அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸின் முக்கிய பிரமுகர்கள் தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள் ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியப் பிரமுகரான ஆர்.எஸ்.எஸ். தேசியக் குழுவின் உறுப்பினர் இந்தரேஷ் குமார் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைபேசிகளும், சிம் கார்டுகளும் பல ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளை அடை யாளம் காட்டிவிட்டன.
ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறைப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை யில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமானவை என்றும், ஆர்.எஸ்.எஸின் வன்முறை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதுதான் தாமதம் - தாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டோம் என்பதைத் துல்லிய மாக உணர்ந்து கொண்ட ஆர்..எஸ்.எஸ். கும்பல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.
ஆர்.எஸ்.எஸின் நாக்பூர் தலைவர் ரவி ஜோஷியும், இணைச் செயலாளர் ஒருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
கடந்த 80 ஆண்டுகாலமாக கட்டுப்பாடான வாழக்கை வாழ்வது எப்படி என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். தன்னலமற்ற இந்தச் சேவையை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. தேசிய பேரிடர் வரும்போதெல்லாம், உடனடியாகக் களமிறங்கி, பாதிக்கப்பட்டோருக்குச் சேவை செய்கிறோம். வன்முறைக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சகட்டு மேனிக்கு எங்களை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளனர்.
வரும் 10 ஆம் தேதி புதுடில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்.
நெருப்பு சுடாது, பனிக்கட்டி குளிராக இருக்காது என்று சொன்னால், எப்படி நம்பமாட்டார்களோ அதைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எசுக்கும், வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.
மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் என்பதை விளக்குவார்களா?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கிப் பயிற்சிகளையும், வன்முறைப் பயிற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே - இதன் தன்மை என்னவாம்?
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் யார்? கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று தங்கள் மீது விழுந்த கறையைக் கழுவிக் கொள்வதற்காக இவர்கள் மறுக்கலாம்.
நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேயும், அவரது மனைவியும் நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேட்டி கொடுத்துள்ளனரே - மறுக்க முடியுமா?
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி மதக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் போட்டார்களே - அது அம்பலம் ஆகவில்லையா?
கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்தது என்ன? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, வெடிகுண்டு வெடித்து பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலியானார்களே - அதற்குப் பெயர் என்னவாம்?
2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அதே ஆண்டு மே திங்களில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத், அதே ஆண்டு செப்டம்பரில் மாலேகான் குண்டுவெடிப்பு களில் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டனர் என்ற புரளியைக் கிளப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனரே!
அவையெல்லாம் முழுப் பொய் - இந்த வன் முறைகளின் பின்னணியில் இந்த சங் பரிவார்க் கும்பல்தான் இருந்துள்ளது என்று தக்க ஆதாரத் துடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பேராபத்துத் தலைக்குமேல் வந்தேவிட்டது என்ற அச்சத்தில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த அச் சுறுத்தல்களைக் கண்டு மிரண்டு போகாமல் இந்தக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர மத்திய அரசு மேலும் காலம் தாமதம் செய்யாமல் செயல்படவேண்டும். அதன்மூலமே வன்முறை சக்திகளின் ஆணிவேரை வீழ்த்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101108/news06.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment