Pages

Search This Blog

Monday, January 31, 2011

சபரிமலை மகரஜோதி மர்மம்

(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது)

சபரிமலையில் தெரியும் மகரஜோதி யும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது?

மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்பட்டு வருவதால் இதில் எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என பணம் கொழிக்கும் சபரிமலையைத் தற்காத்துக்கொள்ளும் பதிலையே தந்தது.

கேரள முதலமைச்சர் அச்சுதானந் தனும் மகர ஜோதி என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மகர ஜோதி வடிவில் பக்தர்கள் கடவுளைக் காண்கிறார்கள். எனவே இதை மதத் தலைவர்களை வைத்தோ, விஞ்ஞானி களை வைத்தோ விசாரனை செய்ய அவசியமில்லை. என பத்திரிகை களிடையே பேட்டியளித்தார்.

ஆனால் கேரள கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரனோ... மகர ஜோதியை பொன்னம்பம்பல மேட்டில் அங்குள்ள ஆதிவாசிகள்தான் ஏற்றுகிறார்கள். அது மத நம்பிக்கைக்குரிய பிரச்சினை என்பதால் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

இதைக் கேட்டு சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரோ, மகர விளக்கு வேறு; மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது வானில் அந்நாளில் உதிக்கின்ற நட்சத்திரம். மகர விளக்கு என்பதுதான் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது... என கொடுத்த புது விளக்கம் மூலமாய் மகர ஜோதியை அய்யப்ப பக்தர்கள் தம் நம்பிக்கையி லிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்ற தன் அக்கறையை ரகசியமாக வெளிப்படுத்தினார்.

இப்படியான நிகழ்வுகளுக்குப் பிறகு... ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மலையில் தோன்றும் ஒளியைத்தானே மகர ஜோதி என நாம் தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் பார்த்தோம் என நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களும் பொதுமக்களும் குழம்பிப்போனார்கள்.

உண்மையில் சபரிமலை மகர ஜோதியின் ரகசியம் என்ன? மகர விளக்கு என்பது என்ன? என்ற கேள்வி களோடும், மகர ஜோதியின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தவிப்போடும் இதுவரை மகர ஜோதி காண வந்து பலியாகிப் போன பக்தர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என உயிர் களின் மீதான கரிசனத்தோடும், சபரி மலை பொன்னம்பல மேட்டிற்குள் செல்ல நக்கீரன் உறுதியெடுத்தது, களமிறங்கி யது.

தொடர்ந்து பல வருடங்களாய் மகர ஜோதி பொய்யான ஜோதி என போராடிக்கொண்டிருக்கும் சுகுமாரனும் நம்மோடு வருவதாய்ச் சொல்ல... லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் சாமி யப்பா அய்யப்பா... சரணமப்பா அய்யப்பா... என சரணம் சொல்லியபடியே கேரளாவில் எந்த பத்தினம் திட்டா வழியாக சபரிமலையின் பம்பைக்குச் செல்கிறார்களோ... அதே வழியிலேயே நாம் பயணித்தோம்.

இந்தப் பயணம் நக்கீரனின் அசாத்தி யமான பயணம். அய்யப்பன் மீதான பக்தியில், எங்கிருந்தோ விரதம் இருந்து, குழந்தை குட்டிகளோடு வரும் மனித உயிர்கள் ஒரு புழுவாக நெரிசலில் மிதிப்பட்டு மடிவதைக் காணச் சகியா மலேதான், இந்தப் பயணத்தை நக்கீரன் தேர்ந்தெடுத்தது. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது பயணம் கடும் பனிக்கிடையே ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காரில் பயணிக்க முடியும் என்பதால், கேரள மலையாள நண்பர்களையும் கூட்டிக்கொண்டு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு சென்றோம்.

சபரிமலை பம்பைக்குப் போகும் வழியில் பிலாப்புள்ளி என்ற இடத்தி லிருந்து வலது புறமாய் பிரியும் பாதை தான் மகர ஜோதி தெரியும் பொன்னம்பல மேட்டிற்கு செல்லும் வழி. அதன் ஊடாக அந்த அடர்காட்டுக்குள் பயணத்தைத் தொடர்கிறோம்.

