இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் அது வடக்கில் ஆனாலும் தெற்கில் ஆனாலும் சமூக சீர்திருத்தம், சமூக சீர்திருத்த இயக்கம் ஆகியவை பிறப்பில் உயர்வுற தாழ்வு கற்பிக்கும் ஜாதியத்திற்கு எதிராகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் நடைபெற்றுள்ளன.
தென்னகத்தில் சமூக சீர்திருத்தம் மேலே குறிப்பிட்ட முதன்மையான இந்த இரு விஷயங்களை பொருளைச் சுற்றியே வந்துள்ளது. இது நம் மாநிலத்திலிருந்து பிரிந்துசென்ற கேரள மாநிலத்திற்கும் பொருந்தும். தனிப்பெரும் மாமனிதர்கள் இந்த இரண்டு தீமைகளுக்கு எதிராகப் போராடி அவமதிப்பு, அவமானம், இழி மொழி, பழிச்சொற்கள் ஆகிய சிலுவைகளைச் சுமந்தனர். வைதீகத்தின் எதிர்ப்பு என்னும் முள் கிரீடத்தை அணிந்தனர்.
தமிழகத்தில் தந்தைபெரியார் _ அவருக்கு முன் வைகுண்டசாமி, வள்ளலார் வாழ்ந்து அப்பணியைச் செய்தனர். கேரளத்தில் நாராயணகுரு. இவர்கள் ஒவ்வொருவர் வழியும் முறை களும் வேறு, வேறு. தந்தை பெரியாரின் வழியே தனி வழி. மண்ணுக்கு மண் நிலைமை வேறு.
இந்தியா முழுவதிலும் பரவியிருந்த ஜாதிக் கொடுமைகள் கேரளாவில் மிகக் கடுமையாகப் பரவியிருந்தன என்பதைக் கேரள வரலாற்று நூல்கள் பல எடுத்துக் காட்டுகின்றன.
கேரளாவை இந்தக் கொடுமை களுக்காகவே ஒரு பைத்தியக்கார விடுதி என்றார் விவேகானந்தர். ஆசிரியர் தமிழர் தலைவர் கேரளாவிலே கோயில் கள் அதனாலேதான் அதிகமாக உள்ளன.
என்ன என்ன கொடுமைகள் என்பதன் பட்டியல் இது:
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் தங்கள் பிள்ளை களுக்கு உயர்ஜாதியினரின் கடவுளர் களின் பெயர்களையோ, நாகரிகமான பெயர்களையோ வைக்கக்கூடாது.
அவர்கள் உயர் ஜாதியினர் போல் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீசை வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கென வரி ஒன்றை அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான அரசுக்குச் செலுத்த வேண்டும்.
அவர்கள் ஆண்களும், பெண் களும் மேலாடை அணியக் கூடாது.
தண்ணீர் சுமந்து செல்லும்போது குடத்தை இடுப்பில் வைக்காது தலையில் வைத்து, அதுவும் இடுப்புச் சேலையாலே சும்மாடு வைத்துக் கொள்ள வேண்டும். வேறு துணியோ, பொருள்களோ பயன்படுத்தக் கூடாது.
அவர்கள் கல்வி கற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
உயர் ஜாதி வகுப்பார் வசிக்கும் தெருக்களில் நுழையக் கூடாது. கோயிலில் இருந்து நாற்பதடி தள்ளி நிற்க வேண்டும். உயர் ஜாதியினர் தெய்வங்களை வணங்கக்கூடாது.
ஒவ்வொரு வகுப்பினருக்கும் குறிப்பிட்ட இடைவெளி கடைபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு ஜாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப் பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனைத் தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல; எட்டடிக்கு மேல் விலகி நிற்கவில்லை என்றால் தீட்டு ஆகி விடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். நாயாடிகள் என்ற குறவர் குலத்தைச் சேர்ந்தவர்களைக் கண் ணால் காண்பதே தீட்டு என்றனர்.
