Pages

Search This Blog

Monday, January 24, 2011

பெண்களின் நலம் பேணிய பெரியார் - டாக்டர் பி.சுசீலா எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி.,

காலங்காலமாய்ப் பெண்கள் போகப் பொருளாகவும் பிள்ளை விளைவிக்கும் பண்ணையாகவும், வேலைக்காரியாகவும் கருதப்பட்டு வந்தனர். வரலாற்றின் வழி நெடுகிலும் பெண்கள் பட்ட துயரங்கள், ரத் தத்தால் எழுதப்பட்ட சிறப்புப் பட்டயங் களை நமக்குச் சான்றுகளாகத் தந்து கொண்டிருக்கின்றன.

கிரேக்க நாட்டின் ஆதிகாவியமான இலியத். எலன் (HELEN) என்ற அரசகுலப் பெண்ணை விருந்திற்கு வந்த பக்கத்து நாட்டு இளவரசன் கடத்திக்கொண்டுபோய்ப் பத்து ஆண்டுகளுக்கு மேல் தன் அரண்மனையில் வைத்திருந்தான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. போரில் தோல்வி யுற்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதும் _ அவர்களை அந்தப்புரங்களில் அடைத்து வைப்பதும் வாடிக்கையாக இருந்துவந்துள் ளது. குழந்தை இல்லாத சூழ்நிலையிலும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக வும் ஓர் ஆடவன் பல பெண்களை மணந்து கொள்வதும் இன்றும் தொடர்கிறது. தசரத மன்னருக்கு 60003 மனைவியர் இருந் தனர் என்று இராமாயணம் கூறுகின்றது.

பெண்களுக்கு உயிர் என்பது இல்லை. அவள் ஒரு சடப் பொருள் என்ற மனு தருமக் கருத்து மக்கள் மீது திணிக்கப்பட்டுப் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். கற்பு, ஒழுக்கம், குடும்பநலம் ஆகியவை பெண்களுக்கு மட்டுமே உரிய பண்புகளாக _ பெண்பாற் சொற்களாக ஆக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இருபாலர்க்கும் பொது வானவை என்பதை முதன்முதலாக எடுத்துக்காட்டி முழங்கியவர் தந்தை பெரியார் அவர்களே யாவார்.

பெண்களின் அடிமைத் தன்மை பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அது ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது என்ற உண்மையை எடுத்துக்காட்டிப் பெண்விடுதலை வேண்டிப் புரட்சி செய் தவர். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே என்று புரட்சிக்கவிஞர் பெரி யாரின் கருத்தை வழிமொழிந்து பாடுகிறார்.

மக்கள் தொகைப் பெருக்கம்

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றது. இதனால் வறுமையும் பஞ்சமும் பிணியும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஆகையால் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். அதற்குக் குடும்பக் கட்டுப்பாடு கண்டிப்பாகத் தேவை. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி இல்லை. ஆதலினால் உடனடியாகக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்து மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று மால்தசைப் போன்ற பொருளியல் அறிஞர்கள் கூறிச் சென்றுள் ளனர். இதனையும் பெண்களே மேற் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு என்பதைப்பற்றி எவரும் சிந்திக்காத காலத்தில் தந்தை பெரியார் குடும்பக்கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசினார். ஆனால் அக்காலத்துப் பொருளியல் மேதைகள் தெரிவித்த கருத்துகளுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகளுக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது.

மேலைநாட்டுப் பொருளியல் வல்லுநர் கள் குடும்பக் கட்டுப்பாடு என்பது மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக மிக இன்றியமையாதது என்றனர். முதலா வதாக, இதனைப் பெண்களுக்கே உரித் தாக்கினர். அனால் தந்தை பெரியார் குடும்பக்கட்டுப்பாட்டை வரவேற்றார். அதே வேளையில் அது எதற்காக என்றால், பெண்ணின் உடல் நலத்தைக் காப்பதற்காக அது அவசியம் என்றார். இரண்டாவதாக, குடும்பக் கட்டுப்பாடு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. மேலும் பெண்களைவிட ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வது மிக எளிது எனும் அறிவியல் உண்மையை எடுத்துக்கூறினார் தந்தை பெரியார்.

திருமண வயது

பெண்களின் திருமண வயதை உயர்த்தவேண்டும் என்றும் முதன்முதலில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். சின் னஞ்சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதனால் உண்டாகும் கேடுகளைப் பெரியார் விளக்கிக் கூறுகிறார். சிறுவயதில் அதாவது குடும்ப வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாத நிலையில் கணவனைக் கூடி வாழ்வதினால் அவர் களுக்குண்டாகும் உடல் நலக் கேட்டையும் அவர்கள் கலியாணமான மறு வருடத்தி லேயே கையில் குழந்தையுடன் காட்சி யளிக்கின்ற புதுமையையும் அக்குழந்தைகள் எலிக்குஞ்சுகளைப்போல் நோஞ்சானாகப் பலவீனத்துடன் காணப்படும் கேட்டையும் இதனால் நாட்டு மக்களின் சராசரி வயதும் குறைந்து நாட்டுக்கு உழைப்புச் சக்தியும், ஒரு பக்கத்தில் இந்த மாதிரி பலவீனமான சந்ததிகளைப் பற்றிக்கொள்ளும் நோயைப் போக்குவதற்காக ஏற்பட்டு வரும் நாட்டின் பொருட்கேட்டையும், இதற்கு முன்பு பலவகையிலும் எடுத்துச்சொல்லி இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டு மென்று வற்புறுத்தி வந்திருக்கிறோம். தந்தை பெரியார் குடிஅரசு 13.12.1947)

சரியான பருவம் வந்த பின்னரே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறும் பெரியார் அந்த நிலையிலும் டாக்டரின் சர்டிபிகேட் பெற்று உடல் தகுதியைப் பரிசோதனை செய்துகொண்ட பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

குழந்தை மணம்

குழந்தைப்பருவத்திலேயே பெண்களுக் குத் திருமணம் செய்து வைத்தலை சமஸ்கிருத நூல்கள் வற்புறுத்திக் கூறு கின்றன. ஏன் எனில் பெண் என்பவள் நிலையில்லாத _ அலைமோதும் மனம் கொண்டவள். அவள் எந்த நேரத்திலும் தவறு செய்யக்கூடும். ஆதலால் எவ்வ ளவு விரைவில் அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியுமோ அவ்வளவு விரை வில் திருமணம் செய்து கொடுத்துவிடுக என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. இதனால் இந்தியத் துணைக் கண்டத்தில், ஆரியர் வருகைக்குப்பின்னர் குழந்தைத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. இதன் பின்னர் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் வளர்ந்தது. ஒருவயதுள்ள விதவைகள், இரண்டு வயது நிரம்பிய விதவைகள், மூன்று வயதுள்ள விதவைகள் என்று 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைப்பட்டியலில் உள்ள விதவைகளைக் கணக்கிட்டுக் காட்டும் பெரியார் இதனை நினைந்து அய்யகோ என் நெஞ்சம் துடிக்கின்றது என்று வருந்துகிறார், (பெண் ஏன் அடிமையானாள்: (ப.60) ஆங்கிலேயே ஆட்சியினரால் சாரதா சட்டம் (குழந்தை மணத் தடைச்சட்டம்) கொண்டுவரப்பட்டபோது அன்றைய தேசியவாதிகள் அதனை தேசியத்திற்கு விரோதமானது என்று பேசினார்கள். ஆனால் தந்தை பெரியாரின் அயராத உழைப்பினாலும் பிரசாரத்தினாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் குழந்தை மணம் ஒழிக்கப்பட்டது. இன்று 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று சட்டமே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் தொலைதூரக் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 18 வயது நிரம்பா முன்னர் சில திருமணங்கள் அரங் கேறுகின்றன. அவை அரசின் கவனத் திற்குக் கொண்டுவரப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. பிள்ளைப்பேறு கூடப் பெண்களின் நலத்திற்கும், முன்னேற் றத்திற்கும் பெரும் தடையாக விளங்குகிறது என்பதைத் தந்தை பெரியார் எடுத்துக் காட்டி, அதனால் கர்ப்பத்தடை என்பது தவிர்க்கமுடியாதது என்று வற்புறுத்துகிறார்.

இவ்வாறு தம் வாழ்நாள் முழுவதும் பெண்களின் நலத்திற்காகவும் முன்னேற்றத் திற்காகவும் ஓய்வறியாது உழைத்த தலைவருக்குப் பெண்ணுலகம் பெரியார் எனும் பட்டத்தையளித்துத் தன் நன்றியைப் புலப்படுத்திக்கொண்டது பெண்களின் நலம் பேணிய பெரியார் புகழ் ஓங்குக!.

http://viduthalai.in/new/archive/1809.html

No comments:


weather counter Site Meter