அவர்களுடன் கரம் கோத்து நிற்கின்ற உச்சாணிக் கொம்பிலே நின்று கொண்டு கொக்கரிக்கின்ற பார்ப்பன பத்திரிகைகள், ஊடகங்கள்,
எதிர்க்கட்சித் தலைவர் அம் மையார் ஜெயலலிதா அவர் களின் தலித் விரோத மனப் பான்மை உள்ளிட்ட அனைத் தையும் (அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் தாழ்த்தப் பட்ட சமூகத்து மக்களுக்கு இருந்த ஒரே விடுதலைப் பாதை மத மாற்றமே! அதையே முற் றிலும் எதிர்க்கும் விதமாக தடைச்சட்டம் கொண்டு வந்த தலித் இன விரோத முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார்தானே!)
தங்களின் இந்த அறிக்கை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாகவோ அல்லது தனிப் பட்ட அமைச்சர் ஆ. இராசாவுக்கு ஆதரவாகவோ எழுதப்பட்ட அறிக்கையாகவோ அல்ல.
மாறாக ஒட்டுமொத்த ஒடுக் கப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கே ஆதரவாக, ஆறுத லாக, அம்மக்களின் பிரதிபலிப் புகள் எங்கே இருந்தாலும் அதைத் தாங்கிப் பிடிக்கும் தாயுள்ளம் கொண்ட தங்களால் எழுதப்பட்ட ஆதாரப்பூர்வமான அறிக்கை!
இந்தப் பிரச்சினையில் அரசியல் தளத்திலே முத்தமிழ் அறிஞர், முதல்வர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் எத்துணையோ காரணங்களில் முதன்மையான காரணம் அவர் தந்தை பெரியாரின் சீடர்!
சமூகத் தளத்திலே, தங்களால் மட்டுமே விடுதலை பத்திரிகையில் மட்டுமே இதுபோன்ற அறிக்கைகள் எழுதுகின்ற நேர்மையான, நாண யமான, சமூக அக்கறை கொண்ட துணிச்சலைக் காணமுடியும்.
ஏனென்றால், தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இம் மக்கள்மீதும், இந்தப் பிரச் சினையின்மீதும் பார்க்கும் கண் ணோட்டம், செயலாக்கும் நிலைப் பாடும் இதுவாகத்தான் இருந் திருக்கும். தங்களுக்கு வணக்கத் தையும், நன்றியையும் சொல்லி, இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
- ஏ. அம்மாசி
மாவட்டச் செயலாளர்,
தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்ற சங்கம் (கூநுஞரு),
தருமபுரி மாவட்டம்
http://www.viduthalai.periyar.org.in/20101113/news11.html
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அமைச்சர் இராசா குறி வைக்கப்படுகிறார்--திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
No comments:
Post a Comment