Pages

Search This Blog

Wednesday, November 3, 2010

என்ன, தினமலரே, தினமணியே, இந்து வகையறாக்களே சங்கர மடங்களே, தயார், தயார்தானா?

தயார், தயார் தானா?

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: ஒருவரைப் பார்த்து, நீ யார் என்று கேட்டால், எத்தனை பேர், தமிழன் என்று சொல்கிறோம்? முதலியார், யாதவர், பிராமணர், வன்னியர், தேவர், நாயுடு, செட்டியார் என்றோதானே சொல்கிறோம். இது மாறவேண்டும்; நாம், தமிழர்கள் என்று சொல்லவேண்டும்.

டவுட் தனபாலு: அப்படியா...? ரொம்ப நல்ல நோக்கமா இருக்கே... கல்வி நிலையங்கலயும், அரசு நிர்வாகத்துலயும் கேட்குற சான்றிதழ்கள்ல, எந்த ஜாதியையும் குறிப்பிடாமல், தமிழர்னு குறிப்பிட்டா சலுகை வழங்குவீங்களா? ஜாதியைச் சொன்னா சலுகை வழங்குறீங்களா?

தினமலர், 3.11.2010

பார்ப்பனர்கள் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அடிமடியில் கைவைத்துவிடுவார்கள் - அந்த அடிமடிதான் இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீட்டிற்காக ஜாதி கேட்பதை நிறுத்திவிடலாமே - அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை.

எப்பொழுது?

தினமலர் கூட்டம் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் நடத்தி பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே, அதை நிறுத்தும்போது -

சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் மடாதிபதியாக வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் வந்த காலம் என்று காகாகலேல்கர் கூறியுள்ளாரே - அது நடைமுறைக்கு வரும்போது -

ஜாதியை, வருண தர்மத்தை வலியுறுத்தும் கீதை, இராமாயணம், வேதம், மனுதர்ம சாஸ்திரங்களை பொது இடத்தில் கொளுத்தி, அவற்றின் சாம்பலைக் கூவத்தில் தூக்கி எறிய சங்கராச்சாரியார் தலைமையில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடும்போது -

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைக் காப்பாற்ற இரும்புக் கூண்டு செய்து வைத்துள்ளார்களே, அந்தப் பிரிவை நீக்கிட பார்ப்பனர்களே முயற்சிக்கும் போது - (இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தைத்தான் தந்தை பெரியார் அறிவித்தார். 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்து மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர்).

நூற்றுக்கு மூன்றே சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எங்களுக்கு இந்த அளவுக்கு மட்டும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடங்கள் அளித்தால் போதும் என்று பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பகிரங்கமாக அறிவிக்கும்போது -

இவைகளை வெளிப்படையாக, எள்மூக்கு முனை அளவுக்குக்கூட சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் செயல்படுத்திக் காட்டினால்,இட ஒதுக்கீட்டுக்காக - ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக இப்பொழுது நடைமுறையில் இருந்துவரும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு மூடு விழா செய்யப்படும். இந்தக் கண்ணோட்டத்தில் கேட்கப்படும் ஜாதிபற்றிய குறிப்பும் கேட்கப்படுவது நிறுத்தப்படும்.

என்ன, தினமலரே,

தினமணியே,

இந்து

வகையறாக்களே

சங்கர மடங்களே,

தயார், தயார்தானா?

- கருஞ்சட்டை -

No comments:


weather counter Site Meter