அந்தக் குறுகலான பாதையில் கார் லைட் வெளிச்சத்தில் தெரிகின்றன - பாதையெங்கும் கொட்டிக் கிடக்கும் யானைகளின் சாணிகள். இடையிடையே குரங்குகளும், சில வகையான பாம்பு களும் நாம் கடக்கும் பாதையை மறித்து கடக்கின்றன.

அந்தக் குறுக்குப் பாதை யில் நின்று மறிக்கிறது ஒரு காட்டெருமை பிரேக்கை அழுத்திக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கும் நம் கார் டிரைவரின் சாமர்த்திய சப்தத்தில் பாதையை விட்டுவிட்டு மரங்களுக்குள் ஓடிப்போனது காட்டெருமை.

வெகு தூரத்தில் கேட்கும் யானைகளின் பிளிறல்கள் அடிக்கடி நம் காரின் பின்னாலும் கேட்கிறது. திடீரென ஒரு வளைவில் நம் கார் நிறுத்தப்படு கிறது. அந்த இடம் ஃபாரஸ்ட் செக்போஸ்ட் எவிடே நிங்களு போறது? என கேட்கும் செக்போஸ்ட் ஃபாரஸ்ட் காரனிடம் குமுளியானு என டக்கென சொல்கிறார் நம் நண்பர்.

காரினுள்ளான அந்த ஃபாரஸ்ட் காரரின் தேடலுக்குப் பிறகு அவரிட மிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு மறுபடியும் பயணம் தொடர்ந் தது. போகப்போக அந்த அடர்காடு ஒரு பெரும் மலையாகிவிட்டது. மலையேற முடியாமல் திணறிக்கொண்டு மலை யேறும் நம் கார், ஒரு மாட்டு வண்டியின் வேகத்திற்குக் குறைந்து போனபோது மலையில் வெளிச்சம் பரவத் தொடங்கி யிருந்தது.

மலைக்குள்ளான அந்தப் பயணத்தில் எந்த விலங்கு நின்று நம்மை மறிக்குமோ என நமக்குள் ஒரு பயம் படரும் போதேல்லாம் தூரத்தில் தெரியும் பாறைகள் எல்லாம் யானைகளாகத் தெரிந்தன.

காக்கி டேம், யானைத் தோடு டவர், பச்சைக்காணம், பாம்படம் செக்போஸ்ட் என 120 கி.மீ. கடந்து போய்க்கொண்டி ருக்க... கொச்சு பம்பா என்ற இடத்தோடு நம் வண்டி நின்றது. அந்தப் பொன்னம் பல மேட்டிற்குப் போக குறுக்கு வழி இங்கேதான் இருக்கிறது என்ற சுகுமார னின் தகவலோடு காரை விட்டு இறங் கினோம்.

பொன்னம்பல மேட்டின் கீழ் நிற்கும் நாம்... ஆகாசம் தொடும் பொன்னம்பல மேட்டு மலையை பிரமிப்பாய் பார்த்தபடி, அந்த மலைக்குக் கீழ் வசிக்கும் மனிதர்களிடம் மகர ஜோதியைப் பற்றி கேட்க ஆரம்பித்தோம். கோணிப் பையில் விறகுகளை திணித்துக் கொண்டிருந்த அந்த அம்மா, ஏதோ ஒரு ஜந்துவைப் போல நம்மைப் பார்த்துவிட்டு அந்த குடிலினுள் நுழைந்து விட்டார்.

தன் நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த சிஐ என்ற இளைஞனிடம், இந்த மகர ஜோதியைப் பற்றி இங்குள்ள நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் என்க... இதே போல தானு இவுடே ஒரு லோக்கல் டி.வி.காரு வந்து மூணு ஆளுக்காருகிட்ட மகர ஜோதியின்டே மர்மம் குறிச்சு கேட்டுட்டுப் போயி. அது டி.வில வந்தப்போ, ஆ மூணு ஆளுக்காரையும் அடிச்சு போலீஸ் கேஸாயிட்டு ஜெயில்ல அடைச்சு. அது கொண்டு இப்போ நிங்களிடத்து நான் எந்தெங்கிலும் பரைஞ்சா போலீஸ் என்னை கொன்னு களையும் என்று ஒதுங்கிக் கொண்டான்.