1. ஜாதியமைப்பும் கேரள வரலாறும், பி.கெ. பாலகிருஷ்ணன், சுருக்கமான தமிழாக்கம் _ ஜெயமோகன் காலச்சுவடு _ 13.
இவ்வாறான கேரளச் சமூகம் குறித்த படப்பிடிப்பை நமக்கு அளிக்கக் கூடிய இரு முதன்மை நூல்கள் நிர்மால்யா எழுதிய கேரளதலித் போராளி அய்யன்காளி, அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை ஆகியன ஆகும் கேரளச் சமுதாயத்தில் புலையர் முற்றும் அடிமையாக இருந்தனர். ஈழவர் மற்ற காலங்களில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்து, தேவை ஏற்படும்போது அடிமைத் தளையில் இருந்தனர்.
இத்தகு சூழலில் கேரளத்தில் ஈழவ சமுதாயத்தில் நாராயண குரு பிறந்தார் இவர் பிறந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்சி என்னும் சிற்றூர். தீண்டப்படாத ஜாதியினருக் குக் கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் நாராயண குரு வேதங்களையும், உபநிடதங்களையும், தரிசனங்களையும் கற்றறிந்தது வியப்புக்குரிய செய்தி.
ஈழவ சிவன்
1888இல் திருவனந்தபுரம் அருகே யுள்ள அருவிக்கரை என்னும் சிற்றூரில் ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கமாகப் பிரதிட்டை செய்தார் என்பது அவருடைய வாழ்க்கை வர லாறு கூறும் பதிவுகள் பதிவு செய் துள்ள பதிவு.
ஈழவனுக்கப் பிரதிட்டை உரிமை உண்டா என்ற வினாவுக்கு நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல என்று பதில் சொன்னார் நான் நிறுவியது ஈழவர் சிவன் என்று அவர் குறிப்பிட்டார் எனப் பாரதி உட்பட பலரும் பதிவு செய்துள்ளனர். நாரா யண குரு என்னும் இயக்கம் எனும் கட்டுரையில் ஜெயமோகன் அவ்வாறு கூறவில்லை என்று மறுக்கிறார்.
எங்கள் சிவன் ஈழசிவன். அந்தக் கோயிலின் வாயிலில் ஜாதிமத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது என்று எழுதிவைத்தார், என அறிகிறோம். கேரள மாநிலத்தில் தீண்டத்தகாதவர் களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப் பட்ட காலத்தில் அருவிப்புரம் சிவன் கோவில் அமைப்பு ஒரு புரட்சியான செயலாக அமைந்தது. பாரதியார் தம் படைப்பில் இதை ஈழவ சிவன் கோயில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எஸ்.என்.டி.பி.
டாக்டர் பல்பு என்கிற பத்மநாபன் கேரள பண்பாட்டு வாழ்வை மாற்றி யமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா என்பதை 1903இல் திருவனந்தபுரத்தை மய்யமாக்கி அருவிப்புரத்தில் நிறுவி னார். 1928 இல் குரு தமக்குப்பின் தம் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை சிவகிரி மலை மீது வற்கலை எனும் ஊரில் தர்மசங்கம் எனும் பெயரில் தொடங்கினார்.
நாராயணகுருவின் வழிமுறை
நாராயண குருவின் அணுகுமுறை நேரிடையானது. எதிர்மறை மன நிலைக்கு அதில் இடமில்லை. அவர்தம் வாழ்நாள் முழுமையிலும் எதிர்மறை யாக எதைப்பற்றியும், எவரைப்பற்றியும் சொன்னதும் கண்டித்ததுமில்லை. ஈழவ இளைஞர்கள், நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகி றார்கள் என்று குமுறியபோது, அதைத் தடுக்க ஒரே வழி _ நாம் புலையர்களை அணைத்துக்கொள்வதே என்று போதித்துள்ளார்.
