Pages

Search This Blog

Wednesday, November 3, 2010

அரசு அலுவலகங்களில் மத நிகழ்வுகளுக்கு தடை வருமா ?

20.10.2010 நாளிட்ட தினமலரில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அரசின் கண் காணிப்பை மீறி போலீஸ் சங்கம் அமைக்கும் முயற் சியை சில போலீசார் தொடர்ந்திட்டுதான் இருக் காங்க. இதுக்கிடையில் போலீஸ் துறையில் வேலை பார்க்கிற கிறிஸ்தவர்களை ஒண்ணு சேர்க்கும் வகையில் ஒரு அமைப்பு உருவாகி இருக்குங்க.

காவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழுன்னு இதுக்குப் பெயர் வைச்சி ருக்காங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனி யார் பள்ளிக்கூடத்தில் நடக் கிற இந்த அமைப்பின் கூட் டத்தில் மதுரையில் வேலை பார்க்கும் கிறிஸ்துவ மதத் தைச் சேர்ந்த போலீசார் கலந்துக்கிறாங்க... கூட்டு ஜெபம் ஆலோசனைன்னு நடத்திட்டு கலஞ்சிடறாங்க என்பதுதான் இந்தச் செய்தி.

அரசு அலுவலகம், வளா கங்களில் குறிப்பிட்ட இந்து மதக் கடவுள்களின் படங்கள், சிலைகள், கோயில்கள் இடம் பெறுவதும் - ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை புனஷ்காரங்கள் சாங் கோபாங்கமாக நடைபெறு வதும் தடுக்கப்படவேண்டும். அரசு அலுவலகங்கள், மதச் சார்பற்ற தன்மையில் விளங் கவேண்டும். அவரவர்களுக் குரிய கடவுள்களை அவர வர்கள் வீட்டுக்குள் - பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், குறிப் பிட்ட இந்து மதக்காரர்களின் நடவடிக்கைகள் அரசு அலு வலகத்துக்குள்ளோ வளாகத் துக்குள்ளோ நடக்கும்போது மற்ற மற்ற மதக்காரர்கள் மத்தியிலும் சில உணர்வு களை ஏற்படுத்தும் என்றும் எத்தனை எத்தனை முறையோ விடுதலை எழுதியதுண்டு.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில் அரசு அலு வலகங்கள் மதச் சார்பற்ற தன்மையில் ஒளிரவேண்டும் என்பதற்காகவே எந்த மதக் கடவுள் சம்பந்தமான படங் களும், உருவங்களும் இருக் கக் கூடாது என்றும், ஏற் கெனவே இடம் பெற்றிருப் பவை அகற்றப்படவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.

அது காகித அளவில் இருந்துவிட்ட காரணத்தால், இப்பொழுது ஒவ்வொரு மதக்காரரும் வேறு வகையில் சிந்திக்கவும், செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். அதில் ஒரு சிறு நிகழ்வுதான் மது ரையில் தொடங்கப்பட்டுள்ள காவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு என்ப தாகும்.

காவல் துறையினர் சங்கம் அமைக்க இதுவரை அனுமதியில்லாத நிலையில், இதுபோன்ற மத ரீதியான அமைப்புகள் முளையிடத் தொடங்கியுள்ளன.

அண்ணா அவர்கள் பிறப்பித்த அந்த ஆணை செயல்படுத்தப்படும் பட்சத் தில் இத்தகு மத உணர்வுகள் அரசு ஊழியர்களிடத்தில் அரும்பிட வாய்ப்பு இல்லை.

ஆயுத பூஜைகள் அமர்க் களமாக ஒலி பெருக்கி வைத்துக் காவல் நிலையங் களில் கொண்டாடும்போது, மற்ற மற்ற மதக்காரர்கள் மத்தியில் மருட்சியை ஏற் படுத்தத்தானே செய்யும்?
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101103/news02.html

No comments:


weather counter Site Meter