Pages

Search This Blog

Thursday, August 25, 2011

தமிழ் புத்தாண்டு மாற்றம் திருத்தணிக்குக் கிடைத்த தீனி!

தமிழர்களின் வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு துக்க தினம். நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக ஈரோட்டுக் கண்ணாடி வழியாக தெளிவு படுத்தி விட்டார்,
பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு! என்று!

1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு. அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே, அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.

(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள் எழுதப்பட ஆரம்பித்துவிட்டன.
என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணையாக, சட்டமாக அரும்பிட வில்லை.

இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளியாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான - தமிழர் பண்பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுடமான சட்டத்தினை நிறைவேற்றினார். (29.1.2008)

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.

நேற்று . . . நேற்று . . .

ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?
சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்? யார் அந்தப் பொது மக்கள்.

தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டுவிடலாம்.

என்றாரே அய்ராவதம் மகாதேவன் என்ற தொல்லியல் அறிஞர். (தினமணி: 26.1.2008)

அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில் அது சட்டமாகிறது - என்னே கொடுமை!

முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம் இல்லையே. வழக்கமான அரசியல் வாடை கலந்த பேச்சுக் கச்சேரி தானே நடந்திருக்கிறது.

கலைஞர் தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒரு சுயவிளம்பரத்திற்காகவாம்.

அப்படிப் பார்க்கப்போனால், தந்தை பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?
நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களையெல்லாம் இழிவு படுத்தலாமா?

பிரபவ என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைச் சார்ந்ததுதானே!

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா?

ஒரு சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச் சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்? அந்தப் போர்வையில் நடக்கும் ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி என்றுதானே பொருள்?

புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம். திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே அவலம்! என்னே அவலம்!!

இதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் கருப்புப்புள்ளிகளுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படையெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத் தானே தமிழின விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா?

2008 தி.மு.க. சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?

சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதிபதி கூறியுள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன உணர்வின் அடிப்படையில்?

கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான் பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்கவில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடிவற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஆண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ்நாடு இதே போல பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.

1. சாலிவாகன சகாப்தம்

2. ஹிஜ்ஜிரி சகாப்தம்

3. கிறிஸ்துவ சகாப்தம்

4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறையில் இருந்தது.)

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு, இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத்தின்படி இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப்போதுதான் முதல் முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதிதானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்பது ஏற்கத் தக்கதல்ல. சமஸ்கிருதத்திலுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரிசீலித்து உரிய திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக்கலாம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும்போது தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் அர்த்தமாகும்.

தமிழ் சகாப்தம் தொடர்பான அறிவிப்பை, 2008ஆம் வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ளதில் சட்ட முரண்பாடோ அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம்பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே நீதியரசர்!

டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தியாயா மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)

(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வியில் செய்த அதே குளறுபடி இதிலும் இருக்கத்தான் செய்கிறது.)

யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், வானியல் அறிஞர்களும் சொன்னார்களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர் தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?

சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா?

இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர் மு.வ. என்ன கூறுகிறார்?

இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்). அதே நேரத்தில் பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர். இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் யாவை?

பதில்: அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான். வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (துக்ளக் 30.1.2008)

ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல் வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்) அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.

எந்தப் பண்டிகை வழக்கமாக நம்பிக்கையின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப் பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனே யொழிய, இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. கலாச்சாரத்திற்கு விரோதமானது. நான் இதை ஏற்கவில்லை.

(துக்ளக் ஆண்டு விழாவில் சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)

முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத்தின் வாசகத்திலும், முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும் துக்ளக் சோ ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே - இதன் பின்னணி என்ன?

தி.மு.க.வுக்குப் பெரியார் ராமசாமி ராஜகுரு என்றால் அதிமுகவுக்கு ராஜகுரு சோ ராமசாமியா?
தமிழர்கள் மத்தியில் இது மெள்ள மெள்ள இது பரவாதா? 1971 மீண்டும் திரும்பும் நிலை ஏற்படாதா?

அடுத்த கேள்விக்கு வருவோம்.

கேள்வி: ஜி.ஜெயராமன், கூந்தலூர்.

தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான்! (கல்கி 27.1.2008)

பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம் ஆடுவதன் நோக்கம் என்ன?

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இதன் பின்னணியையும், முன்னணியையும் புரிந்து கொள்ளாதா?

இன உணர்வுக் கண்ணோட்டத்தில் இது ஒரு முக்கியமான கால கட்டமாகிவிட்டது.

வரும் ஞாயிறன்று திருத்தணியிலே கழக மாநாடு - சிலிர்த்தெழும் பேரணியுடன்!

அதன் எழுச்சிக்குத் தீனியைக் கொடுத்து விட்டனர்! அங்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கான உந்துதலை நமது தோள்களுக்குக் கொடுத்துவிட்டனர்!

இருப்புக் கொள்ளாமல் இளைஞர் உள்ளம் துடிப்பது தெரிகிறது!

மாணவர் பட்டாளம் அலை மோதுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மகளிர் பாசறை ஒரு சுற்றுப் பயணம் சென்றுஅவர்களைத் தயார்படுத்திவிட்டது.

நேற்று வந்த செய்தி - கூடுதல் விளம்பரங்களுக்கு வேலையில்லாமல் ஆக்கி விட்டது.

வடக்கு எல்லை திருத்தணி - வரலாற்றில் புதிய எல்லையை வரைய இருக்கிறது!

வாருங்கள் தோழர்களே!

வலிமையைக் காட்டுவோம்!



தை முதல்நாள் - கழகத்தின் முயற்சியும் கலைஞரின் செயல்பாடும்

சென்னை கலைவாணர் அரங்கில் 29-4-1990 அன்று நடந்த புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் அறுபது ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ்ச் சொல்லே அல்ல! நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த குழந்தைகள்தான் பிரபவ என்று தொடங்கி, அட்சய என்று முடியும் 60 குழந்தைகள் என்று கூறுவது தமிழர் பண்பாட்டிற்கும், பகுத்தறிவுக்கும் பொருத்தமற்ற அருவருப்பான கதையாகும். உலக மத்தியில் தமிழர்களைத் தலை குனிய வைக்கும் செய்தியாகும். தமிழுணர்வும், இனவுணர்வும் படைத்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இக்கால கட்டத்திலேயே இந்த ஆபாசத்துக்கு விடை கொடுக்கப்பட்டு, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமாய் புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்தப் பொருத்தமான நாளில் கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலைஞர் அவர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு மானமிகு கி.வீரமணி அவர்கள்முதல்வர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து அவ்விழாவில் முதல்வர் கலைஞர் பேசும்போது கூறியதாவது:

தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவங்கவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது அருமை இளவல் வீரமணி இங்கே குறிப்பிட்டார்.

தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.

(விடுதலை 30-4-1990)

Wednesday, August 10, 2011

தினமலராகிய கருவாட்டுப் பூனை-போகுமா பூணூல் புத்தி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இக்கல்வியாண்டில், பள்ளிகள் திறப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்ததோடு, அப்போ தும் சமச்சீர் கல்வித் திட்டம் ஏற்க இயலாது என, பதவியேற்ற அன்றே அவசர கோலம் அள் ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு, சமச்சீர் கல்வியை ரத்து செய்து சட்டத் திருத் தம், அதற்கு அதே நாளில் கவர்னரின் ஒப்புதல் பெறப் பட்டது.
டவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங் களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான் னுகூட தெரியாம இருக் கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...! (தினமலர் 10-8-2011)

தினமலர்என்கிற வாஸ்கோடகாமா புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துட்டாருங்கோ!

தி.மு.க. அரசு தயாரித்த சமச்சீர் கல்வியே கூடாது; அது அவசர கதியில் தப்பும் தவறுமாகக் தயாரிக்கப் பட்டது என்பதுதானே அ.தி.மு.க. அரசின் நிலைப் பாடு?

அதனைத்தானே திரா விடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார். அ.தி.மு.க. அரசின் குற்றச்சாற்றை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட் டத்தை 10 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஓங்கிக் குட்டிவிட்டதே!

பாண்டிய மன்னன் மண் சுமந்த கூலி (சிவபிரான்) யின் முதுகில் அடித்த சாட்டையடி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகுகளிலும் சுளீர் என்று உறைத்தது என்று கூறும் புராணத்தை நம்பும் தினமலர் கூட்டத்தின் பூணூல் முதுகுகளிலும், உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி சுளீர் என்று வலித்திருக்கிறது போலும்! அந்த வலியின் உளறல் தான் தினமலரின் டவுட் தனபாலு எழுத்தில் நன் னாவே பஷ்டமா தெரியுது.

பரிதாபம், அவர்கள் என்ன செய்வார்கள்?

பாப்பார வீட்டுப் பெண்ணையும், சேரிவீட்டுப் பையனையும் ஒரே பாடத்தை படிக்கச் சொல்லி விட்டாரே இந்த சூனா மானா கருணாநிதி!

மறைமுகமான நமது குலக்கல்வித் திட்ட யுக் தியைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டாரே - இந்தக் கருஞ்சட்டைத் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஏடு அக்னி சட்டியில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடி யாய்த் துடிக்கிறது!

என்னதான் மூடி மறைத் தாலும் அப்பப்ப தன் குல தர்ம புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது தினமலர் வகையறாக்கள்.

இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!

திராவிடர் கழகத் தலை வர் வீரமணி எப்படிப்பட்ட சட்ட வல்லுநர் என்பதை முதல் அமைச்சர் அம்மை யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! தமிழ்நாடு சட்டம் 45 (1994) 31-சி பிரிவின்கீழ் எப்படி வந்தது என்பது ஊருக் கும் உலகத்துக்கும் தெரியுமே! தினமலர் போன்ற உத்திராட்சப் பூனைகளுக்கு மட்டும் தெரியவே தெரியாது!

தம் கண்களை மூடிக் கொண்டு அய்யய்யோ பூலோகம் இருண்டுவிட் டது என்று கீச் மூச்! என்று கத்துகிறது தின மலராகிய கருவாட்டுப் பூனை.

Tuesday, August 9, 2011

எது தகுதி?கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

கேள்வி: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் அறிவித் துள்ளதே?

பதில்: அறிவுத்திறன் அடிப்படையில் அய்.அய்.டி; கேட் (Cat) தேர்வுகள் போல் நடத்தி, ஆரோக்கிய மருத் துவ உலகை அமைப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. சாதிய கட்சிகளின் குறுகிய லாப நோக்கத்தைக் கடந்து இது செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்களை மலிவாகக் கருதக் கூடாது.

(கல்கி 14.8.2011 பக்கம் 82)

பார்ப்பனர்கள் வழக்க மாகப் பாடும் பல்லவியைத் தான் இப்பொழுதும் பாடுபடு கிறார்கள்.

+2 தேர்வில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்தால் தகுதி செத்துப் போய்விடும். அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் தகுதி உயிர் பிழைக்கும் என்று யார் சொன்னது?

இவர்களாகவே ஒரு முடிவை எடுப்பது. அதுதான் தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்று அவர் கள் நமது காதுகளில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டி அங்கு அவர்கள் கொடுக்கும் கேள்வி - பதில்களை மனதில் பதிவு செய்து - நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது தான் தகுதி - திறமை யென்றால் - இந்த வசதிக் கெல்லாம் கிராமத்துப் பையன் எங்கே போவது?

உச்சநீதிமன்றத்தில் டில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான கட்.ஆஃப் மார்க் பிரச்சினையில் நீதிபதி ஆர். இரவிந்திரன் ஒரு வினா வைத் தொடுத்தாரே!

அம்பேத்கர் வெறும் 37 மதிப்பெண்தான் பெற்றிருந் தார். அதன் காரணமாக அவருக்குக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டு இருந் தால் இந்தியாவுக்கு ஓர் அரசியல் சாசனம் கிடைத் திருக்குமா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டாரே மூத்த வழக்கறிஞர் பிபிராவ் (பார்ப் பனர்) தான் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார் என்றால் கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கைக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரி யுமா?

திறந்த போட்டி 196.25
பிற்படுத்தப்பட்டோர் - 196.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 193.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 194.
தாழ்த்தப்பட்டோர் - 187
தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 177.25
மலைவாழ் மக்கள் - 169.25

இப்படி மதிப்பெண் பெற் றவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை கல்கி வகையறாக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதெல்லாம் தகுதி யில்லை - அகில இந்திய நுழைவுத் தேர்வுதான் தகுதி என்பதில் ஆரிய சூழ்ச்சி இருக்கிறது என்பது வெளிப்படையே!

மருத்துவரிடம் செல்லக் கூடிய நோயாளிகள், மருத் துவர் தங்கப் பதக்கம் பெற்றவரா என்று தெரிந்து கொண்டு செல்வதில்லை. மருத்துவர்களின் தகுதி திறமையை உண்மையில் எடை போடுபவர்கள் திரு வாளர் பொது மக்கள்தான்!

- மயிலாடன்

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு

தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இதைப் பல அரசியல் வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.

அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானது மான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட் டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாய மாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர் கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர் களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர் கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.

இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.

அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பது மில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவ மாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.

இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படு கிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மான வுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டை யார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.

இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில் நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.

உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்த வர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக்கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மை யில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில் யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?

உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது, எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள் களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர் களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவ தற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத் தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப் பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமே யானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிதவ அனாதை காப்பு இடத்தி லேயோ விட்டுவிட்டு வாருங்கள்.

உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.

எதிரிகளின் அரண் இப் போது கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக் காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது. என்பதாக வீர முழக்கம் செய்தார்.

(2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு)

- குடிஅரசு - சொற்பொழிவு - 09.03.1946

சமச்சீர் கல்விபற்றி புரட்டான தகவல்கள்

பேராசிரியர் கதிர்
தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் குற்றச்சாற்று
Science
2.Content is too heavy. In
Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of mater. discovery of fundamental particles, properties of cathode rays and discovery of persons
நமது கருத்து: இதெல்லாம் ரொம்ப ஓவர்.... 1980_களில் படித்த போதும் இதே பெருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9 ஆம் வகுப்பில் இதே அளவு தான் படித்தோம்...
இப்போது அவை 8 ஆம் வகுப்பில்...
ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல... அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க... பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க.
1. பொருண்மை அழியா விதி
(லெவாய்சியர் 1774)
ஹைட்ரஜன் வாயு எரிந்து ஆக்ஸிஜ னுடன் சேர்ந்து நீர் உருவாகிறது. இவ் வினையில் உருவாகும் நீரின் நிறை யானது எடுத்துக் கொள்ளும் ஹைட் ரஜன் மற்றும் ஆக்சிஜனின் மொத்த நிறைக்குச் சமமாகும். இயற்பியல் அல்லது வேதியியல் மாற்றத்தின் மூலம் நிறையை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது இதுவே பொருண்மை அழியா விதி.
2. மாறாவிகித விதி (ப்ரவுளஸ்ட் 1779)
ஒரு தூய வேதிச் சேர்மம், எம் முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் உள்ள தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட மாறா நிறை விகிதத்தில் தான் கூடியிருக்கும்
சான்று: மழை, கிணறு, கடல், ஆறு போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து நீரைப் பெற்றாலும் அதிலுள்ள ஹைட் ரஜன் மற்றும் ஆக்சிஜன் எப்பொழுதும் 1:8 என்ற விகிதத்தில் இருக்கும்..
இவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது?
3. Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘matter’ through experiential learning rather than by rote
இது அப்பட்டமான பொய். பருப் பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)
செயல் 9.1
பின்வரும் பொருள்களை தனிமம், கலவை, சேர்மம் என வகைப்படுத்துக.
(1) மை (2) பெயிண்ட் (3) ஆக்ஸிஜன் (4) காற்று (5) நீர்.
செயல்  9.2
ஒரு பீங்கான், கிண்ணத்தில் காப்பர் சல்பேட்டும், மற்றொரு கிண்ணத்தில் சோடியம் குளோரைடு மற்றும் காப்பர் சல்பேட் உப்புகளும் வைக்கப்பட்டுள் ளன. தூய்மையான பொருள் மற்றும் கலவையைக் கண்டறிக.
செயல் 9.3
நம்மைச் சுற்றியுள்ள காற்று தூய்மையானதா? காரணம் தருக.
மேலும் அறிந்து கொள்வோம்
நீங்கள பயன்படுத்தும் பென்சிலில் உள்ள எழுதும் பகுதியான கிராபைட் கார்பனும், களிமண்ணும் கலந்த கலவை ஆகும்.
செயல் 9.4
ஒரு கண்ணாடிக் குவளையில் பனிக்கட்டிகளுடன் கூடிய பழச்சாறு வைக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பருப்பொருள் நிலைமைகள் உள்ளன?
செயல் 9.5
பின்வருவனவற்றைக் கலவை மற்றும் சேர்மம் என வகைப்படுத்துக.
1) உலோகக் கலவைகள் 2) புகை 3) பழச்சாறு 4) பால் 5) காபி 6) சாதாரண உப்பு 7) கார்பன்டை ஆக்ஸைடு 8) பனிக் கூழ் (Ice Cream)
செயல் 9.6
ஆஸ்பிரின் என்பது தலைவலியைக் குணமாக்க உதவும் மருந்தாகும். எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் இதில் 60 சதவிகிதம் கார்பனும், 4.5 சதவிகிதம் ஹைட்ரஜனும், 35.5 சதவிகி தம் ஆக்ஸிஜனும் நிறை சதவிகிதத்தில் அடங்கியிருக்கும்.
ஆஸ்பிரின் ஒரு கலவையா? சேர்மமா?
செயல் 9.7
கீழ் குறிப்பிட்டுள்ளவற்றில் இயற் பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் எவை? என்பதைக் குறிப்பிடுக.
1) இரும்பு துருப்பிடித்தல் 2) பனிக் கட்டி உருகுதல் 3) விதை முளைத்துச் செடியாக வளர்தல் 4) உலோக அலுமினியத்தைத் தகடாக மாற்றுதல் 5) மெழுவர்த்தி எரிதல்
செயல் 9.8
நீருடன் ஒரு துளி மை கலக்கப் படுகிறது. இது ஒருபடித்தான கலவை யாக மாறுமா? அல்லது பலபடித்தான கலவையாக மாறுமா?
செயல் 9.9
நீரில் காப்பர் சல்பேட் உப்பு கரைக் கப்பட்ட கரைசல் ஒரு பீக்கரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இக்கலவை  ஒருபடித்தான கலவையா? பலபடித்தான கலவையா? காரணம் கூறுக.
ஒரே கலவையில் உள்ள வெவ்வேறு நிலைமைகளை நேரிடையாக கண் மூலமாகவோ அல்லது நுண்ணோக்கி உதவியாகவோ காணலாம். பல படித்தான கலவையில் உள்ள நிலை மைகள் ஒரே இயற்பியல் நிலையிலோ அல்லது வெவ்வேறு இயற்பியல் நிலைகளிலோ இருக்கலாம்.
திண்மம் -  திண்மம் _ பலபடித்தான கலவை - சர்க்கரையுடன் உப்பு கலந்த கலவை
திண்மம் - நீர்மம் பலபடித்தான கலவை - பனிக்கட்டியுடன் நீர் சேர்ந்த கலவை
வாயு நிலைமை பலபடித்தான கலவை - புகை கலந்த காற்று
செயல் 9.10
ஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவை என வகைப்படுத்துக.
1) தேநீர்
2) மை
3)பழங்களின் கலவை (Fruit Salad)
4)சர்க்கரைக் கரைசல்
செயல் 9.11
ஒரு பீக்கரில் சமஅளவு சாதாரண உப்பையும், மைதா மாவையும் எடுத்துக் கொள்க.
அத்துடன் நீரைச் சேர்த்து நன்கு கலக்குக. மாவும், உப்பும், நீருடன் ஏற்படும் கரைதிறன்களைக் கவனிக்க.
சிறிது நேரத்தில் மாவு, பீக்கரின் அடிப்பாகத்தில் படிவதைக் கவனிக்க. இவ்விரு பொருள்களையும் தனித் தனியே பிரிப்பதற்குப் பொருத்தமான முறை ஒன்றினைக் குறிப்பிடுக.
செயல் 9.12
ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதா ரண உப்பு மற்றும் கற்பூரம் கலந்த கலவையை எடுத்துக் கொள்க.
பீங்கான் கிண்ணத்தைத் தாங்கியில் நிறுத்துக. பீங்கான் கிண்ணத்தின் மீது ஒரு புனலைத் தலைகீழாகக் கவிழ்ந்து வைக்க. புனலின் தண்டு பாகத்தின் திறப் பினைப் பஞ்சினால் அடைக்க. பீங்கான் கிண்ணத்தை வெப்பப் படுத்துக.
இங்கு ஏற்படும் இயற்பியல் மாற்றத்தைக் கண்டறிக.
செயல் 9.13
மண்ணெண்ணையும், நீரும் கலந்த கலவையை எடுத்துக் கொள்க.
இக்கலவையைப் பிரிபுனலில் ஊற்றுக.
பிரிபுனலின் வாய்ப்பகுதியை அடைப் பானால் மூடிடுக. 10 நிமிடங்கள் கலவையை நன்கு குலுக்கிடுக. 15 நிமிடங்கள் தாங்கியில் பிரிபுனலை நிறுத்திடுக. நீர்மங்களிடையே ஏற்படும் மாற் றத்தைக் கண்டறிக.மேல் அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு நீர்மங்களைக் கவனிக்க. இவ்விரு அடுக்குகள் தோன் றுவதற்கான தத்துவத்தைக் குறிப்பிடுக.
செயல் 9.14
வாலை வடிக்கும் குடுவையில், ஆல்கஹால் மற்றும் நீர் ஆகிய நீர்மங்களை எடுத்துக் கொள்க.
வாய் பகுதியில் ஒரு வெப்ப நிலைமானியைப் பொருத்துக.
பக்கக் குழாயுடன் ஒரு குளிர்விப் பானை இணைக்க.
கலவையை நன்கு வெப்பப்படுத்துக.
ஆல்கஹால் முதலில் ஆவியாகி வெளியேறுகிறது. குளிர்விப்பானல் ஆல்கஹால் ஆவியைக் குளிர்வித்து நீர்மமாக சேகரிக்க.
குடுவையில் நீர் மட்டுமே எஞ்சி யிருப்பதைக் காண்க.
4. Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit Science in Every day Life.
everyday practices such as not to spit or letter in puplic places, respecting others and solving problems have not been considered
இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?
5. Syllabus deals with
concepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson Wonders in the sky in class 3
இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக் குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4 ஆம் வகுப்பில் படித்தவைதானே. 1980_களின் ஆரம் பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.
Instead of introducing
chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in classes 8 and 9
எட்டாம் வகுப்பில் சொல்லித் தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய அய்.நா. தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப் புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில், செயல்படுத்தும், அவற்றின் அதிகா ரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாம் வகுப்பில் சொல்லித் தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்கு கின்றன. தேர்தல் முறை என்ன, போன் றவைதான். மனித உரிமைகள் பற்றிய அய்.நா. தீர்மானங்களும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை.
இந்த பாடங்களைப் படிக்கா மலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு - மத்திய அரசு அய்.நா.சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.
6. There is no meaningful link between the history units as they are not logically arranged, The class 8 history syllabus begins with on the Advent of Europeans and ends with Indian Independence இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச் சியாக 16 ஆம் நூற்றாண்டின் முக லாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, அய்ரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபட வில்லை.
அதுவரை மத்திய வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19 ஆம் நூற் றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டி ருக்கிறது?