அவர் பொதுவாக உபதேசம், போதனைகள், பேருரைகள் ஆற்றும் வழக்கமில்லை என்று அறிகிறோம். தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவைமிக்க சில வரிகளைச் சொல்வார். முதன்மையான வேளை களில் அவர் சொல்ல சில வரிகளில் பிறர் எழுதியெடுத்து அதிகார பூர்வமாக வெளியிடுவார்கள் என்றும் அறிகி றோம்.
தீண்டாமை முதலிய கொடுமைகள் மறைய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை, தீண்டாமைக்கு அதீதமான வர்களாகத் தங்களைக் கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் மேம் படுத்திக் கொள்ளுதல், ஆதிக்கச் சக்திகளைவிட கல்வி, செல்வம், ஆன்மிக வல்லமை மிக்கவர்களாதல் எனச் சுருக்கமாகக் கூறுவர்.
எஸ்.எஸ்.டி.பி.யின் செயல்பாடுகள்
எஸ். எஸ்.டி.பி.யின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் இருதளங்களில் தீவிரமாய் விளங்கின சமயம், கல்வி நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம்_ அனைவரும் கூடும் பொது இடங்களாகக் கோயில்களை அமைத்தல் ஆகும். 1904 இல் சிவகிரியில் அம்பாள் ஆலயம் அமைத்தார். கண்ணூர், அஞ்சு தெங்கு, கோழிக்கோடு, கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டு களா, தலைச்சேரி, ஆலுவா, மங்களூர், நாகர்கோவில், கொழும்பு முதலிய இடங்களில் முதன்மையான கோயில்களைக் கட்டி சிவன், திருமால், தேவி முதலிய தெய்வங்களைப் பிரதிட்டை செய்தார்.
பிரதிட்டைஏன்? - சமூகப் பொது இடங்கள்
நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாகக் கோயில்களை அமைத்தல். அன்று மக்கள் அனைவரும் சாதாரண மாகக் கூடும் பொது இடம் கேரள சமூக அமைப்பில் இல்லை. ஈழவர்களும், பிறஜாதியினரும் தங்கள் குலவழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தனர். கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்தக் குடும்பத்துக்குச் சொந்தமானவை.
சிறுதெய்வ வழிபாட்டை ஒழித்துக் கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்தார். தற்காலப் பார்வையில் நாட்டார் கடவுள்களை அகற்றிப் பிராமணீயப் பெருந் தெய்வங்களை நிறுவினார்.
ஆலய நுழைவு மறுக்கப்பட்ட மக்களுக்கு அது அளித்த நம்பிக்கை சாதாரணமானதுதான். அவ்வால யங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும், வடமொழியிலும் குரு வழிபாட்டு மந்திரங்களை உரு வாக்கி அளித்தார். அவற்றில் தெய்வ சதகம், சுப்ரமணிய சதகம், காளிநாடகம், சாரதா தேவி துதி முதலியன உக்கிரமான கவித்துவம் கொண்டவை.
1913 இல் ஆலுவாவில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முதன்மைக் கொள்கை யாக கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம் என்ற வாசகம் வலியுறுத்தப்பட்டது.
மற்றொரு நோக்கம்
குலதெய்வ வழிபாட்டை ஒழித்ததில் இன்னொரு நோக்கமும் இருந்தது எனலாம். குலதெய்வங்கள் ஒரு வகை யில் குலச் சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும், உலகநோக்கு அவற்றிலும் ஊடுருவி இருந்தன. கள், மாமிசம் ஆகியன படைத்து உண்டுகளிப்பது இவ்வழிபாட்டின் முதன்மைக் கூறு. குடி, களியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த் தனையும், அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை _ நவீன சமூகக் கூட்டுச் செயல்.
பவுத்தம்
பவுத்த வழிபாட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தது என்று சொல்வர். நாராயண குரு தன்னை பவுத்தன் என்று சொல்வதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம், யோகாசார பவுத்தத்தின் பிரிதொரு வடிவமே. நாராயண குருவை நவபுத்தன் என்பர்.
