Pages

Search This Blog

Saturday, November 13, 2010

ராசாவுக்கு மத்திய அரசு முழு ஆதரவு -நக்கீரன்


""ஹலோ தலைவரே... ... ஆங்கில மீடியாக்களின் தொடர் முற்றுகையில் சிக்கியிருக்காரே மத்திய அமைச்சர் ஆ.ராசா, கவனிச்சீங்களா?''

""மீடியாக்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கு.. ஒரு விஷயத்தை நாள்தோறும் திரும்பத் திரும்பச் சொல்லலாம். பின்னணிகளைச் சொல்லலாம். அதேநேரத்தில், அவங்களே விசாரணை நடத்தி, தீர்ப்பையும் தண்டனையையும் கொடுக்க முடியுமான்னு தெரியல. ஆ.ராசா விவகாரத்தில் ஆங்கில மீடியாக்கள் அதைத்தான் செய்துக்கிட்டிருக்கு. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வருது. தீர்ப்பு சொல்லும் அதிகாரம் நீதி மன்றத்திற்குத்தான் இருக்கு.''

""தலைவரே.. ஸ்பெக்ட்ரம் தொடர்பா 2 வழக்குகள் இருக்கு. ஒன்று, ராசா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு சுப்ரமணிய சாமி போட்ட வழக்கு. சி.பி.ஐ. விசாரணை நடக்கும்போது வேறு என்ன கிரிமினல் வழக்கு என்று அரசுத் தரப்பு எதிர்க்கிறது. இரண்டாவது வழக்கு, சி.பி.ஐ. விசாரணையை கோர்ட் கண்காணிக்க வேண்டும் என்ற வழக்கு. இந்தியாவில் உள்ள எல்லா வழக்குகளையும் இப்படி கண்காணிக்க முடியுமா எனக் கேட்டு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்கும் கங்குலியும் விசாரிக்கிறாங்க. இதில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியன், தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று வாதாடப் போகிறார். அதாவது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னங்கிறதை சொல்லும் மனுவை ஏற்று.''

""மனுவில் என்ன சொல்லியிருக்கு?''

""2ஜி ஸ்பெக்ட்ரமில் ஏலமுறைக்குப் பதில் ஒதுக்கீட்டு முறை என்பது வெறும் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதல்ல. அலைக்கற்றைகளின் அடர்த்தியையும் பயன்பாட்டையும் அதி கரிப்பதற்காகத்தான் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. ட்ராய் நிறுவனத்தின் பரிந்துரைகளின்படிதான் இது செயல்படுத் தப்பட்டது. இதன்விளைவாக, பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணம் குறைந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைப்பது இந்தியா வில்தான். இதனால் 1லட்சத்து 40கோடிக்கும் அதிகமான இழப்பு என்று சொல்வது தவறான கணக்கீடு. அரசிடமிருந்து ஸ்பெக்ட்ரம் வாங்கிய நிறுவனங்கள் சில அதை வேறு நிறுவனங்களுக்கு விற்றதன் மதிப்பையும் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மதிப்பையும் வைத்து இப் படியொரு கணக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கட்டணம், உரிமத்தொகை ஆகிய வற்றின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அரசாங்கத்திற்கு உயர்ந்துகொண்டேதான் வருகிறதுன்னு பதில் தாக்கல் செய்திருப்பதோடு, 2002-ம் வருஷத்திலிருந்து 2010-ம் வருஷம்வரை எவ்வளவு வருமானங்கிறதை வரைபடம் மூலமாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்காங்க. ட்ராய்யின் செயல்பாடு என்ன, தொலைத்தொடர்பு துறையின் பணிகள் என்ன என்பதும் பதிலாகக் கொடுக்கப்பட்டிருக்கு. எந்த விதத்திலும் அரசின் விதி முறைகளை மீறலைங்கிறதுதான் இந்தப் பதிலின் சாராம்சம். அதாவது, ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் மத்திய அரசின் நிலைப்பாடு ஆ.ராசாவுக்கு ஆதரவாகத் தான் இருக்குங்கிறதை இந்தப் பதில் மூலம் தெரிஞ்சுக்க முடியும்.''

''அநேரத்தில், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைக்கும் இதில் பதில் இருக்குன்னு சொல்லு.''