துக்ளக் . . . ளக் . . . ளக்!

கேள்வி: பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறதே?

பதில்: பெண்களுக்கு வேண்டாத வர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தி, இந்த முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். நியாய மாகப் பார்த்தால், மூன்று வேளை சாப்பாட்டிற்கு சுமார் ஒன்றரை மணி நேரம், மேக்கப் பெய்து கொள்வதற்கு சுமார் இரண்டு மணி நேரம், வம்பு தும்புகளை அறிந்து கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம், ஏதாவது வீட்டு வேலை இருந்தால், அதைக் கவனிக்க அரை மணி நேரம் போக - 19 மணி நேரம் பெண்களுக்கு தூக்கம் அவ சியம் என்று ஒரு ஆய்வு கூறினால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆண் களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். (துக்ளக் _3-.8.-2011)

இது மாதிரி எந்த வீட்டில் நடக் கிறதோ இல்லையோ துக்ளக் சோ ராமசாமி வீட்டில் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எல்லாம் அனுபவம்தானே!

19 மணி நேரம் அவாள் வீட்டில் பெண்கள் தூங்குவதால் பாத்திரங்கள் கழுவுவது, வீடு கூட்டுவது, துணிகளைத் துவைப்பது, சமைப்பது, இத்தியாதி காரியங்களை திருவாளர் சோ ராமசாமியே அவர் வீட்டில் செய்து அதன் மூலம் பெண்களுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக! போதும் போதாதற்கு அவர்களின் லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதியாருடன் மணிக் கணக்கில் பேசும் பெண்களும் அக்ரகாரத்தில்தானே இருக்கிறார்கள்.

அவையெல்லாம் சோவுக்குத் தெரியாதா என்ன? சும்மா சொல்லக்கூடாது.

இவற்றையெல்லாம் நேரில் அறிந்து வைத்திருப்பதால்தான் அவரால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது

கேள்வி: தேர்தலில் தோல்வி என்பது சகஜம்; போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல என்கிறாரே, பேராசிரியர் அன்பழகன்?

பதில்: இந்த மாதிரியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் பேசினால் அவர் கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருக்கும். ஒரு தேர்தல் தோல்விக்காகச் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைமைக்கு பகுத்தறிவுவாதிகள் தள்ளப்பட்டிருப்பது, அவர்களை பஃபூன்களின் அந்தஸ் திற்கு உயர்த்தி இருக்கிறது.