இலங்கையிலிருந்து அகதியாய் வந்து பொன்னம்பல மேட்டின் கீழ் குடியிருக்கும் தமிழரான முதியவர் சிவலிங்கத்திடம் கேட்டபோது... 30 வருஷமா இங்கேதான் குடியிருக்கேன்.

மகர ஜோதியோட உண்மையச் சொல்லியே ஆகோணும். ஏன்னா... மகர ஜோதியை நம்பி நெரிசல்ல சிக்கி நிறைய பேரு செத்துப்போறத பாத்தா கஷ்டமாயிருக்கு என்கிறவர்.. ஜனவரி 14ஆம் தேதி காலையிலே பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங் களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக் குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டி களைப் போட்டு நாலஞ்சு பேரு சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமி னியப் பாத்திரத்ததத் தூக்கிப் பிடிப் பாங்க, அதுதான் மகர ஜோதி.

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஒளியா இப்படித்தான் தோன்றி சபரிமலையிலும், புல்மேட்டிலும் மகர ஜோதி காண காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்சியளிக்கிற அநியாயம் நடக்கிறது. இதெல்லாம் பணத்துக்காக செய்ய றாங்க நீங்கதான் இதை அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தணும் என்ற ஒரு பெரும் உண்மையைப் போட்டு உடைத்தபோது நாம் பெரு அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவரிடம் பேசிவிட்டு தலை தெரியாத பாம்பொன்று நெட்டுக்குத் தலாய் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல கிடக்கும் பொன்னம்பல மேட் டின் நுனி வாலைப்பிடித்துக் கொண்டு ஏறத் தொடங்க முயற்சித்தபோது நம்மை மறித்த மலையாள ஆள் ஒருவர்... இதுக்குள்ள போகாம் பெற் றில்லா... மீறி போனா ஃபாரஸ்ட் காரங்க சுட்டுக் கொல்லும் என கண்காணிக்க மரத்திற்குப் பின்னால் நின்று கொண்டார். நாமும் பொன் னம்பல மேட்டிற்குள் நுழையாதது போல் பாவ்லா காட்டிவிட்டு திரும்பவும் பாம்பின் நுனி வாலைப் பிடித்து வனத்துறையால் போடப்பட்டிருக்கும் நோ என்ட்ரி போர்டைத் தாண்டி னோம். நாம் நடக்கும் அந்தக் குறுக லான பாதையில் நம் மீது தேரைகள் எகிறி எகிறிக் குதிக்கின்றன.

தின்று செரிக்க முடியாமல், நெளிய முடியாமல் ஊர்ந்து போனது பெரிய பாம்பொன்று. மிதிபடும் இலைகளின் சத்தத்தோடும், யாரும் பேசாமல் மிக ரகசியமாகச் சென்று கொண்டிருந் தோம். கொஞ்ச தூரம் நடந்தபோது, அந்த மலையாள ஆள், நம்மை மிரட்டிய.... சுட்டுக் கொல்லும் என்ற வார்த்தை எங்களுக்குள் செரிக்க முடியாமல், அந்தப் பாம்பைப் போலவே ஊர்ந்து கொண்டிருந்தது என்பது தான் உண்மை. இந்தப் பயத்தோடு நடக்கிற நமக்கு இன்னும் பயத்தைக் கூட்டவோ என்னவோ ஒரு மேட்டில் நின்று காடே அதிரப் பிளிறியது ஒரு யானை.

அவ்வளவுதான்.. ஏற்கெனவே நடப் பதையே ஓடுவது போல செய்து கொண்டிருந்த நாம் இப்போது ஓட்ட மெடுத்தோம். பாவம் நம்முடன் வந்த வர்களில் இரண்டு பேர் வயதான வர்கள். அவர்களும் நமக்குச் சரி சமமாகவே ஓடி வந்தார்கள். மலைமீது நடப்பது தெரியும். மலையில் ஓடுவது என்பது புதிதுதான். கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் நடந்து பொன்னம் பல மேட்டு பாம்பின் முக்கால்வாசி உடலைத் தொட்டாகிவிட்ட சமயம் ஒரு இடத்தில் பதுங்கினோம்.

(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/2488.html

1 comment:

Anonymous said...

பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே

தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.

குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454


weather counter Site Meter