மூன்று வகைத் தெய்வ உருவங்கள்
உலக அளவில் தெய்வ உருவங்களை மூன்று வகையாக
1. செயல்வகைத் தெய்வங்கள் 2. முழுமுதல் தெய்வம் 3. தத்துவார்த்த தெய்வம் என்று பகுக்கிறார்கள்.
1. செயல்வகைத்தெய்வங்கள்: தொல் வழங்காலப் பழங்குடி வாழ்க் கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றியவை. பழங்குடியினம் தன் செயல்பாடுகள் வாயிலாகக் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள். அவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை, குறுகிய எல்லைக்குட்பட்டவை. வரப்புக்கு நேரு தெய்வம்; வாய்க்காலுக்கு ஒரு தெய்வம்.
2. முழு முதல் தெய்வம்: பெரு மதங்களின் உருவாக்கங்கள் இதன் போக்கில் தத்துவமும், புராணங்களும் உருவாகிப் பெருகுகின்றன. முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவது. அது பிரபஞ் சத்தின் உறுப்பு அல்ல. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலைச் செய்வது இன்றும் சமூகப் படிநிலைகளின் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட் டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழு முதல் தெய்வ வழிபாடு காணப்படு கிறது.
ஒரு சமூகம் முழுமுதல் தெய் வத்தை அடையும்போது அதன் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தகு மாறுதல்கள் உருவாகின்றன. அவை அச் சமூகத்தைப் பொருளியல் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் முன் நகரச் செய்கின்றன.
சிறு தெய்வங் களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குக் கட் டுப்பட்டுத் தங்களுக்குள் சுருண்டு கொள்கின்றன. முழுமுதல் தெய்வத்தை ஏற்கும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப் பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பிரிதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.
முழுமுதல் பெருந் தெய்வங்களை அளிக்கும் மதங்கள் அய்ந்து _ சைவம், வைணவம், சாக்தம், கிறித்துவம், இசு லாம். கிறித்துவம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமுதல் தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல், சமூக வாழ்வில் மிகப் பெரிய மாறுதல்களை உருவாக்கியது. சைவமும், வைணவமும், சாக்தமும், பக்தி இயக்க காலகட்டத்தில் அப் பணியைச் செய்தன. ராமானுஜர், நாயன்மார்கள், சித்தர்கள் _ முழுமுதல் தெய்வக் கருத்தை உருவாக்கியவர்கள்.
நாராயண குரு துஞ்சத்து எழுத் தச்சனின் அடுத்த கட்டம். ராமாய ணத்தையும், மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல் தெய்வத்தைக் கேரளமண்ணில் நிறுவியவர்.
கேரள _ எளிய மக்களின் முதல் பிரதி நிதி கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத் தச்சனே என்று கேரளம் மலையாளி களின் மாத்ருபூமி _ என நம்பூதிரிபாட் கூறியுள்ள நூல் கூறும் எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் விட்டநிலையில் அதை உயிர் பெறச் செய்தவர் நாராயண குரு. எழுத்தச்சன் தொடங்கினார்; நாராயண குரு நிறைவு செய்தார்.
தத்துவார்த்த தெய்வம்
தெய்வ உருவங்களில் மூன்றாவது உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். நாராயண குரு முழுமுதல் தெய் வத்தை அளித்து, அடுத்தபடியாக தத்து வார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார்.
நாராயண குருவைப் பொறுத்தவரை, ஒரு தெய்வம் என்பது மனித சமத் துவத்தின் முதல்படி என்பார் ஜெய மோகன்.
1921 இல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்டது இது.
ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதனுக்கு இது அவருடைய மய்யமான உபதேசமாகக் கொள்ளப்படுகிறது. மாப்பிள்ளா கலவ ரங்கள் என்ற பேரில் மதக்கலவரங்கள் விளைந்த காலகட்டம் இது.