(இதுவும் துக்ளக்கில்தான் 3.-8.-2011)

சட்டை கிழிவது போல தேர்தலில் தோல்வி என்பதும் சகஜம்தான் என்ற தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் அவர்கள் கூறியதற்கு இப்படி வியாக்கியானம் செய்கிறார் சோ.

கிழிந்ததற்கும் கிழிப்பதற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத கீழ்ப் பாக்கங்கள் ஏடுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றன.
தேர்தலில் தோற்றதால் அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்,- இனி பொதுவாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று பேராசிரியர் சொல்லவில்லையே!

1967 தேர்தலில் தமிழ்நாட்டில் தோற்றபோது, காலம் எல்லாம் பதவியில் ஒட்டிக் கொண்டு சுகம் அனுப வித்த திருவாளர் ஆர்.வெங்கட் ராமய்யர் என்ன சொன்னார்?

கட்சியை வளர்க்கப்போகிறேன் - களப்பணி ஆற்றப் போகிறேன் என்றா சொன்னார்? சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றுதானே சொன்னார். அந்த மாதிரி சொல்லவில்லையே தி.மு.க. பொதுச் செயலாளர்.

வாழ்நாளில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டுப் பணியாற்றியதும் இல்லை; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மில்லை. ஆனாலும் டாக்டர் இராதா கிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலை வராகவும், பிரமோஷனில் குடியரசுத் தலைவராகவும் ஆகவில்லையா?

பேராசிரியர் அன்பழகன் அப்படி அல்லவே! மாணவர் பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு பிரச்சார கராக விளங்கி, தி.மு.க.விலும் தொடக்க முதல் இருந்து உழைத்து போராட்டங்களைச் சந்தித்துச் சிறைச் சாலைத் தண்டனைகளையும் அனுப வித்தவராயிற்றே! 90 அகவையில், 70 ஆண்டுகளுக்கு மேலான பொதுப் பணிக்குச் சொந்தக்காரராயிற்றே! பதவி என்பது கிழிந்துபோன சட்டை என்று அவர் சொல்லுவது அவரின் சிறப்பைக் காட்டக் கூடியது தான்.

உண்மையிலேயே பஃபூனாக இருக்கக் கூடிய ஒரு ஆள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரைப் பார்த்து பஃபூன் என்று எழுதுவது எல்லாம் அவாளின் யோக்கியதை யைத்தான் புலப்படுத்தும்.

Saturday, August 6, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (5)

புளுகுணி சித்தர்களின் புராணம்!


நீதிக் கட்சியைப் பற்றி நிதான மின்றித் தூற்றித் திரியும் கும்பலுக்குத் தீர்க்கமான பதில்கள் நிச்சயம் உண்டு.

இன்று பார்ப்பனர் அல்லாதார் - குறிப்பாகத் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து முன்னேற்றத் திசையில் அழுத்தமான அடிகளை எடுத்து வைக்கின்றனர் என் றால் அதற்கான அடித்தளத்தை உரு வாக்கிய பெரும் சரிதம் அதற்குண்டு.

அன்றைக்கு 1610 இல் மதுரையில் படித்த 10 ஆயிரம் மாணவர்களும் பார்ப்பனர்களே என்று ராபர்டி நொபிலி எழுதிய கடிதம் கூறுகிறது.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450 (89 விழுக்காடு) என்று சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20-11-2010) குறிப் பிட்டாரே!

இந்தச் சாதனைக்கு முஷ்டியை உயர்த்தி உரிமை கொண்டாடும் உரிமை, பெருமை நீதிக்கட்சிக்கு உண்டே!

தனது ஆதிக்கத்தில் மண் விழுந்த தற்குத் மண் வெட்டியைத் தூக்கியது இந்த நீதிக்கட்சியல்லவா என்கிற ஆத்திரத்தில்தான் இன்றைக்குக் கூட துக்ளக் வட்டாரம் வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொண்டு மண்ணை வாரித் தூற்றக் கிளம்பியுள்ளது!

நீதிக் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பல தொகுதி களாக விரிவடையும் என்றாலும் சில முக்கிய சாதனைகளை பட்டியலிட வேண்டியது அவசியமே!

முதல் அமைச்சரவையின் சாதனையை (1920-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளி யிட்டுள்ளது.

* பொதுத் துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

* துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக் காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற் படுத்தப்பட்டன.

* தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பின்னர் தனி அலுவலர் என் பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

* தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

* கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 - நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

* ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு -_ அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல் லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. * தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

* ஆதி திராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

* அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

* மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

* கள்ளர் சமுதாய முன்னேற்றத் திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

* நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

* பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

* தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளி களைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

* ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

* குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப் படுத்த ஆணை வெளியிடுதல்.

* ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

* தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

* மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப் பட்டன.

* சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

* கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட் டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

* உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

* மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

* அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

* சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

* கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த் தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அர சாணை எண். 108 நாள்: 10-_05_-1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25_-3_-1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக் கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11_-2_-1924; (ஆ) 1825 நாள்: 24-_9-_1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27_-01_-1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2_0-5_-1922. (ஆ) 1880 நாள் 15-_9-_1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப் பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27-_2-_1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-_10_-1929. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு நீதிக் கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க நீதிக் கட்சி ஆட்சியைத் தலித் மக்கள் புறக்கணிப்பு என்று (துக்ளக் 13_-7_-2011) தலைப்புக் கொடுத்து எழுதுகிறது என்றால் இவர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் (1923_-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப் பட்ட இரு சட்டங்கள் முத்து முத் தானவை.

ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.

ஆண்டாண்டு காலமாகப் பார்ப் பனர்களின் அடுப்பங்கரையாக கோயில் கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).

கோயில் கொள்ளையைக் கட்டுப் படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.

பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர். விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.

நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்ட வனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம் மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்

- இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான்.

சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் -_ நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கி லத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் - கத்தினார்.

சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலன் அளிக்க வில்லை என்று சமஸ்கிருதத்திலேயே பாடவும் செய்தனர்.

(கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும் பக்கம் 73)

இதனையும் மீறி சட்டம் நிறை வேற்றப்பட்டது.

பார்ப்பனர்களாலேயே ராஜதந்திரி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசர் ( ராமராயநிங்கர்) மிகச் சாதுரிய மாகக் காயை நகர்த்தி பார்ப்பனர் களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.

