Pages

Search This Blog

Saturday, November 27, 2010

தருமபுரி மாவட்டத்தில் காவல் நிலையங்களா - பஜனை மடங்களா?

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களிலும், காவல் நிலையங்களுக்குட்பட்ட இடங்களிலும் கோவில்கள் அதிக அளவில் கட்டப்-பட்டுள்ளதுடன், கோவிலை கட்டுவ-தற்குப் பல காவல் துறை அதிகாரிகளே துணையாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது. சிறந்த காவல் துறையாக உலகிலேயே ஸ்காட்லாந்து காவல் துறைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருப்பது நமது தமிழக காவல்துறை என்பதை நாமும் அறி-வோம். நாடும் அறியும். ஊசி நுழை-யாத இடத்தில்கூட தமிழக போலீஸ் நுழைந்துவிடும் என்பார்கள். அது ஓரளவு மட்டும் அல்ல, பேரளவும் உண்மையே. அதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.

அந்த வகையில் சிறந்து விளங்கும் காவல்துறைதான் பல சாமியார்களை; கண்டுபிடித்து சிறைக்கனுப்பி உள்ளது. பல களவுபோன கடவுளர்களின் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளது. தினம் தினம் ஏதோ ஒரு பகுதியில் கோயிலில் கொலையுடன் கூடிய கொள்ளைகளும் நடந்தே வருகிறது. அதையும் இந்த காவல்துறைதான் கண்டுப்பிடித்துள்ளது. ஏன் பல கடவு-ளர்களுக்கு நமது காவல்துறை கையில் துப்பாக்கியுடன் நின்றுதான் பாதுகாக்கிறது. துப்பாக்கியும் போலீசும் இல்லை என்றால் இன்று கடவுளர்களின் நிலையே கேள்விக்குறியாகி இருக்கும்.

கடவுளுக்கு காவல் இருந்து கடவுளை காவல்காத்த காவல்துறை, இன்று தன்பலம் என்ன என்று தெரியாமல் தன்னம்பிக்கை இழந்து காவல் நிலையத்திற்கு கடவுளை காவல் வைத்துள்ளனர் என்பதுதான் வேடிக்கை.

மத சார்பற்ற ஆட்சி செய்யும் நாட்டில், மதசார்பற்ற அரசில் எந்த மதத்தைச் சேர்ந்த கடவுள் படங்-களையோ, சிலைகளையோ (சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் உட்பட) கோயில்களையோ அரசாங்க அலுவ-லகத்தில் அல்லது அரசுக்குச் சொந்த-மான இடத்தில் வைக்கக்கூடாது என்று தமிழக அரசு 7553/66- 2 - நாள் 29 ஏப்ரல் 1968 இல் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

அந்த ஆணை முதலில் கடைப் பிடிக்கப்பட வேண்டுமானால் நீதித் துறையும், காவல்துறையும் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக யார் இந்த ஆணையை நடை-முறைப்படுத்த வேண்டுமோ அவர்களே அரசு ஆணையை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களைத் தவிர மற்ற காவல் நிலையங்களில் தவறாமல் கோயில் கட்டப்பட்டுள்ளன. கட்டப்-பட்டுள்ள கோயில்களில் தினம் தினம் பூஜை புனஸ்காரம் என்று நடந்து-கொண்டே இருக்கிறது. காவல் நிலை-யத்திற்குள் கோயிலா? கோயிலுக்குள் காவல் நிலையமா? என்று பார்த்தால் கோயிலுக்குள்தான் காவல் நிலையமே உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் பஜனை மடமாகவே காட்சியளிக்கிறது.


