Pages

Search This Blog

Wednesday, April 20, 2011

சார்லஸ் டார்வின்-நினைவு நாள் (1882)

நூல் ஒன்று மதவாத மண்டபத்தை இடித்துத் தள்ளியது என்றால், அது சார்லஸ் டார்வினால் எழுதப் பட்ட உயிரினங்களின் உற்பத்தி என்னும் நூலாகும்.

அந்த நூல் என்ன அணுகுண்டா? வெடி குண்டா?

ஆமாம். அதுவரை உயிர் களைக் கடவுள்தான் படைத் தான் என்ற பைபிள் கோட்பாட் டுக் கருத்திற்குக் கசையடி கொடுத்துக் கவிழ்த்து விட்டது ஒரு நூல் என்றால் அது சாதாரணமா?

இந்தக் கருத்துகள் பரவு மானால் மதமாவது மண்ணாங் கட்டியாவது - கடவுளாவது கத்தரிக்காயாவது என்று கண்ட மாதிரி மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே.

அந்த ஆத்திரத்தால் வசை மாரி பொழிந்தது கிறித்துவக் கோட்பாட்டு உலகம். மனிதனின் வரலாறு என்ற நூலையும் வெளியிட்டார். இந்த இரு நூல்களையும் படித்து சிகப்புத் துணியைக் கண்ட காளையாக மிரண்டனர்.

குரங்கிலிருந்துதான் படிப் படியாக பரிணாம வளர்ச்சித் தத்துவப்படி மனிதன் பிறந்தான் என்கிறாரே டார்வின், அப்படியா னால் அவரின் மூதாதையரான பாட்டியை பார்த்தா, தாத்தாவைப் பார்த்தா என்று கேட்டார் ஒரு மே(ல்)தாவி!

1860ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் பிரிட்டீஷ் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற விவாத அரங்கில் டார்வினின் இயற்கைத் தத்துவத்தைக் கேலி செய்து பாதிரியார் வில்-பர் -போர்லஸ் தான் இவ்வாறு கூறினார்.

டார்வினின் தாத்தா, தந்தை யார் இருவருமே பிரபலமான டாக்டர்கள், வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் ஆறு பிள்ளை களில் 5 ஆவது மகனாகப் பிறந்தவர் இவர்.

மகன் பாதிரியாராக வர வேண்டும் என்று தந்தையார் கருதினார். அதற்காக மருத் துவக் கல்வியை இடையில் முறித்துக் கொள்ளும் நிலை யெல்லாம் ஏற்பட்டது. அவர் மனம் அதில் ஈடுபடவில்லை. இயற்கை ஆய்வில் மொய்த்துக் கிடந்தது.

கேப்டன் ஃபிட்ஸ்ராய் என்பவர் மேற்கொண்ட கப்பல் பயணத்தில் உதவியாளராக செல்லும் வாய்ப்பு டார்வினுக்குக் கிடைத்தது. அதுதான் பரிணா மத் தத்துவத்தை டார்வின் கண்டு பிடிக்கப் பெரிதும் உதவியது (5 ஆண்டுகள் அந்தப் பயணம்).

சுற்றுப் பயணத்தைத் தொடங்கியபோது பைபிளின் கருத்துதான் டார்வின் கருத் தாக இருந்தது. பயண முடிவின் போது கருத்துத் தலை கீழானது.

19 ஆண்டுகள் ஆய்வு செய்து மனிதனின் மூதாதை குரங்குதான் என்ற ஆய்வை வெளிப்படுத்தினார்.

The Mystery of the begining of all things is insoluable by us and I for one must be content to remain agnostic என்று தன் சுயசரிதை யில் எழுதினார் டார்வின்.

பல பொருள்களின் துவக்கம் எப்படி என்பது ஒரு புதிர் என்றாலும், எளிதில் அதனை நாம் ஜீரணித்துக் கொள்ள இயலாது என்ற போதிலும் நான் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன் என்பதே போதுமானது என்று நினைக்கிறேன் என்று அந் நூலில் பதிவு செய்துள்ளார். (அந்தக் கால கட்டத்தில் அதற்கு மேல் அவரால் சொல்ல முடியாது என்பதே உண்மை) 360 ஆண்டுகளுக்குப்பிறகு போப் பாண்டவர் ஜான்பால் டார்வின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு பள்ளிகளில் போதிக்க ஒப்புக் கொண்டார் (‘The Hindu’ 26.10.1996) இறுதி வெற்றி மதத்துக்கு அல்ல, மதிக்குத்தான்! இன்று(19-04-2011) டார்வின் நினைவு நாள் (1882).

- மயிலாடன்

No comments:


weather counter Site Meter