அம்மசோதாவை நிறைவேற்றுவ தற்காக சிறப்பு உறுப்பினராக யாரை நியமித்தார் தெரியுமா? என்.கோபால் சாமி அய்யங்காரை. அந்தப்பதவிக்கான பெயர் எக்ஸ்பர்ட் மெம்பர் என்பதாகும். அடுத்துப் பாருங்கள்.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் துறையின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா? ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ அய்யரை.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி பார்ப்பனர்கள் நெளிந்தனர். கோபால்சாமியை விஞ்சி விட்டாரே எக்ஸ்பர்ட் பனகல் அரசர்!

இத்தகைய சட்டத்தின் அவசியம் எத்தகையது என்பதற்கு சிதம்பரம் நடராசர் கோயில் சமாச்சாரத்தைத் தெரிந்து கொண்டால் போதுமே.

அந்தக் கோயில் தீட்சதர்களின் உடைமை என்றும் இந்து அறநிலை யத்துறையின் கீழ் வராது என்றும் சாதித்து வந்தனர்.

மாநில அரசு எவ்வளவோ முயன்றும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி விடுவார்கள் தீட்சதர்கள்.

2006 இல் மானமிகு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக வந்தபோதுதான் சிதம்பரம் கோயிலை வகையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். (இப்பொழுது கூட அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில்தான் உள்ளது? விடுவார்களா ருசி கண்ட பூனைகள்)

தீட்சதர்கள் கையிருப்பில் சிதம்பரம் கோயில் இருந்த போது அவர்கள் நீதிமன்றத்தில் காட்டிய கணக்கு என்ன தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு வரவு ரூ 33,199 ; செலவு ரூ.33 ஆயிரம் மிச்சம் ரூ.199 என்று பேட்டா செருப்பு விலை போல சொன்னார்கள்.
அதே கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்த நிலையில் அதன் வருமானம் என்ன தெரியுமா? கோயிலின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட 18 மாதங்களில் நிதி வருவாய் 25 லட்சத்து 12 ஆயிரத்து485ரூபாய். (இதில் டாலர்கள், தங்கம், வெள்ளி காணிக்கைகள் அடங்காது.)

இப்படி எவ்வளவு காலமாகவோ கொள்ளை அடித்துக் கொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் குரல் வளையை நெருக்கிய சட்டத்தை நீதிக் கட்சிதான் கொண்டு வந்தது. பார்ப்பனர்களுக்கு உள்ளபடியே கடவுளிடத்தில் பக்தி இருக்குமானால் கோயில் கொள்ளையர்களிடமிருந்து கோயில் சொத்துக்களை மீட்ட நீதிக்கட்சிக்கு ஒரு நெடும் சரணம் போட வேண்டுமே - போடுவார்களா?

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டதும் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள்தான் அண்டங்காக்கைக் கூச்சல்.

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்! - என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவினார்.

தந்தை பெரியார் சவுக்கடி கொடுத் தது போல பதிலடி கொடுத்தார்.

ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? மற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் படிக் கேட்டார்.

சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சத்தியமூர்த்தி அய்யரை நோக்கிப் போட்டார் கிடுக்கிப்பிடி! ரோஷம் இருந்தால் மனுஷன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகலாம்தான்!

தொன்றுதொட்டு உள்ள இந்த வழக்கத்திற்கு இது காறும் இருந்து வந்த எங்கள் குலப் பெண்கள் செய்தது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவர்க்கு அடியார்களாக இருந்து மோட்சப் பிராப்தி பெறலாமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி, வாயைப் பொத்தி மவுன சாமியார் ஆகிவிட்டார்.

திருவாளர் சத்தியமூர்த்தி, இந்த மசோதாவை எதிர்த்துப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கது. பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

இன்று தேவதாசி தொழிலை நிறுத்தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று ஆத்திரப்பட்டுப் பேசியிருக்கிறார். (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம், கலைஞர் ஆட்சியில் அதற்கான சட்டம் - அதனைத் தொடர்ந்தது.

69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் பயிற்சி _ உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடைமுறைப் படுத்தப்படாமை - இவற்றையும் நினைவில் கொள்க!) சத்தியமூர்த்தி அய்யரின் கணக்கு சரிதானே!

வகுப்புரிமைச் சட்டம்

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த போதுதான் ( 4-12-1926 - 27-10-1930) எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின்) ஆதரவுடன்தான் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சரவையில் ஆரோக்கியசாமி முதலியார், ரங்கநாத முதலியார் ஆகியோர் இரு அமைச் சர்கள்.

சைமன் கமிஷனை வரவேற்பதா, கூடாதா என்ற பிரச்சினையில் சுயராஜ்யக் கட்சிக்கும், முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கும் கருத்து வேற்றுமை வெடிக்க, அமைச்சரவை யிலிருந்த இரு அமைச்சர்களும் பதவி விலகினர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிக்கட்சி டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு தந்த தால் ஆட்சி கவிழாமல் காப்பாற்றப் பட்டது. எஸ். முத்தையா முதலியாரும், எம்.ஆர். சேதுரத்தின அய்யரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆளும் கட்சியின் கொறாடாவானார். இந்த அமைச்சரவை பதவி ஏற்ற நாள் 1928 மார்ச் 16.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற இந்த அமைச்சரவையில் தான் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் சிறப்பான முயற்சியால் முதல் இட ஒதுக்கீடு உத் தரவு (Communal G.O.) நிறைவேற்றப்பட் டது. நிறைவேற்றப்பட்ட நாள் 13_-9_-1928 (அரசு ஆணை எண். பொது 744).

உண்மை இவ்வாறு இருக்க துக்ளக்கில் (13.-7-.2011) கம்யூனல் ஜி.ஓ. என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்த பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி உள்ள திருவாளர் லட்சுமி நாராயண அய்யர் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக காங்கிரசின் ஆதரவு பெற்ற சுப்பராயன் அமைச் சரவைதான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையை நிறைவேற்றியது என்று கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் புளுகின்றார் என்றால், இந்தப் புளுகினிச் சித்தர் களைப் பற்றி என்ன எடை போட?

பொய்யும், புனைசுருட்டும் செய்தாவது நீதிக் கட்சியை - பார்ப்பனர் அல்லாத அமைப்பை, திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற மூர்க்கத் தனம்தானே இதன் பின்னணியில் இருக்கின்றது.

இதற்கும் ம.பொ.சி.யைத் வேறு துணைக்கழைத்துக் கொள்கிறார். ம.பொ.சி எழுதும் சரக்கின் பொய்மை யும் இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

பனகல் அரசர் ஆட்சியின் சாதனைகளைப் பாரீர்!

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருந்த கால கட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். (ராஜாஜி அவர்கள் 1937 இல் ஆட்சிக்கு வந்த போது இந்த முறையை நீக்கினார் என்பதைக் கவனித்துக் கொள்க!)

