Pages

Search This Blog

Tuesday, January 25, 2011

புஸ்வாணமாகிப்போன 2G பாணம்! கிட்டு மாமா - பட்டு மாமி புலம்பல்!

பட்டு மாமி: ஏன்னா! சீக்கிரம் இங்கே வாங்களேன்! இந்த டி.வியில என்ன செய்தி போடறா பாருங்க!

கிட்டு மாமா: ஏன்டி இப்படி பதர்றே! என்ன செய்தி டி.வி.யில?

பட்டு மாமி: பாருங்கோன்னா! இந்த CAG காராளை. நம்மவா எல்லாம் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச் சினையை வச்சுத்தானே, இந்த மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம்னு திட்டம் போட்டு, நம்மவா பத்திரிகையெல்லாம், இந்த பொய்ச் செய்தியை திரும்பத் திரும்ப போட வச்சு, இவ்ளோ கஷ்டப் பட்டோம்.

கிட்டு மாமா: அதுக்கு என்னடி இப்ப!

பட்டு மாமி: இந்த PAC முன்னாடி விசாரணையில, இந்த CAG சொல்றப்ப, ஸ்பெக்ட்ரம் நட்டம் 56,666 கோடி யிலிருந்து 1,76,000 கோடின்னு சும்மா ஒரு ஊகத்துல விளையாட்டுத்தனமா சொன்னோம்னு சொல்லிட்டாளாம். இந்த ஸ்பெக்ட்ரம் கேசு இவ்வளவு வீக்காயிடுச்சேன்னா?

கிட்டு மாமா: பட்டு! இன்னைக்கு இல்லைடி! என்னைக்கு இந்த தி.க. வீரமணி இந்தக் கேசை கையில எடுத் தாளோ, அன்னைக்கே இந்தக் கேசு வீக்காயிடுச்சுடி!

பட்டு மாமி: இந்த தி.க.வும், மு.கவும் இருக்கிற வரை நம்மவா பருப்பு ஒன் னும் வேகாது போல இருக்கேன்னா?

கிட்டு மாமா: என்னடி பண்றது! நம்பவாளும் கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்!

பட்டு மாமி: என்னாண்ணா சொல்றேள்!

கிட்டு மாமா: பின்ன என்னடி! இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எடுத்துக் கோயேன், முதல்ல 30,000 கோடின்னா; பின்னாடி 60,000 கோடின்னா; சிஙிமி வெறும் 20,000 கோடின்னா; இப்ப வந்து 1,76,000 கோடின்றா; அருண் ஷோரி உடனே பதறிப்போய் ஓடிவந்து இந்து பேட்டியில் 30,000 கோடிதான் இருக்கும் 1,76,000 கோடியைப் பிடிச் சுட்டு தொங்காதேள்ன்னார். நம்மவா கேட்டாளா! திரும்பத் திரும்ப 1,76,000 கோடி கோடின்னு கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொல்லின்டே இருக்காளே!

பட்டு மாமி: அருண்ஷோரி கரெக் டாத்தான் சொல்லிருக்கார்! பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல-னுமோன்னா?

கிட்டு மாமா: பொய்யைச் சொன்னா மட்டும் போதாதுடி பட்டு! உண் மையை மறைக்கவும் தெரிஞ்சிருக்கணும்!

பட்டு மாமி: நன்னா சொன்னேள்! போங்கோ! அதனாலதான் நம்மவா பத்திரிகையெல்லாம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் வந்த லாபமான ரூ.77,938 கோடியைப் பற்றி மூச்சுக் கூட விடலே!

கிட்டு மாமா: இவா மூச்சுவிட்டிருந்தா, அவ் வளவுதான் பிரச்சினை காத்துபோன பலூனா போயிருக்குமேடி!

பட்டு மாமி: எனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா, மனசே ஆறலை போங்கோ!

கிட்டு மாமா: என்னடி அது!

பட்டு மாமி: இதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! அதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! சி.பி.அய். விசாரணை முடிச்சு அங்க வைச்சே அரெஸ்ட் பண்ணப் போறான்னு நம்மவா டி.வி.யெல்லாம், CBI வாசல்லே ராப்பகலா காமிராவை ரெடியா கையிலே பிடிச்சுண்டே, கண்ணுல ஒரு பொட்டுத் தூக்கம்கூட இல்லாம பழியாக் கிடந்தாளே! அவங்க மனச் சாந்திக்காவது அரெஸ்ட் பண்ணியிருக் கலாமேன்னா!

