கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்குரிய வ.உ.சிதம்பரனார் அவர்கள் மறைவுற்ற நாள் இந்நாள் (1936). அவர் மறைந்தபோது குடிஅரசு இதழ் சிதம்பரம் சிதைவு என்ற தலைப்பில் எழுதிய துணைத் தலை யங்கத்தின் எழுத்துகள் கண் ணீரை வரவழைக்கக்கூடி யவை.
தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திப் பாரானால் லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில், காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்துச் சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படி யான நிலையை அடைந்தி ருப்பார். ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளையானாலும் சூத்திரப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டு கூட வெளியிட யோக் கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.
சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசா பிமான பார்ப்பனரல்லாதாரும் அறியவேண்டும் என்பதற் காகவே இதைக் குறிப்பிட் டோம்.
- குடிஅரசு, 22.11.1936, பக்கம் 14
எவ்வளவு வேதனைப் பட்டு குடிஅரசு குருதிக் கண்ணீர் வடித்திருக்கிறது. இந்திய விடுதலைக்கு வ.உ.சி. அளவுக்குத் தியாகம் செய்த பார்ப்பனர் யார்? இந்தத் தியாக மேருமலை யின் கடைசிக் காலம் வறுமைப் படுக்கையில்தானே கழிந்தது.
வ.உ.சி., அவர்கள் பார்ப்பனக் கொடுமையைத் துல்லியமாகவே உணர்ந்தார். தந்தை பெரியார் குறித்து வ.உ.சி. கூறியது (1928) கல்லின் மேல் எழுத்தாகும்.
திரு. நாயக்கர் (பெரியார்) இடத்தில் உள்ள விசேஷ குணம் என்ன வென்றால் மனதிற்படும் உண்மையை மறைக்காமல் கூறும் ஓர் உத்தம குணம் தான். அவரும், நானும் ஒரே இயக்கத்தில் இருந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங் கிரசில்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்ததும் நானும், அவரும் விலகி விட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின் நாயக்கரவர்கள் தமிழ் நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்லவேண்டும் என்ற சாகா எழுத்துக்களை விட்டுச் சென்ற வ.உ.சி.யை நினைவு கூர்வோம்.
தியாகத்திலும் கூட பிராமண சூத்திர வேறு பாடு உள்ளதை உணர்வோம்.
- மயிலாடன்http://www.viduthalai.periyar.org.in/20101118/news01.html
1 comment:
மறைந்த தமிழ் பெரியவர்கள் போராட்ட வீரர்கள் தியாகிகளின் நினைவு கூர்வது நம் ஒவ்வொருவரது கடமை.
நன்றி.
Post a Comment