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார் பனகல் அரசர்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூ. 300, தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாய னாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 - இந்த பேதத்தை நீக்கியது இவ்வாட்சியே.

1922 ஆம் ஆண்டு மார்ச்சு 25 முதல் பழந்தமிழ்க் குடிகளைப் பறையர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக் கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


1923 இல் புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னா ளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கிய பெருமையும் நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசரையே சாரும். அய்ரோப்பிய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையேதான் இந்தச் சட்டம் நிறைவேறியது.

வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் என்று சொல்பவர்களின் பற்களை உடைக்கும் இந்தச் சட்டம். முதன் முதலில் சென்னையில் இந்திய மருத் துவக் கல்லூரியும் இப்பொழுதுதான் ஏற்படுத்தப் பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர தமிழ்ப் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தமிழைக் கட்டாய பாடமாக்க மறுத்தது.

இதனை எதிர்த்து நீதிக் கட்சியைச் சேர்ந்த இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆர். வெங் கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப் படுவதற்கு வழி வகுத்தனர். (தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு நிலை!)

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் 1921 இல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சி பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாநில அரசே ஏற்றுக் கொண்டது. (அரசாணை எண். 1008 (L & M) நாள்:7-6-1922.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதி கரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சமஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக் கொடுக்கப்பட ஆவன செய்தார் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் வடித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜா மடம், உரத்தநாடு விடுதிகளை மற்றவருக்கும் திறந்து விட்ட தகைமையும் அவரையே சாரும்.

இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந் தரபாண்டியன், பேருந்துகளில் தாழ்த் தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த நீதிக் கட்சி முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார்.

நீதிக்கட்சியின் நேர்மையும், நீதிநெறியும், தொண்டுள்ளமும், நிர்வாகத் திறனும் வரலாற்றில் விஞ்சி நிற்கக்கூடியவை.

வெளிநாடுகளிலிருந்து வரும் பார்லிமெண்டரியன்கள் சென்னைக்கு வந்து நீதிக்கட்சி நடத்தும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைக்கண்டு வியந் தும் பாராட்டியும் உள்ளனர்.

இத்தகைய இயக்கத்தின் மீது சேறு வாரி இறைக்க முண்டாசு கட்டி முன் வருகின்றனர் என்றால் அது அவர்கள் நேர்மையற்ற- தன்னல வெறியுடைய ஆரியத் தன்மையைத்தான் அடை யாளம் காட்டும்.

(வளரும்)

விடுதலை ஞாயிறு மலர் (06aug2011)

சஞ்சீவி

ஆரியத்தலைவர், பதவியை விட்டு வெளியேறி விட்டார். இனி ஆரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியே தீரவேண்டும். இந்த லட்சி யத்தை எக்காரணம் கொண் டும் திராவிட இனத்தவர் மறந்துவிடக் கூடாது. இது தான் சர்வரோக சஞ்சீவி!

- இது விடுதலை ஏட்டின் குரல்! (29.4.1954)

- வருணாசிரமக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து 6000 கிராமப் பள்ளி களை மூடி அரைநேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் மாணவர்கள் அவர வர்களின் அப்பன் தொழி லைத்தான் செய்யவேண்டும்; ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை நேரத்தில் அவரவர் களின் குலத் தொழில்களை ஒழுங்காகச் செய்து வருகி றார்கள் என்று மேற் பார்வையிட வேண்டும் என்று 1954 இல் கூட, உடம் பெல்லாம் மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப்பட்ட சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் சட்டம் போட்டார் என் றால் - இந்தப் பார்ப்பனர் களைப்பற்றி எப்படி எடை போட?

தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் குத் தொடுக்கப்பட்டபோது சென்னை உயர்நீதிமன்றத் தில் தந்தை பெரியார் கொடுத்த அறிக்கையில் ஒன்றை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங் கள் புலி வேட்டை ஆடுகி றோம். புலிமேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான்.

எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன் றைய தினம் உள்ள பார்ப்பனர் களில் ஆச்சாரிய புருஷர் களாய் இருக்கிறவர்களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்று போல் பாவித்து, பொது ஜன நன்மைக்காகப் பாடுபடு கிற பார்ப்பனர்கள் என்று எண்ணியிருக்கின்ற தன்மை யில், உயர்ந்த சீர்திருத்தக் காரர் - நாட்டின் விடுதலைக் காக பெரிய தியாகங்களைச் செய்தவர் என்ற தன்மையில் இதுவரை எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர் என்ற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு சி. ராஜ கோபாலச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதி காச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன்; ஜாதிப் பிரிவில் அதாவது, வர்ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும், கவலை யும் உடையவன்; அவை களைப் பரப்பவும், நிலை நிறுத்தவும் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடு படுவேன் என்று சொல்லு கிறார்; எழுதுகிறார்; அதற்கு வேண்டிய காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லாப் பார்ப் பனர்களும் இப்படி இருப்பார் களா என்று நினைப்பது? என்று சென்னை உயர்நீதி மன்றத்திலேயே பதிவு செய் துள்ளார் தந்தை பெரியார்.

ஆம், இன்றுவரை இப் படித்தான் இருக்கிறார்கள். செம்மொழித் தமிழ் வரை எதிர்க்கின்றார்கள்.

வெறுக்கத் தெரிந்த வனே வெற்றி பெறுவான் - அந்த வெறியோடு நாகை மாநாட்டுக்கு வாருங்கள் இளைஞர்களாகிய புலிப் போத்துகளே!

- மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/15325.html

தேர்வா - தேர் இழுப்பா?

ஜூன் மாதத்தில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு காலாண்டுத் தேர்வுக்கான முனைப்புகள் நடைபெறவேண்டிய காலகட்டம் இது.

அ.தி.மு.க. அரசு கட்டிக் கொண்ட புண்ணியத் தால் பள்ளிகள் திறந்து 60நாள்கள் ஓடோடியும் புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், கோலி விளையாடிக் கொண்டு திரிகிறார்கள்.

வேலைவெட்டி இல்லாதவர்கள் என்ற பட்டியலில் பள்ளிக்கூட மாணவர்களும், ஆசிரியர்களும் இடம்பெற்றது பரிதாபமே!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அம்பாள் கோயிலில் தேரோட்டமாம்; இழுத்துச் செல்லப் பக்தர்களுக்குப் பஞ்சமாகிவிட்டதாம். என்ன செய்தார்கள் தெரியுமா? வெட்டி ஜாபிதா இருக்கவே இருக்கிறது என்று நினைத்துப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து வந்து தேரை இழுக்கச் செய்திருக்கின்றனர்.