பிரபஞ்சம் குறித்த ஒருவகைப் புரிதலே தத்துவார்த்த தெய்வம். முழுமுதல் தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி. மேலும் நுண்மையான தளம் தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.
இங்கே தந்தை பெரியார் நாராயண குருவிடமிருந்து மாறுபடுகிறார். ஒரு ஜாதியையோ, ஒருமதத்தையோ, ஒரு தெய்வத்தையோ ஏற்காத ஒரே உலகப் புரட்சியாளர் தந்தை பெரியார். ஜாதி ஒழிய வேண்டும் _ மதம் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் புரட்சிச் சிந்தனை.
நாராயண குரு தம் வாழ்க்கை முறையில் தத்துவார்த்த தெய்வத்தை எப்படி முன்வைத்தார், முதலில் சிவலிங்கம், சுப்பிரமணியர், தேவி, ஜகன்னாதர் ஆகியவைகளைப் பிர திட்டை செய்தவர் அவர்.
பிறகு அடுத்த கட்டத்தில் விளக்கையும், பிறகு சத்யம், தர்மம், தயை என்ற சொற்களையும் கருவரை தெய்வமாகப் பிரதிட்டை செய்தார். கடைசியில் பெரியார் வழிக்கு வந்த நாராயணகுரு கோவில்கள் போதும்; கல்விக் கூடங்கள் எழட்டும் என்றார்.
இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக் கண் ணாடியை நிறுவிய பிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச் சாலைகளே போதும் என்று சொல்லி விட்டார். இது அவருடைய இறுதி நிலை.
அவர் அருவிக்கரையில் கோயில்கள் நிறுவிய போதே சொன்ன கருத்துத்தான் என்பர். ஆனால் அது படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி, மீண்டும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தொடங்கிய தனத்துக்கே வந்து சேர்ந்தார். பி.கே. பாலகிருஷ்ணன் தன் நாராயண குரு தொகை நூலில் விரிவாக விளக்கிய கருத்துத்தான் இது.
நாராயணகுரு புதுமை செய்யவில்லையா?
இந்திய சமூக விடுதலைப் போராளிகள் மேற்கொண்ட வழிதான் அது. அவர்கள் பழங்குடித் தெய்வங் களைத் தவிர்த்து முழுமுதல் தெய் வங்களை நோக்கிச் செல்ல வழிகாட் டியுள்ளனர். அய்யா வைகுண்டர் அவ்வாறே செய்துள்ளார். வள்ளலார் அவ்வாறே செய்துள்ளார். விவே கானந்தரின் ராமகிருட்டின இயக்கமும், அம்பேத்கரின் புதிய பவுத்த இயக்கமும் இவ்வகையினதுதான்.
நாராயண குருவின் அடுத்த பணி
நாராயண குருவின் அடுத்த முதன் மைப் பணி கல்வித் துறையில்தான்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கல்வி, செல்வம், ஆன்மிகம் போன்றவற்றில் உயர்ஜாதி யினரைப் போல் முன்னிலைக்கு வந்தால் உயர்வு _ தாழ்வு என்னும் பாகுபாட்டு நிலை இல்லாமல் போய் விடும் என்ற எண்ணத்தின் விளைவே இது. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் வழி ஏராளமான பள்ளி களையும், கல்விக் கூடங்களையும் அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் வட மொழியை, முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தி, சீடரில் ஒருவரான நடராஜகுருவை மேலை நாட்டிற்கு அனுப்பினார்.
இக்காலத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாகக் கேரளா உள்ள தற்குக் காரணமே நாராயண குருவின் அறிவியக்கமே. ஈழவ சமூகமே படிப்பு மிக்க சமூகமாகியது. மதஞானமும், தர்ம ஞானமும் வடமொழியில் அமைந்ததும் இந்தியா முழுமைக் குமான பொது ஊடகமாக அமைந்தது என்பதால், சமஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான்.
