Pages

Search This Blog

Wednesday, April 6, 2011

பார்ப்பன சங்க சங்கர நாராயணன் கொலைவெறி பேட்டி

தேர்தல்ஆணையம் என்ன செய்யப் போகிறது? பூணூல் தன்மானத்தின் சின்னமாம்;பூணூல்பற்றி கலைஞர் பேசினால் வாஞ்சிநாதனாக மாறுவார்களாம்!

பூணூல் தன்மானத்தைக் காக்கும் அடையாளச் சின்னம் - தெய்வீகச் சின்னமாம். அதுபற்றி கலைஞர் அவதூறாகப் பேசினால், வாஞ்சிநாதனாக மாறுவோம் என்று பார்ப்பன சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சங்கர நாராயணன் செய்தியாளர்களுக்கு நாகர்கோவிலில் பேட்டியளித்துள்ளார்.

பார்ப்பன சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சங்கர நாராயணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
(தினமலர் நெல்லைப் பதிப்பு, 5.4.2011).

தேர்தல் பிரசாரத்தில் பூணூலைப்பற்றி பேசியதற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சங்கர நாராயணன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது;

தமிழக முதல்வர் கருணாநிதி வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிராமணர்களின் தெய்வீக தன்மை வாய்ந்த பூணூலைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இப்பேச்சானது எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலாக கருதவேண்டியுள்ளது. ஒவ்வொரு அந்தணருக்கும் பூணூல் தன்மானத்தை காக்கும் அடையாள சின்னமாகும். இதை அவமதிப்பதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்படும். எங்களைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக்கொண்டு தேர்தல் பணியை மட்டும் கருணாநிதி பார்த்துக்கொள்ளட்டும். இல்லையென்றால் எங்கள் சமுதாய வீர இளைஞன் வாஞ்சிநாதன் எடுத்த புரட்சிகரமான முடிவை எடுக்க தயங்கமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இத்தேர்தலின் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக வாக்களிப்பது என்றும், நமது சமுதாய வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம்.
- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றதுபோல, பூணூலைப்பற்றிப் பேசும் கலைஞரையும் சுட்டுக் கொல்லுவோம் என்பதுதான் இதன் பொருள்.

வன்முறையைத் தூண்டும் இந்தப் பேச்சின்மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது.

http://viduthalai.in/new/e-paper/6830.html 

2 comments:

நம்பி said...

அந்த ஊத்தை "வாஞ்சி நாதனாக" மாறினால் கலைஞரின் "லட்சோப லட்ச உடன்பிறப்புகளுக்கு" ""ஜோசப் ஸ்டாலினின் செஞ்சேனையாக"" மாறுவதற்கு தெரியாதா? இல்லை அந்த ""செஞ்சேனைக்கு ஆரியத்தை ஒழிக்கத் தெரியாதா?""

ஏற்கனவே ""செஞ்சேனைக்கு ஆரியத்தை ஒழித்த அனுபவம் இருக்கிறதே...!""

yasir said...

நாம் ஒவ்வொருவரும் "பெரியாரா"க மாறினால் பூணூல் இல்லாத சமுதாயமாக மாறிவிடும்.அதை எதிர்பார்க்கிறார்களோ என்னவோ?


weather counter Site Meter