ஸ்பெக்ட்ரம் ஊழல் ஸ்பெக்ட் ரம் ஊழல் என்று பெரிதுபடுத்தி ஒப்பாரி வைத்த கூட்டம் ஊழல் விவகாரத்தில் சிக்கி ஊர் மக்கள் மத்தியில் விழி பிதுங்கி நிற்கிறது.பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத் தில் ஊழல் என்பது அன்றாட நிகழ்ச் சியாகி விட்டது. மகன், மகள், மருமகன் என்று அரசு நிலங்களைத் தூக்கிக் கொடுத்த கதை ஊர் சிரிக்கிறது. எடியூரப்பாவை முதல் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும், வெளியேற்ற வேண்டும் வெளியுலகத்திற்குத் தெரிவித்துக் கொண்டு, அவரையே தொடரச் செய்யும் உள்கட்டுமான வேலையை பா.ஜ.க., தலைமை செய்து கொண்டு இருக்கிறது.
எடியூரப்பா பதவி விலகப் போகிறார் _ பா.ஜ.க., முடிவு என்று பார்ப்பன ஏடுகள் மத்தியில் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும் எடியூரபச்்பாவாவது -பதவி விலகு-வதாவது - அது நடக்காது என்பது - தான் பிரத்தியட்ச நிலையாகும். 120 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்ய முடியும் என்று இந்தி-யாவின் தலைநகரிலேயே பேட்டி கொடுக்கிறார். தன்னைச் சுற்றிலும் கருநாடக மாநில பா.ஜ.க., எம்.பி.-களையும் உட்கார வைத்துக் கொண்டு ஆணவமாகப் பேட்டி கொடுத்துள்ளார். குற்றச்சாற்றுகள் வெளியிலிருந்து மட்டுமல்ல; உள்கட்சியிலிருந்தும் ஓங்கி ஒலிக்கிறது. நில மோசடியில் 6000 கோடி ரூபாய் வரை ஊழல் கரை புரண்டு ஓடியிருக்கிறது. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு வாரி வழங்கியது மட்டுமல்ல; மாநில பா.ஜ.க., தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவி மக்களுக்கும் மானாவாரி-யாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பாவின் மனைவி ஜெய-லட்சுமி, மகன் கந்தேஷ், மருமகன் ஷாலினி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு 24 நாள்களுக்குள் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.ஈஸ்வரப்பாவின் மகன் கந்தேசுக்கு 7682 சதுர அடி நிலம் ஒதுக்கப்-பட்-டுள்ளது. ஈஸ்வரப்பாவின் மருமகன் நிர்மல்குமார் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு 11.20 ஏக்கர் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஊழல்களும் விசாரணை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை விட்டு வைக்கவில்லை கருநாடக முதல்வர் எடியூரப்பா. இந்தக் குற்றங்களைச் செய்தது எல்லாம் உண்மை என்று ஒப்புக் கொண்டு விட்டார். நஞ்சன் கூடு கோவிலில் நஞ்-சுண்டேஸ்வரன்முன் ஒரு மணி நேரம் நின்று, வணங்கி இனிமேல் இது மாதிரி தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறார். நேற்று முதல்தான் பக்தி வந்து இன்றைக்குத்தான் கோயில்முன் நின்று சத்தியம் செய்ததாகக் கூற முடியாது. சாலையில் நிற்கும் மைல்கல் முன்கூட தண்டால் எடுக்கும்பேர் வழி இவர். இவர் பக்தி _ கடவுள் நம்பிக்கை இவரை யோக்கியராக இருக்கச் செய்யவில்லை. கடவுள் தன் கைவசம் இருக்கிறார் என்ற தைரியத்தில் ஊழல்களில் உருண்டு புரள்வதில் அவர் தயக்கம் காட்டவில்லை. இந்த நிலையில் உள்ள யோக்கி-யர்கள் ஆ. இராசா ஊழல் செய்து விட்டார். அவரைப் பதவி விலகச் செய்ய வேண்டும்; அவர்மீது நாடா-ளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபடும் வருகின்றனர். 14 நாள்கள் பிரதமராக இருந்தார் அடல் பிஹாரி வாஜ்பேயி. அவசர அவசரமாக என்ரான் மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதில் அவசரம் காட்டினார். அதன் விளைவு _ பல நூறு கோடிகணக்கில் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது. எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்றாமல் எந்த யோக்கியதையில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்? பார்ப்பன ஏடுகள் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல கருநாடாவின் எடியூரப்பா ஊழல் சாம்ராஜ்யம் பக்கம் தலை வைத்துப் படுக்காதது ஏன்? தென் மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில், கருநாடகாவில் ஆட்-சியைப் பிடித்து, அது இடைக்கால கர்ப்பச் சிதைவாகி விட்டதே - பதவி விலகச் சொன்னால், ஊழலை ஒப்புக் கொண்டதாகப் பொருளாகி விடுமே -_ அது இந்தியா பூராவும் பா.ஜ.க.-வுக்கு எதிரான வெறுப்புப் புயலாகச் சுழன்றடிக்குமே என்ற அச்சம் உலுக்கி எடுக்கவே, பா.ஜ.க. சங்பரி-வார் வட்டாரம் ஆப்புதனை அசைத்து விட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி விட்டன! அந்தோ, பரிதாபம்! பொய்யான புகார் கிளப்பி ஆ. இராசாவை வெளி-யேற்றிய நிலையில், இப்படி ஒரு அபவாதமா நமக்கு வந்து சேர வேண்-டும் என்ற நிலையிலே நிலை குலைந்து போய்விட்டது பா.ஜ.க. வட்டாரம். முரளி மனோகர்தான் சரியான புரோகிதர். பூணூலை வெளியே தொங்கவிட்டு அரை நிர்வாணமாக நின்று, காஞ்சி சங்கர மடத்தின்முன் கூட்ட நெரிசலை சரிபடுத்திக் கொண்டு இருந்தவர். சமஸ்கிருதத்தை - பல்கலைக் கழ-கங்களில் படிக்க வைத்தார். சமஸ்-கிருதமும் கற்றவர் அவரை அழைத்து டில்லியிலே பா.ஜ.க. அலுவலகத்தில் மந்திரங்களைச் சொல்லி, பா.ஜ.க.-வுக்கு உத்திரகிரியை நடத்தச் செய்து விடலாமே!
-மின்சாரம்
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews01.html
No comments:
Post a Comment