நாராயண குருவின் வழிமுறை எதிர்ப்பதும், புறக்கணிப்பதும் அல்ல. புறக்கணிப் பதன் வாயிலாக மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர் களிடமே தங்கிவிட வழிவகுக்கிறோம் என்பதே அவர் கருத்து. நாராயண குருவின் காலம் முதல் இன்றுவரை சமஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தாரின் முதன்மைக் கூறாக இருந்து வந்துள் ளது. நாராயண குரு உருவாக்கிய இந்த சமஸ்கிருதக் கல்வி ஆர்வத்தைப் பாரதியார் தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார் (பாரதி யார் கட்டுரைகள், தொகை நூல், செல்வம்
சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்தும் நாராயண குரு புரிந்துவைத்துள்ளார். குரு தன் வாழ் நாளில் முப்பது ஆண்டுகள் தொழில் மேம்பாடு குறித்து மீண்டும், மீண்டும் பேசியுள்ளார். ஈழவ குடும்பங்கள் தொழில் துறையில் இறங்க நாராயண குரு வலியுறுத்தினார்.
கேரளத்தின் கயி-று, ஒரு தொழில்கள் உருவாக அவரே காரணம். பெரியாருக்கு ஜாதியை, மதத்தை, கடவுளை ஒழிப்பதில் முழு நேரப் பணி இருந்தமையால் கல்விப் பணியில் புக வாய்ப்பில்லை. ஆனால் அவர் கல்வி பெற வலியுறுத்தியதன் பயனே இன்றைய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம்.
முடிவுரை
எல்லாவற்றையும்விட அறிவுத்துறை யில் குரு உருவாக்கிய மாற்றமே குறிப்பிடத்தகு பங்களிப்பு. ஈ.எம்.எஸ்., கேரள பொதுவுடைமை அரசியல் நாராயண குருவில் தொடங்குகிறது என எழுதியுள்ளார். குமரன் ஆசான், சகோதரன் அய்யப்பன், நடராஜகுரு குறிப்பிடத்தக்கவர்கள்.
நாராயண குருவின் அணுக்கத் தொண்டர் சகோதரர் அய்யப்பன் _ நாத்திகர். அடிப்படைக் கருத்துகளில் குருவை நிராகரித்தவர். புலையர்களை அணி திரட்டிக் கிளர்ச்சிகளை நடத்தியவர். அதனாலே புலையன் அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மலையாளத் தின் பாரதி குமரன் ஆசான். அவரு டைய கருணை_சண்டாள பிட்சுகு, துர வல்தை கேரள இலக்கிய மறுமலர்ச் சிக்குக் களம் அமைத்தமை.
கேரள பண்பாட்டு வரலாற்றில் அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட் டவர்களில், ஆழமான பங்களிப்பினை ஆற்றிய கேரள கவுமுதி குழுமம் சிவி. குஞ்சுராமன் நாராயணகுருவின் மாணவர்.
பி.கே. பாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர், இதழாசிரியர், நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களின் கேரள சிந்தனையின் அடிப்படைகளைச் செதுக்கிய மேதை எனப் போற்றப்படுபவர்.
காந்தி 1925 இல் நாராயன குருவைச் சந்தித்து அவதாரபுருஷர் என்று குறிப்பிட்டிருக்கிறார். தன் மனத்தில் இருந்த அய்யங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த வழி பாட்டுக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று இருந்ததை நாராயண குரு மறுத்துள்ளார். காந்தியின் தாழ்த்தப் பெற்றோர் இயக்கம், மதுஒழிப்பு இயக்கம் ஆகியன நாராயண குரு இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பர்.
இதைப் போலவே 1927 இல் பெங்களூருவில் காந்தியைச் சந்தித்த பெரியார், காந்தியின் வருணாசிரமக் கோட்பாட்டில் வெறுப்புற்றுக் காங் கிரசிலிருந்து முழுமையாக வெளி யேறினார்.
http://viduthalai.in/new/page2/8488.html

No comments:
Post a Comment