கிட்டு மாமா: ஏண்டி! நீயும் நம் ஜெயலலிதா மாதிரி அரெஸ்ட்பண்ணு! அரெஸ்ட் பண்ணுன்றே! CBI என்ன உங்க தோப்பனார் வீடா! நீ நினைச்சா மாதிரியெல்லாம் நடந்துக்கறதுக்கு!

பட்டு மாமி: நம்ம ஜெயலலிதாவை நினைச்சா நேக்கு ரொம்ப அழுகை அழுகையாய் வர்றதுண்ணா!


கிட்டு மாமா: ஏண்டி!


பட்டு மாமி: கூட்டணிக்காக இவாளும் மாய்ஞ்சு மாய்ஞ்சு கூப்பிட்டுப் பார்க் கறா? காங்கிரசுகாரா இவளை கண்டுக் கவே மாட்டேங்கறாள்! நம்மாத்து மனுஷி இவ்ளோ கஷ்டப்படறாளேன்னு நேக்கு ரொம்ப வருத்தமா இருக்குன்னா?


கிட்டு மாமா: காங்கிரஸ்காரா ஜெயலலிதா கிட்டே எப்படிடி வருவா! அந்தக் காலத்திலே சோனியாவை எவ்வளவு மோசமான்னா திட்டிருக்கா! புருஷாளுக்கே துரோகம் பண்ணவள்னு ஒரு பழியைப் போட்டாளே! இவா தமிழ்லே சொன்னதை யாராவது ஒரு காங்கிரசுகாரா சொல்லாமலா விட் டிருப்பா? பட்டு மாமி: அதான் டைம்ஸ் நவ் பேட்டியில பழசையெல்லாம் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு ஜெயலலிதா சொல்லிட்டாளே! நடந்ததுக்கு வருத் தம் தெரிவிச்ச மாதிரி தானேன்னா!

கிட்டு மாமா: அப்படியே வச்சுக்கிட் டாலும் அந்தத் தப்பை இவா இன்னும் பண்ணிக்கிட்டேதானே இருக்கா?

பட்டு மாமி: என்னண்ணா சொல் றேள்!

கிட்டு மாமா: பின்னே என்னடி! ஒரு பக்கம் கூட்டணிக்கு அழைப்பு விடறா! இன்னொரு பக்கம் சுப்பிரமணிசாமிய விட்டு ஜெயா டிவில சோனியாவைப் பத்தி மோசமா பேட்டி குடுக்க வைக்கறா! ராஜிவ்காந்தி, இந்திரா காந்தி இவாளின் கொலைக்கே, சோனியா காந்திதான் காரணம்னு பேட்டி கொடுத்துண்டிருக்கா. ஸ்பெக்ட்ரம் பணம் சோனியா காந்தியின் சிஸ்ட்டர்ஸ்கெல்லாம் போய் சேந்திருக்குன்னு சொல்றா சுப்பிரமணிய சாமி! இத ஏன் ஜெயா டி.வி.யில போடணும்?

பட்டு மாமி: இதுக்காக நீங்க ஏண்ணா ரொம்ப அலுத்துக்கறேள்! நம்ப தமிழ்நாட்டு காங்கிரசு காரா ளுக்குத்தான் இதைப் பெரிசா எடுத் துண்டு போயி சோனியாவிடம் சொல் லவா போறாள்?


கிட்டு மாமா: அப்படி இல்லடி பட்டு! ஒருத்தருக்கு இல்லைன்னாலும் இன்னொருத்தருக்கு கொஞ்சமானும் உறைக்குண்டி! ஜெயலலிதா போடற இரட்டை வேடத்தை அவா புட்டு, புட்டு வச்சிருவாளே! இதென்ன! ஜெய் சங்கர், சோவுடன் இரட்டை வேடத்தில் நடித்த வந்தாளே மகராசி சினிமா வா இது! அரசியல்டி! அரசியல்!

பட்டு மாமி: போங் கோண்ணா! நீங்க ஒரு சுத்த விவஸ்தை கெட்ட பிராம்மணன்! செத்துப் போன ஜெய்சங்கர் பேரை இந்த நேரங்கெட்ட நேரத்துலே ஏன் இழுக் கறேள்!

கிட்டு மாமா: சரிடி பட்டு! ஜெய்சங்கரை நான் இழுக்க மாட்டேன்! இந்த சுப்பிரமணிய சாமிய நினைக் கறப்ப, இந்த சந்திரலேகாவோட ஆசிட் மேட்டரும் எனக்கு நினைப்பு வந்து தொலையறதேடி! இதேமாதிரி ஜனங் களுக்கும் நினைப்பு வந்திடுமோன்னு பயமாயிருக்கேடி!

பட்டு மாமி: அதுக்காக நீங்க ஒன்னும் பெரிசா வருத்தப்படாதேன்னா! ஆம்படையானைப் பறி கொடுத்த சங்கரராமன் ஆத்துக் காரியவே பல்டி அடிக்க வச்சவா நாம! சந்திரலேகா, அனுராதா ரமணன், சங்கரராமன்னு நம்மவாளையே நாம காலி பண்ணினாலும் பிராமண தர்மத்தை காப்பாத்தறதில் எவ்வளவு ஒத்துமையா இருக்கோம்! அதைப் பாருங்கோண்ணா?

கிட்டு மாமா: அதுவும் கரெக்ட் தாண்டி பட்டு! நல்ல வேளையா, நம்ப பெரியவா சங்கராச்சாரி பத்தியோ, ஜெயா வழக்கு பத்தியோ, ஒரு வார்த்தை கூட எழுதாம ரொம்ப உஷாரா இருக்கா! நம்மவா பத்திரிகைகளுக்கு இருக்கற இந்த ஒற்றுமையை நினைச்சா நேக்கு ரொம்ப பெருமையா இருக்குடி!

பட்டு மாமி: பாத்திரிகைன்னதும்தான் நேக்கு ஞாபகம் வர்றது! நம்மவா ஜூவி ஒரு மிகப்பெரிய கின்னஸ் சாதனையைப் பண்ணி இருக்கா.

கிட்டு மாமா: என்னடி அந்த சாதனை!

பட்டு மாமி: ஜூ.வி.யில் ரிப்பீட்டா வந்த ஒரு வார்த்தை ஆ.ராசா. உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையும் ஒரே வார்த்தையை இத்தனை தடவை எழுதினதா வரலாறே இல்லையாம் போங்கா! மிகப்பெரிய ரெகார்ட் பிரேக்கே பண்ணி இருக்கா நம்ம ஜூ.வி! அதுமட்டுமில்லேண்ணா; ஜூ.வி. நிறுவனத்துல இருக்கறவாளுக்கும் பொம்பனாட்டிகள் உட்பட ஜூ.வி. குடும்பத்தாரும் ஆ.ராசாவை பற்றி மட்டும்தான் நினைக்கனும்னு உத்திரவே போட்டிருக்கான்னா பாத்துக்கோங்கோ! கிட்டு மாமா: இந்த கின்னஸ் ரெக் கார்டெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மவா பத்திரிகை அத்தனைக்கும் சவால் விடறாளே இந்தத் தி.க. விடுதலையும், மு.க. முரசொலியும்! பட்டு மாமி: ஆமாண்ணா! பொய் யானாலும் பவர்புல்லாதான் நம்மவா பாணம் தொடுக்கறா! ஆனா நம்மவா கொடுக்கற பவர்புல்லான பாணத்தை எல்லாம் புஸ்வாணமாக்கிடறாளே, இந்த விடுதலையும், முரசொலியும்!

கிட்டு மாமா: அது மட்டும் இல்லடி பட்டு! இப்ப தி.மு.க. எதிர் பிரச்சாரம் சூறாவளி மாதிரி திடீர்னு சூடுபிடிச்சி எல்லாரையும் ஆட்டிண்டிருக்கு. நம்மவா இப்ப கப்சிப்னு ஆய்ட்டா!

பட்டு மாமி: அச்சச்சோ! இப்ப நம்மவா என்னண்ணா பண்ணுவா?

கிட்டு மாமா: அதான்டி தெரியலை! நேக்கும்! பத்தும் பத்தாதற்கு இந்த தி.க. வீரமணி வேற பழசையெல்லாம் தோண்டி தோண்டி எடுத்துக் குடுத்துக் கிட்டே இருக்கா! லைலா புயலாவது பரவாயில்ல! இந்த ராடியா புயல் வேற எப்படி எந்தப் பக்கம் வரும்னே சொல்ல முடியலேடி! அனந்த குமார், எல்.கே. அத்வானி, நிதின் கட்காரின்னு நம்ம பி.ஜே.பி. வேற இந்த ராடியா புயல்ல இப்ப லேட்டஸ்ட்டா மாட் டிண்டிருக்கா!

