Pages

Search This Blog

Monday, April 18, 2011

கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஜெயலலிதா

எந்த அரசியல் கட்சியை எப்போது ஆதரிப்பார், எப்போது எதிர்ப்பார் என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது. ஆதாயம் இருந்தால் ஆதரிப்பார்!

ஆதாயம் இல்லாவிட்டால் எதிர்ப்பார்! எது எப்படியிருந்தாலும், ஓர் அரசியல் கட்சியை விமர்சிக்கும் போது, குறைந்தபட்ச நாகரிகத்தை ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அத்தகைய குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தை ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்க முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணம், அவர் முதலமைச் சராக இருந்தபோது, சட்டசபை யிலேயே கம்யூனிஸ்டுகளை விமர்சித் ததுதான்!

முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா, ஒருமுறை சட்டசபையில் பேசும் போது, கம்யூனிஸ்டுகள் நாள்தோறும் விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். நான் சாம்பலாக வேண்டும் என்று சாபம் கொடுக்கிற குழாய்ச்சண்டைக் கோமாளிகளுக்குக் கூறிக் கொள்கிறேன்! கம்யூனிஸ்டுகள் வெத்துவேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள். சலுகைகளைப் பெறும் பேராசையோடு செயல்படுவார்கள்.

இவர்கள் பேராசைக்காரர்கள்! இவர்களுக்கு நான் பதிலே சொல்லமாட்டேன். அமைச்சர் கள் எவரும் இவர்களை மதித்துப் பதில் சொல்லத் தேவையில்லை என்று சட்டமன்றத்திலே எதிர்க்கட்சிகளைப் பற்றி ஆணவத்தோடு பேசிய முதல மைச்சரை, வேறு மாநிலங்களில் இந்திய ஜனநாயகம் எங்காவது கண்ட துண்டா? கேள்விப்பட்டதாவது உண்டா? இது தமிழர்கள் செய்த தவப்பயனா?

காஞ்சிபுரத்தில் 10.3.2004 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, இந்தக் கூட்டணிக் கும்பலில் இன்னும் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வலது சாரி கம்யூனிஸ்டுகள் என்றும் இடது சாரி கம்யூனிஸ்டுகள் என்றும் பெயர் போன பெருமக்கள் இவர்கள்!

இவர்கள் வேடிக்கையான மனிதர்கள்! இவர் களுக்குக் கொல்கத்தாவில் நியாயமாய்த் தெரிவது, சென்னையில் அநியாயமாய்த் தெரியும். ஒரே நடவடிக்கை, வங்கத்தில் எடுக்கப்பட்டால், பூ தூவி வாழ்த் துவார்கள்; தமிழகத்தில் எடுக்கப்பட் டால், மண் அள்ளித் தூற்றுவார்கள். இவர்களது அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடும்! ஊருக்கு ஊர் வேறுபடும்! நாட்டுக்கு நாடு வேறுபடும்! நேரத்துக்கு நேரம் மாறுபடும்!

இவர்களுடைய ஒரே குறிக்கோள் என்னை எதிர்ப்பது! கொள்கை வேண்டாம்! கோட்பாடு வேண்டாம்! என்னை எதிர்த்தால் போதும் இவர் களுடைய ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும்! நல்லதற்கும், கெட்டதற்கும் வித்தியாசம் தெரியாத இந்த நிறக் குருடர்கள், இந்த நாட்டுக்கு என்ன நன்மையைச் செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய விடாமல் தடுத்தார்கள். சட்டசபையில் எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் நடக்கவிடாமல் கூக்குரலிட்டார்கள். கூட்டமாக வெளிநடப்பு செய்தார்கள்!

ஒரு நாளாவது தங்களது ஜனநாயக கடமைகளை ஒழுங்காகச் செய்யாத கம்யூனிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் அனுமதித்தால், நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விடாதா? மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? மற்றவர்களைத்தான் என்ன செய்யவிட்டார்கள்? (நமது எம்.ஜி.ஆர்., 11.3.2004) என்று தரக் குறை வாகக் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்டுகளைக் குறிப்பிட்டு ஜெயலலிதா பேசும்போது, மாண்புமிகு உறுப்பினர் மார்க்சிய சித்தாந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்டு இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய் விட்டன. (மேஜையைத் தட்டும் ஒலி) இந்தக் கம்யூனிஸ்டு இயக்கங்கள், இரண்டே காரியங்களைத்தான் செய் கின்றன.

எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்... போராட் டம்... போராட்டம்... போராட்டம்...! இல்லையென்றால், அவர்களுடைய பொலிட்பிரோ செயற்குழுவில் ஏதோ ஒரு கூட்டத்தைப் போட்டு 3 நாள்கள், 5 நாள்கள், 7 நாள்கள் என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறெந்த ஆக்கப்பூர்வமான நடவடிக் கையிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை.

மேற்கு வங்கத்தில் அவர்களுடைய இயக்கம் இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? ஒவ்வொரு தேர்தலின் போதும் மிக அதிகப்படியாக ரிக்கிங் செய்து வெற்றி பெறுவது தான். அங்கே கம்யூனிஸ்டு ஆட்சியின் லட்சணத்தைக் குறிப்பிட ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். அங்கு பஸ் கட்டண உயர்வைக் கண்டித்துச் சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது மறியல் செய்த ஒருவரைப் போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி நாளேடுகளில் புகைப்படமாக வெளிவந்தது. இது கோவை மாலை மலர் பத்திரிகையிலும் வெளிவந்தது. அதற்குத் தலைப்பே தரும அடி என்று கொடுக்கப் பட்டிருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (8.4.2003 சட்டமன்றப் பதிவேடுகள், பக்கம் : 120,121)

தலித் நிலங்களை அபகரித்து, பையனூர் பங்களா கட்டியதாக ஜெய லலிதாவை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தியது அந்தக் காலம்!

பத்துச் சீட்டுகளுக்காகப் போயஸ் தோட்டத்து இரும்புக் கதவுகள் திறக் காதா என்று ஏங்கியிருப்பது இந்தக் காலம்! அந்தோ பரிதாபம்!

(தேசிய முரசு - 2011 ஏப்ரல் (1-15 மற்றும் 16-30)

No comments:


weather counter Site Meter