சபரி மலையில் ஆண்டுதோ றும் காணப்படும் `மகர ஜோதி'யை மனிதர்கள் யாராவது தீபம்போல ஏற்றுகின்றனரா? என் பது குறித்து கோவிலை நிருவகித்து வரும் திரு வாங்கூர் தேவசம் போர் டிடம் கேரள உயர்நீதி மன்றம் விளக்கம் கேட் டது. சபரிமலையில் ஆண்டு தோறும் மகரஜோதி தரிசனம் காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முடித்து விட்டு திரும்பும்போது கடந்த 14ஆம் தேதி நள்ளிரவில் புல்மேடு என்ற இடத்தில் கடுமை யான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 102 பக்தர்கள் இறந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத் தில் நடைபெற்று வரு கிறது. பாதுகாப்பு ஏற் பாடுகள், முன்னெச் சரிக்கை நடவடிக்கை கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில காவல் துறை, வனத்துறை, சபரிமலை கோவிலை நிருவாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு ஆகிய வற்றுக்கு கேரள உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. அதன்படி, அந்த மூன்று துறையின ரும் விளக்கம் அளித் தனர்.
அதன் தொடர்ச்சி யாக, நேற்றும் வழக்கு விசாரணை தொடர்ந் தது. நீதிபதிகள் ராதா கிருஷ்ணன், கோபி நாத் ஆகியோர் முன்னிலை யில் விசாரணை நடந் தது. திருவாங்கூர் தேவ சம் போர்டு சார்பாக மூத்த வழக்கறிஞர் பர னேஸ்வர்நாயர் ஆஜரா னார்.
மகரஜோதிபற்றி அய்யப்பாடு
அப்போது, வழக்கறி ஞர் பரனேஸ்வரிடம் உத்தரவாக அல்லாமல் வாய் வார்த்தையாக, மகரஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின் றனரா?'' என நீதிபதிகள் கேட்டனர். மேலும், என்ன நடக்கிறது என் பதை மக்கள் கண்டிப் பாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு விளக் கம் அளிக்க வேண்டும்'' என்றும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த தேவசம் போர்டு வழக் கறிஞர் பரனேஸ்வர், வானத்தில் தோன்றும் புனிதமான தெய்வீக நட்சத்திரங்களில் ஒன் றாக `மகரஜோதி' கருதப் படுகிறது. அது புனிதமா னது என்பது போன்ற எந்த விதமான விளம் பரத்தையும் தேவசம் போர்டு செய்வது கிடை யாது'' என்றார்.
அதே நேரத்தில், மகர ஜோதி குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் திருவாங் கூர் தேவசம் போர்டு புதிய முடிவை எடுத்துள் ளது.
ஆலோசனை
இதுபற்றி தேவசம் போர்டு செய்தித் தொடர் பாளர் கூறுகையில்,
``உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள் வியைத் தொடர்ந்து உயர்மட்ட பூசாரிகள், மத வல்லுநர்கள், கோவி லின் பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங் களுக்குப் பொறுப்புடை யவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது'' என்றார்.
முதல் அமைச்சர் நழுவல்
இதற்கிடையே, மகர ஜோதி குறித்து கேரள உயர்நீதிமன்றம் எழுப்பி யுள்ள கேள்வி குறித்து விளக்கம் அளித்த முத லமைச்சர் அச்சுதானந் தன், மகரஜோதியின் உண்மைத் தன்மை குறித்து கேரள அரசு விசாரணை நடத்தாது'' என்றார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மகர ஜோதியின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்வ தற்காக ஜோதிடர்களி டமோ அல்லது வானி யல் ஆராய்ச்சி அறிஞர் களிடமோ அரசு ஆலோ சனை நடத்தாது. சபரிமலையில் பூஜைப் பணிகளை மேற்கொள்ளும் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டராரு மகேஸ்வரரு கூறுகையில்,
``மகர விளக்கு மற் றும் மகர ஜோதி இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஜோதி என்பது புனித நட்சத்திரம். மகர விளக்கு என்பது மனிதர் கள் ஏற்றி வைப்பது. இந்த விஷயத்தில் சர்ச்சை கிளம்பி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேவையற்றது'' என்றார்.
சபரிமலை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு கேரள அரசும், திருவாங் கூர் தேவசம் போர்டும் சேர்ந்து தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளன. இது போல, பிரதமர் நிவா ரண நிதியில் இருந்து மத்திய அரசு சார்பாக வும் தலா ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படு கிறது. விபத்தில் இறந்த வர்களில் பெரும்பாலா னோர், தமிழ்நாடு, ஆந் திரா, கருநாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்கள்.
இழப்பீட்டுத் தொகை
எனவே, இறந்தவர் களின் குடும்பங்களை சரியாக கண்டறிந்து மொத்த இழப்பீடு தொகையான தலா ரூ.6 லட்சத்தை விரைவாக வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக் கப்பட்டுள்ளது. திருவ னந்தபுரத்தில் நேற்று பேட்டியளித்த முதல மைச்சர் அச்சுதானந்தன் இந்தத் தகவலை தெரி வித்தார்.
மார்க்ஸிஸ்ட் என்று கட்சிக்குப் பெயர் வைத் துக் கொண்டு, மதவா தத்துக்கு முட்டுக் கொடுக்கிறார் முதல் அமைச்சர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
http://viduthalai.in/new/archive/1750.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment