Pages

Search This Blog

Saturday, November 6, 2010

சோனியா காந்தி சொன்னது நடக்கட்டும்!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது என்ற முறையில் அகில இந் தியக் காங்கிரஸ் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

பாபர் மசூதி-பா.ஜ.க.வாலும் அதன் சங் பரிவார் வன்முறைக் கும்பலாலும் இடிக்கப் பட்டது உண்மை என்றாலும், அன்றைக்கு மத் தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி நினைத்தி ருந்தால் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற கருத்துப் பரவலாக உள்ளது.

அத்வானி தலைமையில் பாத யாத்திரை நடத்தப்பட்ட போது என்ன நடந்தது என்று காங்கிரசுக்குத் தெரியாதா?

பாபர் மசூதியை இடிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக (5.12.1992) பாபர் மசூதியிலிருந்து ஆயிரம் அடி தூரத்தில் உள்ள ஒரு குன்றில் பாபர் மசூதியை இடிப்பது எப்படி என்று ஒத்திகை பார்க்கப்பட்டதே!

குன்றைக் கயிற்றால் இணைத்து, கயிற் றைப் பற்றிக் கொண்டு குன்றின் மீது ஏறும் பயிற்சி எல்லாம் கொடுக்கப்பட்டதே! இவை எல்லாம் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் உளவுத் துறைக்குத் தெரியாதா?

லக்னோவில் முதல்நாள் நடந்த பொதுக் கூட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன பேசினார்?

நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின் மீது அமர்ந்து கொண்டு யாரும் பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வ தற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் என்று கவிதை பாணியில் பேசினாரே-இதன் பொருள் என்ன, காவல்துறைக்குத் தெரி யாதா? பிரதமர் நரசிம்மராவ் கவனத்துக்குச் சென்றிருக்காதா?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைக்கு, பிரதமர் நினைத்திருந்தால் ஆணை பிறப்பித்து தடுத்திருக்க முடியாதா?

மசூதி இடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தரப்படும் என்று பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி கொடுத்தாரே-இதுவரை அது நிறைவேற்றப் பட்டதா?

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் பாபர் மசூதி இடிப்பு என்று வரும்போது- அந்தக் குற்றத்திலிருந்து அறவே தப்பிக்க காங்கிரசால் முடியாது.

அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளும் வகையில் இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் செயல்படக் கூடிய நல்வாய்ப்பு இருக்கிறது. அதுதான் பாபர் மசூதியை நேரிடையாக உடைத்தெறிந்த ஆசாமிகளை சட்ட ரீதி யாகத் தண்டிப்பதாகும். அதுதான் காங்கிரஸ் மீது படிந்துள்ள பழிகளைப் போக்கிக் கொள்வதற்கான கழுவாயாகும்.

நீதிபதி லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டது. பா.ஜ.க.வின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஆம், நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். உங்களால் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று பகிரங்கமாக மக்களவையிலேயே சவால் விட்டுப் பேசினாரே-இதற்குப் பிறகும் வழக்கை விரைவாக நடத்திடத் தயக்கமும் சுணக்கமும் ஏன்? ஏன்?

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் உரிய தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்களே யானால், நாட்டில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் சாதாரண மக்கள் மத்தியில் கூட இல்லாமல் துடைத்து எறியப்பட்டு விடும். கும்பலாகச் சென்று குற்றம் செய்தால் சுலபமாகத் தப்பித்துக்கொண்டு விடலாம் என்ற தீய வழிமுறையை உருவாக்கி விடும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
http://viduthalai.periyar.org.in/20101105/news07.html

No comments:


weather counter Site Meter