Pages

Search This Blog

Monday, May 2, 2011

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டுநாள்கள்தான்- இவர்கள் புளுகுக்கு?

2ஜி அலைவரிசை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாதிக் பாட்சாவின் மரணம்பற்றி பல்வேறு அறிக் கைகளை விட்டனர் எதிர்க்கட்சித் தலைவரும், அரசியல் புரோக்கர்களான அய்யர்களும்!

இப்போது தி.மு.க.விற்கு எதிராக கச்சையை வரிந்து கட்டும் தினமணி நாளேடு வெளி யிட்டுள்ள செய்தி இதோ:

பாட்சா மரணத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் (38) மரணத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவரது நண்பரான சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த சாதிக் பாட்சாவையும் விசாரித்தனர். அதுபோல், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். 2010 டிசம்பர் முதல் 2011 மார்ச் மாதத்தில் இந்த விசாரணை நடந்தது. இதற்கிடையே மார்ச் 16-ம் தேதி பாட்சா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை போலீஸார் நடத்திய விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீஸார் அவர் தற்கொலை செய்துகொண்டதை இப்போது உறுதி செய்துள்ளனர்.

ஆதாரமில்லை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.அய். போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்தனர். இதில் பாட்சாவுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களையோ, ஆதாரங்களையோ சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை.

முன்பு அறிக்கைவிட்ட அரசியல் மேதாவிகள் இப்போது தலையை எங்கே கொண்டுபோய் நுழைத்துக் கொள்வார்கள்? என்று பாமரத் தமிழர்கள்கூட கேட்கமாட்டார்களா?

No comments:


weather counter Site Meter