""தலைவரே.. 1999ஆம் வருஷத்திலேயே தணிக்கை அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நட்டம்தான் என்றும், எவ்வளவு நட்டம்னு கணக்கிடவே முடியாதுன்னும் சொல்லியிருக்கு. ஸ்பெக்ட்ரம் பற்றி தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுவது இது முதல் முறையல்ல. பயன்பாட்டுக்கும் வியாபாரத்துக்குமான வித்தி யாசம்தான் இதற்கெல்லாம் அடிப்படை. அதோடு, இப்ப கொடுக்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் நட்டம்னு தொகை குறிப்பிடப்பட்டிருக்கே தவிர, எதனால் நட்டம், யார் இதற்கு காரணம் என்றெல்லாம் எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படலை யாம். இந்த நிலைமையில், சுப்ரீம் கோர்ட் வழக்கில் திங்கள்கிழமை என்ன கருத்து வெளியாகுதோ அதன்படிதான் ஆ.ராசா விவ காரத்தில் முடிவெடுக்கப் படும்னு பிரதமர் அலுவலக வட்டாரங்கள் சொல்லுது.''

""ராசாவை பதவியிலிருந்து விலகச்சொல்லி கலைஞரிடம் காங்கிரஸ் பிரஷர் கொடுப்பதா கூட செய்திகள் வெளியாகுதே...''

""காங்கிரஸ் தரப்பிலிருந்து கலைஞர்கிட்டே இதுபற்றி யாரும் பேசலை. ஆடிட்டர் ரிப்போர்ட் அடிப்படையில் சர்ச்சை வந்ததுமே கலைஞர், இந்த ரிப்போர்ட்டையெல்லாம் வைத்து ராஜினாமா செய்திட முடியுமா? மக்களுக்கு பலன் கிடைப்பதற்காக நடை முறைப்படுத்தப்படும் திட்டங் களை லாப-நட்ட நோக்கத்தில் பார்க்கக்கூடாது. நாம் 1 ரூபாய் அரிசி, கலர் டி.வி., கேஸ் அடுப்பு, மருத்துவக் காப்பீடு, கான்க்ரீட் வீடு எல்லாத்தையும் மக்களுக்காகச் செய்றோம். அதெல்லாம் அரசுக்கு நட்டம்னு சொன்னா ஏற்கமுடியுமான்னு கட்சி சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார். அதனால், ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டியதில்லைங்கிறதுதான் தி.மு.கவின் நிலைப்பாடு.''

""இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஜெ திடீர்னு குண்டு வீசியிருக்காரே.. ராசாவை பதவி நீக்கம் செய்வதால், தி.மு.கவின் ஆதரவை காங்கிரஸ் இழக்கவேண்டியிருந்தால் நான் 18 எம்.பி.க்களின் ஆதரவைத் தருவேன்னு பேட்டி கொடுத்திருக்காரே.. ஏற்கனவே நம்ம நக்கீரனில் இதைச் சொல்லி யிருந்தாங்க. அ.தி.மு.க.வின் 9 எம்.பி.க்களோடு தேவகவுடா கட்சியின் 3 பேர், அஜீத்சிங் கட்சியின் 6 பேர் என்று 18 எம்.பி.க்கள் கணக்குடன் ஜெ மூவ் பண்ணு றாருன்னு நக்கீரன்தான் முதலில் சொன்னது.

இப்ப ஜெ வெளிப்படையா அழைப்பு விடுத்திருப்பதற்கு காங்கிரசின் ரியாக்ஷன் என்னவாம்?''

""ஜெ. பேட்டி டி.வியில் ஒளி பரப்பான விவரத்தை சோனியாவிடம் சொன்ன மறுவிநாடி, அரசியல் உள்பட எந்த விஷயத்திலும் அந்த லேடியை நம்பமுடியாதுங்கிறதுதான் அவர் கிட்டேயிருந்து வந்த ரியாக்ஷன். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை வைத்து உள்ளே வர பார்க்கிறார். ஜெ.வை நம்பி, நாம் கூட்டணி ஆட்சி யை நடத்தினால் பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும் தினமும் போயஸ்கார்டனில் போய் நிற்கவேண்டியிருக்கும்னு கமெண்ட் அடித் திருக்கிறார் சோனியா. தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத், ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில் இப்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கோம். இதில் ஜெ.வுக்கு ஒதுக்க சீட் இல்லைன்னு நக்கலா சொல்லியிருக்கிறார்.''
நன்றி :நக்கீரன் 13-10-2010

No comments:


weather counter Site Meter