Pages

Search This Blog

Monday, May 2, 2011

பார்ப்பனர்களின் இந்த மோசடிக்கு என்ன பெயராம்?

ஜப்பான் பாரு, ஜெர்மனி பாரு என்று அந்தக் காலத்தில் பயாஸ்கோப்புப் படம் காட்டுவார்கள்; காசு கொடுத்தும் பாமர மக்கள் பார்ப்பார்கள். இப்பொழுது ஒரு பயாஸ்கோப் பார்ப்பனரான துக்ளக் ஆசிரியர் காட்டுகிறார்.

இந்த வார துக்ளக்கில் (4-5-2011) தலையங்கம் தீட்டியிருக்கிறார் பாருங்கோ!

ஊழல் செய்பவர்கள் என்றால் அத்தனைப் பேரும் தலித்துகள். ஊழல் செய்யாத உத்தமர்கள் என்றால் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் என்ற பாங்கில் எழுதி யிருக்கும் பார்ப்பனத்தனம்.

இன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்ற நீதிபதியே தலைமை நீதிபதியாக இருந்தால், ஸ்பெக்ட்ரம் விசாரணை, இப்பொழுது அடைந்திருக்கின்ற முன்னேற்றத்தைக் கூடத் தொட்டிருக்காதே !

ராசா மீது வழக்கா வந்திருக்கிறது? இராசாவைக் குற்றம் சொன்னவர்கள் மீதல்லவா நடவடிக்கை வந்திருக்கும்! - புரிகிறதா?

தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனும் குற்றம் சாற்றப்பட்ட ஆ.இராசாவும் தலித்துகள் - என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் சூதான எழுத்துகள்தானே இவை?

* இன்றுள்ள தணிக்கை அதிகாரி நேர்மையானவர் என்பதால்தான் அது பற்றிய அறிக்கையே வெளியில் வந்தது.

* ஒரு சேஷன் பதவிக்கு வந்தவுடன்தான் தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரம் படைத்தது என்பதே மக்களுக்குத் தெரிய வந்தது.

புரிகிறதா .. . . ஒரு சேஷன் ஒரு தணிக்கை அதிகாரி என்று அவாள் சொல்லவதெல்லாம் யாரை? அவாள்! அவாள்!!

குற்றம் சுமத்தப்படும் கே.ஜி.பாலகிருஷ்ணன் , ஆ.இராசா இருவரும் தாழ்த்தப்பட்டவர்கள்.
அவர்களின் முடிவு என்ன? பார்ப்பானாக இருந்தால் யோக்கியன்.

பார்ப்பனர் அல்லாதார் - தலித் என்றால் - யோக்கியமற்றவர்கள் - சுற்றி வளைத்து இதனைத்தானே சொல்ல வருகிறார்கள்?

இந்த 2011-லும் இப்படி எழுதுகிற ஏய்ப்பர்கள், வகுப்பு வெறியர்கள், பூணூல்மேனிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாய் இருந்து வயதைத் திருத்தி மோசடி செய்து பதவியை நீட்டித்துக் கொண்ட இராமச்சந்திர அய்யரை மறைக்கிறாரே - இந்த மாடலன் மறையன்! வசதியாக மறந்து போய்விட்டதா?

தலைமை நீதிபதியின் மோசடிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் பாதுகாத்தாரே - பத்திரமாக வழியனுப்பி வைத்தாரே - அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்!

பார்ப்பனர்களின் இந்த மோசடிக்கு என்ன பெயராம்?

ஹி . . . ஹி . . . வாயால் சிரிக்க முடியவில்லையே!

http://viduthalai.in/new/page-2/8505-2011-04-30-10-22-03.html

No comments:


weather counter Site Meter