிக்கை எடுத்துள்ளதுபற்றிய தகவலோ தரவில்லை என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தன் அதிருப் தியைத் தெரிவித்தது.
தமிழ்நாட்டின்தான் அதிகம்
தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற வழி பாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிக மாகும். 77,450 கோயில் கள் தமிழ்நாட்டிலும், 58,253 ராஜஸ்தானிலும், 15,000 குஜராத்திலும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் கட் டப்பட்டுள்ளன.அருணாசலப் பிர தேசத்தில் பொது இடத் தில் ஒரு வழிபாட்டுத் தலம்கூட இல்லை என்று அம்மாநில அரசு வழக் கறிஞர் குறிப்பிட்டதைக் கேட்டு, அது மிகவும் நாகரிகமான மாநிலம் என்ற புகழ்ச்சியை உச்ச நீதிமன்றத்திடம் பெற்றது.
அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவா ரங்கள் மற்றும் பிற வழி பாட்டு இடங்களைப் பொது இடங்களில் இருந்தும், பாதைகளில் இருந்தும் அகற்றுமாறும், அவை போக்குவரத் துக்கு இடைஞ்சல் என் றும், நெரிசலை உண் டாக்குகின்றன என்றும், கூட்ட நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின் றன என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.
அனுமதி பெறாதவை
உச்சநீதிமன்றத்தின் பல விசாரணைகள் இது குறித்து நடந்தன. அப் பொழுது மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், அனுமதியற்ற வழிபாட்டு இடங்களை அகற்றி விடுவதாகவும், அவற்றால் உண்டாகும் அசவுகரியங்களைத் தாங்களும் உணர்வதாக வும் தெரிவித்திருந்தன. ஆனால், சொன்னதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எதுவும் நடைபெற வில்லை. 2009 ஆம் ஆண் டில், மத்திய, மாநில அரசுகள், அனுமதி பெறாத கோயில்களைத், தெருக்கள், சாலைகள், பூங்காக்கள் முதலிய இடங் களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டது.
No comments:
Post a Comment