பட்டு மாமி: தி.க. வீரமணி எடுத்துக் கொடுக்கற செய்தில, நம்ம ஜென்டில் மேன் வாஜ்பேயி, அருண்ஜெட்லி, சுக்ராம், ஜக்மோகன், அருண்ஷோரி, பிரமோத் மகாஜன்னு எல்லாக் கதையும் இப்ப வர்றது!

கிட்டு மாமா: தொலைத்தொடர்புத் துறையை அதிகமா சாதனைக்காக நம்ம வாஜ்பாயிக்கு நோபல் பரிசு வேற கொடுக்கணும்னு எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா. இன்னும் என்னனென் னத்தா நோண்டப்போறாளோ தெரியல. 2001இல் இருந்துவேற விசா ரணை வைக்கனுனிட்டா.

பட்டு மாமி: அய்யய்யோ! அப் புறண்ணா! இந்த கபில் சிபல் நம்மவா தானேண்ணா! வாயை வச்சுண்டு சும்மா இருக்கப்படாதோ! பி.ஜே.பி. பீரியட்ல 1,43,000 கோடி லாஸ்னு எடுத்துக் கொடுக்கறாரே! என்.டி.டி.வி. பேட்டியில!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகையெல்லாம், கொஞ்சம் கூட இந்த விஷயத்தை சட்டை பண்ணலேடி!

பட்டு மாமி: ஏன்ணா அவாளுக்கு மட்டும் தெரியாதா என்ன? எந்தச் செய்தியை பெருசா போடணும், எந்த செய்தியை சைலண்டா விடனுமின்னு!

கிட்டு மாமா: இருந்தாலும் வீரமணி விடுதலையும், மு.க. முரசொலியும் இதைக் கொட்டை எழுத்தில் போட்டு பேட்டியோட போட்டுட்டாளே!

பட்டு மாமி: எது எப்படியோண்ணா! உச்சநீதி மன்றம் நம்மவா கஸ்டடியிலதான இருக்கு! புதுவருடம் 2011 இல் நமக்கு சாதகமாக நல்ல செய்தியை பத்திரிகைகள் போடத்தான் போறா! நம்ம அக்ரஹார மனுஷா வீட்டில் எல்லாம் பால் பாயசம் பொங்கி கொண்டாடத்தான் போறாள்!

கிட்டு மாமா: நீ ஒரு அவசரக் குடுக்கைடி பட்டு! முன்ன ட்ரிப்பு ஈழப் பிரச்சினையில நம்மவா இப்படித்தான் ஸ்டன்ட் அடிச்சா? எல்லாமே வேஸ் டாயிடுத்தே! ஸ்பெக்ட்ரம் பிரச்சினை யில் நாம பாயசம் வக்கப்போறமா, இல்லை, நம்மளையே கலக்கி பாயசமா ஆக்கப் போறாளான்னு பொறுத் திருந்து தாண்டி பார்க்கணும்!

பட்டு மாமி: ஈழப்பிரச்சினைன்னு சொன்னதும்தான் எனக்கு ஞாபகம் வர்றது! இந்த வி.சி. காரா மறைமலை நகரில் நடத்துன மாநாட்டில், எக்கச்சக்கமான கூட்டமாமே! நம்ப வேலைக்காரி அஞ்சலை செல்போனில் யார்ட்டயோ பெருமையா சொல்லிட் ருந்தா! தி.க. வீரமணியும் கலந்துண்டு அவாளையெல்லாம் உற்சாகப் படுத்திட்டாளாமே!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகை எல்லாம் அது பத்தின போட்டோ, ஈழப்பிரச்சனை ஒட்டிய தீர்மானம், இவை பற்றி ஏதும் பெரிசா செய்தி போடலே!

பட்டு மாமி: ஆமாண்ணா பின்னே! சேரிக்காராளையெல்லாம், படம் எடுத்தா நம்மவா காமிரா தீட்டாயிடு மோன்னா! மனுஷாள்னா தலைலே ஜலம் விட்டுண்டு தீட்டுக் கழிச்சுக்க லாம். காமிரவுக்கு அந்த மாதிரி பண்ண முடியாதேண்ணா!

கிட்டு மாமா: ஆமாண்டி பட்டு! கரெக்டா சொன்னே!

http://viduthalai.in/new/archive/1813.html

No comments:


weather counter Site Meter