ஆன்மீக தி.மு.க. (அ.தி.மு.க.) அல்லவா ஆட்சியில் இருக்கிறது!

மாணவர்களுக்கு இதைவிட வேறு என்ன உருப்படியான வேலை இருக்க முடியும்?

திருவரங்குளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர் இழுக்கின்றனர் என்றால், திருநெல்வேலியில் தேர் இழுத்து விழாவைத் தொடங்கி வைக்க வர மறுத்த மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆமாம், ஆட்சி எப்படிப்பட்டது என்பதுகூட புரியாமல் மாவட்ட ஆட்சியர் எனக்கு உருப்படியான வேலை இருக்கிறது. தேர் இழுப்பது கலெக்டரின் வேலையல்ல என்று சட்டப்படி தெரிவிக்கலாமா?

மாவட்டக் காவல்துறை அதிகாரிகளாக இருக்கக் கூடியவர்களே தீக்குண்டம் இறங்குகிறார்கள் என்பதையெல்லாம் ஏடுகளில் படித்திருக்க வில்லையா நெல்லை மாவட்ட ஆட்சியர்?

அண்ணாவின் பெயரை முன்னொட்டாக வைத்துக் கொண்டிருக்கும் கட்சியைச் சேர்ந்தவர் களில் ஒருவர்கூட அண்ணா கடைப்பிடித்த உளமார என்ற சொல்லைக்கூடப் பயன் படுத்தாமல் கடவுளின் பெயரால் என்று ஒட்டுமொத்தமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர் என்றால், இதன் பொருள் என்ன?

அரசன் எவ்வழி - குடிமக்களும் அவ்வழி என்பதைப் புரிந்துகொண்டார்களோ... பிழைத் தார்களோ!

இந்து மதத்தைக் காக்கப் போரட்டமாம்!

சென்னையில் நாளை இந்து மதத்தைக் காப்பாற்று வதற்காக இந்து தர்மசக்தி என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட இருப்பதாக ஏடுகளில் விளம்பரங்கள் அரங்கேறியுள்ளன.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. நித்யானந்தா என்பவர் 18 மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்தப்பட்டார். வட மாநிலங்களில் தலைமறைவாக இருந்த இந்தக் கடவுள் சித்தி(?) பெற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டார். இப்பொழுது ஜெயிலிலிருந்து, பெயிலில் வந்துள்ள இவர், தமிழ்நாட்டின் புதிய அரசியல் சூழலில் தமிழ்நாட்டுக்கு வந்து கொட்டி முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்.

இவரின் தெய்வீக சக்தி எந்தத் தரத்தில் இருக் கிறது என்பதையும், தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டு அவமானப்பட்டதுதான் மிச்சம்.

தன் பக்தர்களை அந்தரத்தில் நிற்க வைக்கிறேன் - குண்டலினி சக்தி மூலம் என்று மார்தட்டினார். அதனைச் சாதித்துக் காட்ட இயலாத நிலையில், ஆசாமி கேலிக்கு ஆளானதுதான் மிச்சம்!

இவருடைய செயல்பாடுகள் இந்து மதத்துக்கு இழிவை ஏற்படுத்திவிட்டதாக இந்து அமைப்புகளே குரல் கொடுக்கத் தொடங்கின.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் திரு. இல. கணேசன்கூட, நித்தியானந்தாவின் நடவடிக்கையை குறை கூறினார். இதுபோன்ற பேர்வழிகளால் இந்து மதத்துக்குத்தான் கெட்ட பெயர் என்று மூக்கைச் சிந்தினார்.

(அதே நேரத்தில் கொலைக் குற்றத்தில் சிக்கிய காஞ்சி சங்கராச்சாரியார்களால் இந்து மதத்துக்குக் கெட்ட பெயர் என்று சொல்ல இவர்கள் முன்வர வில்லை என்பதையும் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்க! - இதிலும்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற பேதம் அவர்களின் பார்வையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

காஞ்சி சாமியாராக இருந்தாலும் சரி, வேறு சாமியார்களாக இருந்தாலும் சரி, காவி வேட்டிகள் என்றால், சாமியார்கள் என்று சொன்னாலே பக்தர்கள் கூட முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை அரு வருப்பாகப் போய்விட்டது.

பகவான் அவதாரம் என்று நம்பிக் கொண்டிருந்த புட்டபர்த்தி சாயிபாபாவின் கதை - அவர் மரணத்துக்குப் பிறகு ஊளை நாற்றம் எடுத்துவிட்டது. அவர் தங்கி இருந்த அறைகளைத் திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாகக் கறுப்புப் பணம் மட்டுமல்ல; தங்கக் கட்டிகள் மட்டுமல்ல - விலை உயர்ந்த பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பை களும் (டுயனலள க்ஷயப) இருந்தனவாம்! இதற்கான அர்த்தத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

முதலில் ஒரு கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

பகவான் அவதாரம் என்றும், கடவுளிடம் நேரிடை யாகப் பேசக்கூடிய சித்தி பெற்றவர்கள் என்றும் சொல்லப்படக் கூடியவர்களுக்கு எதற்குப் பணம்? எதற்குத் தங்கக் கட்டிகள் - வெள்ளிக்கட்டிகள்?

பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இவை களைத் துறக்கவேண்டியவர்கள் - இவற்றின்மீது அல்லவா ஆலிங்கனம் செய்து கிடக்கிறார்கள்.

கறுப்புச் சட்டைக்காரர்கள் சொல்கிறார்கள் என்று இதில் பார்க்கவேண்டாம்; திறந்த மனதோடு ஆசாபாசமின்றி நடப்புகளின்மீது கருத்தூன்றிக் கொஞ்சம் கவனம் செலுத்திப் பார்க்கும் எவருக்கும் - இந்த அமைப்பு முறைகள் அத்தனையுமே நேர்மை யற்றவை - ஏமாற்றுத்தனம் நிறைந்தவை - மக்களைச் சுரண்டக் கூடிய ஏற்பாடுகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்குமேல் இந்து மதத்தைக் காக்க இந்துக்களே வாருங்கள், வாருங்கள் என்று வருந்திக் கூப்பிடுவது - போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது மேற்கண்ட அருவருப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?

இவர்கள் ஏன் மக்களுக்கு அழைப்புக் கொடுக் கிறார்கள்? இவர்கள் நம்பும் இந்து மதக் கடவுள்களிடம் மண்டியிட வேண்டியதுதானே!

மக்களைக் கூப்பிடுவதிலிருந்து கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை பக்தர்களே அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்றுதானே பொருள்?

பக்தியின் நிலை, மதத்தின் தன்மை எந்த நிலைக்குப் பலகீனப்பட்டுப் போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்!

weather counter Site Meter