அரூரில் 25 சென்ட் இடத்தில் முத்து மாரியம்மன் கோயில்

அரூரை எடுத்துக் கொண்டால் நகர காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 25 சென்ட் (பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது) நிலத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று கட்டி உள்ளார்கள். இந்தக் கோயிலில் ச.குமார் என்னும் இளைஞர் அர்ச்-சகராக உள்ளார். இக்கோயில் பெண்-களுக்காகவே கட்டப்பட்டுள்ளதுதாம். இந்த இடம் முழுக்க முழுக்க காவல் நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்பதால் ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ராமன் என்பவர்தான் தர்ம-கர்த்தாவாம். அவரும், அர்ச்சகரும் சேர்ந்துதான் கோயிலின் வருமானத்-தைப் பார்க்கிறார்களாம். இத்துடன் இக்கோயிலுக்கு வந்த 12 பவுன் தங்க நகைகள் காவல் நிலையத்தில் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதாம்.

அதை அடுத்து அரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தின் அருகில் ஓம்சக்தி என்னும் கோயில் உள்ளது. அதன் அருகில் புற்றுக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலை லட்சுமி என்பவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த இரண்டு கோயில்களும் பங்காரு அடிகளார் கிளைகளாம். இந்தப் பகுதி-யில் உள்ளவர்கள் இங்கு வந்துதான் இருமுடி கட்டுகிறார்கள் என்பதுடன் காவல்துறை அதிகாரிகளே இதற்குத் துணை நிற்கிறார்கள். அவர்களுக்கு சிறப்புப் பூஜை செய்கிறேன் என்கிறார் லட்சுமி. இது டி.எஸ்.பி. அலுவலகத்-திற்கு ஒதுக்கப்பட்ட கடவுள்.

டி.எஸ்.பி அலுவலகத்தின் பக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. (இவர்கள் மட்டும் தன் பங்-கிற்கு கோயில் இல்லாமல் இருப்-பார்களா என்ன?) மகளிர் காவல் நிலையத்திற்கு வேப்பமரம் அருகில் வேல் ஒன்று நட்டு வேப்ப மரத்திற்கு புடவை கட்டியிருக்கும் கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உரியது. காவல் நிலையத்திலிருந்துதான் ஓம் சக்தி கோவிலுக்கு இலவசமாக மின்சாரம் கொடுத்து உதவி இருக்-கிறார்கள். இந்த மின்சாரத்தில்தான், மின் விளக்குகள், ஒலி பெருக்கிகள் என அரசு பணத்தில் -ஓம்சக்தி கோயிலின் வியாபாரம் ஓகோவென ஓடுகிறது. மகளிர் காவலருக்கு தினம் தினம் பொங்கலும், சுண்டலும் தவறாமல் கொடுக்கப்படுகிறதாம்! வேப்ப-மரத்திற்குப் புடவை கட்டியிருக்கும் கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உரியது.

கடத்தூர் காவல் நிலையத்தில் 8 கை அம்மன்

அடுத்து கடத்தூர் காவல் நிலைய குடியிருப்புப் பகுதியில் சக்தி கோயில், வெளி-யில் 8கைகளுடன் உள்ள அம்மன் சிலை. அதற்கு தனது பெயரையே சக்தி என்று வைத்துள்ள பூசாரி, இதுவும் காவல் துறை குடியிருப்புப் பகுதியில் சுமார் பத்து சென்ட் நிலம். (பல லட்ச ரூபாய் மதிப்புடையது). கடத்தூர் காவல் நிலைய குடியிருப்புக்கு ஒதுக்-கப்பட்ட கடவுள்.

அடுத்து பாலக்கோடு காவல் நிலை-யத்தை கையில் வேலுடன் காவல் காக்கும் முருகன் சிலை, முருகனுக்கு காவல் நிலையத்தால் தினம் தினம் பூஜை.

அடுத்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் சிறிய வேப்ப-மரக்கன்றுக்குக் கீழ் சிலை வைத்து பூஜை ஆரம்பித்துள்ளார்கள். இது தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட கடவுள்.

ஆக தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் இன்று பஜனை மடங்களாக மாறி உள்ளன.

இப்படி மதசார்பற்ற நாட்டில், மதசார்பற்ற அரசின் காவல் நிலை-யங்களிலேயே ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு கடவுள் கோயில் என்று அரசாணையை அலட்சியப்-படுத்தி கோயில் கட்டி இருக்கிறார்கள். இந்து மதக்கடவுளர்களின் கோயில்-களும், சிலைகளும்தான் உள்ளதே தவிர பிற மதக் கோயில்கள் இல்லை.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அலுவலகத்தில் கோயில் கட்டப்படுவதைப் போல, பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அரசின் அலுவலகத்-தில் மசூதியோ அல்லது சர்ச்சோ கட்ட முன் வருவார்களேயானால் அதற்கு அர சும், அதிகாரிகளும் இடமளிப்-பார்களா?

அரசு அலுவலகம் அரசு இடம் என்றால் போதும் எவன் வந்தாலும் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்ற கேவலமான நிலை உள்ளது தமிழகத்-தில். காவல் நிலையத்தை நம்ப-வேண்-டாம். கடவுளை நம்புங்கள் என்ற அர்த் தத்தில் காவல் நிலையங்களில் சிலைகளை யும், கோயிலையும் கட்டி வைத்துள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்-னதுபோல மனிதனுக்கு எங்கு அறிவு தட்டையாகிறதோ, தன் திறமைமீது நம்பிக்கை குறைகிறதோ அப்பொழு-தெல்லாம் கடவுள்மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. அதுபோல தன்மீது உள்ள நம்பிக்கையை காவல்துறையினர் இழந்துள்ளனர்.

காவல் நிலையங்களில் உள்ள துப்பாக்கிகளை பத்திரமாக வைக்கா-விட்டாலும்கூட (அதியமான்கோட்டை பென்னாகரம் காவல் நிலையங்களில் துப் பாக்கிகள் கொள்ளை கொடுக்கப்-பட்டுள்ளது). சாமி சிலைகளை மட்டும் பாதுகாப்பாக வைக்கிறார்கள். வீரத்-தையும், விவேகத்தையும் செயல்படுத்தும் காவல்துறையினர் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கோயிலை கட்டிக்-கொண்டு பஜனைமடமாக மாற்றி அதில் நேரத்தை செலவழிப்பதால் குற்றங்கள் பெருகுகிறதோ என மக்கள் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர்.


அரசு ஆணைகள் எங்கே?

அரசு அலுவலகங்களில், அரசு பொது இடங்களில் கோயில் கட்டப்-பட்டிருந்தாலும், இந்தக் கட்டடங்களை இப்போதும் (கோயில் சிலைகள், படங்கள்) இருக்குமாயின் அவற்றை படிப் -படியாகவும் எவ்வித ஆடம்பரமும் இல் லாமல், பிறர் கவனத்தை ஈர்க்காத வகை யிலும் அவற்றை அகற்ற வேண்-டும் என அரசு ஆணை பிறப்பித்-துள்ளது.

1 . Government Lr. No. 3379/L & OB/91-3 Public (L&OB) Department Date: 16.9.1993
2 . From the Government of India Ministry of Home Affairs Lr No/5/23/94 CHC dt 4.5.1994.

எனவே இவ்வரசாணையைப் பின்பற்றி காவல் நிலையங்களில் உள்ள கோயில்களை காவல்துறை அதிகாரிகள் அகற்ற முன் வரவேண்டும்.

இல்லை எனில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி அரசு அலுவலகங்களில் அதன் இடத்திலோ ஒரு கோயில் கட்டப்பட்டாலும் அந்த இடத்திற்குத் தொடர்புடைய அதிகாரி தண்டிக்-கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள் ளது. அரசின் ஆணையை அதிகாரிகள் மதிப் பார்களா? (அ) சட்டத்தின் கடமையை அரசு செய்யுமா?

- அ. தமிழ்ச்செல்வன்,

விடுதலை செய்தியாளர்,

மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்,

தருமபுரி
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews11.html

No comments:


weather counter Site Meter