Search This Blog
Wednesday, November 3, 2010
தேவாசுரப் போராட்டம் அசுரர்கள் - திராவிடர்கள், அசுரர்கள் - ஆரியர்கள்!
(அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா முதல்வர் கலைஞர் அவர்களை நரகாசுரனுக்கு ஒப்பிட்டு வதம் செய்யவிருப்பதாக வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் வடசென்னை தங்கசாலையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் 8.10.2006 நாளன்று கலைஞர் உரையாற்றிய திலிருந்து இந்தப் பகுதி தரப்பட்டுள்ளது. (`முரசொலி 9.10.2006)
ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு எழுதியுள்ள சரித்திரப் புத்தகத்தில், சிறையிலே-யிருந்து மகளுக்கு எழுதிய கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்; ஆரிய, திராவிட போராட்டம் தான் தேவாசுர யுத்தம் என்று வர்ணிக்கப்படுகிறது என்று அதிலே எழுதியிருக்கிறார்.
தேவர்களுக்கும் அசுரர்-களுக்-கும் நடைபெற்ற போராட்டத்தைத் தான் தேவர்-கள் அசுரர்களை இகழ்வதற்-காகப் பயன்படுத்திய வார்த்தை, அசுரர்கள் என்றால் கொடியவர்கள் என்றும், அவர்-கள் வாழக் கூடாத வர்கள், அவர்கள் மனித சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் வசை மொழிகளுக்கு ஆளாக்-கப்பட்டு நூல் களில் கதா-பாத்திரங்களாக வர்ணிக்கப்-பட்-டார்கள்.
நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனக்-குக்கூட நீண்ட நாளாக அந்த உண்மை தெரியாமலே இருந்-தது. நம்முடைய ராஜ்பவனத்-தில், ஒரு நாள் எங்களுக்-கெல்லாம் மாலை நேர விருந்துக்கு அழைப்பு வந்தது. அப்போது கவர்னராக ஓர் அம்மையார் இருந்தார். அந்த விருந்தில் பாடகர் ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். கச்சேரி நடைபெறும் போதே, எங்க ளுடைய கைகளிலே அச்சடிக்கப்பட்ட தாள் ஒன்று வழங்கப்பட்டது. அதைப் படித்துப் பார்த்தேன். அதிலே ஓணம் பண்டிகை பற்றிய குறிப்பு என்று எழுதப்பட்டி-ருந்தது. கேரளத்தைச் சேர்ந்-தவர் தமிழக கவர்னராக இருந் தார். எனவே ஓணம் பண்டிகையை கொண்டாடுவ-தற்காக அமைச்சர்களுக் கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்-கும், முக்கிய பிரமுகர்களுக்கும் விருந்து வைத்து எங்களை அழைத்திருந்தார். ஓணம் பண்டிகை பற்றிய குறிப்பு அச்சடிக்கப்பட்ட தாளிலே இருந்தது. படித்துப் பார்த்தேன்.
ஓணம் பண்டிகை என்பது மாவலி சக்கரவர்த்தி ஒரு நாள் கேரளத்தில் தன்னுடைய மக்கள் எப்படி வாழ் கிறார்கள் என்று பார்ப்பதற்காக வரு கிற நாள். அந்த நாளைத் தான் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் என்று அதிலே குறிப்பிடப்பட்டிருந்-தது. மாவலி சக்கரவர்த்தி, மாப் புகழ் பெற்ற மன்னன். அவனை தீயவன் என்றும், கொடியவன் என்றும் அங்கிருந்த ஆரியர்-கள் வர்ணித்து, அவன் தொடர்ந்து ஆண்டு கொண்டி-ருந்தால், நாம் ஆட்சிக்கு வர முடியாது.
இப் பொழுதே அவனை வீழ்த்தி விட வேண்டு-மென்று அவனைப்பற்றி இல் லாததும், பொல்லாதது-மாகச் சொல்லி, அவனை அழிப்பதற்காக அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு, அதற்கு அவர், ``பயப்படாதீர்கள், நான் அவனை அழித்து விடுகிறேன் என்று சொல்லி வாமனாவ-தாரம் எடுத்தா ரென்றும், எடுத்து மூன்றடி மண் கேட்-டாரென்றும், அவனும் கொடை வள்ளல் என்ற காரணத்தால் தருவதாக வாக் களித்தான் என்றும், வாக்-களித்தபடி மூன்றடி மண் கொடு என்று கேட்டு, இரண்-டடியை பூமியிலே அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் இல்லாத காரணத்தால் அவன் தலை யிலே காலைப் பதித்து அவனை அழித்து விட்டான் என்றும், அப்பொ-ழுது இறக்கும் தறுவாயில் மாவலி மன்னன், மகாவிஷ்-ணுவைப் பார்த்து, ``சரியா-கவோ, தவறாகவோ என்னை நீங்கள் இன்றைக்கு வீழ்த்தி விட்டீர்கள், ஆனால் நான் என்னுடைய மக்களை ஆண்-டுக்கொரு முறை போய்ப் பார்த்து அவர்கள் நன்றாக இருக்கிறார்களா, வளமாக வாழ்கிறார்களா என்று தெரிந்து கொள்ள என்னை நீங்கள் அனுமதிக்க வேண்-டும் என்று கேட்டுக் கொண்-டானென்றும், அதற்கேற்ப அவனுக்கு அந்த வரம் வழங்-கப்பட்ட தென்றும், அதுதான் ஓணம் பண்டிகைத் திருநாள் என்றும் அந்தத் துண்டுத் தாளிலே அந்த வரலாறு எழுதப்பட் டிருந்தது.
இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். மாவலி என்ற மன்னன், அரக்கன் அல்ல, நல்லவன், மனிதன் தான் மக்களை வாழ வைத்தவன், தன்னுடைய குடிமக்களுக்கு செங்கோல் மூலமாகச் சிறப்பு செய்தவன், அவர்களுடைய வாழ்வையெல்லாம் செழிக்க வைத்தவன், இப்படித்தான் தேவர்கள் அசுரர்கள் என்ற இந்த இரண்டு பிரிவினர் பற்றிய வரலாறு இருக்கிறது.
அப்படிப்பட்ட அசுரர் பிரிவிலே சேர்க்கப்பட்டவன் தான் நரகாசுரன். என்னை யாரோவொரு எதிர்க்கட்சித் தலைவர் இன்றைக்கு விடுத்த அறிக்கையில் நரகாசுரன் என்று வர்ணித்து விட்டதால், நான் ஒன்றும் கெட்டவனா-கவோ, தீயவனாகவோ, பொல்-லாதவனாகவோ ஆகி விட மாட்டேன், நான் எப்படி மாவலி சக்கர வர்த்தி மலை-யாளத்திலே தன்னுடைய மகத்துவத்தை உணர்த்துவதற்-காக மக்களிடம் செல்-வாக்கைப் பெற்றிருந் ததைக் காட்டுவதற்காக ஓணம் பண்டி கையே கொண்டாடப்-படுகிறதோ, அதைப் போலத்-தான் எங்களையும், பண்டித நேரு அவர்கள் வர்ணித்ததைப்-போல, பல சரித்திரப் பேரா-சிரியர்கள் வர்ணித்ததைப் போல, தேவர்கள் என்போர், அசுரர்கள் என்போர் என்ற இனங்களைப் பிரிக்கும் நேரத்தில், அசுரர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆகவே நாங்கள் அசுரர்கள் என்றால் திராவி-டர்கள் என்று நீங்கள் சொல்-லாமல் சொல்லுகிறீர்கள், ஆகவே நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்து அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொள்-ளத் தயாராக இருக்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews03.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment