Pages

Search This Blog

Friday, September 17, 2010

ஆலய நுழைவுப் போராட்டம்: அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் அறிவிப்பு

மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 240 மாணவர்களும் கோயில்களில் அச்சர்களாக நியமிக்கக் கூடாது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பிற சாதியினர் இதை சரியாக செய்யமாட்டார்கள் என, மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உச்சநீதிமன்றமும் பிற சாதியினர் அர்ச்சகராகும் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு வராமல் தள்ளிப்போடப்பட்டு வருவதால், பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் வீதி தோறும் நடந்து சென்று, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி துண்டு பிரசுரகங்கள் மூலம் மக்களிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர் என்றார்.
மேலும், மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மதுரை மீனாட்சி அம்மனுக்கும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நாங்கள் பூஜைகள் செய்யப்போகிறோம். இதற்கு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=39577

No comments:


weather counter Site Meter